ந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் “மோடி மேஜிக்” பல்லிளித்து விட்டதைக் காட்டுகின்றன. ராஜஸ்தான், சட்டிஸ்கரில் பாஜக-வின் தோல்வி உறுதியாகிவிட்டது. ம.பி-யிலும் அநேகமாக பாஜகவின்  தோல்வி உறுதி. பார்ப்பன பாசிசம் ஒழியவேண்டுமென்று எண்ணுபவர்கள் அனைவருக்கும் இந்த தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

விலை கிடைக்காத வெங்காயத்தை வீசி எரியும் விவசாயிகள்

பாஜக-வின் தோல்விக்கு மிக முக்கியமான காரணம் விவசாயிகளின் கோபம். புதிய தாராளவாதக் கொள்கைகள் அமலாகத் தொடங்கியதிலிருந்தே விவசாயம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்ற போதிலும், மோடியின் ஆட்சிக்காலத்தில் அது ஒரு உச்சத்தை எட்டிவிட்டது. விளைபொருளுக்கு நியாயவிலை கிடைக்காமல் தானியங்களையும், காய் கனிகளையும், பாலையும் வீதியில் கொட்டி விவசாயிகள் நடத்திய போராட்டத்தையும், விவசாயிகள் மீது அரசு ஏவிவிட்ட வன்முறையையும், கந்து வட்டிக் கடனின் விளைவாக அதிகரித்து விட்ட விவசாயிகள் தற்கொலைகளையும் மோடி தனது சவடால் பேச்சை வைத்து சமாளிக்க முடியவில்லை.

படிக்க:
♦ ரஃபேல் ஊழல் : வாய் திறக்காத மோடியின் கருத்தே மெக்ரானின் கருத்தாம் !
♦ பாஜக-வின் நெருங்கிய கூட்டாளி ஜனார்த்தன ரெட்டி தப்பி ஓட்டம் !

நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்பில்லை. விவசாயம் நலிவுற்றதால் முன்பு கிராமத்திலிருந்து நகரம் நோக்கி வந்த மக்கள், நகரத்திலும் வேலைவாய்ப்பில்லாத காரணத்தால் மீண்டும் கிராமம் நோக்கி செல்வதும், அங்கேயும் விவசாயத்தின் நலிவினால் வேலையில்லை என்ற நிலையும்தான் நகர்ப்புறங்களின் நிலைமை.

பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி யில் தொடங்கி மோடியின் அடுக்கடுக்கான தோல்விகளையும், ஊழல்களையும், கிரிமினல் நடவடிக்கைகளையும் கார்ப்பரேட் ஊடகங்கள் முடிந்த மட்டும் இருட்டடிப்பு செய்தபோதிலும் அவற்றையெல்லாம் மீறித்தான் வந்திருக்கிறது இந்த தேர்தல் முடிவு.

வாய் திறந்தாலே ஜூம்லாக்கள்தான். பின்னர் வெற்றி வராதா என்ன?

“சப் கா சாத், சப் கா விகாஸ்” என்ற 2014 நாடாளுமன்றத் தேர்தல் நடிப்பு இப்போது செல்லாது என்று தெரிந்துதான்,  அயோத்தி விவகாரத்தையும் ஆர்.எஸ்.எஸ் துணைக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது. இந்த மூன்று மாநிலங்களில் மோடியைப் போல இரண்டு மடங்கு அதிகமாக ஆதித்யநாத்தை பிரச்சாரத்தில் இறக்கியிருப்பதும், 2019 தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமே.

ராஜஸ்தானும் மத்திய பிரதேசமும் சாதி – மத உணர்வுகள் பெரும் செல்வாக்கு செலுத்துகின்ற, பண்பாட்டு ரீதியில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள். விவசாயிகளின் கோபத்தை திசை திருப்புவதற்காக சாதி, மத உணர்வுகளைத் தூண்டுவதற்கு பல கோணங்களில் பாஜக முயன்றிருக்கிறது. இருப்பினும் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தியிலிருந்து (anti – incumbancy) மக்களைத் திசை திருப்புவதில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இன்று மக்களின் அதிருப்தியை அறுவடை செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ் தனது வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமா? விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் முனைவோர் போன்ற அடிப்படை உழைக்கும் மக்களின் நலனுக்கான திட்டங்களை காங்கிரஸ் அரசு வகுத்து அமல்படுத்துமா? புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்தும் மூர்க்கத்தனத்தில் வேண்டுமானால் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் வேறுபாடு இருக்கலாமேயொழிய, இந்த கொள்கைச் சட்டகத்திற்கு வெளியே காங்கிரசோ அல்லது டி.ஆர்.எஸ்  உள்ளிட்ட மாநிலக் கட்சிகளோ இயங்கப்போவதில்லை.

புதிய தாராளவாதக் கொள்கை என்பது இந்தியாவைப் போன்ற நாடுகளை மறு காலனியாக்கும் ஏகாதிபத்தியங்களின் கொள்கை. இயற்கை வளங்களையும், பொதுச்சொத்துகளையும் ஆக்கிரமிக்கும் காலனியாதிக்கத்தையே ஒரு கொள்கையாக அமல்படுத்தும் எந்த ஒரு அரசாங்கமும், ஜனநாயகத்தன்மை கொண்டதாக நடந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை.

வீழ்ச்சியின் விளிம்பில் சந்தை

அதிலும் உலக முதலாளித்துவம் மீள முடியாத ஒரு கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கியிருக்கும் காலம் இது. சந்தைகளின் தேக்கநிலையும், தானியங்கிமயமாதல் – செயற்கை அறிவு போன்றவையும் ஏற்கனவே இருக்கின்ற வேலைவாய்ப்புகளையே மென்மேலும் சுருக்கி வரும் காலம் இது. இந்த சூழலில், எத்தகைய ஊழலற்ற நல்லாட்சியை வழங்குவதாக யார் பீற்றிக் கொண்டாலும், இந்தக் கட்டமைப்புக்குள் எந்த ஒரு அரசும் புதிய தாராளவாதக் கொள்கையை அமல்படுத்தும் கங்காணியாக மட்டுமே செயல்பட முடியும்.

ஒரு வலிமையான கங்காணி வேண்டும் என்பதற்காகத்தான் “அண்டர் பெர்ஃபார்மர்” மன்மோகன் சிங்குக்கு பதிலாக, மோடியை ஆளும் வர்க்கம் தெரிவு செய்தது. தான் தெரிவு செய்த அந்த கைப்பாவையை மக்களும் தெரிவு செய்யுமாறு நாட்டையே மூளைச்சலவை செய்தது. இன்று மக்கள் வேறு தெரிவைத் தேடுகிறார்கள் என்பது பாரதிய ஜனதாவை மட்டும் கவலைக்கு உள்ளாக்கியிருக்காது. அம்பானி, அதானி உள்ளிட்ட குஜராத்தி, மார்வாரி தரகு முதலாளிகளையும், வங்கிக் கொள்ளையர்களையும், பன்னாட்டு முதலாளிகளையும் நிச்சயம் கவலைக்குள்ளாக்கியிருக்கும். அந்தக் கவலையின் ஒரு வெளிப்பாடாகத்தான் ராமனுக்கு மீண்டும் மவுசு வந்திருக்கிறது. “அயோத்தியில் கோயில் கட்ட சட்டமியற்று” என்று 2019 தேர்தலுக்கான புதிய நிகழ்ச்சி  நிரலை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் கிளப்பியிருக்கிறார்கள்.

படிக்க:
♦ பேரரசரின் நிர்வாணத்தை உணர வைத்த தேர்தல் காற்று!
♦ குஜராத் மாநிலங்களவைத் தேர்தல் : ஜனநாயகத்தின் மீது இந்துத்துவ மூத்திரம் !

கடந்த 30 ஆண்டுகளில் “வளர்ச்சி – இந்துத்துவம்” என்ற இரண்டு முழக்கங்களையும் தேவைக்கேற்ப மாற்றி மாற்றிப் பயன்படுத்திக் கொண்டு, இதன் ஊடாக, தனது வாக்காளர் அடித்தளத்தையும் அரசியல் அடித்தளத்தையும் பார்ப்பன பாசிஸ்டுகள் மெல்ல மெல்ல விரிவு படுத்திக் கொண்டே வந்திருக்கிறார்கள். அதிகார நிறுவனங்களையும் கைப்பற்றிக் கொண்டு விட்டார்கள். நீதித்துறை உள்ளிட்ட அரசு எந்திரம் மெல்ல மெல்ல காவிமயமாகி விட்டது. சிறுபான்மை மக்களை, குறிப்பாக முஸ்லிம்களை அரசியலிலிருந்தும் மைய நீரோட்டத்திலிருந்தும் ஒதுக்கி வைப்பது ஒரு புதிய எதார்த்தமாகவே மாறிவருகிறது.

இது மட்டுமின்றி, தேர்தல் அரசியலுக்கு வெளியே பல்வேறு அரங்குகளிலும் தமது அமைப்புகளை பார்ப்பன பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், பாஜக-வை எதிர்க்கும் கட்சிகள் – சக்திகள், தேர்தல் அரசியலின் வரம்புக்கு வெளியே, மக்கள் மத்தியில் அத்தகைய அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளவில்லை. இது நம் அனைவரின் கவலைக்குரிய உண்மை.

அனைத்துக் கட்டுமானங்களுக்குள்ளும் புகுத்தப்பட்டிருக்கும் பார்ப்பன பாசிசம்

தேர்தல் அரசியலின் வரம்புக்குள் நின்று பார்க்கும்போது “மோடியை விட காங்கிரசோ மற்ற மாநிலக் கட்சிகளோ பரவாயில்லை” என்ற கருத்துக்கு ஒருவர் வரலாம். பிரச்சினையை “மோடி” என்று மட்டும் சுருக்கிப் பார்க்க கூடாது. மோடி, பார்ப்பன பாசிசத்தின் ஒரு பிரதிநிதி. பார்ப்பன பாசிசம், கடந்த 30 ஆண்டுகளில் இந்திய அரசியிலில் அழுத்தமாக காலூன்றி விட்டது. எனவே, எதிர்க்கட்சிகள் எனப்படுவோர் பார்ப்பன பாசிசத்தை இந்திய அரசியல் அரங்கிலிருந்து நிரந்தரமாக அகற்றும் நோக்கம் கொண்டவர்களா, அத்தகைய ஆற்றல் பெற்றவர்களா என்பதுதான் நாம் அக்கறை செலுத்த வேண்டிய கேள்வி.

தற்காலிகத் தீர்வாக, “பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது” என்பது வேறு. அதையே “நிரந்தரத் தீர்வாக நம்புவது” என்பது வேறு. புதிய தாராளவாதக் கொள்கையையும் மிதவாத இந்துத்துவ கொள்கையையும் பின்பற்றும் கட்சிகள் ஒருக்காலும் பார்ப்பன பாசிசத்தை எதிர்கொள்ள முடியாது. பாஜக-வின் பார்ப்பன பாசிச அரசியலைக் கண்டு அஞ்சியும், அதன் ஆதிக்க சாதி சமூக அடித்தளத்தை திருப்திப்படுத்தவும் ராகுல்காந்தி நடத்தி வரும் கோயில் யாத்திரைகள் இதற்கொரு சான்று.

படிக்க:
♦ ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் ?
♦ மோடி அமைச்சரவைக் கமிட்டிதான் ரஃபேல் விமான விலையை உயர்த்தியது !

நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் பாசிசமயமாவது என்பது, புதிய தாராளவாதக் கொள்கையின் தவிர்க்கமுடியாத ஒரு விளைவு. மேலை நாடுகளில் நிறவெறியாகவும், இனவெறியாகவும், பிற நாடுகளில் மதவாத எதேச்சாதிகார ஆட்சிகளாகவும், அமெரிக்காவில் டிரம்ப்பாகவும் இது உருவெடுக்கிறது. இந்தியாவுக்கு – பார்ப்பன பாசிசம்.

புதிய தாராளவாதமும் பார்ப்பனியமும் இணைந்த கலவையே பார்ப்பன பாசிசம். இந்தப் புரிதலுடன் மக்கள் இயக்கங்களையும் போராட்டங்களையும் கட்டியமைப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். பாஜக வின் இந்தத் தேர்தல் தோல்வியை, பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக மக்களை திரட்டுவதற்குரிய ஊக்க மருந்தாகக் கருதலாமே தவிர, அரசியல் மெத்தனத்தில் வீழ்ந்துவிடக் கூடாது.

சூரியன்

9 மறுமொழிகள்

 1. கிறிஸ்துவ ராகுல் காந்தி கைலாச மலை, பல ஹிந்து கோவில்களுக்கு சென்று பூஜைகள் செய்து, மக்களிடம் நான் ஹிந்து பிராமணன் என்று பொய் சொல்லி வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

  இது பொய் வெற்றி

 2. ஏன்டா அம்பி, ராகுல்காந்தி கோவில் கோவிலா தரிசனம் பண்றச்சே நீங்கல்லாம் எங்க போனேள்? பாகிஸ்தான் போனேளா, இல்லை கிறித்தவ விதேசி ட்ரம்ப பாக்க வாஷிங்டன் போனேளா? மத்தியப் பிரதேசத்துல நம்ம சவுகான்ஜி விவசாயிகங்க போராடினப்போ போட்டுத்தள்ளினார். வியாபம் ஊழல்ல உன்ன மாதிரி அப்பாவிங்கள கூட நம்ம கட்சி போட்டுத் தள்ளிருக்கு, இப்டி இருக்குறச்சே நம்ம ஏரியாவுல ராகுல் காந்தி வந்துட்டார்னு சொல்றதுக்கு நோக்கு எப்டிடா மனசு வந்தது?

 3. I am really, really sad to hear the results . BJP should have won the election

  Reason: BJP always accelerate the western plan of dividing(People) and destroying(one nation into many) India into pieces. It will help us to rule our land by our self.

 4. ஆர்எஸ்எஸ் கும்பல் மற்ற அரசியல் கட்சிகளைக் காட்டிலும் தந்திரங்களும் கயமை தனங்களும் நிறைந்த ஒன்று. இந்த தேர்தல் முடிவுகளால் மகிழ்ச்சியடைய முடியாது. மாநிலம் என்று வந்துவிட்டால் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆட்களை கட்சி தலைவர்களாகவும் முதல் அமைச்சர்களாகவும் நியமித்து அவர்களை கடுமையாக உழைக்க வைத்து நெம்பி எடுத்து ஓட்டு பொறுக்குவது. தேசிய அளவிலான பதவி அதிகாரம் என்பதெல்லாம் உயர் ஜாதிக்காரர்களுக்கு தான் என இட ஒதுக்கீடு வைத்திருப்பதுதான் அவர்களின் கொள்கை. அதனால்தான் பல ஆண்டுகள் கடுமையாக உழைத்த பொன் ராதாகிருஷ்ணனுக்கு இணை அமைச்சர் பதவிதான் தேசிய அளவில் கிடைத்தது. ஆனால் ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிட்டு வெற்றியடையாத நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் என்னும் பெரிய பதவி அதுவும் திறமைசாலி என்னும் பெயரில். இதுதான் அவர்களின் தந்திரம். அடிமட்டத்தில் கட்சிக்காக உழைப்பதற்கும் ஓட்டுப் பொறுக்குவதற்கும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆட்களும் அவர்கள் உழைப்பும் வேண்டும். ஆனால் மேல்மட்டத்தில் பதவி, அதிகாரம் ஆகியவற்றை அனுபவிப்பதற்கு உயர்சாதி காரர்களுக்குத்தான் தகுதி என்பதுதான் கொள்கை. தமிழகத்தில் பாஜக என்றால் நிர்மலா சீதாராமன், இல கணேசன், எச் ராஜா, எஸ்வி சேகர், குருமூர்த்தி ஆகியோர் தான். பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசன் ஆகியோர் எல்லாம் லோக்கல் எடுபிடிகள் மட்டுமே.

  • உங்களை போன்ற கிறிஸ்துவர்களுக்கு பொய் அவதூறு பேசுவதை தவிர வேறு வேலையே இல்லையா ?

   மோடி தெருவில் டீ விற்று கொண்டு இருந்த பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்த தொண்டர்… உங்களை போன்ற ஆட்கள் மன்மோகன் சிங், ராகுல் காந்தி போன்ற உயர் ஜாதியை சேர்ந்தவர்கள் மீது புழுதி வாரி இறைப்பது இல்லை. பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் என்பதால் தான் மோடியை பற்றி அவதூறுகளையும் பொய்களையும் பரப்பி கொண்டு இருக்கிறீர்கள்

 5. மோடி உயர் சாதிக்கும் பிற்பட்ட சாதிக்கும் இடையிலான சாதியை சேர்ந்தவர் சொந்த மனைவியை கூட கவனிக்காமல் ஹிந்துத்துவ அடியாளாக ஆர் எஸ் எஸ் எல் வளர்ந்தவர் இவர் மாதிரியானவர்கள் தேசிய அளவில் மிகுந்த உயர் பதவிக்கு வருவது அரிதிலும் அரிது. காங்கிரஸ் கட்சியும் இதற்கு விதிவிலக்கு அல்ல ஆனால் அவர்கள் சில விடயங்களில் இளகுத்தன்மை கொண்டவர்கள். அதுதான் வேறுபாடு.

  • அது என்ன //இளகுத்தன்மை// உங்களை போன்ற கிறிஸ்துவ மதமாற்றிகளின் செயல்களுக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருந்தது பிஜேபி அவ்வாறு உங்களின் தேசவிரோத ஹிந்து விரோத செயல்களுக்கு ஆதரவாக இல்லை. அப்படி தானே….

   இந்த காரணத்திற்காக தானே பிஜேபியை மக்கள் ஆதரிக்கிறார்கள்…

   மேலும் காங்கிரஸ் கட்சி நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு வெற்றியை சந்தித்து இருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம், இது தொடர் வெற்றி அல்ல.

 6. பெரிய பார்ப்பனியம் சூழ்நிலை கருதிவிட்டு கொடுத்ததால் சின்ன பார்ப்பனியம் வெற்றி!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க