ஜா புயல் பாதிப்பால் வீடிழந்து, வாழ்விழந்து, அடுத்த வேளைச் சோற்றுக்கு சாலையை எதிர்நோக்கி காத்திருக்கும் அவலத்தை சந்தித்திருக்கிறார்கள் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள். பணமாகவோ, பொருளாகவோ இம்மக்களின் இழப்பினை நிச்சயம் ஈடு செய்ய முடியாது. ஒரு தலைமுறை சேமிப்பை, உழைப்பை பறிகொடுத்து பரிதவித்து நிற்கிறார்கள். புயல் ஏற்படுத்திய பாதிப்புகளைக் காட்டிலும் அரசின் அலட்சியமும், வக்கிரமும் இம்மக்களை மேலும் காயப்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தன்னார்வலர்கள் பலரும் தம்மால் முடிந்த அளவு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்த்திருக்கின்றனர். இவர்கள் செய்த அளவில் கால் பங்கைக்கூட அரசு தரப்பிலிருந்து எதுவும் செய்துவிடவில்லை என்பதுதான் யதார்த்தம்.

தமிழகம் முழுவதுமுள்ள தமது அமைப்புத் தோழர்கள் வாயிலாக சாத்தியமான அளவிற்கு நிவாரணப் பொருட்களைச் சேகரித்து மக்களின் தேவைக்கேற்ப விநியோகித்தது மக்கள் அதிகாரம்.

நிவாரணப் பொருட்களை கொடுப்பதோடு கடமை முடிந்ததென்று ஒதுங்கிவிடாமல், கல்லூரி மாணவர்களையும், சமூக உணர்வு கொண்ட இளைஞர்களையும், அமைப்புத் தோழர்களையும் ஒருங்கிணைத்து புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர், நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவது தொடங்கி, சரிந்து விழுந்த குடிசை வீடுகளை சரிசெய்யும் பணி வரையில் களத்தில் செய்து வருகின்றனர்.

வீடுகள் மீது விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள்.

அண்டர் காடு

அண்டர் கார்டு – கிழக்கு

வேதாரண்யம்

கூரைகளை இழந்த மக்களின் வீடுகளில் தார்ப்பாய் அணிவித்து கூரை வீடுகளை சரி செய்யும் மக்கள் அதிகாரம் தோழர்கள்.

ஆதனூர் கிழக்கு

ஆயக்காரன்புலம் 2

அண்டர் காடு திரௌபதி அம்மன் கோயில்

நிவாரணப் பொருட்கள் விநியோகம்.

ஆயக்காரன்புலம் IV

சுற்றுவட்டாரப் பகுதிகளில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் மின் துறைத் தொழிலாளர்களுக்கு உணவு, பிஸ்கட், தண்ணீர் விநியோகித்தனர்.

தென்னாடர் கிராமம்

புதுக்கோட்டை மாவட்டப் பகுதி கிராமங்களில்…

கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் தங்கள் பகுதியிலிருந்து சேகரித்து கொண்டு வந்திருந்த நிவாரணப் பொருட்களை புதுக்கோட்டை சுற்று வட்டாரக் கிராம பகுதிகளில் விநியோகம் செய்தனர்.

உணவு பொருட்கள், மருத்துவ பொருட்கள், புதிய உடைகள், பால்பவுடர், குடிதண்ணீர், போர்வைகள், பிஸ்கட், பேம்பேர்ஸ், செருப்பு, நேப்கின், சோப்பு,  ப்ளீச்சிங் பவுடர், பினாயில் உள்ளிட்ட பொருட்களோடு மரம் அறுக்கும் இயந்திரம் ஒன்றையும் வழங்கினர்.

படிக்க:
முறை பிறழ்ந்த உறவு குறித்து உச்சநீதிமன்றம் சொல்வதென்ன ? வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
கவுரி லங்கேஷை படுகொலை செய்த சனாதன் சன்ஸ்தா ! குற்றப்பத்திரிகை தாக்கல் !

உதவ விரும்புவோர் மக்கள் அதிகாரம் தோழர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மக்கள் அதிகாரம், சென்னை – 9176 801656
மக்கள் அதிகாரம், திருவாரூர் – 9962 366321, 9626 352829
பு.மா.இ.மு., வேதாரண்யம் – 6383 461270

தகவல்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க