“மலிவான ஆற்றலின் சகாப்தம் ஒரு முடிவுக்கு வருகிறது. சமூகங்கள், ஆற்றல் பயன்பாடு மற்றும் உள்கட்டமைப்பை மறுவடிவமைக்க வேண்டும் அல்லது அப்படி செய்யத் தவறியதற்கான கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட புதிய ஆய்வு ஒன்றின் முடிவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

உலகளாவிய நீடித்து நிலைக்கத்தக்க மேம்பாடு குறித்த அறிக்கைக்காக (Global Sustainable Development Report) ஐ.நா. கேட்டுக்கொண்டதற்கிணங்க பின்லாந்தின் பயாஸ் ஆய்வுக்கூடத்தைச் (BIOS Research Unit) சேர்ந்த உயிரியற்பியல் (BioPhysicist) விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை 2019-ம் ஆண்டு வெளியிடப்பட இருக்கிறது.

இந்த அறிக்கை சில துல்லியமான முன்னனுமானங்களைக் கொண்டுள்ளது. இன்று மேலாதிக்கத்தில் பொருளாதாரத் தத்துவங்களும், நவீன முதலாளித்துவக் கருத்தாக்கங்களும், சமூகத்திற்கு புதைப்படிவ எரிபொருட்கள் (பெட்ரோலிய) உள்ளிட்ட மலிவான ஆற்றல் இன்று போல என்றுமே கிடைத்துக்கொண்டே இருக்கும் என்ற தவறான அனுமானத்தைக் கொண்டிருக்கின்றன. அதன் காரணமாகவே அத்தத்துவங்களும், கருத்தாக்கங்களும் இன்றைய சூழலுக்கு போதுமானவையாக இல்லை என்ற வாதத்தை விஞ்ஞானிகள் குழுவினர் முன்வைகின்றனர். மேலும் காலநிலை மாற்றங்கள் உள்ளிட்ட திரும்பப்பெறப்பட முடியாத எதிர் விளைவுகள் மற்றும் கட்டுப்பாடில்லா நுகர்வு மற்றும் வளர்ச்சியின் விளைவாக ஏற்படும் சமூக அரசியல் பின்விளைவுகளை, இந்த கருத்தாக்கங்கள் கணக்கில் கொள்வதில்லை என்றும் கூறினார்கள்.

படிக்க:
ரஃபேல் : பொறுப்பைத் துறந்த பிரான்ஸ் – பாஜக முகத்தில் கரி
பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் ! புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

“மனிதகுல வரலாற்றில் முதன்முறையாக குறைவான ஆற்றல் செயல்திறன் கொண்ட ஆற்றல் வளங்களுக்கு பொருளாதாரங்கள் மாறுவேண்டியிருக்கிறது. அதன் காரணமாக அடிப்படையான மற்றும் இதர மனித நடவடிக்கைகளுக்கு போதுமான ஆற்றலை உற்பத்தி செய்வதற்கு மிக அதிக முயற்சிகளை மனித சமூகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது” என்று அறிக்கையில் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே புதிய ஆட்சிமுறை வடிவங்கள் மற்றும் பொருளாதார கொள்கைகளைப் பற்றி சிந்திப்பதற்கு விஞ்ஞானிகள் குழு உலக சமூகங்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

“ குறிப்பாக எதிர்வரும் காலக்கட்டத்திற்கான, பரவலாக பொருந்தக்கூடிய பொருளாதார வடிவங்கள் (economic models) எதுவும் வடிவமைக்கப்படவில்லை என்று உறுதியாக கூற முடியும்” எனக் குறிப்பிட்டு, உலகப் பொருளாதாரம் ஒரு புதிய சகாப்தத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். ”எங்களது கவனம் முழுதும் மாற்றம் நடக்க உள்ள அடுத்த சில பத்தாண்டுகளைப் பற்றியே இருக்கிறது“ என்கின்றனர் அக்குழுவினர்.

இதற்கு என்ன செய்ய வேண்டும் ? இதுகுறித்த முக்கியப் பிரச்சினைகள் சிலவற்றை விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்

குறைவான ஆற்றல் பயன்படுத்துதல் மற்றும் ஆற்றல் உள்கட்டமைப்பை உருமாற்றுதல் :

வாகனப் புகை

காலநிலை மாற்றத்தின் எதிர்விளைவுகளை மட்டுப்படுத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் உதவக்கூடும். ஆனால் இவற்றில் முதலீட்டுக்கும் கிடைக்கும் ஆற்றலுக்குமான (energy return on investment) விகிதம் மிகக் குறைவு. அதாவது புதைவடிவ எரிபொருள் மூலங்களை விட புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் பெறுவதற்கு முதலீட்டு செலவு அதிகம். வளர்ந்து கொண்டிருக்கும் ஆற்றல் தேவையை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அல்லது ஏனைய குறை கரியமில ஆற்றல் தீர்வுகளால் பூர்த்தி செய்ய முடியாது என்று கூற முடியாவிட்டாலும் மிகவும் கடினம்” என்று விஞ்ஞானிகள் குழு கருதுகிறது. இந்த அப்பட்டமான உண்மை காரணமாக “மொத்த ஆற்றல் பயன்பாட்டை குறைப்பதற்கு கணிசமாக அழுத்தம் தேவைப்படுகிறது” என்று அவர்கள் கருதுகிறார்கள்.

திறன் மிக்க குறைவான பயணம்:

 உலகிலுள்ள அனைத்து நகரங்களிலும் நடத்தல், மிதி வண்டி ஒட்டுதல் மற்றும் மின்மயப்படுத்தப்பட்ட பொது போக்குவரத்து பயன்பாட்டிற்கு வலியுறுத்த வேண்டும். இதற்கு சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து பயன்பாடுகளை குறைக்க வேண்டும். மேலும் நகர கட்டுமான திட்டங்கள் மற்றும் வண்டி தயாரிப்பு, இருப்புப்பாதைகள், சாலைகள் மற்றும் மின்னேற்ற நிலையங்கள் (charging stations) உள்ளிட்ட போக்குவரத்து உள்கட்டமைப்புகளில் மாற்றங்கள் தேவை.

உணவுப்பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெறுதல்:  

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் உணவுப்பொருட்கள் உற்பத்தியில் கண்டிப்பாக தன்னிறைவு பெற வேண்டும். ஏனெனில் வருங்காலத்தில் உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்வதற்கு சில பகுதிகளை மட்டுமே நம்பி இருப்பது பேராபத்து என்றும் கூறுகின்றனர். மேலும் பால் மற்றும் இறைச்சி பயன்பாட்டிலிருந்து பெரும்பாலும் தாவர உணவு பயன்பாட்டிற்கு மாற வேண்டும் என்றும் ஆலோசனை கூறுகின்றனர் .

நீடித்து நிற்கும் மர வீடுகளை கட்டுதல்:

சிமெண்ட் ஆலையிலிருந்து வெளிவரும் புகை

 “தற்போது சிமிட்டிக்கலவை மற்றும் எஃகு பயன்பாடு கட்டுமானத் துறையில் மேலாதிக்கம் செலுத்துகிறது. அதன் உற்பத்தி மற்றும் இதர சுழற்சி முறைகள் ஆற்றலை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. எனவே கரியமில வாயு மற்றும் இன்னப்பிற மாசுக்கள் உருவாக்கத்திற்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு இவை பங்காற்றுகின்றன” என்று விஞ்ஞானிகள் குழு கூறியிருக்கிறது. இதற்கு மாறாக நீடித்து நிற்கும் மரத்தாலான கட்டிடங்கள் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுக்குள் வைக்க உதவும் என்று அறிவுறுத்தினார்கள்.

மேற்சொன்ன மாற்றங்களை செய்வதற்கு முன்னெப்போதுமில்லாத அளவிற்கு நடவடிக்கைகள் தேவை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

“சந்தை அடிப்படையிலான நடவடிக்கை போதுமானது அல்ல. ஒரு விரிவான பார்வையுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்ட திட்டங்கள் இருக்க வேண்டும். இல்லையெனில், உலகளாவிய நீடித்து நிலைப்பதற்கான குறிக்கோள்களை அடைவதற்கான விரைவான அமைப்புமுறை மாற்றம் சாத்தியமே இல்லாமல் போகும்” என்று எச்சரித்துள்ளனர்.

படிக்க:
♦ காற்று மாசுபாடு : தில்லியில் வாழ்வது தினசரி 20 சிகரெட் புகைப்பதற்கு சமம் !
♦ வல்லரசு இந்தியாவின் வளர்ச்சி : காற்று மாசுபாட்டில் மட்டும்தான் !

ஒவ்வொரு சமூகமும் நிலையான பொருளாதாரத்தை அடைவதற்கு சொந்தமாக தீர்வுகளை கண்டறிய வேண்டும் என்று அறிஞர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது. எனினும் அதன் மாற்றங்களின் ஒவ்வொரு நிலையிலும் அரசின் தலையீடு தேவைப்படக்கூடும்.

நீடித்து நிலைத்திருத்தலுக்கான மாற்றங்களை தொடங்குவதற்கு முன்னேறிய அரசுகளே முன்னிலை வகிக்க வேண்டும். ஒருபுறம் மிகப்பெரிய பொது முதலீட்டு திட்டங்களையும் மறுபுறம் கடுமையான கட்டுப்பாட்டுகள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு திட்டங்களையும் செயல்படுத்த மிகப்பெரிய பொருளாதார கொள்கை தேவைப்படுகிறது. நவீன உலகப்பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவிலான நீடித்து நிலைத்திருத்தலுக்கான மாற்றத்திற்கு நிதி அளிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் தேவையான சட்ட அதிகாரமும் திறனும் அரசுகளுக்கு மட்டுமே இருக்கின்றன.

கட்டுப்பாடில்லா நுகர்வு மற்றும் வளர்ச்சியின் விளைவாக ஏற்படும் சமூக அரசியல் பின்விளைவுகளை, முதலாளித்துவம் கணக்கில் கொள்வதில்லை

சுமார் 15,000 விஞ்ஞானிகளைக் கொண்ட உலக விஞ்ஞானிகள் கூட்டணி (the Alliance of World Scientists) எந்தெந்த வழிகளிலெல்லாம் மனிதனின் நடவடிக்கைகள் உயிர்க்கோளத்தை அரிக்கின்றன என்பதை விளக்கி ‘மனிதநேயத்திற்கான எச்சரிக்கை’ (Warning to Humanity) என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தனர். இந்த அறிக்கை வெளியிடப்பட்டு ஓராண்டிற்குள்ளேயே பின்லாந்து விஞ்ஞானிகள் குழுவின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

விஞ்ஞானிகள் ஐந்து வகையான பரந்துபட்ட தீர்வுகளை முன் வைக்கின்றனர்:

 1. சுற்றுச்சூழலை கெடுக்கும் செயல்பாடுகளை நாம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மேலும் நாம் சார்ந்திருக்கும் இப்புவியின் சூழல் அமைப்பின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும். சான்றாக புதைப்படிவ எரிபொருளுக்கு மாற்றாக தீங்கற்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களுக்கு மாறுவதன் மூலம் பசுமைக் குடில் வாயுக்களை குறைப்பதுடன் நீர், நிலம் மாசுபடுதலையும் கட்டுப்படுத்த வேண்டும். மூன்றாம் உலக நாடுகளின் தேவைக்கேற்ப அதாவது அளவில் சிறிய மற்றும் எளிமையான ஆற்றல் வளங்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். காடுகளை அழித்தல், விவசாய நிலங்களை அழித்தல், நிலம் மற்றும் கடல் சார்ந்த தாவர மற்றும் விலங்கு இனங்கள் அழிக்கப்படுவதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும்.
 2. மனித சமூகத்திற்கு இன்றியமையாத வளங்களை நாம் திறம்பட கையாள வேண்டும். ஆற்றல், நீர் மற்றும் ஏனைய வளங்களை திறம்பட பயன்படுத்துவதற்கும் அவற்றை பாதுகாப்பதற்கும் மறுசுழற்சி செய்வதற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
 3. மக்கள்தொகையை கட்டுக்குள் வைக்க வேண்டும். மேம்பட்ட சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளின் அவசியத்தை அனைத்து நாடுகளும் உணரும் போதும் திறமையான, தன்னார்வ குடும்ப திட்டமிடலை மேற்கொள்ளும் போதும் மட்டுமே இது சாத்தியமாகும்.
 4. வறுமையை குறைத்து முடிவில் இல்லாதொழிக்க வேண்டும். “இது போன்ற துணிச்சலான இலக்குகள் நம்முடைய நாட்டிற்கு தேவை என்று நான் நம்புகிறேன்” என்று தி எர்த் நிறுவனத்தின்(The Earth Institute) முன்னாள் இயக்குனரான ஜெஃப்ரி சாக்ஸ் கூறுகிறார். வரும் 2030-ம் ஆண்டிற்குள் வறுமையை குறைந்தது பாதியாக குறைக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
 5. நாம் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் மேலும் குழந்தைகளைப் பெறுவதற்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை பெண்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும். பெண்களுக்கு கல்வியறிவு கிடைக்கும் போது அவர்களுக்கு குறைவான குழந்தைகளே இருக்கும். அக்குழந்தைகளுக்கு அதிக வளங்கள் கிடைப்பதால் நல்லவிதமாக பேணப்பட்டு முன்னேற்றம் அடைவார்கள்” என்று பில் நியே (Bill Nye) கூறுகிறார். மேலும், “எந்த அளவிற்கு பெண்கள் வேகமாக கல்வியறிவை பெறுகிறார்களோ அந்த அளவிற்கு ஒவ்வொரு மனிதருக்கும் வரும் காலங்களில் அதிக வளங்கள் கிடைப்பதை அறிவியல் கல்வி வழியாக நாங்கள் செய்ய விரும்புகிறோம்” என்கிறார்.

அறிவியலாளர்கள் சுற்றி வளைத்துக் கூறும் கருத்து என்ன? உலகைக் காக்க அதன் இயற்கை வளத்தை காப்பாற்ற, இருக்கின்ற வளங்களை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்து கொடுக்க உலகளாவிய பொருளாதார கொள்கைகள், முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அந்தக் கொள்கை சந்தைப் பொருளாதாரத்திற்கு எதிராக இருக்கும். எனில் அதன் பெயர் சோசலிசம்.

நன்றி: BigThink
தமிழாக்கம்:

11 மறுமொழிகள்

 1. ரொம்ப சரி இதையெல்லாம் செய்யும் சீனாவை (கம்யூனிஸ்ட்களை) முதலில் ஒழித்துக்கட்ட வேண்டும்… செய்விர்களா ??

  • சீனா 1980களிலிருந்தே சோசலிச நாடு அல்ல.மோடி வழங்கிய பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சிலையே சீன இறக்குமதி…. இந்திய விடுதலை போராட்ட தலைவரின் சிலையைக்கூட செய்ய வக்கற்ற மோடி சர்கார் என்னே தேசியம் MAKING INDIA வாழ்க!!!!

   • சரி உங்கள் வார்த்தைகளை ஏற்றுக்கொள்கிறேன், அதனால் சீனாவை (கம்யூனிஸ்ட்களை) ஒழித்து கட்டுங்கள்…

    • சீனா கம்யுனிச பாதையில் இருந்து இறங்கி நீண்ட நாட்களாகிவிட்டது. பல்லு போன கிழவன் குளிரில் நடுங்கி தொடர்ந்து உளறுவது போல பிதற்றி கொண்டு உள்ளீர்கள்.

     சரி, நம்முடைய தத்துவ அ(வி)பச்சாரங்களை ஓரங்கட்டிவிட்டு மய்யத்தில் நின்றி விவாதிக்கலாம்.

     சீனா ஒரு மய்யப்படுத்தப்பட்ட அரசு நிறுவனமாக இயங்கி வருகிறது அதாவது சீனா.inc. அமெரிக்காவில் நிறுவனங்களின் கைகளில் அரசு என்றால் சீனாவில் அரசே ஒரு பெரும் நிறுவனமாக செயல்படுகிறது.

     இரண்டுமே முதலாளித்துவ பொருளாதாரம் என்றாலும் சீனாவிற்கு சில அனுகூலங்கள் உள்ளன. விஞ்ஞானிகளின் ஆய்வும் அதை தான் மெய்பிக்கிறது.

     //ஒருபுறம் மிகப்பெரிய பொது முதலீட்டு திட்டங்களையும் மறுபுறம் கடுமையான கட்டுப்பாட்டுகள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு திட்டங்களையும் செயல்படுத்த மிகப்பெரிய பொருளாதார கொள்கை தேவைப்படுகிறது. நவீன உலகப்பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவிலான நீடித்து நிலைத்திருத்தலுக்கான மாற்றத்திற்கு நிதி அளிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் தேவையான சட்ட அதிகாரமும் திறனும் அரசுகளுக்கு மட்டுமே இருக்கின்றன///

     இதன் காரணமாக தான் சமீக காலங்களில் மாசுபாட்டின் அளவை சீனா கடுமையாக குறைத்துள்ளதாய் நாம் கவனிக்க வேண்டும். அதே காலகட்டத்தில் அமெரிக்காவின் அடிமையாக செயற்படும் இந்தியாவில் மாசுபாட்டின் அளவையும் பரிமாணத்தையும் பாருங்கள்.

     மேலும் சீனாவை விட பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்கு முதலில் இந்திய அரசிற்கு அரசியல் சுதந்திரம் தேவை. ஈரானிடம் பெட்ரோல் வாங்க கூட அமெரிக்காவின் அனுமதி தேவை என்றால் யோசித்து பாருங்கள். அமெரிக்கா சீனாவிற்கு வரிகள் அதிகம் விதித்து தன்னுடைய அதிகாரத்தை காட்ட நினைத்தது. பதிலுக்கு சீனாவும் அதற்கு அதிக வரிகள் விதித்து மல்லுக்கு நிற்கிறது. எனவே சீனாவிடம் போட்டி போடுவதற்கும் எதிர்த்து நிற்பதற்கும் நம்மிடம் அரசியல் சுதந்திரம் வேண்டும்.

     Ease of doing business index முன்னேற உலக வங்கியிடம் மோடி தாஜா செய்தது தற்போது வெளி வந்துள்ளது.

     நன்றி.

   • உங்களை போன்றவர்களுக்கும் வினவு போன்றவர்களுக்கும் ஒரு கேள்வி… காஷ்மீரை பிரிக்க வேண்டும் என்று கட்டுரை மேல் கட்டுரை எழுதி உங்களின் மனித இன பாசத்தை காட்டி கொண்டு இருக்கிறீர்களே… இதே மனித இன பாசத்தை ஏன் திபெத் விடுதலைக்காக இந்திய கம்யூனிஸ்ட்கள் காட்டுவதில்லை ? சீனாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியிலும் விடுதலை வேண்டும் என்று அந்த மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்களே ஏன் உங்களை போன்ற கம்யூனிஸ்ட்கள் அந்த பகுதிகளை சீனா விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்பது இல்லை.

    உங்களின் மனித நேயம் எல்லாம் இந்தியா அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகளில் மட்டும் தானா ? சீனா போன்ற கம்யூனிஸ்ட் சர்வாதிகார நாடுகளுக்கு எதிராக ஒன்றுமே பேசமாட்டிர்களோ?

    • அபிஷ்டு, அதானி, அம்பானி இந்த தேசத்தை மாசாக்கி நாஸ்தி பண்ணின்டு இருக்கறச்சே இன்னும் நீர் திபெத் சீனான்னு பூச்சாண்டி காட்றேர். உம்ம மோடி குஜராத்ல போட்டி போட்ட போது அவரோட மாஸ்க் சைனாக்காரன்ட்ட இருந்து வாங்குனதும், அதை நீரே போட்டுண்டு குஜராத்ல ஓட்டு கேட்ட போனதும் மறந்துருச்சான்னு ரெண்டு கம்யூனிஸ்டு பயலுவ கேட்டான்னா என்ன வோய் ஒம்ம பதில்?

     • கேட்ட கேள்விக்கு பதிலை காணோம்… மீண்டும் சவால் விடுகிறேன், காஷ்மீர் விடுதலை பற்றி பேசும் கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் திபெத் விடுதலைக்காக குரல் கொடுக்க தயாரா ?

      கம்யூனிஸ்ட்கள் சீனாவின் கைக்கூலிகள் கண்டிப்பாக திபெத் விடுதலை பற்றி பேச மாட்டார்கள், ஆனால் ஊருக்கு இளிச்சவாய இந்தியாவிற்கு எதிராக மட்டும் இவர்களின் வீரமும் மனிதநேயமும் பீறிட்டு அடிக்கும். அயோக்கிய கம்யூனிஸ்ட்கள்

   • முரளி சார் இன்னும் உங்களுக்கு நம்ம மணிகண்ட் ட்ரோல் சாமர்த்தியம் பத்தலியே? கட்டுரையில முதலாளித்துவம் ஒழியணும்னு சையின்ட்ஸ்ட் சொல்றச்சே மணி காண்டு நைசா கம்யூனிசம் ஒழியணும்னு சைக்கிள் கேப்ல ஓட்றார். நீங்களே இப்டி விழுந்தீங்கன்னா இந்த பெல்காண்டு இன்னும் நிறைய காப்பி போஸ்ட் போட்டுட்டு நன்னா வேலை செஞ்சுருக்கோம்னு கவந்தடிச்சு பேஷா படுத்துறும்.

     • என்னா சார் வாள் சவுண்டு ஜாஸ்தியா பேசறேள்? நீரவ் மோடி, மல்லையா ஃபாரின் போறச்சே மொத்தம் 20000 கோடி ஸ்வாகா பண்ணார். அம்பானி இங்கிருந்தே ரஃபேல் ஏரோபிளோன செய்யாமலே ஓட்டி 30000 கோடி ஆட்டை போடப்போறார். அதானி கோவா, குஜராத்தல போட்ட ஆட்டைதான் இன்னிக்கு பார்லிமெண்ட்ல மோடின்னு ஒரு தரித்திரமாக உக்காந்திருக்கு! இததாம்வோய் முதலாளித்துவம்னு சொல்றா! இத ஒழிக்கணும்னா சீனா பூனான்னு பூச்சாண்டி காட்றேளே? காலையில ஏகாத்மதா ஸ்தோத்திரம் சொன்னேளா இல்லை பிரியங்க சோப்ராவை மோடி பாத்த ஸ்தோத்திரத்தை சொன்னேளா? ஒண்ணுமே புரியலே, லோகம் ரொம்ப கெட்டுடுத்து, ஓழுங்கா ஷாகா போறேளா இல்ல டிமிக்கி கொடுக்குறேளா?

 2. கடைசியில் காந்தி முன்னெடுத்த பசுமை பொருளாதாரம் தான் வெற்றி பெரும் என்றே நினைக்கிறன்.. ஆலை இயந்திரங்கள் முற்றிலுமாக அமைதியானால் தான், இனி பூமி பிழைக்க முடியும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க