மிழ்நாடு வெதர்மேன் என அறியப்பட்ட பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் வரவிருக்கும் கஜா புயலைப் பற்றி பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

“தமிழகத்தை நோக்கி அடுத்த இருநாட்களில் வர இருக்கும் கஜா புயல் மிகக் கடுமையான புயலாக இருக்கும். மேற்கு தென் மேற்காக வேகமாக நகர்ந்து வரும் கஜா புயல் வரும் 15-ம் தேதி புதுச்சேரி, கடலூர் பகுதியில் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கஜா புயல் 13.5 வடக்கு அட்சரேகையில் இருக்கிறது. இது மேலும் மேற்கு வடமேற்காக நகர்ந்து வடக்கு தமிழக கடற்கரை பகுதியில் நாகை முதல் சென்னை வரை அல்லது புதுச்சேரி அல்லது கடலூர் பகுதிக்கு தள்ளப்படும். ஆனால், எந்த இடத்தில் புயல் கரையை கடக்கும் என்று உறுதியாக இப்போது கூற முடியாது. மேற்கு, தென்மேற்காக புயல் நகரும்போது வேகமாக நகரும். ஆதலால், 15-ம் தேதி கஜா புயல் கரையைக் கடக்கும்.

கஜா புயல் எவ்வளவு வலிமையானது?

கடந்த 40 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தின் போது தமிழகக் கடற்கரையை கடந்த புயலின் அழுத்தம் குறித்த விவரங்களைத் தந்துள்ளேன்.
1. 1978-ம் ஆண்டு இலங்கை புயல் 953 எம்.பி.
2. 2000—ம் ஆண்டு கடலூர் புயல் 959 எம்.பி.
3. 1996-ம் ஆண்டு சென்னை புயல் 967 எம்.பி.
4. 1993-ம் ஆண்டு காரைக்கால் 968 எம்.பி.
5. 2011-ம் ஆண்டு தானே 969 எம்.பி.
6. 2000-ம் ஆண்டு இலங்கை புயல் 970 எம்.பி.
7. 1984ம் ஆண்டு கடலூர் புயல் 973 எம்.பி.
8. 2016ம் ஆண்டு வர்தா புயல் 975 எம்.பி.
9. 1984-ம் ஆண்டு ஹரிகோட்டா புயல் 975 எம்.பி.

ஆதலால், தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் ஆழ்ந்த புயலாக மட்டுமல்லாமல் கடும் புயலாகவும், கடல்பகுதியில் மிகக் கடும் புயலாகவும் இருக்கும். வடக்கு தமிழக கடற்பகுதியை நெருங்கும்போது காற்று தீவிரமாகும். மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வரும் நாட்களில் அதன் தீவிரத்தன்மை தெரியவரும்.

நெருங்கி வரும் கஜா புயல்

ரெட் அலர்ட்

சென்னை வானிலை மையம் அறிவிக்கும் ரெட் அலர்ட் என்பது புயலோடு தொடர்புடையது. இந்தப் புயல் 24 மணிநேரத்தில் 200மிமீ மழையை பெய்துவிட்டு செல்லும். ஆதலால் ரெட் அலர்ட்டை எச்சரிக்கை கொடுத்தது குறித்து அதிசயிக்கத் தேவையில்லை.

படிக்க:
கரை திரும்பாத மீனவர்கள் : காசிமேடு நேரடி ரிப்போர்ட்
வர்தா நிவாரணப் பணியில் பு.மா.இ.மு

புதுச்சேரி அல்லது கடலூர் பகுதியில் கஜா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும். அதன்பின், புயல் தமிழகத்தின் உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் நோக்கி நகர்ந்து அரபிக் கடலுக்குள் செல்லும்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கேட்டி, கொடநாடு, கோத்தகிரி பகுதிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியவை. நவம்பர் 15 இரவு மற்றும் 16 காலையில் இப்பகுதிகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டும்.

சென்னையில் எப்படி இருக்கும்?

சென்னையை சூறையாடிய வர்தா புயல்

கடலூரை நோக்கி கஜா புயல் சென்றுவிட்டால் சென்னைக்கு குறைந்த அளவே பாதிப்பு இருக்கும். கடந்த 25 ஆண்டுகளில் புதுச்சேரி அல்லது கடலூர் அல்லது காரைக்கால் அல்லது நாகையில் புயல் கரையை கடக்கும்போது பெய்த மழை அளவு தரப்பட்டுள்ளது.

  1. 2015-ம் ஆண்டு நவம்பரில் புதுச்சேரியில் புயல் கரைகடந்த போது சென்னையில் ஒரேநாளில் 200மி.மீ மழை பதிவானது.
  2. 2013-ம் ஆண்டு வில்மா புயலால் சென்னையில் 2 நாட்களில் 110மி.மீ மழை பெய்தது.
  3. 2012-ம் ஆண்டு நிலம் புயலால் சென்னைக்கு 2 நாட்களில் 120 மி.மீ மழை கிடைத்தது.
  4. 2011-ம் ஆண்டு தானே புயலால் கடலூர், சென்னையில் ஒரே நாளில் 100 மி.மீ மழை பெய்தது.
  5. 2008-ம் ஆண்டு நிஷா புயலால் காரைக்கால், சென்னையில் 4 நாட்களில் 400மி.மீ மழை பதிவானது.
    இந்த புயல் அனைத்தும் தென்மேற்கு வங்கக் கடலில் இருந்து மேற்குவடமேற்காக நகர்ந்து தமிழகம் நோக்கி வந்தது. 1996-ம் ஆண்டு புயல் மட்டும் வடமேற்கு வங்கக்கடலில் இருந்து மேற்குதென்மேற்கு நோக்கி வந்தது.

இப்போதுவரை கணித்தபடி கடலூரில் புயல் கரையைக் கடக்கும். சென்னையில் 14-ம் தேதி இரவு அல்லது 15-ம் தேதி காலை முதல் 17-ம் தேதி வரை மழை இருக்கும். 15-ம் தேதியில் இருந்து காற்று வீசக்கூடும் ஆனால், பெரிய அளவுக்கு பாதிப்பு இருக்காது.

எந்தெந்த மாவட்டங்களில் மழை?

வடமேற்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது. தமிழக கடற்கரைப்பகுதிகளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களில் மழை இருக்கும். வட மாவட்டங்களான திருச்சி, அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், கரூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் மழை இருக்கும். கேரள மாநிலத்தில்கூட மழை பெய்ய வாய்ப்புண்டு ஆனால், கஜா புயலால் தென் மாவட்டங்களுக்கு குறைவான மழையே கிடைக்கும்.

படிக்க:
மணல் கொள்ளையர் உருவாக்கிய கடலூர் வெள்ளம்
தூத்துக்குடி – கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகள்

மீனவர்களுக்கான எச்சரிக்கை

நாளை முதல் வடதமிழக கடற்கரை முதல் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிவரை கடல் மிகுந்த சீற்றத்துடன் இருக்கும். ஆதலால், 16-ம் தேதிவரை கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம். அரபிக் கடலுக்குள் சென்றபின் புயல் என்னாகும், எப்படி மாறுகிறது என்று பார்க்கலாம்.

நூற்றுக்கணக்கான மீனவர்களைக் காவு வாங்கிய ஒக்கி

தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போதுவரை 23 சதவீதமும், சென்னையில் 52 சதவீதமும் மழை பற்றாக்குறையாக உள்ளது. இந்த கஜா புயலால் நமக்கு நல்ல மழை கிடைக்கும். வேகமாக புயல் நகரும்போது, குறைந்தநேரத்தில் அதிகமான மழையைக் கொடுக்கும். ”

Tamil Translation : Courtesy Mr.Pothy Raj – Tamil Hindu online

*****

ஆங்கிலம்:

Cyclone Gaja to intensify in the next two days into Very Severe Cyclone and then take the fast WSW route and more likely to make landfall in and around Pondy or Cuddalore region on 15th November.
=========================
The mood change on NEM revival is on, thanks to Cyclone Gaja which will be rain-filled Cyclone with good SST and MJO in our basin, it will also sustain as cyclone till landfall. Lets see what we can expect from Gaja and what are the question which arises.

Where, when, how fast it is likely to move ?
It is now around 13.5 N latitude and expected to go little more up W-NW steered by the Pacific Ridge and then stalling happens with Steering Ridge change. The Arabian Ridge takes control and then comes the W-SW movement. pushing towards North Tamil Nadu coast between Nagai to Chennai somewhere around the Pondy or cuddalore region. Is this landfall fixed. The answer is no. Further, when it takes the W-SW route always the Cyclone moves too fast. The landfall will happen on 15th November.

How strong will Gaja get ?
Lets see the strongest cyclones to march towards TN / SL in last 40 years during NEM (Min 975 mb pressure)

1978 SriLanka Cyclone was 953 mb
2000 Cuddalore Cyclone was 959 mb
1996 Chennai Cyclone was 967 mb
1993 Karaikkal was 968 mb
2011 Thane was 969 mb
2000 SriLanka cyclone was 970 mb
1984 Cuddalore Cyclone was 973 mb
2016 Vardah was 975 mb
1984 Sriharikota Cyclone was 975 mb

Coming to Gaja it will not only intensify into a severe Cyclone but also into Very Severe Cyclone in open seas and then wind shear might affect it on nearing the North TN coast but still it will make landfall as a Cyclone with winds touching 100 km/hr. Only model which is peaking the landfall are the American GFS but it looks very unlikely to peak in strength with SW dip and also with moderate wind shear around. Anyway lets see how much pressure is seen in Gaja in the coming days.

Red Alert ah nambalama ?
Yes. This time the red alert is associated with a Cyclone and Cyclone can dump 200 mm rainfall in 24 hours in the area where it crossing with ease, so no surprise in Red alert. The likely landfall area of around Pondy or Cuddalore area and the nearby places are likely to see extremely heavy rains. And when the Cyclone moves into interior Tamil Nadu and West Tamil Nadu to Arabian Sea. Nilgiris needs to be watched specially Coonoor, Ketti, Kodanad and Kothagiri regions on 15th November night / 16th morning.

How will Chennai be and what can Chennai expect if Cyclone goes to Cuddalore?
The more the south the Cyclone goes the less the impact Chennai will see. Lets see how Chennai rains fared when Cyclone made landfall in Pondy or Cuddalore or Karaikkal or Nagai in last 25 years.

2015 November DD – landfall Pondy – Chennai 200 mm in a day
2013 Depression Wilma – Nagapattinam – Chennai 110 mm in 2 days
2012 Nilam – landfall mahabs – Chennai 120 mm in 2 days
2011 Thane – Cuddalore – Chennai 100 mm in a day
2008 Nisha – Karaikkal – Chennai 400 mm in 4 days
2000 Cuddalore Cyclone – Chennai 100 mm in 2 days
1996 December Cyclone – Mahabs – Chennai 150 mm in 2 days
1993 Karaikkal Cyclone – Karaikkal – Chennai 170 mm in 2 days
1991 Karaikkal Cyclone – Karaikkal – Chennai 400 mm in 4 days

All the above cyclones moved from SW bay in WNW direction towards the TN coast expect the 1996 one which moved down like the current one from NW bay in WSW direction.

Assuming around Cuddalore as the landfall point, Chennai will see good rains from 14th night or by 15th morning and then after Cyclone moves into Arabian Sea on 16/17th Chennai can expect pull effect rains. So two-three days of rains. It will be windy on 15th too but nothing serious. I will be happy with 150 mm rainfall for Chennai in 2 days from this fast moving Cyclone.If there is slight change in landfall just north of Chennai then, this will change. We can bountiful rains from Gaje. Many almost lost hopes before Diwali, what ever we are getting we should be thankful.

Widespread rains to North TN
Extreme rains can be expected around landfall area and also in north western Tamil Nadu. Tamil Nadu coastal belt of Chennai, Kancheepuram, Tiruvallur, Villupuram, Nagai will also get good rains. Entire North interior tamil nadu districts Tirchy, Ariyalur, Villupuram,Perambalur, Karur, Salem, Erode, Tiruppur, Coimbaore, Nilgiris, Thiruvannamalai will also get rains. Kerala too will get one day of rains. South TN which got excess rains till date will see less rains from Gaja.

Fishermen
The sea will be very extreme from 12/13th November in North TN and South AP coast till the delta region. So dont go to seas till 16th Novemeber. So what happens in Arabian sea once it crosses TN and kerala on 16th Novmber. It will be very weak one in Arabian sea near Indian coast and even if it becomes cyclone again in Arabian Sea it will be very far away from Indian Coast. So one need not worry there.

Anymore twist on landfall location

கடலூர் வெள்ள நிவாரணம்

We have seen nature always pulls a surprise. Till last day before Cyclone Thane landfall, it was expected to make landfall close to Chennai and then on last day before landfall it dipped further down to Cuddalore. It was heart shattering moment for Cyclone lovers like me. I have read of few of the comments, For them i would like to state the following, we dont like to see devastation and see people suffer or enjoy fallen trees but to see one of the natural wonders (cyclone) is what we dream every day as weather bloggers. So this Gaja landfall somewhere around Cuddalore or Pondy might change too. But high probability of Cyclone crossing is around that area. Any change

North East monsoon 2018
Tamil Nadu is in Deficit with -23% rains till date and Chennai -52% with Cyclone moving inland, the regions which has missed rains till date particularly interiors will surely benefit a lot. Though the cyclone in moving too fast it is going to dump huge rainfall in short period. Everyone remembers Vardah for winds but no one remembers it dumped 400 mm rains in few hours in OMR, Tambaram and Oragadam belt that day.

Anything after this Cyclone for TN
Whether Gaje will again become cyclone in Arabian Sea or not needs to be watch. It is expected to move away from Indian coast. The good thing Gaja does is activate monsoon with one more trough of low moving near Sri Lanka. This easterly wave will give rains to TN coast / STN. We are just 15 days into monsoon so more low pressure are expected to form and develop in our Bay of Bengal. Lets hope Gaja given meaningful rains to parched areas of North TN and then start tracking the other ones later. Its again too early to call this year NEM. Tamil Nadu is sure to get above normal rains when season comes to close by December 31st.

Rumors
This is the ideal time for rumor mongers in FB, Whatsapp, youtube and TRP guys with creative mindset. Please dont forward or share them blindly in whatsapp or FB.

நன்றி: தமிழ்நாடு வெதர்மேன்

கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் அவ்வளவு சாதாரணமாக யாராலும் மறக்கக் கூடியது அல்ல. பாசிச ஜெயாவின் மெத்தன ஆட்சியின் கீழ், அப்பெருவெள்ளத்தால் உடைமையிழந்து உறவுகளை இழந்தவர்கள் ஏராளம். அடுத்த ஆண்டு சென்னையைப் புரட்டிப் போட்ட வர்தா புயலின் இழப்புகளும் ஏராளம். கடந்த 2017-ம் ஆண்டு ஒக்கிப் புயல் கன்னியாகுமரி மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. 

இப்பேரிடர் காலங்களில் மக்களைக் காக்க எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ, அல்லது துரித மீட்பு நடவடிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கையையோ எடுக்கவில்லை இந்த அரசு. தற்போதைய நிலையில் இயற்கைச் சீற்றங்களை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும், மீட்பு நடவடிக்கைகளிலும் அரசை நெட்டித் தள்ளவேண்டிய அவசியம் இங்கு நிலவுகிறது. அதற்கும் நாம் தயாராக வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க