ஏண்ணே! வெற்றிகரமான தோல்வின்னா  என்னான்னே?

ஏய்… நானே காஸ் வெலைய ஏத்திட்டாய்ங்க, கரெண்டு பில்ல கூட்டிட்டாய்ங்கன்னு எரிஞ்சு போய் கெடக்குறேன்… கேள்விய பாரு!

நம்ம ஊரே சாகுபடியா நடக்குது.. சாகும்படி தான் கெடக்குது..  அதுக்காக நாட்டு நடப்ப பாக்க வேணாமா…? நம்ம ஊர்லயே நீங்கதான் நாலு பேப்பர படிக்கிறவரு, எட்டு நியூச பாக்குறவரு, உங்ககிட்ட கேக்காம எங்க போய் கேக்க சொல்றிங்க?

ஏண்டா  இப்ப உனக்கு என்ன பிரச்சன?

அண்ணே! வடக்க நடந்த தேர்தல்ல எல்லா எடத்துலயும் பி.ஜே.பி. புட்டுக்கிட்டு போயிடுச்சி, உங்களுக்கு தெரியாதது இல்ல, ஆனா இந்த தமிழிச மூஞ்சில ஒரு  பயந்த கொணமே இல்லாம இது வெற்றிகரமாண தோல்வின்னு பேச்சா   பேசுது..  அப்படின்னா என்னாணே அர்த்தம்?

ஏண்டா! வாங்குன டீ ய குடிக்க வுடுறிங்களா… ஆறியே போச்சு, உனக்கு வேற வேல இல்லையா?

அது இருந்தா இந்த கேள்விக்கு நேரம் ஏது? இல்லண்ணே, நானும் நாய் செதும்புறதுக்கும் அர்த்தம் கண்டுபுடிச்சிருக்கேன், நரி ஊளையிடுறதுக்கும் அர்த்தம் கண்டுபிடிச்சிருக்கேன்.  எலி ஒடுற வேகத்த பாத்தே, எதுக்கு ஓடுதுன்னு சொல்லிருக்கேன், இதுக்கு ஒரு அர்த்தம் தெரியலயேண்ண! சொல்லுங்கண்ணே

அதாவது, தோத்தாலும் பாதிப்பில்லயாம், இன்னும் கெத்தாதான்  இருக்காங்களாம், நாடு முழுக்க இன்னும் மோடி அலை வீசுதாம், ஓயலையாம் போதுமா?

ஏண்ணே, நாடு முழுக்க வீசுறப்ப, பின் ஏன் அஞ்சு எடத்துல  புட்டுகிட்டு  போச்சு

ஏண்டா, வீட்ல உலையே கொதிக்காதப்ப, எவனாவது அலைய கண்டுப்பானா?

அப்ப அந்த மாட்டுக்கறி, ராமன், சபரிமலை, அயோத்தி எதுவும்  வேலைக்க ஆவலயாண்ணே?  ரொம்ப கத்தி கத்தி மோடி வேல பாத்தாரேண்ணே!

பொங்கி திங்க சோறு இல்லாதவன்கிட்ட வந்து, பருப்பு கடைய மத்துகேட்டா..   மொத்த மாட்டானா? அதான் மொத்திட்டாய்ங்க!

ஏண்ணே அப்ப அந்த மோடி அலை?

ஏண்டா, வாய புடுங்காத!  அப்புறம் வந்துட போவுது..

இல்லண்ணே,  இந்த கஜா புயலு அடிச்சத மோடி கண்டுக்கவே இல்ல..  கேட்டா, மோடிக்கு எல்லா விவரமும் தெரியும், புரியும்னுராய்ங்க,  அப்பனா வந்தது புயலா? மோடி அலையாண்ணே!  ஒருவேள இதுவும் வருத்தகரமான மகிழ்ச்சியா? இல்ல மகிழ்ச்சிகரமான வருத்தமா?  ஏண்ணே.. ஏண்ணே.. கோவப்படாதிங்க! செத்த நின்னு சொல்லிட்டு போங்கண்ணே!

படிக்க:
ராஜஸ்தான் : உலகின் முதல் பசு அமைச்சர் சுயேட்சையிடம் தோற்றார் !
ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !

துரை.சண்முகம்

5 மறுமொழிகள்

  1. ரொம்ப ஆட வேண்டாம்… 2003 ல் வாஜ்பாய் தலைமையில் பிஜேபி இந்த மாநிலங்களில் வென்றது ஆனால் 2004 பொது தேர்தலில் பிஜேபி தோல்வி அடைந்தது… அதே போன்ற நிலைமை காங்கிரஸ் கட்சிக்கு வரலாம்.

  2. அதெல்லாம் இருக்கட்டும் போன தேர்தலில் பிஜேபி EVMல் மோசடி செய்து வெற்றி பெற்றது என்று தரையில் விழுந்து புரண்டு அழுது கொண்டு இருந்திர்களே இப்போது என்ன ஆச்சு, பிஜேபி தோற்றவுடன் EVM ஒழுங்கா வேலை செய்யுதோ ?

    • தம்பி அதெல்லாம் பழைய கதை.மோடி திரும்ப ஜெயிச்சா ஓட்டிங் மிஷினை திட்டுவோம்.அதுவரைக்கும் நல்லா வேலை செய்யுது

  3. வெற்றிகரமான தோல்வி,அக்கா தெரிஞ்சுதான் சொல்றாங்களா? சிறப்பான தோல்விதானே இது?

  4. மபில பாஜக 41% வாக்குகளும் காங்கிரசு 40.9% வாக்குகளும் பெற்றதே!அதான் வெற்றிகரமான தோல்வி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க