வில்லவன்
வில்லவன்

டவுள் கையேந்தி நிற்கும் அவலம் கண்டதுண்டா நீங்கள்? அது தமிழ்நாட்டில் தினசரி காணக்கிடைக்கும் காட்சி. கடவுளுக்கும் மேலான எங்களை கடவுளாகவே மக்கள் கருதி வந்தார்கள். கோயில் ராஜாக்கள் வசம் இருந்தது. ராஜாக்களோ எங்கள் வசம் இருந்தார்கள். எங்கள் வீடுகள் வெள்ளம் அண்டாத மேடான நிலத்தில் இருந்தது. வயலில் கால் வைக்காமலேயே எங்கள் வெள்ளாமை வீடு வந்து சேர்ந்தது. ”சாப்பிடுறதுதான் தயிர் சாதம், மோதிப்பார்த்தா உயிர்சேதம்” என ஸ்டேட்டஸ் போடவேண்டிய நிலை எங்களுக்கு அன்று இல்லை. காரணம் ஊரில் எல்லோருக்கும் அது தெரிந்திருந்தது.

ஹிந்து ராஜாக்கள் காலத்தில் வாழ்ந்தது போலவே முகலாயர்கள் காலத்திலும் சௌபாக்கியத்துக்கு குறைவின்றியே வாழ்ந்துவந்தோம். வெள்ளைக்காரன் காலத்திலும் அசௌகர்யம் என்று ஒன்று இல்லை. சாதி ஒழிப்பு, சூத்திரர்களுக்கு கல்வி போன்ற சில அனாச்சாரங்கள் அப்போது இருந்தன என்றாலும் அதிகாரம் எங்களிடம் இருந்தது. உலகமே பயந்த ஹிட்லருக்கு நாங்கள் பயப்படவில்லை, அவன் வருகையை எதிர்பார்த்து ஜெர்மன் மொழி கற்ற வீர சமூகம் எங்களுடையது.

ஆனால் இன்று அவை பழங்கதை ஆகிவிட்டன. முதல்வரைக் காட்டிலும் அதிகாரம் கொண்ட தலைமைச் செயலாளர் எங்களவர். ஆனாலும் மக்களிடம் மரியாதை இல்லை. எல்லா பெரிய நிறுவனங்களின் தலைமைப் பீடங்களும் எங்கள் வசம்தான். ஆனாலும் எங்கள் குலக் கொழுந்துகளுக்கு மீடியா பெண்களை வேசி என அழைக்கும் உரிமைகூட மறுக்கப்படுகிறது. மீடியா ஓனர்கள் எங்களை பாதகமலங்களில் வீழ்ந்துகிடக்கும் சூழல் இருந்தாலும் எங்கள் பிள்ளை பாண்டேவால்கூட எங்களை முழுமையாக ஆதரிக்கமுடியவில்லை. வியாபாரத்துக்காக பா.ஜ.க.வை நோண்டி நோண்டி கேள்வி கேட்கவேண்டிய தலைவிதியல்லவா அவனுக்கும்?

ஆயிரம்தான் கூமுட்டையாக இருந்தாலும் சுப்ரமணியசாமியை கோமாளிபோல பார்ப்பது நியாயமா? குருமூர்த்தியும் எச்.ராஜாவும் தமது குலவழக்கப்படி ஒரு வதந்தியைக்கூட ட்விட்டர் வாயிலாக பரப்ப முடியாத அளவுக்கு மக்கள் அவர்களை அம்பலப்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட கொடியவர்களின் கூடாரமாக இந்த மாநிலம் இருக்கிறது. மோடியையே அதிகாரம் செய்யவல்ல ஜாதி எங்களுடையது. ஆனாலும் ஷர்மா சாஸ்திரிகளால் ”நம்ம ஜாதி பிள்ளைகள் ஸ்கூல்ல மத்த சாதி கொழந்தைகளோட சாப்பாட்டுல கைவச்சு சாப்பிடக்கூடாது” ன்னு நேரடியாக சொல்ல முடியவில்லை.. அது சுகாதாரம் இல்ல, அதனால் பல விளைவுகள் ஏற்படும்னு மையமாக புலம்ப வேண்டியிருக்கு. எங்கள் தர்மத்தைக்கூட குசுவைப்போல நசுக்கி விடவேண்டியிருக்கிறது. இதையெல்லாம் சொல்லி புலம்பி ஸ்டேட்டசோ வீடியோவோ போட்டால் 28 லைக் வருவதற்கும் 750 ஹாஹா ஸ்மைலிகள் அசுர பாணங்களாக வந்து எங்கள் நெஞ்சைத் தைக்கிறதே…

படிக்க:
லிபரல் பார்ப்பனராவது எப்படி? வாழ்ந்து காட்டுகிறார் கட்ஜு
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் !

கோட்சே.

எங்கள் பிள்ளை கோட்சேவை கொஞ்சி மகிழ முடியவில்லை. தொட்டால் பட்டுக்கொள்ளும் அம்பேத்கரை எல்லாம் பாராட்டித்தொலைய வேண்டியிருக்கிறது. சொந்தப் பிள்ளைக்கு இன்ஷியல் கொடுக்க முடியாமல் ஊரான் பிள்ளையை தன் பிள்ளையென கொஞ்ச வேண்டிய துரதிருஷ்டம் வேறு ஜாதிக்கு வாய்த்திருக்கிறதா? மஹாராஜாக்களை காலடியில் விழுந்து கிடக்க வைத்த சமூகம் இன்று காமெடியன்களை ஐகான்களாக வைத்திருக்க வேண்டிய அவல நிலையில் இருக்கிறது. இன்று இருக்கும் பிராமண தலைவர்களை பாருங்கள், சுப்ரமணிய சாமி, எஸ்.வி.சேகர், எச்.ராஜா, நிர்மலா சீதாராமன்… இந்த பெயர் வரிசையை படிக்கும்போது கெடா குமாரு, டுமீல்குப்பம் வவ்வாலு எனும் சினிமா டயலாக் எனக்கே நினைவு வந்து தொலைக்கிறது. பிறகு ஊர்ஜனம் மட்டும் சிரிக்காமல் இருக்குமா? இந்த எழவெடுத்த இன்டர்நெட் ஒருகாலத்தில் எங்கள் அக்ரஹார திண்ணை போல எத்தனை ரம்மியமாக இருந்தது. இப்போது பீஃப் கடைக்கு போவதுபோல நாங்கள் அங்கு ரகசியமாகத்தான் போக வேண்டியிருக்கிறது.

ஆசிட் அடிப்பது கஞ்சா கேஸ் போடுவது என பல வீர வரலாறு இருந்தாலும் எங்கள் குலமங்கை ஜெயாவை வைத்தே சங்கராச்சாரியை கைது செய்ய வைத்துவிட்டதே இந்த சூத்திர கும்பல். சரி நிம்மியை அடுத்த ஜெ.வாக மாற்றிவிட்டால் எல்லாம் ஷேமமாக நடக்கும் என நாங்கள் ஆறுதல்படும் வேளையில், அந்த தைரிய லட்சுமியை கண்டாலே தமிழக இளைஞர்கள் கூட்டம் ஓணானைக் கண்ட 80-ஸ் கிட்ஸாக மாறி விர்ச்சுவல் கல்லெடுத்து அடிக்கின்றன. போகட்டும் ஜனநாயக மேக்கப் போட்ட பத்ரியை தலைவராக்கலாம் என்றால் அவருக்கும் அதே ஓணான் டிரீட்மெண்ட் கிடைத்துவிடுமோ என அடிவயிறு கலங்குகிறது.

அதுமட்டும் இல்லாமல் இருக்கும் மிச்சம் மீதியெல்லாம் பொறுக்கியாகவும் கூமுட்டையாகவும் இருக்கிறது. இதில் இருக்கும் டெமாக்ரடிக் மூஞ்சியையும் காவு கொடுக்க பயமாயிருக்கிறது. மோடியின் ராஜகுரு குருமூர்த்தி அரும்பாடுபட்டு அறிமுகம் செய்த தீபா விளங்கவில்லை. ஓ.பி.எஸ்.சை வளர்க்கிறேன் என கிளம்பினார் அதனால் சசிகலா மீதிருந்த ஜனங்களின் கோபம் குறைந்து போனதுதான் மிச்சம். ரஜினியை உசுப்பினார், அன்றிலிருந்து அது வரலாற்றில் இல்லாத அளவுக்கு உச்சகட்ட மெண்டல்போல உளறிவைக்கிறது. இதையெல்லாம் பார்த்த எங்கள் வீட்டு மாமியே, இந்த தரித்திரம் பிடித்தவன் மூஞ்சியில் முழிச்சிட்டு போனா பால் பாக்கெட்கூட கிடைக்கிறது இல்லை என புலம்புகிறாள்.

இத்தனை காலம் நாத்திகம் பேசி மாட்டுக்கறி தின்றவராயிற்றே எனும் நன்றியில்லாமல் பிராமண வீட்டுப் பிள்ளை கமலையும் கழுவி ஊற்றுகிறார்கள், அய்யங்கார் வீட்டு மருமகன் ரஜினியையும் பார்க்குமிடமெல்லாம் துப்புகிறார்கள். இவனுங்களை எப்படி கரெட்க் பண்றதுன்னே தெரியலையே என ஆர்யா போல புலம்பியே எங்கள் மாமாக்கள் பலர் உலக வாழ்வை முடித்துக்கொண்டுவிட்டார்கள். ஒரு காலத்தில் எங்கள் வீட்டு நாயாக இருந்த மக்களின் பிள்ளைகள் எதிரியின் வேட்டை நாயாக மாறி எங்களையே கடிக்க வருகின்றன. ஏதோ ஆதிக்க சாதிச்சங்கங்களும் கிருஷ்ணசாமி வகையறாக்களும் (பேரை மாத்தி வச்சுக்கோடாம்பி… அவா அவாளுக்குன்னு ஒரு கல்ச்சர் இருக்கோல்யோ) எங்களை காலைக் கழுவி சேவகம் செய்வதால் எங்கள் மூச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

கிருஸ்தவ சூத்திரன் விஜய் படத்தை காலி செய்ய எங்கள் பிராமண தளபதி ராஜாவை அனுப்பினால் தமிழக அசுர கும்பல் அந்த மெர்சல் படத்தை வெறித்தனமாக ஓடவைக்கிறது. அதன் பிறகு கோடம்பாக்க டைரக்டர்கள் எல்லோரும் பா.ஜ.க.வை திட்டி காட்சி அமைப்பதற்கென்றே தனி டிஸ்கஷன் வைத்தார்கள் என கேள்விப்பட்டேன். ஏதோ வருமான வரித்துறை எங்கள் வசம் இருப்பதால் தப்பித்தோம். அடுத்த விஜய் படத்தை ஒழிக்க நாங்கள் ஜெயமோகன் எனும் சூத்திரனைத்தான் அனுப்ப வேண்டியிருந்தது. ஒரு காலத்தில் எங்கள் காலடியில் கிடந்தது சினிமாத்துறை. மணி சார், பாலச்சந்தர் சார் என பயபக்தியோடு ஒலித்த குரல்களை இன்று கேட்க முடியவில்லை. அரவிந்த் சாமி, மாதவன் என வெண்ணிற சாக்லேட் பாய்களை இன்று சீந்த நாதியில்லை. விஜய் சேதுபதி போன்ற கருப்பர் கூட்டமோ கால்ஷீட் இல்லாமல் பறந்து பறந்து வேலை செய்துகொண்டிருக்கிறது.

சினிமா மட்டுமா எங்களை விட்டு தொலைந்தது? கஷ்டப்பட்டு மந்திரம் ஓதி மஹாராஜாக்களுக்கு சோப்பு போட்டு சம்பாதித்த சதுர்வேதி மங்கலங்கள் எம்மிடம் இருந்தன. அவற்றை எல்லாம் நோகாமல் – உழைத்துப் பிழைத்த மக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தர்மம் செய்தோம். இந்தியாவில் செட்டில் ஆன கொஞ்ச நாளில் கறி மீனை சாப்பிடும் பழக்கத்தை இழந்தோம். சொந்த பெண்களுக்கு மொட்டை போட்டு மூளியாக்கும் உரிமையை இழந்தோம். அதை மீட்க இப்போது முயன்றால் எங்காத்துப் பெண்களே எங்களை விளக்கமாற்றால் அடிப்பார்கள். ஏற்கனவே காதல் எனும் கருமத்தால் பல பெண்களை எங்கள் சமூகம் இழந்துகொண்டிருக்கிறது.

படிக்க:
யார் அந்த ஏழு பேர் ? ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்
#MeToo : படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு ! கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன ராகம் !

ஸ்கூல் வாத்தியார், தாசில்தார், பேங்க் மேனேஜர் என நாங்கள் கட்டியாண்ட துறைகள் எல்லாம் கையைவிட்டுப் போய்விட்டது. ஆடிட்டர், நீதிபதி, கவர்னர் என சில டிபார்ட்மெண்ட்கள் மட்டும் மிச்சம் இருக்கின்றன. ஆனாலும் அங்கேயும் சில கறுப்பு உருவங்கள் வந்து எங்களோடு ஈஷிக்கொண்டு நிற்கின்றன. மயிலாப்பூர் மாம்பலமாவது மிச்சமானதா என்றால் அதுவும் இல்லை. அயோத்தியா மண்டப சொற்பொழிவானாலும் தெற்கு மாடவீதி எஸ்.வி.சேகர் மீட்டிங் ஆனாலும் எங்கள் இனத்தில் இருந்து வெறும் கிழடு கட்டைகள்தான் வருகின்றன. சுகர் பேஷண்ட்டுக்களை வைத்து எங்கிருந்து இன்னொரு குருஷேத்ரப் போரை நடத்துவது? அப்படி போரை நடத்தினாலும் அதை முன்னின்று நடத்த வேண்டிய சின்ன சங்கராச்சாரி மல்லாக்கப் படுத்தால் எழவே மாமாங்கம் ஆகும் போலிருக்கிறது.

போகட்டும், இன்றைய தமிழகம் வேண்டுமானால் எங்களை நக்கல் செய்யலாம். ஆனாலும் எங்களை ஆண்டவன் அப்படி அம்போவென விட்டுவிடமாட்டான். இன்னமும் கோயில்கள் எங்கள் வசம்தான் இருக்கின்றன. அங்கேயெல்லாம் ஷாகா நடத்தி வேண்டிய அளவுக்கு முட்டாள்களையும் பொறுக்கிகளையும் ரவுடிகளையும் உருவாக்குவோம். எங்கள் பிள்ளைகள் எல்லாம் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டன. மேற்கத்திய சாவர்க்கர் ட்ரம்ப் அவர்கள் அதிபராக இருக்கிறார். ஆகவே அங்கிருந்து எங்கள் ராஜாங்கத்தை நடத்துவோம். மோடி என்றில்லை யார் இந்தியாவின் பிரதமரானாலும் அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் காணாமல் போகும் அல்லது தனியாருக்கு கைமாற்றிப்போகும். இலவசக் கல்வி ஒழிக்கப்பட்டு நாடெங்கும் படிப்பறிவற்ற முட்டாள்கள் இருந்தால் வாட்சப் வீடியோ வழியே வந்து நாங்கள் ராமராஜ்யம் அமைப்போம். பக்தியும் முட்டாள்த்தனமும் எங்களைக் காப்பாற்றும். வாட்சப் ஃபார்வேர்டு தகவல்களை நம்பும் மிடில்கிளாஸ் உள்ளவரை பிராமணீயம் எந்த சவாலையும் தாங்கும்.

ஒரு ஏழை பிராமணனின் குரல், உண்மை ஹிந்து எனில் அதிகம் பகிரவும்.

ஜெய்ஹிந்த்.

கொசுறு:

62 மறுமொழிகள்

 1. நையாண்டிக் கட்டுரைப்பகுதிக்கு காளமேகம் அண்ணாச்சியோடு போட்டியோ?
  வில்லவன் கட்டுரைகளில் இது ஒரு மைல்கல்!

  இரண்டு தலைமுறைகளைக்கடந்த உண்மையை இன்றைய இளைஞர்களுக்கு எடுத்தியம்பியது அருமை:
  “உலகமே பயந்த ஹிட்லருக்கு நாங்கள் பயப்படவில்லை, அவன் வருகையை எதிர்பார்த்து ஜெர்மன் மொழி கற்ற வீர சமூகம் எங்களுடையது.”

  கட்டுரையின் முடிவு ஒரு எதார்த்தம்:
  “ஒரு ஏழை பிராமணனின் குரல், உண்மை ஹிந்து எனில் அதிகம் பகிரவும்.”

 2. மரண மாஸ். பத்ரியோட பா.ராகவனை சேத்துருக்கலாம். பலித்தவரை பிராமணியங்குறதுக்கு வில்லவன் கட்டுரை ஒரு கோனார் நோட்ஸ்! 😆

 3. நல்லா கதறவும்! 😀
  ஆமா சத்தீஸ்கர்ல உங்க எதிர்ப்பையும் மீறி பதினெட்டு தொகுதில தேர்தல் அமோகமா நடந்துடுச்சாமே?

 4. பாவம் அவாள் என்பது போல கட்டுரை இருக்கிறது ஆனால் அவள் தான் இங்கே பவர்புல்.

 5. பிராமணன் பூணூலை அறுக்கத் துணிந்த உங்களுக்கு ஒரு கிறித்துவனின் சிலுவை டாலரையோ அல்லது ஒரு முஸ்லிமின் தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலைப் பாகையையோ அகற்றும் ஆண்மை உண்டா?

  இசுலாம் மதத்தில் யார் ஒருவரும் வஜ்ராத் ஆகலாம், இமாம் ஆகலாம்.

  கிறித்துவ மதத்தில் யார் ஒருவரும் பாதிரியார் ஆகலாம், ஏன் போப் ஆண்டவர் கூட ஆகலாம்.

  ஆனால் இந்து மதத்தில் யார் வேண்டுமானாலும் சங்கராச்சாரி ஆக முடியுமா? நீயும் இந்து, நானும் இந்து என்றால் எல்லோரும் சங்கராச்சாரி ஆக முடியுமா? பார்ப்பனர்கள் மட்டுமே ஆக முடியும். பார்ப்பனர்களிலும் அனைவரும் ஆகிவிட முடியாது. தெலுங்கு பேசும் ஸ்மார்த்த பார்ப்பனர் மட்டுமே ஆக முடியும்.

  அனைத்து கிறித்துவரும் சிலுவை அணியலாம், அனைத்து இசுலாமியரும் தொப்பி அணியலாம், அனைத்து இந்துவும் பூணூல் அணிய முடியுமா? அப்படியே அணிந்தாலும் கருவறைக்குள் செல்ல முடியுமா? அர்ச்சகராக முடியுமா?

  பார்ப்பன இனத்தில், பார்ப்பனச் சிறுவர்களுக்கு அவர்களது 8வது வயதில் ‘உபநயனம்’ என்ற சடங்கை நடத்தி பூணூல் அணிவித்த பிறகு பிராமணனாக ‘இரண்டாவது பிறவி’ எடுக்கிறார்கள். அப்படி ‘பிராமணனாக’ மாறியதன் அடையாளமாகத் தான் ‘பூணூல்’ அணிவிக்கப்படுகிறது.

  இந்து மனுசாஸ்திரம் ‘சூத்திரர்’ என்றால் ‘பிராமணர்களின் வைப்பாட்டி மக்கள்’ என்று கூறுகிறது. (அத்தியாயம் 8; ஸ்லோகம் 415) இந்திய அரசியல் சட்டத்தில் 372 வது பிரிவு இதற்குப் பாதுகாப்பாக உள்ளது.

  அதனால்தான் தோழர் பெரியார் “ஒரு தெருவில் ஒரு வீட்டில் மட்டும் இது பத்தினியின் வீடு என எழுதினால் மற்ற வீடுகள் என்ன வகையான வீடுகள்?” எனக் கேட்டார். அதாவது, ஒருவர் தன்னை ‘பிராமணர்’ என்று அறிவித்துக் கொண்டால் மற்றவர்கள் ‘சூத்திரர்கள்’ என்று தானே பொருள் எனக் கேட்டார்.

  ஆக சமூகத்தில் தான் உயர்ந்த சாதி எனக் காட்டிக் கொள்ளவும், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துவதாலும் அதை ஒரு சில தோழர்கள் அறுத்தார்கள்.

  பெரியார் எப்போதும் வன்முறையை ஆதரித்ததில்லை, நாங்களும் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சமாதானத்தையுமே விரும்புகிறோம்.

    • சரி உங்கள் வார்த்தைபடியே வருவோம்…

     கடவுள் நம்பிக்கையற்றவர்களை ஹிந்து மதம் நாத்திகர்கள் என்று ஏற்கிறது அது போல் கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்கள் கடவுள் நம்பிக்கையற்றவர்களை ஏற்கிறதா ? இஸ்லாமிய மதத்தில் இருந்து கொண்டு கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொன்னால் கொலை விழும்… கிறிஸ்துவத்தில் கடவுள் நம்பியற்றவர்களை வீட்டிற்குள் சேர்க்காதீர்கள் அவர்களை ஒதுக்கி வையுங்கள் என்று சொல்கிறது…

     இவ்வுளவு குற்றங்களையும் குறைகளையும் அப்பாவி மக்களின் ரத்தகரையை வைத்து கொண்டு கிறிஸ்துவ மதவெறியர்களும் வெளிநாட்டு கைக்கூலி வினவு போன்றவர்களும் ஹிந்து மதத்தை பற்றிய அவதூறுகளை பரப்புவது எந்த வகையில் நியாயம் ?

     ஹிந்து மதத்தை பற்றிய குறைகளை சொல்ல கிறிஸ்துவ மதவெறியர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ?

     கிறிஸ்துவ இஸ்லாத்தை போல் மதத்தை பரப்ப ஹிந்து மதம் பெரும் அழிவை உலகத்தில் எந்த ஒரு நாட்டிலாவுது செய்து இருக்கிறதா ?

     மனித இன வரலாற்றில் கிறிஸ்துவ இஸ்லம்மிய மதத்தில் நம்பியாளர் நம்பிக்கையற்றவர் என்று பாகுபடுத்தி தண்டித்து இருக்கிறார்கள்… இதற்கு பெயர் என்ன ?

     • “கிறிஸ்துவத்தில் கடவுள் நம்பியற்றவர்களை வீட்டிற்குள் சேர்க்காதீர்கள் அவர்களை ஒதுக்கி வையுங்கள் என்று சொல்கிறது… ”

      Are you sure about it
      Would you refer any quotation regard to this

      ‘இவ்வுளவு குற்றங்களையும் குறைகளையும் அப்பாவி மக்களின் ரத்தகரையை வைத்து கொண்டு கிறிஸ்துவ மதவெறியர்களும் வெளிநாட்டு கைக்கூலி வினவு போன்றவர்களும் ஹிந்து மதத்தை பற்றிய அவதூறுகளை பரப்புவது எந்த வகையில் நியாயம் ? ‘

      Again, your allegation is baseless. You should give us some fact or proof if you say so.

      “கிறிஸ்துவ இஸ்லாத்தை போல் மதத்தை பரப்ப ஹிந்து மதம் பெரும் அழிவை உலகத்தில் எந்த ஒரு நாட்டிலாவுது செய்து இருக்கிறதா ? ”

      I agree with your opinion about Christianity and Islam –
      But I am pretty sure Hinduism is in Indian continent did the same as other religion to It’s people and its still going on ……. Like ISIS

      “மனித இன வரலாற்றில் கிறிஸ்துவ இஸ்லம்மிய மதத்தில் நம்பியாளர் நம்பிக்கையற்றவர் என்று பாகுபடுத்தி தண்டித்து இருக்கிறார்கள்… இதற்கு பெயர் என்ன ?”

      Barbarism.

      But doesn’t mean our religion is pure and harmless

      • //Are you sure about it
       Would you refer any quotation regard to this//

       உங்களுக்கு இந்தியாவை பற்றி தான் ஒழுங்காக தெரியாது என்றால் உங்களுக்கு கிறிஸ்துவம் பற்றியும் தெரியவில்லை… காரணம் கிறிஸ்துவ மதமாற்றிகள் ஒவ்வொரு நாட்டிற்கு தகுந்தாற் போல் அவர்கள் பூர்விக கலாச்சாரத்தின் மீது அவதூறு சொல்லி கிறிஸ்துவம் உயர்ந்தது என்று சொல்வதற்கு இதை செய்கிறார்கள்.

       நான் சொன்ன வார்த்தைகளுக்கான ஆதாரம் 2 John 7-11

       Whoever transgresses and does not abide in the doctrine of Christ does not have God. He who abides in the doctrine of Christ has both the Father and the Son. If anyone comes to you and does not bring this doctrine, do not receive him into your house nor greet him; for he who greets him shares in his evil deeds.

      • உங்களுக்கு இந்தியாவை பற்றி தான் ஒழுங்காக தெரியாது என்றால் உங்களுக்கு கிறிஸ்துவம் பற்றியும் தெரியவில்லை… காரணம் கிறிஸ்துவ மதமாற்றிகள் ஒவ்வொரு நாட்டிற்கு தகுந்தாற் போல் அவர்கள் பூர்விக கலாச்சாரத்தின் மீது அவதூறு சொல்லி கிறிஸ்துவம் உயர்ந்தது என்று சொல்வதற்கு இதை செய்கிறார்கள்.

       நான்முதலில் ஆங்கிலேயே அடிமைத்தனத்தில் இருந்து வெளியே வாருங்கள். இஸ்லாமியர்கள் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே இந்த நாடு கலாச்சார ரீதியாக ஒரே நாடாக இருந்து இருக்கிறது… நீங்கள் வேதங்களை நம்புவதில்லை என்ற காரணத்திற்காக (அதில் இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளது) நான் புறநானுறு பாடலை ஆதாரமாக கொடுக்கிறேன்.

       வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
       தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
       குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
       குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும் (புறம் – 6)

       இது புறநானுற்றின் மிக பழமையான பாடல்… இந்த பாடல் பாரத தேசத்தின் எல்லைகளை மிக தெளிவாக சொல்கிறது… வடக்கே காஷ்மீரிலும் சிவனை தான் வழிபட்டோம், தெற்க்கே குமரியில் சிவனை தான் வழிபட்டோம்… வடக்கே காஷ்மீரில் சிவனை வழிபட சொல்லப்பட்ட மந்திரம் தான் தெற்க்கே குமரியில் சிவனை வழிபட சொல்லப்பட்டது.

       உங்களை போன்ற ஆங்கிலேயே அடிமைகளுக்கு இந்தியாவை பற்றி ஒன்றுமே தெரியாது, உங்களின் அடிமை புத்திக்கு இந்தியா என்பதே ஆங்கிலேயர்களின் படையெடுப்பிற்கு பின்பு தான்.

       இஸ்லாமியர்களை பொறுத்தவரையில் இந்தியா என்பது அவர்களின் படையெடுப்பிற்கு பின்பு தான்.

      • //I agree with your opinion about Christianity and Islam –
       But I am pretty sure Hinduism is in Indian continent did the same as other religion to It’s people and its still going on ……. //
       உங்களின் வார்த்தை தவறு ஹிந்து மதத்தை பரப்ப வேண்டும் என்ற ஓரே காரணத்திற்காக இந்தியாவில் போர் என்றே நடந்தது என்ற வரலாறு இல்லை. இன்னும் சொல்ல போனால் மதத்திற்காக வன்முறை கூட நடந்து இல்லை, அதுயெல்லாம் இஸ்லாமிய படையெடுப்பிற்கு பின்பு வந்த விஷயம்.

       மதத்தை பரப்ப இந்தியாவில் விவாதங்கள் தான் செய்தார்கள் (ஆதிசங்கரர் வரலாறே இதற்கு சாட்சி)… ரஜினி நடித்த ராகவேந்திரர் படத்தில் கூட விவாதம் செய்யும் காட்சிகள் வரும்.

       இது தான் பாரதத்தின் உயர்வு. தமிழகத்தை பொறுத்தவரையில் ஞானசம்பந்தர் சமணர் விவாதம், அந்த விவாதத்தில் தோல்வி அடைந்தவர் கழுவேற்றப்படுவார்கள் என்பது சவால்… விவாதத்தில் உயிரை பணயம் வைத்தவர்கள் சமணர்கள் அதற்கு முன்பு விவாதத்தில் தோல்வி அடைந்தாள் வெற்றி பெற்றவரின் மதத்திற்கு மாறுவார்கள். சமணர்கள் தான் உயிரையே பணயம் வைத்தார்கள்.

       முதலில் கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களை ஹிந்து மதத்தோடு ஒப்பிடுவதை நிறுத்துங்கள், அதற்கு இந்த இரு மதங்களுக்கும் தகுதியில்லை.

  • தலித் கிறிஸ்துவ பிணங்களை எங்கள் சுடுகாட்டில் புதைக்க கூடாது என்று சொன்ன நீங்கள் ஹிந்துக்களை பற்றி பேசுவதற்கு சிறிதும் தகுதி இல்லாதவர்கள்.

 6. இந்துக்கள் உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி.சி.எஸ், இன்போசிஸ், காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் ‘தமிழன் வேண்டாம், திராவிடன் வேலை செய்யக் கூடாது’ என்று உங்களால் அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா?

  தொலைபேசியை, மின்சாரத்தை, தொலைக்காட்சிப் பெட்டியை, வீட்டில் நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் இந்து மத நண்பர்கள் கண்டுபிடித்ததில்லை, இருந்தும் நாம் அனைவரும் பயன்படுத்துகிறோம்.

  ஏற்கனவே சொன்னது போல நாங்கள் இந்துக்களை எதிரிகளாகப் பார்ப்பதில்லை. இந்து மதத்தில் உள்ள குறைகளையே எதிர்க்கிறோம்.

  கைபர் போலன் கணவாய் வழியாக நாடோடிகளாக நுழைந்து, இந்த நாட்டையே சூழ்ச்சியால் பிடித்து, எங்கள் சமூகத்திற்கு கல்வியை மறுத்துவிட்டு, கல்வி கற்றால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றிவிட்டு, மருத்துவத்திற்கு சமசுகிருதம் தெரிய வேண்டும் என தகுதி நிர்ணயித்து, நீங்கள் மட்டும் படித்து விட்டு அனைத்து அரசாங்கப் பதவிகளும் பெற்று விட்டு, தமிழன் கட்டிய கோவில்களில் புகுந்து கொண்டும் இருக்கிற நீங்கள், பார்ப்பனர் அல்லாத நிறுவனங்களின் வேலையிலிருந்தும், எங்கள் நிலத்தை விட்டும் முதலில் வெளியேறுங்கள் எனச் சொன்னால் அதை ஏற்க முடியுமா?

  • உலகம் முழுவதுமே கிறிஸ்துவர்கள் செய்யும் பொய் பிரச்சாரங்களை நீங்கள் சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்… இந்தியாவில் ஹிந்து மதத்தை பற்றி பொய்கள், ஆப்பிரிக்காவில் அந்த மக்களின் பூர்விக கலாச்சாரத்தை பற்றி அவதூறு… பிரேசில் மெக்ஸிகோ போன்ற நாடுகளில் பூர்விக கலாச்சாரத்தை ரத்தக்கரையோடு அழித்துவிட்டு இன்று பாகிஸ்தானை போல் வேறு மதத்தவரே இல்லாத தேசமாக கிறிஸ்துவம் மாற்றி இருக்கிறது.

   முதலில் உங்களின் கைபர் கால்வாய் வழியாக வந்தவர்கள் இஸ்லாமியர்களும் உங்களை போன்ற கிறிஸ்துவர்களும் தான்… ஹிந்துக்கள் அல்ல.

   ஹிந்து மதம் இந்த நாட்டின் பூர்விக மதம்… வெள்ளையர்கள் எப்படி பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டார்களோ அதே சூழ்ச்சியை கிறிஸ்துவர்களும் இப்போது தமிழன், தமிழன் ஹிந்து இல்லை, அது இது பொய்களை பரப்பி கொண்டு இருக்கிறீர்கள்.

   நீங்கள் ஹிந்துக்களுக்கு மட்டும் எதிரி இல்லை, இந்த நாட்டின் பண்பாட்டிற்கே எதிரிகள் தான்.

   கிறிஸ்துவமும் இஸ்லாமும் சென்ற தேசங்கள் அனைத்திலும் பெரும் அழிவை தான் ஏற்படுத்தி இருக்கிறீர்கள்… முன்பாக இருந்து இருந்தால் உங்களின் பொய்களை நம்பி இருப்பார்கள் ஆனால் இன்று சமூகவலைத்தளங்கள் வந்த பிறகு உங்களை போன்ற கிறிஸ்துவர்களின் முகத்திரை கிழிக்க படுகிறது. யாரும் உங்களின் பொய்களை நம்ப போவதில்லை.

   • கைபர் போலன் வழியாக வந்தவர்கள் ஆரியர்கள், அந்த ஆரியர்களால் இந்திய மக்கள் இந்துக்கள் என்று நம்பவைக்கப்படுகிறார்கள், இதை அறியாத சாதாரண ஹிந்துக்களும் அவர்களுக்கு அடிமையாகிப்போன பரிதாபம் இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கிறது

    • இது கிறிஸ்துவ இஸ்லாமிய கூட்டங்களின் பொய் பிரச்சாரம்… ஆரியர்கள் வேறு திராவிடர்கள் வேறு என்ற பித்தலாட்ட பொய்களை அவிழ்த்துவிட்டவர்கள் கிறிஸ்துவர்கள்… பல ஆயிரம் வருடங்களாக இந்த மண்ணில் ஹிந்து மதம் இருக்கிறது அதற்கு உங்களை போன்ற வெளிநாட்டு இறக்குமதி செய்யப்பட்ட மதங்களை சேர்ந்தவர்கள் செர்டிபிகேட் கொடுக்க தேவையில்லை.

   • நீங்கள் ஹிந்துக்களுக்கு மட்டும் எதிரி இல்லை, இந்த நாட்டின் பண்பாட்டிற்கே எதிரிகள் தான்.

    What is your culture mr. Mani

    Injustice and inequality for other than Upper caste
    Unfair practices against women and minorities ….
    If our country contributed anything to this world other than caste system, would you mention here….

    • யாரை வைத்து கொண்டு ஹிந்து மதத்தை பற்றிய அவதூறுகளை பரப்புகிறீர்களோ அவரை பற்றியே இப்போது பேசுகிறேன்.

     பிராமணர் என்பவர் யாசித்தே உண்ண வேண்டும் என்றும், நாட்டின் நலனுக்காக மன்னர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேதங்களையும் பிற கல்வி அமசங்களையும் பயிற்றுவிக்க வேண்டுமென்றும் கூறுகிறது. மேலும் பிராமணர் என்பவர் அமைதி, சுய கட்டுப்பாடு, பொறுமை, நேர்மை, அறிவு, விவேகம், சுத்தம், புனிதம் போன்ற தன்மைகளும் நிறைந்திருக்க வேண்டும் (திருக்குறளிலும் இது பற்றி வள்ளுவர் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்).

     இதற்காக பிராமணர்கள் பிச்சை எடுக்கலாம், அல்லது ஊரின் எல்லையில் வயல்வெளியில் சிந்தி இருக்கும் நெல்மணிகளை சேர்க்கரித்து உண்ணலாம் ஆனால் தனக்காக பிராமணர் பொருள் சம்பாதிக்க கூடாது என்பது விதி.

     உலக நன்மைக்காக இப்படி ஒரு கடுமையான வாழ்க்கையை வாழ்பவருக்கு இல்லறத்தவரும் அரசரும் உதவி செய்ய வேண்டும் என்பது அடுத்த விதி.

     ஹிந்து மதத்தில் பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்று ஒவ்வொருவருக்கு சில கடமைகளை ஹிந்து மதம் விதித்து இருக்கிறது.

     வேதகால இந்தியச் சமூகத்தில், இந்நிலைகள் ஒருவருடைய குணம், நடத்தை, இயல்பு போன்றவற்றால் அடையப்படுவதாக இருந்திருக்கிறது. ஒருவர் அல்லது ஒரு குழுவினர் ஒரு பிரிவில் இருந்து இன்னொரு பிரிவுக்கு உயர்த்தப்படுவதும், தாழ்த்தப்படுவதும் நடைமுறையில் இருந்து இருக்கிறது.

     இதனால் ஒரே குடும்பத்தில் பிராமணரும் இருந்து இருக்கிறார், சூத்திரரும் இருந்து இருக்கிறார்… அதற்கு நல்ல உதாரணம் இராவணன் பிறப்பால் சத்திரியன் ஆனால் அவனை அனைத்து வேதங்களையும் அறிந்த பிராமணன் என்றே கம்பர் குறிப்பிடுகிறார்.

     என்னை பொறுத்தவரையில் இந்தியா பண்பாடு மிக உயர்வானது அதை அடிமை சினத்தின் அடையாளமான கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களை சேர்ந்தவர்கள் குறை சொல்வதை ஏற்க முடியாது.

     • “இதற்காக பிராமணர்கள் பிச்சை எடுக்கலாம், அல்லது ஊரின் எல்லையில் வயல்வெளியில் சிந்தி இருக்கும் நெல்மணிகளை சேர்க்கரித்து உண்ணலாம் ஆனால் தனக்காக பிராமணர் பொருள் சம்பாதிக்க கூடாது என்பது விதி. ”

      So, Brahmins are not allowed to work and earn? Do you really think it is fair to say this ?

      “உலக நன்மைக்காக இப்படி ஒரு கடுமையான வாழ்க்கையை வாழ்பவருக்கு இல்லறத்தவரும் அரசரும் உதவி செய்ய வேண்டும் என்பது அடுத்த விதி.”
      If our caste system contributed anything to this world other than caste system, would you mention here…. (I am asking the same question again and you should answer to this Mr. Mani)

      “என்னை பொறுத்தவரையில் இந்தியா பண்பாடு மிக உயர்வானது”

      INDIA was not existed before British came to this land. In this scenario where is India and Indian culture ?

      “அடிமை சினத்தின் அடையாளமான கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களை சேர்ந்தவர்கள் குறை சொல்வதை ஏற்க முடியாது”

      In this modern world this is being called Prejudice and Racism
      “ஏற்க முடியாது”

      Who asked you to accept it ? We only asking you to study, research and educate yourself.
      We are trying to bring you to the modern age. Because you are not living in stone age.

      • //INDIA was not existed before British came to this land. In this scenario where is India and Indian culture ?//

       முதலில் ஆங்கிலேயே அடிமைத்தனத்தில் இருந்து வெளியே வாருங்கள். இஸ்லாமியர்கள் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே இந்த நாடு கலாச்சார ரீதியாக ஒரே நாடாக இருந்து இருக்கிறது… நீங்கள் வேதங்களை நம்புவதில்லை என்ற காரணத்திற்காக (அதில் இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளது) நான் புறநானுறு பாடலை ஆதாரமாக கொடுக்கிறேன்.

       வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
       தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
       குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
       குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும் (புறம் – 6)

       இது புறநானுற்றின் மிக பழமையான பாடல்… இந்த பாடல் பாரத தேசத்தின் எல்லைகளை மிக தெளிவாக சொல்கிறது… வடக்கே காஷ்மீரிலும் சிவனை தான் வழிபட்டோம், தெற்க்கே குமரியில் சிவனை தான் வழிபட்டோம்… வடக்கே காஷ்மீரில் சிவனை வழிபட சொல்லப்பட்ட மந்திரம் தான் தெற்க்கே குமரியில் சிவனை வழிபட சொல்லப்பட்டது.

       உங்களை போன்ற ஆங்கிலேயே அடிமைகளுக்கு இந்தியாவை பற்றி ஒன்றுமே தெரியாது, உங்களின் அடிமை புத்திக்கு இந்தியா என்பதே ஆங்கிலேயர்களுக்கு பின்பு தான்.

       இஸ்லாமியர்களை பொறுத்தவரையில் இந்தியா என்பது அவர்களின் படையெடுப்பிற்கு பின்பு தான்.

       • உங்களை போன்ற ஆங்கிலேயே அடிமைகளுக்கு இந்தியாவை பற்றி ஒன்றுமே தெரியாது, உங்களின் அடிமை புத்திக்கு இந்தியா என்பதே ஆங்கிலேயர்களுக்கு பின்பு தான்.

        You are you so abusive

    • India’s contribution to the world

     1. The Idea of Zero
     2. The Decimal System
     3. Numeral Notations (Arabs used this notation as Hind numeric)
     4. Fibbonacci Numbers
     5. Binary Numbers
     6. Chakravala method of Algorithms
     7. Ruler Measurements
     8. A Theory of Atom
     9. The Heliocentric Theory (Ancient India correctly propounded that the Earth is round, rotates on its own axis and revolves around the Sun i.e the heliocentric theory)

     NOTE: Galileo was punished by Churches for predicting this theory. But this theory was discovered several hundreds years before Galileo was born.

     10. Cataract Surgery and so many other inventions are done by ancient India. After the arrival of Islam and Christianity India lost it prime in science because invaders plundered and destroyed India in all the forms (that includes British India). Even today Christians like you and communist groups belittle Indian contribution to science and technology.

     CAN YOU ANSWER ME ANY ONE OF THE MODERN DAY SCIENCE WITHOUT THESE CONTRIBUTION FROM INDIA.

     • Only numbers …….Numbers and Numbers…

      Anything other than numbers that contributed to the humankind…( I am not underestimating this contribution but the time of this contribution is that India is on this planet as like today)

      ‘Cataract Surgery and so many other inventions’
      You mean surgery like elephant face to Lord Ganesha……

      I am not insulting your belief but practically your examples should be proven y scientific methods.

      • In ancient times India is the world capital in medical field, Siddha, Ayurvedha are all well known all over the world. If you read Agathiyar history, there will be detailed explanation about brain surgery.

       Ancient India is best in the medical field, that’s the reason Chinese used to come to India to learn medicine. If you have doubt you can read Chinese history about it.

        • Your religious mindset might have made you to think like that… Be an Indian first then be Christian. Don’t become fundamentalist Christian and make our country shame…

         Culturally our country is united and its called as Bharat. Politically we might have been different but even in that situation also we are united several situations… One of those situation is during Mahabharat war.

         • ‘Culturally our country is united and its called as Bharat.’
          ”One of those situation is during Mahabharat war.’
          you must give some scientific proof for your claims.

          In what basis you are calling me as a Christian and a fundamentalist

          This is called prejudice.

       • Mr. Joseph,
        You should watch around you. This world is so bigggggggg.

        I believe that you did not read the article and my comments. I am simply denying the unproven claims. At the same time I am denying the prejudice and the injustice for the poor that was caused by the name of caste system. Do you really believe with this caste system and injustice to the poor and religious minorities will make you proud…

        Please tell me do the Indians really cared our Siddha, Ayurveda and Yoga until westerners cared and expressed the benefits of it

        So, If I need to proud of my country then at least our judicial system should have taken this injustice in to their consideration(I am talking about the practice not about that were written in the papers).

        (For Patel’s statue RS 30,000,000,000.00 and forKerala,s flood only RS 600,0000,000.00. This is the India that you are teaching me to proud about it)
        I am expecting your sincere answer

        • We can’t change the fundamentalist mindset of some Christians (I feel ashamed to tell this word)… Even if I give thousands of explanation for your queries, you will come back to same thing. You are blinded by fundamental Christianity so you will be seeing bad about this country and its culture… Can’t change this fundamentalist mindset.

         Bye

          • This is Christian fundamentalist mindset only… There are thousands of positive things about our country… but Christian fundamentalism did not allowed you to see those positive things, actually for a christian fundamentalist person like you there is no positive things outside Christian world… everything outside Christianity is considered as SIN and SATAN by you.

           Caste system is not as we follow today (even Ambedkar has said this word). It’s a grading system based on a person’s character, talent and capability.

           In Ancient India, caste is no decided by birth, it is decided by the character… in the same house upper caste and lower caste brothers lived together(there are so many examples for this in our vedhas)… Even Ravana is a Sathriyan by birth, but he is called as Brahmanan.

           Even today in modern world we have grading system in the employment. If a person’s performance is not good means he will be degraded.

           In Ancient India –as per you a country called India is not at all available in this world– its after British slavery rule then only India came into existence.

           Whether you like it or not basically you are a Christian fundamentalist. Ancient India is very famous for medical science, Maths and astronomy.

           When the Christian world is in dart about entire solar system revolves around earth. Its India that invented its Earth that rotates around the sun and distance between Earth and moon is calculated accurately.

           Without the scientific contributions of India, today’s modern day science won’t be there.

 7. ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?

  வர்ணாசிரமம் எனும் அசிங்கமான அக்கிரமமான ஒரு கருத்தை கற்பித்து, சாதியில் படிநிலை உருவாக்கியது பார்ப்பனர்கள் தான்.

  periyar 350ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜன்மி சம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றாண்டுகளில் ஆரியப் பார்ப்பனர்களும் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் சாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12ம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகிற்று. இந்தத் தீமைகளில் ஒரு பிரிவு தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டிக்குக் கீழும் ஆடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு. உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும். சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்கக் கூடாது, அதே போன்று சாதி வரிசையின் அடிப்படையில் கீழ் சாதி இந்து நாடார் பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இந்த உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

  இப்படி கொடூரமான முறைகளை அறிவார்ந்த தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி, அரசர்களையும் அதிகாரத்தையும் கைக்குள் வைத்து உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டி உண்டு கொழுத்துக் கொண்டிருக்கும் இனம் ஆரியம் தான், பார்ப்பனியம் தான்.

  மற்ற சாதிக்காரர்களுக்கும் அந்த பார்ப்பனிய சிந்தனையை மூளையில் விதைத்தது பார்ப்பனீயம் தான். பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என அடுக்குமுறையை உருவாக்கியதன் மூலம் தனக்கு கீழ் ஒரு சமூகம் அடிமையாக இருக்கிறது எனும் மகிழ்ச்சி தான் இன்னொருவனுக்கு அடிமையாக இருக்கிறோம் என்பதை மறக்கச் செய்கிறது, அல்லது மரத்துப் போகச் செய்கிறது.

  பார்ப்பனிய சிந்தனை உள்ள எவரும் பேதம் பார்ப்பர். வேறு மதங்களில் பிரிவுகள் உண்டு. ஆனால் இந்து மதத்தில் உள்ளது போல சாதி இல்லை. படிநிலை இல்லை. தீண்டாமை இல்லை.

  • அப்படிங்களா ? கிறிஸ்துவ மதத்தில் ஜாதி இல்லையென்றால் ஏன் தலித் பிணத்தை எங்கள் கல்லறையில் புதைக்கக்கூடாது என்று போராட்டம் நடத்துகிறீர்கள் ?

   கிறிஸ்துவ மதத்தில் ஜாதி இல்லையென்றால் ஏன் கத்தோலிக் பிராட்டஸ்டன்ட் என்று பல பிரிவுகள்… இதில் ப்ரோட்டஸ்டாண்டுக்கு கத்தோலிக் சர்ச்சை பிடிக்காது கத்தோலிக் ஆட்களுக்கு பிராட்டஸ்டன்ட் சர்ச்சை பிடிக்காது… இது ஜாதி பேதம் இல்லாமல் வேறு என்னவாம் ? கிறிஸ்துவ மதத்தை போல் போர் தொடுத்து பல ஆயிரம் அப்பாவி மக்களை கொன்ற சரித்திரம் ஹிந்துக்களிடம் இல்லை.

   பாலைவனத்தில் தோன்றிய கிறிஸ்துவமும் இஸ்லாமும் ஆயிரம் அப்பாவி மக்களை கொன்ற ரத்த கரை படிந்த மதங்களே… இந்தியாவை பொறுத்தவரையில் கிறிஸ்துவ மதம் ஆங்கிலேயே அடிமை சின்னத்தின் எச்சம். அந்த அடிமை சின்னத்தை உங்களை போன்ற ஆட்கள் பெருமையாக நினைத்து கொண்டு இருளில் இருக்கிறீர்கள்.

   முன்பு கஜினி என்றால் இன்று ISIS

   இஸ்லாமியர்களுக்கு ஜிகாத் என்றால் கிறிஸ்துவர்களுக்கு crusade

   இருவருமே மாற்று மதத்தினரை அழிக்க எந்த நிலைக்கும் செல்ல கூடியவர்கள் அதற்காக எத்தனை அப்பாவி மக்கள் இறக்க நேரிட்டாலும் கவலைப்பட மாட்டார்கள்.

   கிறிஸ்துவமும் இஸ்லாமும் மாற்று மத பெரும்பான்மை நாடுகளில் அமைதியாக இருந்ததாக வரலாறு இல்லை (அதற்கு இந்தியாவே ஒரு உதாரணம் ஒரு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீரில் பிரிவினை இன்னொரு பக்கம் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக வாழும் வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினை தீவிரவாதம்)

   மனித இன வரலாறு முழுவதுமே கிறிஸ்துவமும் இஸ்லாமும் ரத்தக்கரையோடு தான் மற்ற நாடுகளில் கால் பதித்து இருக்கிறது அதற்கு இந்தியா சிறந்த ஆதாரம். கோவாவில் கிறிஸ்துவர்கள் வந்து அங்கே இருந்த ஹிந்து கோவில்களை எல்லாம் அழித்து மதம் மாறாதவர்களை கடுமையாக தண்டித்து கொலை செய்தார்கள்.

   • //கிறிஸ்துவ மதத்தில் ஜாதி இல்லையென்றால் ஏன் கத்தோலிக் பிராட்டஸ்டன்ட் என்று பல பிரிவுகள்

    this is not because of caste , ideology is different that’s it . and both can enter in any church.

    • ஏன் சார் மற்றவர்களுக்கு எல்லாம் ஒன்றுமே தெரியாது என்று நினைத்து கொண்டு இருக்கிறீர்களா ? கத்தோலிக்க பிராட்டஸ்டன்ட் இருதரப்பினரும் தங்களின் ஆதிக்கத்திற்காக ஐரோப்பில் 30 வருட போரே செய்து இருக்கிறார்கள்.

     அவ்வுளவு ஏன் என்னையே ஒரு கிறிஸ்துவ பைத்தியக்காரன் மதமாற்றம் செய்ய பார்த்தான், அவனிடம் நான் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு நாகூர் தர்காவிற்கு எல்லாம் சென்று இருக்கிறேன் ஆனாலும் நான் ஹிந்து தான் எனக்கு மதம் மாறும் எண்ணம் இல்லை என்று சொன்ன போது அவன் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு போக வேண்டாம் நான் வேறு ஒரு சர்ச்சுக்கு அழைத்து செல்கிறேன் என்று சொன்னான்.

     கிறிஸ்துவ மதத்தில் பிரிவினை பேதங்கள் இல்லை என்ற உங்களின் வார்த்தைகளை வேறு யாரிடமாவுது சொல்லுங்கள்.

      • ஹிந்து மதத்தில் இருக்கும் ஜாதி பிரிவினையை விட கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களில் இருக்கும் பிரிவினை பேதங்கள் மிக மோசமானது… அது பல ஆயிரம் அப்பாவி மக்களின் உயிர்களை குடித்து இருக்கிறது.

       பாகிஸ்தானில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அப்துஸ் சலாம் அவர்கள் அஹ்மதி என்ற ஒரே காரணத்தால் அவரை இஸ்லாமியர் என்று இன்று வரையில் ஏற்காமல் ஒதுக்கி வைத்தது இருக்கிறார்கள்… பாகிஸ்தானில் அஹ்மதிகள் இஸ்லாமியர்கள் அல்ல என்றே அவர்களின் சட்டம் சொல்கிறது.

       கிறிஸ்துவ மதத்தில் Sectarian violence பற்றி படித்து பாருங்கள்… நிச்சயம் கிறிஸ்துவம் மிக மோசமான மதமே அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

 8. பார்ப்பன இனத்தில், பார்ப்பனச் சிறுவர்களுக்கு அவர்களது 8வது வயதில் ‘உபநயனம்’ என்ற சடங்கை நடத்தி பூணூல் அணிவித்த பிறகு பிராமணனாக ‘இரண்டாவது பிறவி’ எடுக்கிறார்கள். அப்படி ‘பிராமணனாக’ மாறியதன் அடையாளமாகத் தான் ‘பூணூல்’ அணிவிக்கப்படுகிறது.

  இந்து மனுசாஸ்திரம் ‘சூத்திரர்’ என்றால் ‘பிராமணர்களின் வைப்பாட்டி மக்கள்’ என்று கூறுகிறது. (அத்தியாயம் 8; ஸ்லோகம் 415) இந்திய அரசியல் சட்டத்தில் 372 வது பிரிவு இதற்குப் பாதுகாப்பாக உள்ளது.

  அதனால்தான் தோழர் பெரியார் “ஒரு தெருவில் ஒரு வீட்டில் மட்டும் இது பத்தினியின் வீடு என எழுதினால் மற்ற வீடுகள் என்ன வகையான வீடுகள்?” எனக் கேட்டார். அதாவது, ஒருவர் தன்னை ‘பிராமணர்’ என்று அறிவித்துக் கொண்டால் மற்றவர்கள் ‘சூத்திரர்கள்’ என்று தானே பொருள் எனக் கேட்டார்.

  ஆக சமூகத்தில் தான் உயர்ந்த சாதி எனக் காட்டிக் கொள்ளவும், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துவதாலும் அதை ஒரு சில தோழர்கள் அறுத்தார்கள்.

  பெரியார் எப்போதும் வன்முறையை ஆதரித்ததில்லை, நாங்களும் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சமாதானத்தையுமே விரும்புகிறோம்.

  • சிறப்பான பதில் 👌 ஆனாலும் இந்த மணிகண்டன் மாதிரி நடிக்கிற ஆட்களை எழுப்பவே முடியாது என்பதுடன் இவர்கள் வினவின் கட்டுரைகளுக்கு எந்தவித யோசனையுமின்றி உடனே மறுமொழி என்ற பெயரில் அவதூறுகளை பதிவுசெய்துவிடுவார்கள். இந்த பார்ப்பனீய அடிமைகளை எப்படித்தான் புரியவைப்பதோ?

   • சார் உங்களை போன்ற பொய் பேசி கிறிஸ்துவ மதவெறியர்களும் வினவு போன்ற வெளிநாட்டு கைக்கூலிகளும் ஹிந்து மதத்திற்கு எதிராக சொல்லாத அவதூறுகளா ? உங்களை போன்ற ஆட்கள் எல்லாம் அவதூறுகளை பற்றி பேசுவதற்கே அடிப்படை தகுதி இல்லாதவர்கள்.

    • மணிசார், வினவுல டெய்லி ட்ரோல் ஃபோஸ்ட் போட 200 ரூபீஸ் வாங்குறேள். பெங்களுர் RSS ட்ரோல் வாலன்டியர்ஸ் கூட்டத்துல சொல்லிக் கொடுத்ததை ஏதோ உங்க புத்திக்கு ஏத்தாப்போல போடுறேள். உங்களவா ஜிக்கள் வைட்டமின் சியை லட்சத்திலும் கோடியிலும் தேடுறாள், நீங்க டெய்லி வேஜ்ல சிங்கி அடிக்கீறேள். புரிஞ்சுண்டால் சமத்து, இல்லேன்னா உங்க அசடு!

     • ஏன் சார் எல்லோரையும் உங்களை போன்ற கிறிஸ்துவர்கள் மாதிரி பணத்திற்காக எதையும் செய்வார்கள் என்று நினைத்து கொண்டு இருக்கிறீர்களா ? உங்களால் எதிர் கருத்திற்கு பதில் சொல்ல முடியவில்லை என்றால் இப்படி தான் அவதூறு பேசுவீர்கள்.

      • “ஏன் சார் எல்லோரையும் உங்களை போன்ற கிறிஸ்துவர்கள் மாதிரி பணத்திற்காக எதையும் செய்வார்கள் என்று நினைத்து கொண்டு இருக்கிறீர்களா”

       What I really believe is that Mr. Maikandan is not in his age to accept the reality. Because when he cannot play with logical answer he simply spray others with anger and abusive language.

 9. மணிகண்ட சார்வாள், நம்ம சங்கர மடத்துல ஸமர்த்த பிராமின்தான் அதிபாராக முடியும். நீங்க பாட்டுக்கு கிறிஸ்டீன்ல கொஸ்டீன் போட்டீங்கன்னா, காஞ்சி மடத்துல ஒரு சக்கிலியர் மடாதிபதியா வரமுடியுமான்னு அவனவன் கேப்பன்! சித்த அடக்கிவாசிக்கப்படாதோ? நமக்கு பேட்டா வந்துச்சா, காப்பி பேஸ்ட்ட போட்டமான்னு போயிட்டா வர்வன் போறவனெல்லாம் சந்துல சிந்து பாடமாட்டானோ இல்லியோ?

  • இந்தியாவையும் ஹிந்து மதத்தை பற்றியும் ஒன்றுமே தெரியாமல் ஏதாச்சும் உளற வேண்டியது… நாட்டில் இருக்கும் எத்தனையோ மடங்களில் சங்கர மடமும் ஒன்று அவ்வுளவு தான், ஹிந்து மதத்தில் வாடிகனை போல் விஷயம் கிடையாது. எத்தனையோ ஹிந்து மடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களும் அதிபராக இருக்கிறார்கள்.

   ஹிந்து மதத்தில் கடவுளை கண்டிப்பாக கும்பிட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது, விருப்பப்பட்டால் கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் வழிபடலாம் இல்லை கடவுளை நம்பவில்லை என்றாலும் ஹிந்து மதம் அவர்களை நாத்திகர்கள் என்று ஏற்கிறது. கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களை போல் கட்டாயம் எதுவும் ஹிந்து மதத்தில் இல்லை.

   ஹிந்து மதத்தின் அழகே முதலில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியில் தான் ஆரம்பிக்கிறது. இதனால் உங்களை போன்ற கிறிஸ்துவர்கள் ஹிந்து கடவுளை சாத்தான் என்று சொல்லி கொண்டு உயிரோடு திரிய முடிகிறது, ஆனால் பாகிஸ்தானில் போய் இதே போல் அவர்களின் கடவுளை சாத்தான் என்று சொன்னால் உங்களை எந்த கேள்வியும் கேட்காமல் கொன்று விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள்.

   என்னை பொறுத்தவரையில் கிறிஸ்துவம் இஸ்லாமிய மதங்களை விட ஹிந்து மதம் உயர்ந்தது தான்.

   • சார்வாள் தப்பு தப்பா உளறேள்! பௌதிக் பைடக் சரியா அட்டர்ன் பண்ணலையே இல்லையோ? சங்கர மடத்துல நம்ம சு சுவாமி அய்யர்வாள் சரிக்கு சமமா உக்காந்ததையும், நம்ம அசட்டு பொன்னார் கீழே தரையில இருந்ததும் போட்டு மீமா போட்டு தள்ளினாலே அதெல்லாம் நோக்கு தெரியலையோ என்னமோ? சார்வாள் நம்ம ஹிந்து தர்மத்துல கடவுளை ஏத்துண்டாள இல்லியோ வருணாஸ்ரமத்தை ஏத்துக்கிறதுதான் ரொம்ப முக்கியம். கடவுளை மறுக்குறவா நாத்திகரா இருக்கலாம். ஆனா சனாதான தருமத்தை சாதியை ஏத்துக்கலேன்னா உங்கள டின் கட்டிடுவா? உங்களுக்கு எந்த ஜி கத்துக் கொடுத்தார். வாத்தியாரை மாத்திட்டேள்னா இப்பிடி தத்துபித்துன்னு உளறாமல் இருக்காலாமே இல்லியோ?

 10. நண்பர் மணிவாசகம் நய்யாண்டி முறையில் மணிகண்டனுக்கு செருப்படி கொடுக்கிறார்.
  இந்த RSS எச்சைகளிடம் ” ஏன்டா பிய்ய திங்கிற?” என்று கேட்டால் “அவனைப் பாரு, அவன் மூத்திரத்தை குடிக்கிறான். அவனை நீ கேட்க மாட்டேங்கிற” அப்படிம்பானுங்க. . .
  “டேய்! அவன் குடிக்கிறது மூத்திரம் இல்லடா . . . தண்ணிடான்னு” நம்மள விளக்கம் சொல்ல வப்பானுங்க. ..
  ஆனால் கடைசி வரைக்கும் அவிங்க பிய்ய திங்கிறதுக்கு காரணம் சொல்ல மாட்டானுங்க . . . !

  வாழ்த்துக்கள் மணிவாசகம் !

  • இங்க பாருங்கோ கார்த்திகேயன், என்ன ஏத்திவிட்டு நீங்க ஏதும் ரெஸ்ட் எடுக்க போயிறாதேள்! நாம எல்லாரும் சேந்து அடிச்சாக் கூட அம்பி மணிகண்டன் நன்னா தாங்குவார்! ஏன்னா அவரு ரொம்ப நல்லவரு…. அவரு வந்தாத்தான் வினவு சைட்டே ஒரு மார்கமா இருக்கும் பாருங்கோ! நாம இப்புடி ரவுண்டு கட்டுனா தம்பி வராமா ஜோலியை வேற எங்கேயாச்சும் செஞ்சாருன்னு லாஸ் நமக்குத்தான் பாத்துக்கோங்கோ!

   • அர்த்தம் இல்லாத வார்த்தைகளில் உங்களால் என்னோடு விவாதம் செய்ய முடியவில்லை அதனால் தான் துணைக்கு ஆட்களை கூப்பிடுகிறீர்கள்.

    • அசடு, அசடு, இப்புடி பேசுனா நம்மள ஒரு உண்மையான இந்துகூட மதிப்பாளா, மணி கண்டா? அர்த்தம் இல்லாத வார்த்தைதான் அத்வைதம், விசிஸ்டாத்வேஉபநிடதம்னு நம்மவா அந்தகாலத்தில சொல்லியிருக்கிறா! கயிறாப் பாத்தா கயிறு, பாம்பாப் பாத்தா பாம்புன்னு ஆதி சங்கரன் சொன்னத உங்க பிரச்சாரக்ஜி சொல்லவே இல்லையா அம்பி! ஏந்தான் இப்பிடி மானத்தை வாங்குறேளோ! போங்கோ உங்கள மாதிரி தத்துப்பித்துக்களை வைச்சு நாம எந்தக் காலத்துல இந்து ராஷ்டிரத்தை கட்டுறது, போங்கோ இந்த லோகம் நாஷமாக போவட்டும்!

 11. Mr. Manikandan and Mr. joseph,

  “Without the scientific contributions of India, today’s modern day science won’t be there.”

  (There is a limit for everything. Even you would laugh at your own comments when you read it again)

  However, I asked you a few questions about your claims. No one answered yet.
  Modern education system based on research (Scientific)and analyses. It teaches us to trust on the outcome of the research. But non of your claims are not scientifically proven yet.

  But you are simply painting me as a fundamentalist, a Christian and an anti Indian (Reminds me of Mr. H Rajah of BJP). Why don’t you educate me by giving me some scientific proof of your claims instead of spraying me dirt ?

  Instead of giving

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க