ந்தியாவின், (இல்லையில்லை உலகின்) முதல் பசு அமைச்சர் ராஜஸ்தானில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்டை வேட்பாளரிடம் தோற்றுப்போனார்.

ஒட்டராம் தேவாசி, இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைக்கப்பட்ட முதல் பசு அமைச்சகமான ‘கவுபாலன் துறை’யின்  முதல் அமைச்சர். ‘சாமியார்’ என சக காவி கூட்டாளிகளால் அழைக்கப்பட்ட இவர், தலையில் மாட்டின் கொம்பு போல சிவப்பு டர்பனை அணிந்து, கையில் கோலுடன் வலம் வந்தவர்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வென்றால் பசு அமைச்சகம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, பாஜக வென்று ஆட்சியமைத்ததும் பசு அமைச்சகம் அமைக்கப்பட்டது. பசுவின் புனிதத்தை காக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட அமைச்சகத்தின் முதல் அமைச்சரானார் தேவாசி.

இந்நிலையில், இந்துத்துவா அரசியலால் ஓரளவு எரிச்சல் அடைந்த ராஜஸ்தான் மக்கள், முதல் பசு அமைச்சருக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். காங்கிரஸிலிருந்து பிரிந்து சுயேட்சையாக நின்ற சன்யாம் லோதாவிடம் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறார் பசு அமைச்சர்!

படிக்க:
யோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு ! போலீசைக் கொன்றவர்களுக்கு விடுதலை !
ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !

மாட்டை முன்னிறுத்தி வெறுப்பு அரசியல் செய்த, காவி கும்பலின் ‘இந்துத்துவா’ முழக்கத்தை புறந்தள்ளிவிட்டனர் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மக்கள். முதல் பசு அமைச்சருக்கு நேர்ந்த கதி நாளை மோடிக்கும் நேரலாம். இல்லையேல் இன்றைக்கு உலகின் முதல் பசு அமைச்சருக்கு இந்த கதி நேர்ந்திருக்காது அல்லவா?

வினவு செய்திப் பிரிவு
கலைமதி
செய்தி ஆதாரம்: newsd

சந்தா செலுத்துங்கள்

மக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா? வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க