டீசல் விலை உயர்வு மற்றும் அதன் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலையுயரவைக் கண்டித்து 75,000 மஞ்சள் ஆடை போராட்டக்காரர்கள் பிரான்சு நாட்டின் தலைநகரில் நடத்தி வரும் போராட்டம் அந்நாட்டு அரசை நிலைகுலைய வைத்துள்ளது.

வீர தீரமான போராட்டங்களுக்குப் பெயர்பெற்ற பிரான்சு நாட்டில், கடந்த சில நாட்களாக மஞ்சள் ஆடை போராட்டக் குழுவினரின் தொடர் போராட்டங்கள், முதலாளித்துவ ஆதரவு அரசை நடத்திவரும் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

படிக்க:
♦ பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்ஸ் மக்கள் போராட்டம்
♦ பெட்ரோல் விலை உயர்வு : இனியும் பொறுக்க முடியாது !

முழுமையாக ஒருங்கிணைக்கப்படாத, தலைமையே இல்லாத, தன்னெழுச்சியாக உருவான இந்தப் போராட்டக் குழுவைக் கண்டு அஞ்சும் பிரான்சு அரசு, தற்செயலாக நடைபெற்ற வன்முறைகளைப் பெரிதுபடுத்தி அவதூறு பரப்பும் வேலையை மட்டுமே இப்போது செய்து வருகிறது. இவர்களை ஒருங்கிணைப்பதில் சமூக வலைத்தளங்களே முக்கிய பங்காற்றி வருகின்றன. தலைநகர் பாரீசில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் போராட்டக்காரர்கள் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

இம்மானுவேல் மேக்ரோன்.

பிரான்சு நாட்டின் மேற்குப்பகுதியான பிரிட்டானியாவிலிருந்து பாரீசு நகரம் நோக்கி வந்திருக்கும் மஞ்சள் ஆடைப் போராட்டக்காரரான பியரே கூறுகையில் ’ நாங்கள் அமைதியான வழிகளில் போராடுவதையே விரும்புகிறோம்; டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்ற ஒன்று மட்டுமே மஞ்சள் ஆடை போராட்டக்குழுவின் கோரிக்கை. பணக்காரர்களின் நண்பனாகச் செயல்பட்டு வரும் மேக்ரோன் பதவி விலகும் வரை எங்கள் போராட்டத்தைத் தொடருவோம்’ என்கிறார்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட சோபி கூறுகையில், ”அமைதியாக நடந்து கொண்டிருந்த இந்தப் போராட்டத்தை தீவிர வலதுசாரிகள் புகுந்து வன்முறையைப் புகுத்திவிட்டனர்” என்றார்.

இந்தப்போராட்டம் தொடர்பாக இதுவரை 270 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 17 போலீசார் உட்பட 110 பேர் காயமடைந்துள்ளனர்.

பிரான்சில் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் ஆட்சியாளர்களுக்கு எதிரான இந்த மக்கள் எழுச்சியை ஆதரிப்போம்.

படங்கள்:

“போராட்டம் என்பது தலைமுறை தலைமுறையாக எங்களுக்குள் விதைக்கப்பட்டது. மக்களால் ஆட்சி நடத்தப்பட வேண்டுமென்பதுதான் எங்கள் கோரிக்கை. நாங்கள் ஒன்றும் ஆட்சியாளர்களின் அடிமைகளல்ல” என்கிறார் போராட்டக்காரர் கில்பெர்ட்.
போலீசு எறிந்த கண்ணீர்புகை குண்டை திருப்பி அவர்கள் மேலே வீசுகிறார் மஞ்சள் ஆடை போராட்டக்காரர்
அதிபர் மேக்ரோனே பதவி விலகு என்ற பதாகைகளுடன் போராட்டக்காரர்கள். மேக்ரோன் எதிர்ப்பு வாசகங்களை அங்குள்ள கட்டிடங்களிலும் பிரபலமான இடங்களிலும் எழுதி வருகின்றனர்.
போலீசு குவிக்கப்பட்டிருக்கும் பகுதியை அச்சமின்றி கடந்து செல்லும் போராட்டக்காரர்
போராட்டக்காரர்கள் வீசிய பெயிண்ட்டில் இருந்து தன்னை பாதுக்காத்துக் கொள்ளும் போலீசு.
ஃப்ரெஞ்சு நாட்டு தேசியக் கொடியுடன் ஒரு போராட்டக்காரர் கிறித்துமஸ் தாத்தா உடையணிந்து போலீசாருக்கு எதிராக முழக்கமிடுகிறார்.
பிரான்சில் நடந்த மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் தடுப்பரணை உண்டாக்கிக் கொள்ளும் போராட்டக் காரர்கள்.
போலீசு எறிந்த கண்ணீர்புகைக் குண்டுகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள ஓடும் போராட்டக்காரர்கள்.
ஒரு சாலையில் பல இடங்களில் தீ வைக்கப்பட்ட காட்சி.
போராட்டத்தைக் கலைப்பதற்காக அணிவகுத்து நிற்கும் கலவர தடுப்புப் போலீசாரை நோக்கிச் செல்லும் போராட்டக்காரர் ஒருவர்
வீதியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தடுப்பரண்களை உருவாக்கிக் கொள்ளும் போரட்டக்காரர்கள்.
போலீசுக்கு வன்முறைக் குழுவினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் மஞ்சள் ஆடை போராட்டக்காரர் ஒருவரை கைது செய்து அழைத்துச் செல்லும் போலீசு. இந்தப் போராட்டத்தில் இதுவரை சுமார் 270 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 120 பேர் காயமடைந்துள்ளனர்.
சில போராட்டக்காரர்கள் வங்கிகளையும், ஏ.டி.எம் மிஷின்களையும் தாக்கி சேதப்படுத்தினர். வீதியில் இருந்த ஆடையகம்  மற்றும் நகைக்கடகளின் ஃபர்னிச்சர்களையும் சேதப்படுத்தினர்.
தீ வைக்கப்பட்ட இடங்களில் தீயை அணைக்க விரைகிறது தீயணைப்பு வண்டி.
மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர், இது அமைதியான வழியிலான போராட்டம் என்பதைக் குறிக்க கையில் மலரோடு கலந்து கொண்டார்.

தமிழாக்கம் :

நன்றி: அல்ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க