பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயிலின் மிச்சங்கள் இருப்பதாக இந்துத்துவ கும்பல் தொடர்ந்து சொல்லி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். தொல்லியலாளர்கள் சிலரைப் பயன்படுத்தி, பொய்யான தொல்பொருட்களை காட்டி, அதை ராமர் கோயிலின் மிச்சங்கள் எனவும் சாதித்தது இந்த கும்பல்.  2003-ஆம் ஆண்டு பாபர் மசூதியை ஒட்டிய பகுதிகளில் இந்திய தொல்லியல் ஆய்வகம் நடத்திய அகழாய்வு முடிவுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து வழக்கு தொடுத்த சன்னி வஃக்பு வாரியம் இந்த அகழாய்வு முடிவு, ‘தெளிவற்ற மற்றும் உள்முரண்பாடுகளுடன் உள்ளது’ எனக் கூறியது.

பாபர் மசூதியில் ஒரு பகுதியில் நடந்த அகழாய்வில் வஃக்பு வாரியத்தின் சார்பில் பங்கேற்ற சுப்ரியா வர்மா, ஜெயா மேனன் ஆகியோர் 2010-ஆம் ஆண்டில் ‘எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி’ இதழில் இந்திய தொல்லியல் துறையின் ஆய்வு முடிவு குறித்து விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தனர். அந்தக் கட்டுரையில், முன்முடிவுகளை வைத்துக்கொண்டு இந்திய தொல்லியல் ஆய்வகத்தைச் சேர்ந்த தொல்லியலாளர்கள் ஆய்வில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தனர்.

அகழாய்வு.

“எந்தவொரு இந்திய தொல்லியலாளரோ, அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவரோ அகழாய்வு நடத்த வேண்டுமெனில் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் முன் அனுமதி பெற்றாக வேண்டும். இதனால் பலம் பொருந்திய அந்த அமைப்பை எதிர்த்தும் அதன் காலாவதியான அகழாய்வு முறைகள் குறித்தும் பேச எவரும் துணிவதில்லை” என அவர்கள் எழுதியிருந்தனர்.

2019-ஆம் ஆண்டு வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தனது தோற்றுப்போன ஆட்சி நிர்வாகத்தினை மறைக்க மீண்டும் அயோத்தி பிரச்சினையை கையெலெடுத்துள்ளது இந்துத்துவ கும்பல்.  அண்மையில் ஒன்றுகூடிய பரிவாரங்கள், நீதிமன்றத்தைப் பொருட்படுத்தாது ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என முழங்கின.

இந்தச் சூழலில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 26-வது கருப்பு தினம் வியாழன் அன்று நினைவு கூறப்பட்டது. இதையொட்டி ஹஃபிங்டன் போஸ்ட் இணையதளம், அகழாய்வில் பங்கேற்ற ஜே.என்.யு. பல்கலைக்கழக பேராசிரியர் சுப்ரியா வர்மாவின் நேர்காணலை வெளியிட்டிருந்தது.  அந்த நேர்காணலில் சுப்ரியா, இந்திய தொல்லியல் ஆய்வகம் நடத்திய அகழாய்வில் பல செயல்முறை குறைபாடுகள் இருந்ததை சுட்டிக்காட்டுகிறார்.

“இப்போது பாபர் மசூதிக்கு அடியில் கோயில் இருந்ததற்கான தொல்லியல் தடயங்கள் எதுவும் இல்லை. உண்மையில் பாபர் மசூதிக்கு அடியில் மற்றொரு மசூதியின் மிச்சங்கள்தான் உள்ளன” என்கிறார் சுப்ரியா.

இந்திய தொல்லியல் ஆய்வகம் அகழாய்வில் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களாக  மூன்று விசயங்களை கூறியிருந்தது. அந்த மூன்றும் கேள்விக்குறியவை என விளக்குகிறார் சுப்ரியா.

1. மேற்பகுதியில் இருந்த சுவர்: “மேற்கு பகுதியில் சுவர் இருப்பது மசூதி கட்டுமானத்தில் உள்ள முக்கிய அம்சம். அந்த சுவரின் முன்புதான் தொழுகை நடத்துவார்கள். கோயிலில் இப்படியான அம்சம் இல்லை. கோயில் கட்டுமானம் முற்றிலும் வேறானது.”

2. ஐம்பது தூண்களைக் கொண்ட அடிகட்டுமானம்: “இது முற்றிலும் ஜோடிக்கப்பட்டது. பலமுறை இந்த புரட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் புகார் செய்திருக்கிறோம். தூண்கள் என அவர்கள் சொல்லிக்கொள்ளும் அமைப்பு உடைந்த ஓடுகளால் ஆனது. அவற்றின் இடையே மண் நிரம்பி இருந்தது. வலிமையான கட்டடத்தைத் தாங்கும் தூண் எப்படி அவ்வாறு இருக்க முடியும்? என நீதிமன்றத்தில் வாதிட்டோம்”.

3. கட்டுமானத்தின் மிச்சங்கள்: “முக்கியமான கட்டுமான மிச்சங்கள் என 12 துண்டுகள் சமர்பிக்கப்பட்டன. இவை எதுவும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டவை அல்ல. மாறாக, இவை பாபர் மசூதியின் சுண்ணாம்பு தரை தளத்தின் மேலே இருந்த கட்டிடக் கழிவுகள். அவர்கள் சொல்லிக் கொள்வதைப் போல, இது ஒரு கோயில், கற்களால் ஆன ஒரு கோயிலாக இருந்திருந்தால் இதைவிட பல ஆதாரங்கள், ஏன் கற்சிலைகள் கூட கிடைத்திருக்கலாம். ஆனால் அப்படியெதுவும் கண்டெடுக்கப்படவில்லை.

சுப்ரியா வர்மா.

சுப்ரியா வர்மா, இந்திய தொல்லியல் ஆய்வகம் நடத்திய அகழாய்வு, முன்பு நடந்த தொல்லியல் ஆய்வுகள் குறித்தும் பல விசயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். 1861-ஆம் ஆண்டும் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் இயக்குனராக இருந்த அலெக்சாண்டர் கன்னிங்ஹாம், பாபர் மசூதி இருந்த பகுதிகளில் ஆய்வுகள் செய்ததாக தெரிவிக்கிறார்.  அயோத்தியில் மூன்று பழமையான இடங்கள் இருந்ததாகவும் அவற்றில் இரண்டு புத்த ஸ்தூபிகளாகவும், ஒன்று விகாரையாகவும் இருந்ததாக கன்னிங்ஹாம் பதிவு செய்துள்ளார். அந்தக் காலக்கட்டத்தில் இந்தப் பகுதி மக்கள் இங்கிருந்த சில கோயில்கள் இடிக்கப்பட்டதாக வாய்வழி கதைகளை சொன்னதாகவும் ஆனால், பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்தது என்பது குறித்து எவ்வித குறிப்பையும் கன்னிங்ஹாம் எழுதவில்லை என்றும் சுப்ரியா குறிப்பிடுகிறார்.

அதன் பின்பு 1969-ஆம் ஆண்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை இரண்டாவது அகழாய்வை இந்தப் பகுதிகளில் (அயோத்தியில்) நடத்தியது. அந்த அகழாய்வு முடிவுகள் குறித்து தெளிவான அறிக்கைகள் எதுவும் தற்போது கிடைக்கவில்லை. கிடைத்த தகவலின்படி, அகழாய்வு நடந்த பகுதிகள் வரலாற்றின் தொடக்க மற்றும் மத்திய காலத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிகளாக இருந்திருக்கலாம்.

1975-1980 க்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் இயக்குனராக இருந்த பி.பி. லால் இந்த அகழாய்வு திட்டத்துக்கு புத்துயிர் கொடுத்தார். இந்துத்துவ அமைப்புகளின் புரட்டுக்கு ‘அறிவியல்’ சாயம் அடித்தவரும் இவரே.

சுப்ரியா சொல்கிறார், “அயோத்தி, மதுரா, வாரணாசி ஆகிய மூன்று இடங்களில் இருந்த கோயில்கள் இடிக்கப்பட்டதாக 1988-ஆம் ஆண்டு விசுவ இந்து பரிசத் பிரச்சினையை கிளப்பியது. அந்த ஆண்டு, பி.பி. லால், 1975-1978ஆம் ஆண்டுகளில் அயோத்தியில் அகழாய்வு செய்த இடத்தில் கண்டெடுத்ததாக ‘கோயில் தூண்கள்’ எனக்கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஏடான ‘மன்தன்’-இல் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதோடு, குரோஷியாவில் நடந்த உலக தொல்லியல் மாநாட்டில், இந்த புகைப்படத்தை சமர்பித்து அகழாய்வு தொடர்ந்து நடத்தப்பட்டால் கோயில் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கலாம் என பேசினார்.

இந்த லால், ராமாயணம், மகாபாரத புராணங்களில் சொல்லப்பட்ட இடங்களை அகழாய்வதில் ஆர்வம் கொண்டு செயல்பட்டவர்.  இவர் கொடுத்த ‘புராண புரட்டு ஆதாரங்கள்’ பாபர் மசூதியை வைத்து பா.ஜ.க., மிகப்பெரும் அளவில் அரசியலை கட்டியெழுப்ப உதவியது. 1992-ஆம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டு முதன்முறையாக வந்த பா.ஜ.க. (தேசிய ஜனநாயகக் கூட்டணி) ஆட்சியின் போது மீண்டும் அகழாய்வு செய்வது குறித்த பேச்சு எழுந்தது. பின்பு, அலகாபாத் நீதிமன்றம் 2002-ஆம் ஆண்டு அகழாய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வகத்துக்கு ஆணையிட்டது”

சுப்ரியா தன்னுடைய நேர்காணலில், அப்போது செய்யப்பட்ட அகழாய்வு குறித்த அறிக்கையின் உள்ளடக்கத்தில் பல உண்மைகள் உள்ளன. உள்ளடக்கத்தில் பல தலைப்புகளில் வந்த கட்டுரையை எழுதியவர் யார் என்கிற விவரமும்கூட இடம் பெற்றுள்ளன. ஆனால், ஆய்வின் முடிவு பெயர் குறிப்பிடாமல் எழுதப்பட்டுள்ளது. முடிவுக்கும் உள்ளடக்கத்துக்கும் தொடர்பே இல்லை என்கிறார் சுப்ரியா.

“முழு அறிக்கையையும் படித்தால், ஒரு இடத்தில் கூட கோயில் குறித்த பதிவு இடம்பெற்றிருக்காது. இது தரமான அறிக்கைதான். ஆனால், ஆகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட எலும்பு துண்டுகள் மற்றும் மனித எலும்பு கூடுகள் குறித்த பதிவு அறிக்கையில் இல்லை. அதுகுறித்து அவர்கள் பதிவு செய்யவே இல்லை.  அவற்றை ஆய்வுக்கு அனுப்பினால் உண்மைகள் தெரிய வந்திருக்கலாம்.

இறுதியாக மூன்றே மூன்று ஆதாரங்களின் அடிப்படையில் பெயர் போடாமல் ஆய்வின் முடிவு ‘பாபர் மசூதிக்கு அடியில் கோயில் இருக்கிறது” என எழுதப்பட்டுள்ளது. மூன்றே வரிகளில் எழுதப்பட்ட முடிவுக்கு உள்ளடக்கத்தில் எங்கேயும் ஆதாரங்கள் இல்லை. ஆனால், இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பாபர் மசூதிக்கு அடியில் இரண்டு அல்லது மூன்று அடுக்கில் சிறு மசூதிகள் இருக்கலாம் எனகிற முடிவுக்கு நாங்கள் வந்தோம்” என்கிற சுப்ரியா முசுலீம் மக்களின் குடியேற்றத்துக்கு முன், இந்தப் பகுதியில் பவுத்த மக்களின் வசிப்பிடமாக இருந்திருக்கலாம் என்கிறார்.

படிக்க:
இந்துத்துவ சதி சூழ்ச்சி நிறைந்த பாபர் மசூதி வழக்கின் வரலாறு !
பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் !

“அதாவது கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை இந்தப் பகுதி பவுத்த மக்களின் வசிப்பிடமாக இருந்திருக்கலாம் (அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் பதிவு செய்திருக்கிறார்) என்றும் 11 மற்றும் 12-ஆம் நூற்றாண்டில் முசுலீம் மக்கள் குடியேறியிருக்கிறார்கள். அப்போது பழைய இடிந்துபோன பவுத்த கட்டுமானத்தின் மீது மசூதிகள் எழுப்பப்பட்டிருக்கலாம். அதன்பின் 1528-ஆம் ஆண்டும் பாபர் மசூதி, பழைய மசூதிகளின் மீது கட்டப்பட்டிருக்கிறது” என தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார் சுப்ரியா.

பவுத்த, சமண மதக் கருத்துக்களை திருடிக்கொண்டது மட்டுமல்லாது, அவர்களுடைய கோயில்களையும் புதிய புதிய கடவுளர்களின் நாமகரணம் சூட்டி தனதாக்கிக் கொண்டது திருட்டுப் பார்ப்பனிய இந்துமதம். வரலாற்று காலம் தொட்டு இந்த திருட்டுத்தனத்தை செய்துவரும் இவர்கள், பாபர் மசூதிக்கு அடியில் கோயில் இருக்கிறது என சொன்ன புரட்டும் புஸ்வானமாகியுள்ளது.

கலைமதி

செய்தி ஆதாரம் : Huffington Post

இதையும் கேளுங்க:

24 மறுமொழிகள்

  1. கம்யூனிஸ்ட்கள் இந்த நாட்டிற்கு செய்த பல துரோகங்களில் ஒன்று இந்த ராமர் கோவிலை பற்றி அவர்கள் பரப்பிய பொய்கள். பாபர் மசூதி இருந்த இடத்தில் கோவில் இருந்ததற்கான ஆதாரம் அந்த மசூதியை இடிப்பதற்கு முன்பே வந்து கிடைத்து விட்டது. அப்போது இஸ்லாமியர்களும் கோவில் அந்த இடத்தில் இருந்திருந்தால் அதை ஹிந்துக்களிடமே கொடுத்து விடலாம் என்று நினைத்தார்கள் ஆனால் கம்யூனிஸ்ட்கள் பொய் பிரச்சாரங்களால் சுமூக தீர்வுக்கு கிடைத்த வாய்ப்பு பாழானது.

    கம்யூனிஸ்ட்கள் பொய்கள் இன்று வரையில் இது போல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இஸ்லாமியர்கள் இந்த நாட்டில் பல ஆயிரம் ஹிந்து கோவில்களை இடித்து தரைமட்டமாக்கிய வரலாற்றை மூடி மறைத்து அங்கே பௌத்த கோவில் இருந்து இருக்கலாம் அதன் மீது மசூதி கட்டப்பட்டு இருக்கலாம் என்று சொல்வது எவ்வுளவு பெரிய அயோக்கியத்தனம்.

    அங்கே இருந்தது ஹிந்து கோவில் என்பதற்கு நீதிமன்றத்தில் ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    • மணி கண்டன் சார் வாள், பாபர் மசூதியை பாய்ங்க கோவிலை இடிச்சுண்டு கட்டினான்னு ஒரே அடியா சொல்லிடணும், ஏதாவது ஆதாரம், சாட்சின்னு போய் சிக்கிண்டு சின்னா பின்னாமா ஆயிராதீரும்! கமெண்டு போட்டாச்சா, பேட்டா வாங்கியாச்சான்னு போவணும் ஓய்!

    • ////இஸ்லாமியர்கள் இந்த நாட்டில் பல ஆயிரம் ஹிந்து கோவில்களை இடித்து தரைமட்டமாக்கினார்கள்///// தலித்துக்கள் பார்ப்பனர்களையும் ஆதிக்க சாதியினரையும் அடித்து விரட்டினார்கள் என்று சொல்வதுபோல் இருக்கிறது.

      • ஒன்று உங்களுக்கு இந்தியாவின் வரலாறு தெரிந்து இருக்கவில்லை அல்லது வரலாறு தெரிந்தும் இந்த மாதிரி கூச்சம் இல்லாத பொய்களை பேசும் கிறிஸ்துவராக நீங்கள் இருக்க வேண்டும்… “Hindu holocaust” என்று google செய்து பாருங்கள் உங்களுக்கு விவரம் கிடைக்கும். மனித இன வரலாற்றிலேயே ஹிந்துக்களை போல் பெரும் துன்பங்களை சந்தித்தவர்கள் உலகில் வேறு எந்த இனமும் கிடையாது… இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்கள் இரண்டு ஆட்சிகளிலுமே ஹிந்துக்களை மிக கொடூரமாக நடத்தினார்கள்…

        இஸ்லாமிய ஆட்சியில் பல ஆயிரம் ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்டது, சிக்கந்தர் மன்னர் காஷ்மீரில் தினமும் எத்தனை ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்டது என்ற விவரம் தெரிந்த பிறகு தான் தூங்க செல்வார். அவரது ஆட்சியில் தான் புகழ் பெட்ரா மார்த்தாண்ட சூரிய கோவில் இடிக்கப்பட்டது. அந்த கோவில் இன்று இருந்து இருந்தால் அது உலக அதிசயமாக கொண்டாப்பட்டு இருக்கும் (தாஜ் மஹால் அல்ல).

        • அப்படியா? இசுலாமியர்கள், கிருத்துவர்கள் ஆட்சியில் ஹிண்டுக்கள் கொடூரமாக நடத்தப்பாட்டர்கள் என்பதில் உண்மை இருந்தாலும் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இந்து தேசத்தில் அதுவும் சம காலத்தில் இந்துக்களே மிகக் கொடூரமாக நடத்தப்படுகிறார்களே இது உன் கண்ணுக்கு தெரியவில்லையா? பாசிச பாஜக ஆட்சியில் இந்துக்கள் மீது நடக்காத வன்முறையா? கொலையா? இருப்பதிலேயே இந்து பாசிச மதவெறிதான் ரொம்ப கீழ்த்தரமானது. இசுலாமியர்கள் இந்து கோவிலை இடித்து விட்டார்கள் என்பது இருக்கட்டும்…. இந்துக்கள் மசூதியை இடிக்கவே இல்லையா? கண்ணைக்கட்டிக் கொண்டு உலகத்தை பார்க்காதே..கொஞ்சமாவது திறந்து பார்.

          • ஒரே நாளில் 50 ஆயிரம் அப்பாவி மக்கள் ஹிந்துக்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொல்லப்பட்டு இருக்கிறார்கள் (அதை ஜிகாத் என்று நியாயப்படுத்தி நேரில் பார்த்த இஸ்லாமிய மதகுரு தனது புத்தகத்தில் ஆவணப்படுத்தி இருக்கிறார்) ஆனால் உங்களை போன்ற கிறிஸ்துவ அயோக்கியர்கள் அதை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் சரி என்று வேறு சொல்லி கொண்டு இருக்கிறீர்கள் நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா ?

            கிறிஸ்துவ மதவாதம் உங்கள் கண்களை இந்தளவுக்கு மறைக்கும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை… ஆனால் இப்படி பட்ட அழிவை இஸ்லாம் மட்டும் அல்ல கிறிஸ்துவமும் உலகம் முழுவதும் செய்து இருக்கிறது அதனால் உங்கள் மனம் வக்கிரப்பட்டு இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

            ஜாதியை பற்றி பேசுவதற்கு கிறிஸ்துவர்களுக்கு துளியும் அருகதை இல்லை… சோபியா விவகாரத்தில் நான் கிறிஸ்துவன் என்று சொல்லாமல் தனது ஜாதியின் பெயரை சொல்லி காவல்துறையிடம் புகார் அளித்த நீங்கள் ஜாதியை பற்றி பேசுவதற்கு தகுதியே இல்லாதவர்கள். தலித் வீதி மாதா கோவில் தேர் செல்ல கூடாது என்று சொல்லும் நீங்கள் ஜாதியை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள்… தலித் கிறிஸ்துவர்களை எங்கள் சுடுகாட்டில் அடக்கம் செய்ய கூடாது என்று சொன்ன உங்களை போன்ற கிறிஸ்துவர்களுக்கு ஜாதியை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது.

            • ஏண்டப்பா மணிகண்டா, காஞ்சிக்கு வந்த சாளுகேசி நம்ம ஹிந்துக்களை ஆயிரக்கணக்குல கொன்ன்னன், பதிலுக்கு பல்லவன் சாளுகேசி நாட்டுக்கு படையெடுத்துப் போய் கொன்னன், குப்தன், மௌரியன்னு எல்லா ஹிந்து சக்கரவர்த்திகளும் கொன்ன கணக்கு கோடியைத் தாண்டும் ஓய்! நம்ம மோடிஜி குஜராத்ல கொன்ன கணக்குத்தான் ரொம்ப லேட்டஸ்ட், அடிக்கிறது அடி, ஆனா இப்படி யாராச்சும் கேட்டா ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆயிடுமோ இல்லையோ?

  2. மாட்டுமூளை மணிகண்டா,
    //அங்கே இருந்தது ஹிந்து கோவில் என்பதற்கு நீதிமன்றத்தில் ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.//
    அந்த ஆதாரத்தோட வண்டவாளத்தைதான் இந்த கட்டுரை தண்டவாளத்துல ஏத்தியிருக்கு . . !
    கட்டுரைய படிச்சுட்டு பின்னூட்டம் போடுப்பா . . !
    கொஞ்சமாவது ஆரோக்கியமா விவாதம் பண்ண முயற்சி செய்ப்பா . . !

    • அதை தான் நானும் சொல்கிறேன், கம்யூனிஸ்ட்கள் ஹிந்து மதத்திற்கு எதிராக எவ்வுளவு பொய்களை பரப்ப முடியுமோ அத்தனையும் செய்கிறார்கள், அதன் ஒரு பகுதி தான் இந்த கட்டுரை… முதலில் நான் சொல்ல வரும் கருத்தை புரிந்து கொண்டு பேசவும், முட்டாள் கம்யூனிஸ்ட் மூளைக்கு இதெல்லாம் எங்கே புரிய போகிறது.

      • ஓலைப் பாயில நாய் மோண்ட மாதிரி பேசுறயே மணிகண்டா . . !
        நீ பேசுறது எப்படி இருக்குன்னா கூட்டத்துல குசுவ விட்டவன் யார்ரா அது குசு விட்டதுன்னு கேக்குற மாதிரி இருக்கு . . !
        கட்டுரையில விவரிச்சிருக்குறதுல பாயிண்ட் பாயிண்டா எடுத்து கம்யூனிஸ்ட்ங்க எங்கே பொய் சொல்லுறாங்கன்னு நிரூபி பாப்போம்.

      • மணிகண்டா உன்ன மாதிரி பக்தியுள்ள ஹிந்துக்கள் இருக்கறச்சே நம்மவாள யாரும் அசைச்சுக்க முடியாது ஓய்! வாயத் தொறந்தா பொய் எப்டி கங்கையாட்டம் பிரவாகமா ஓடுது! பாத்துப்பா, பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடையாதுன்னு பெரியவா சொல்லியிருக்கா, இன்னிக்கு நம்ம பாஜக தோத்துப்போச்சு, இனி பேட்டாவை பாதியா குறைச்சாலும் குறைச்சுடுவா, பாத்துக்கோ!

  3. ///“அதாவது கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை இந்தப் பகுதி பவுத்த மக்களின் வசிப்பிடமாக இருந்திருக்கலாம் (அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் பதிவு செய்திருக்கிறார்) என்றும் 11 மற்றும் 12-ஆம் நூற்றாண்டில் முசுலீம் மக்கள் குடியேறியிருக்கிறார்கள். அப்போது பழைய இடிந்துபோன பவுத்த கட்டுமானத்தின் மீது மசூதிகள் எழுப்பப்பட்டிருக்கலாம். அதன்பின் 1528-ஆம் ஆண்டும் பாபர் மசூதி, பழைய மசூதிகளின் மீது கட்டப்பட்டிருக்கிறது”///

    என்று பாபர் மசூதிக்கு கீழே கோவில் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டதோ அன்றில் இருந்தே அயோக்கிய கம்யூனிஸ்ட்கள் இந்த மாதிரியான பொய் பிரச்சாரங்களை ஆரம்பித்து விட்டார்கள்… இவர்களை பொறுத்தவரையில் ஹிந்துக்களுக்கு ஆதரவாக எது இருந்தாலும் அது பொய்… அப்படி யாராவுது தொல்லியல் துறையில் இருந்து ஹிந்துக்களுக்கு ஆதரவாக அறிக்கை கொடுத்தால் உடனே அவர் மீது மதச்சாயம் பூசப்பட்டு அவரை RSS BJP என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

    கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் மசூதிக்கு கீழே கோவில் இருந்து இருக்கிறது என்ற அடிப்படை உண்மையை ஏற்கிறார்கள் ஆனால் அந்த கோவில் ஹிந்து கோவில் இல்லை என்ற இடை சொறுகளை இவர்களே உருவாக்குகிறார்கள்… எந்தளவுக்கு பாகிஸ்தானும் சீனாவும் இந்தியாவில் அமைதியின்மையை உருவாக்குகிறார்களோ அதற்கு சற்றும் குறையாமல் கம்யூனிஸ்ட்களும் இந்தியாவில் அமைதியின்மையை இந்த மாதிரியான பொய்கள் மூலம் உருவாக்குகிறார்கள்.

    இந்த மாதிரியான பொய்களின் அடிப்படை நோக்கம் எந்த சூழலிலும் ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை உருவாக்க கூடாது என்பதே.

    • ஏண்டாப்பா, ஹிந்து முசல்மான் ஒத்துமைக்கு எல்லா பாயங்களயும் கொன்னுட்டா என்ன ஓய்? நம்மவா ராத்திரி பைடக்ல என்ன பேசறோம்கிறத உங்க சொல்லப்புடாதுன்னாலும் இந்த கம்யூனிஸ்ட் படவா ரொம்ப துள்ளிண்டு இருக்காள். கோவில இடிச்சாங்க பாய்னு கொஞ்சம் அடக்கமா வாசியும். நம்ம ஹிந்து மன்னர்வாள் படையெடுத்து போய் எத்த்தனையோ கோவிலை இடிச்சிருக்காள், என்ன இருந்தாலும் நம்ம ஹிந்துக்கள வுட்டுக்குடுக்கு முடியாதில்லையோ?

  4. ஆமாம் பாபர் மசூதிக்கு கீழே ராமர் கோவில் இருந்தது அதற்கு ஆதாரம் தொல்லியல் துறையின் அறிக்கை.

    கொடுமையான இஸ்லாமிய ஆட்சியில் இடிக்கப்பட்ட பல ஆயிரம் ஹிந்து கோவில்களில் ராமர் கோவிலும் ஒன்று… அங்கே மீண்டும் ராமர் கோவில் எழுப்பிட வேண்டும் என்பது ஒவ்வொரு ஹிந்துவின் விருப்பம்.

    ஒரு பாகிஸ்தானை போல ஒரு பிரேசில் போல இந்தியாவையும் ஹிந்து தேசமாக அறிவிக்க வேண்டும்… நாம் மட்டும் ஏன் மதசார்பின்மை என்ற போலித்தனத்தில் வாழவேண்டும், மதசார்பின்மை என்பதால் தானே பெரும்பான்மை ஹிந்து மக்களின் மனதை புண்படுத்தும் வேலைகளை கம்யூனிஸ்ட்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் என்று அனைவரும் செய்கிறார்கள்.

    மதசார்பின்மை என்ற போலித்தனம் வேண்டாம்.

  5. //இடிந்துபோன பவுத்த கட்டுமானத்தின் மீது மசூதிகள் எழுப்பப்பட்டிருக்கலாம். //
    அதுதான் தெளிவாக இருக்கே பவுத்த கட்டுமானம்னு மட மணிகண்டா . . ! அப்புறம் ஏன் அதை கோயில்னு கூவுற . . !
    ஓகோ . . ! பவுத்த விகாரங்களையும் நீங்க உங்க கோயில்னு சொல்ல வர்றீங்களா . . !
    எப்படி . . ! பவுத்த தத்துவத்தில இருந்து திருடி அத்வைத தத்துவத்த உருவாக்குன திருட்டு ஆதிசங்கரன் மாதிரியா . . !
    சமண பள்ளிகளை திருடி கோயில்கள் ஆக்கிக்கிட்ட மாதிரியா . . !
    பவுத்தத்தில இருக்கிற கொல்லாமை தத்துவத்தை திருடி நீங்க மாட்டுக்கறி சாப்பிடுறத நிறுத்துன மாதிரியா . . !
    நாகப்பட்டினம் புத்தரின் தங்க சிலையை திருடி சிறீரங்கம் கோயில் கட்டுன மாதிரியா . . !
    தமிழ் இசையை திருடி கர்நாடக இசை ஆக்கிக்கிட்ட மாதிரியா . . !
    இப்படி எல்லா திருட்டையும் நீங்களே பண்ணிட்டு அடுத்தவரை திருடன் . . . திருடன் . . . னு கூவுறியே கோமாதா மூளை மணிகண்டா . . . !
    ஆதாரத்தோட எழுதுன கட்டுரையில உள்ளடி வேலை செய்யிற . . .!
    ஆதாரமே இல்லாத புராண கட்டுக்கதையையெல்லாம் வரலாறுன்னு சொல்ற . . !
    நீ புத்தம், சமணம், சைவம்னு ஊரையே அழிச்சு உலையில வச்சிட்டு முசுலீம்கள் கோயில இடிச்சாங்கன்னு கதை வுடுற . . !
    ஆனால் உங்களையெல்லாம் எங்க ஈரோட்டு கிழவன் நல்லா வச்சு செஞ்சுட்டதுனால உங்களுக்கு இங்கே செல்ஃபே எடுக்க மாட்டேங்கிது, என்ன செய்ய . . !

    • //எழுப்பப்பட்டிருக்கலாம்// ஆட்டு மூளை S.S.கார்த்திகேயன் இந்த வார்த்தையின் அர்த்தம் தெரியும்மா ? இருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்ட வார்த்தை… இவர்கள் பேசுவது ஹிந்துக்களுக்கு எதிரான கற்பனை வாதம். ஆதாரபூர்வமான வாதம் அல்ல. ஆனால் ஹிந்துக்கள் தொல்லியல்துறையின் அறிக்கையை ஆதாரமாக கொண்டு பேசுகிறோம். எங்களின் கோரிக்கை ஆதாரம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையாக கொண்டது.

      உங்களின் பேச்சு கற்பனைவாதம் அதில் எந்த ஆதாரமும் இல்லை…

  6. //எங்களின் கோரிக்கை ஆதாரம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையாக கொண்டது.//
    நல்லதையும் நரகலையும் கலந்தால் அது நரகல்தான். நீங்கள் சொல்லும் இந்திய தொல்லியல் துறையின் அயோக்கியத்தனமான அறிக்கையைப் பற்றிதான் இந்த கட்டுரை ஆதாரங்களுடன் பேசுகிறது.
    இந்திய தொல்லியல் துறை மற்றும் உச்சிக்குடுமி மன்றம் என அனைத்தும் இந்து மத வெறியர்களுக்கு துணை நிற்கிறது.
    அயோத்தியில் மட்டும் சில பத்து இடங்களுக்கு மேல் ராமன் பிறந்த இடமாக இந்துக்களால் வணங்கப்படுகிறது. அவற்றில் சிலவற்றை இஸ்லாமியர்களே பராமரித்தார்கள். இந்து மத வெறியர்கள் அவற்றையெல்லாம் அடித்து நொறுக்கியது செய்தியாக வந்திருக்கிறது. வினவில் கூட கட்டுரை வெளியிட்டிருந்தார்கள்.
    தனது சொந்த மதத்தின் மக்களுக்கே சமத்துவம் அளிக்காத இந்து மதத்திற்கு பிற மத மக்களைக் கண்டால் வெறி கொள்ளுவது இயல்பு தானே . . !
    அதையேதான் கோமாதா மூளை மணிகண்டன் செய்கிறார்.

    • கம்யூனிஸ்ட்களின் வெட்கம் இல்லாத பொய் பித்தலாட்டங்களை தான் நீங்கள் சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்… ஹிந்துக்களுக்கு ஆதரவாக யார் அறிக்கை கொடுத்தாலும் நீங்கள் இப்படி தான் பேசுவீர்கள் அதில் உண்மை இருக்கிறதா நியாயம் இருக்கிறதா என்பது பற்றி கம்யூனிஸ்ட் அய்யோக்கியர்களுக்கு துளியும் கவலையில்லை. கேட்டால் நாங்கள் மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற பச்சை பொய் வேறு…

      முடிந்தால் நீதிமன்றத்தில் ASI ரிப்போர்ட் தவறு என்று நிரூபித்து காட்டுங்கள் அப்போது உங்களின் வார்த்தைகளை ஏற்கிறேன், உங்களால் நிரூபிக்க முடியவில்லை என்றால் கம்யூனிஸ்ட்கள் அனைவரும் ஹிந்துக்களிடம் பொய் பேசியத்தராக இந்த நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.

      சவாலை ஏற்க தயாரா ?

  7. ஏம்பா. . ! வடிவேலுவ ஒரு சின்னப்பய கிட்னிய எடுக்குறதுக்கு கூப்பிடுற மாதிரி எங்களை உச்சிக்குடுமி மன்றத்திற்கு கூப்பிட்டு சவால் வுடுறீங்களே நியாயமாரே . . !
    உங்க மன்றத்தில எங்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்பா . . !
    மோடி 2000 பேரை கொன்னு குவிச்சு தப்பிச்சு தில்லா சுத்துறாரு . . !
    அமீத்ஷா கூட்டாளியையும் நீதிபதியையும் போட்டு தள்ளிட்டு தப்பிச்சு நல்லா சுத்துறாரு . . !
    எங்களை கோர்ட்டுக்கு கூப்பிட்டு கிட்னிய எடுத்து விட்டுட்டீங்கன்னா இன்னா பன்றது . . . !

    • உங்களின் போலித்தனம் தோல்வி மனப்பான்மை படு கேவலமாக இருக்கிறது.

      இதே வினவு தளத்தில் பல கட்டுரைகள் நாங்கள் நீதிமன்றம் சென்றோம் தீர்ப்பு எங்களுக்கு ஆதரவாக வந்தது என்று சொல்லியிருக்கிறார்களே அதற்கு பெயர் என்னவாம்.

      கம்யூனிஸ்ட் அய்யோக்கியர்களுக்கு இந்திய நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் ஏன் நீமன்றம் செல்கிறீர்கள், இனி நீதிமன்றம் பக்கம் போகாதீர்கள்.

      ஹிந்துக்களுக்கு எதிரான உங்களின் கிறிஸ்துவ பொய் பித்தலாட்டங்கள் இனி எடுபடாது.

  8. என்ன பண்ணுறது மணிகண்டா . . !
    உனக்கு கூட வினவுகாரங்க நெனப்பு வந்துட்டா ராத்திரியில தூக்கம் கூட வராது. இருந்தாலும் உன் தலையெழுத்து, விடாம வினவுல எழுத வேண்டியதிருக்கு. (நாட்ட காப்பாத்த எழுதுறேன்னு எங்களை டார்ச்சர் பண்ணிடாத . . )
    அதை விடுப்பா கழுதைய . .
    ஒரே ஒரு ரிக்வஸ்ட் மணிகண்டா . . . எங்களை கிருத்துவ கம்யூனிஸ்ட் மட்டும் புகழாத . . . கூச்சமா இருக்கு . . . !

    • ஆட்டு மூளை கிறிஸ்துவ S.S.கார்த்திகேயன் விவாதம் செய்ய முடியாமல் தப்பி ஓட்டம்.

      • சாக்கடையில முழுகிட்டு வர்ற பன்னியப் பாத்தா ஓடத்தான செய்வாங்க மணிகண்டா . . !

      • மணிகண்டா வாங்குற காசுக்கு சவுண்டு அதிகம் விடாதப்பா, அடுத்த ஆட்சி காங்கிரசு அமைச்சா உன்னை மாதிரி நம்பி ஏமாந்த ஸ்வயம்சேவக்கெல்லாம் உள்ள தள்ளி டிக்கியை கழட்டிடுவா, பாத்து நடந்துக்கப்பா, யாரு பெத்த பிள்ளையோ?

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க