சந்தோஷ்

ரு வருடமாக சாந்தோம் கடற்கரையில் டீ விற்றுக்கொண்டிருக்கும் சந்தோஷ், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன். பணி நேரம் காலை 7 முதல் 10, மதியம் 3 முதல் 8. விடுப்பு இல்லை.

தினமும் 700, 800 ரூபாய்க்கு டீ விற்றே ஆகவேண்டும். மாதம் ரூ. 4,000 ரூபாய் சம்பளம். தினசரி சுமார் ரூ. 133 கூலி.

“இன்னும் கொஞ்ச நாள்ல ஊருக்குப் போயிருவேன். திரும்ப வரமாட்டேன். விவசாயத்துல சம்பளம் குறைவுன்னாலும் வீட்டோட போகலாமுன்னு முடிவு பண்ணி இருக்கேன்.”

வினவு புகைப்படச் செய்தியாளர் இருண்ட மேகத்தைப் போல அந்த இளைஞனின் மனதை சோகம் கவ்வியிருந்தது. மொழி, பண்பாடு, உணவு- வாழ்க்கை முறை அனைத்திலும் அன்னியமாய் இருக்கும் மாநிலத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும் மகிழ்ச்சி ஏதுமில்லை. இந்த குறைந்த கூலிக்காக தனது சொந்த ஊர் ஏக்கத்தை மறக்கவும் முடியவில்லை. அதே நேரம் அங்கே அவருக்கு ஒரு மகிழ்ச்சிக்குரிய வாழ்க்கை இருக்கவும் இல்லை. இன்று ஊருக்கு போகலாம் எனும் கருத்து அவரிடம் நிலையாய் இருப்பதற்கு அடிப்படையும் இல்லை. அப்படியே ஊருக்கு சென்றாலும் அவர் சில நாட்களில் திரும்ப வரத்தான் போகிறார். சென்னை சாந்தோம் கடற்கரை அவருக்காக காத்திருக்கிறதா? இல்லை அவரை கட்டிப் போட்டு வைத்திருக்கிறதா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க