ஞ்சை பட்டுக்கோட்டை அருகே உள்ள வளவன்புரம் பகுதியில் வசிக்கும் கொல்லுப்பட்டறை தொழிலாளி பாலசுப்ரமணியன். பரம்பரை பரம்பரையாக இதே தொழில்தான். வீட்டில் இருந்தவாறே வேலை பார்த்து வருகிறார்கள். “புயலுக்கு முதல் நாள் வரை வேலை செய்து கொண்டிருந்தோம். அதன் பிறகு இப்படி ஆகும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்கிறார்.

பெற்றோர், மனைவி குழந்தைகளுடன் வசிக்கும் பாலசுப்ரமணியன், பட்டறை முதல் வீடு வரை மொத்தமும் தரையோடு தரையாக மட்டமாகி விட்டது என்கிறார். அவருடைய அம்மா சொல்கிறார், “வீட்டுல இருக்கும்போதே ரொம்ப பயமாயிடுச்சி. கைக்குழந்த இருக்க வீடு. என்ன பண்றதுன்னு தெரியல. அந்த நேரம் வெளில வரவும் முடியல. பலமான காத்து வீசுனதால கண் முன்னாடியே பட்டறை சாஞ்சிடுச்சி. அதைப் பார்க்கும் போதே பயம் வந்துடுச்சி.

அடுத்து கீத்து வீடு, ஓடு எல்லாம் பிரிச்சிக்கினு கீழ விழுது. அடுத்து என்ன நடக்கும்னு தெரியல. உள்ளேயும் இருக்க முடியல. என்ன ஆனாலும் பரவாயில்லனு அந்தக் காத்துலயும் இந்த வீட்டுக்கு வந்துட்டோம். இந்த வீட்டு மேலையும் நம்பிக்கை இல்ல. ஆனா எங்களுக்கு வேற போக்கிடம் இல்ல. யாரும் எங்கள இன்னாச்சினு கேக்கல. அப்படி இருக்கும்போது யாரு வீட்டுக்கு போக முடியும்?

பட்டறையில இருந்த எந்த பொருளையும் எடுக்க முடியல. எல்லாம் மிஷின்தான். கை மோட்டார், சானம் பிடிக்கும் மிஷின், வெல்டிங் மிஷின், சுத்துர மிஷின், துருத்தி எல்லாம் வீணாப் போச்சி. இப்ப ஏற்பட்டிருக்கிற இழப்போட மதிப்பு மட்டும் மூணு லட்சம் இருக்கும். எந்தப் பொருளையும் பத்திரப்படுத்த முடியல” என்று கலங்குகிறார்.

‘’அறுவா, சுத்தி, அறுவாமனை, புடி என கொல்லு வேலை எல்லாத்தையும் செய்வோம். அதனால ஆர்டர் கொடுப்பாங்க. ஏற்கனவே ஆர்டர் கொடுத்தவங்களுக்கு பொருள செஞ்சி தர முடியல. மார்க்கெட்ல போட்டாதான் கைக்கு காசு வரும். இப்ப எப்படி பன்றது?

படிக்க:
சரிந்தது தென்னை மரங்கள் மட்டுமல்ல – ஒரு தலைமுறை உழைப்பும்தான் ! நேரடி ரிப்போர்ட் !
அரசால் வஞ்சிக்கப்படும் காவிரி டெல்டா மக்களுக்கு தோள் கொடுப்போம் !

புயல்ல நெறைய மரம் விழுந்துடிச்சி. இப்ப அதை எல்லாம் வெட்டி எடுக்க அறுவா தேவைப்படும். அதனால ஆர்டர் கொடுத்தவங்க வந்து வந்து கேட்டுட்டு போறாங்க. அவங்களுக்கு என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியல.

இதை எல்லாம் சரி செஞ்சி வீட்ட சுத்தம் பண்ணவே பதினஞ்சி நாள் ஆகும். அது வரைக்கும் வேலை செய்ய முடியாது. இப்பவே கையில செலவுக்கு காசு இல்ல. குழந்தைக்கு பால் வாங்கவும், மருந்து வாங்கவும் முடியாம தவிக்கிறோம். ரெண்டு மூனு நாளா உடம்பு சரியில்ல. டாக்டர்கிட்ட கூட்டிட்டு போக முடியாம, மெடிக்கல்லதான் மருந்து வாங்கிட்டு வந்து போட்டிருக்கேன். ஒரு வழியும் தெரியாம திக்கத்தி இருக்கோம். என்கிறார் தாய் வசந்தி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க