தமிழகத்திலிருந்து சபரிமலை தரிசனத்துக்குச் சென்ற 11 பேர் கொண்ட பெண்கள் குழுவை, சங்பரிவார் கும்பல் தாக்கியுள்ளது. கேரள மாநிலத்தை ஆளும் இடது முன்னணி அரசு, பெண்களை பாதுகாக்கத் தவறியதோடு, அவர்களுடைய உரிமையை மறுத்து திருப்பி அனுப்பியிருக்கிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமலாக்குவதில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு அக்கறை காட்டவில்லை என பழங்குடியின தலைவர் அம்மினி கே. வயநாடு குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 11 பெண்களுடன் அம்மினியும் சபரிமலை செல்ல இருந்தார். ஆனால், கட்டாயப்படுத்தி தனது சபரிமலை பயணத்தை எருமேலி அருகிலேயே முடிக்க அரசு முடக்கிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
“அரசு உண்மையிலேயே உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்க நினைத்திருந்தால், போலீசு துணையுடன் பெண்கள் சபரிமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்கள்” என்கிறார் அம்மினி. “உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்து மூன்று மாதங்கள் ஆகிறது. ஆனாலும், கம்யூனிஸ்ட் அரசு அரசியலமைப்பு ரீதியாகவும் தோற்றுவிட்டது; எங்களின் உரிமை தொடர்பாகவும் தோற்றுவிட்டது” என கடுமையாக சாடியுள்ளார்.
இந்த நிலையில், சபரிமலையில் பெண்களின் உரிமையை தடுத்துக் கொண்டிருக்கும் சங் பரிவாரங்களை எதிர்த்து ஜனவரி 1-ஆம் தேதி அரசு முன்னெடுத்திருக்கும் ‘பெண்கள் சுவர்’ நிகழ்ச்சி எதற்காக நடத்தப்படுகிறது என கேள்வி எழுப்பியுள்ளார் அம்மினி. கேரளத்தின் முற்போக்கு சமூக பாரம்பரியத்தை நினைவு கூறும் விதமாக ‘பெண்கள் சுவர்’ நிகழ்வு ஒருங்கிணைக்கப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் சுமார் 30 லட்சம் பெண்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
“பெண்கள் அதிகாரம் பெறுவது குறித்து அரசு கரிசனம் கொண்டால், பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்வதை அது உறுதிசெய்ய வேண்டும்” என்கிறார் அம்மினி.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘மனிதி’ அமைப்பைச் சேர்ந்த 11 பெண்கள் தங்களுடைய வழிபடும் உரிமையை பெற சபரிமலை சென்றடைந்தனர். சுமார் 100 மீட்டர் தூரம் நடந்து வந்த அவர்களை 500 நபர்களைக் கொண்ட காவி குண்டர்கள் சூழ்ந்து கொண்டு, ஐயப்பன் துதிகளைப் பாடி பயமுறுத்தினர். காவி குண்டர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத பெண்கள், பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் சென்றனர். அப்போது அவர்களை விடாமல் துரத்தியது காவி கும்பல். பாதுகாப்பாக நின்றிருந்த பெண் போலீசாரும் கும்பலுக்கு பயந்து ஓடிவிட்டனர்.
தொடர்ந்த தாக்குதலின் காரணமாக, தங்களுடைய பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு திரும்பியுள்ளனர் பெண்கள். இந்தக் குழுவுக்கு தலைமை தாங்கிய செயல்பாட்டாளர் செல்வி, போலீசார் தங்களை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பியதாக குற்றம் சாட்டியுள்ளார். பேச்சளவில் பாதுகாப்பு தருகிறோம் என சொல்லும் காவல் அதிகாரிகள், நடைமுறையில் காவி குண்டர்களுக்கு பணிந்து பெண்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
தமிழக பெண்களிடம் பாதுகாப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்த போலீசு, காவி குண்டர்களைப் பார்த்ததும் பதுங்கி விட்டது. பெண்கள் தங்களுள்ளாகவே பாதுகாப்பு அரண் அமைத்து குண்டர்களிடமிருந்து பாதுகாத்துக் கொண்டுள்ளனர். அந்த சமயத்தில் மூத்த போலீசு அதிகாரிகள் எவரும் நிகழ்விடத்தில் இல்லை.
போலீசு பெண்களை பாதுகாக்க தவறியிருக்கிறது என்கிற பழங்குடி தலைவர் அம்மினி, எப்படி நூற்றுக்கணக்காக காவி ரவுடிகள் பம்பையில் கூட அனுமதிக்கப்படுகிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
தலித் செயல்பாட்டாளர் ஓ.பி. ரவீந்திரன், சிபிஎம் தலையிலான அரசு, இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். சங்பரிவாரை வளர்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறுகிறார். “உச்சநீதிமன்ற தீர்ப்பை இன்னமும் அமலாக்க முடியவில்லை என்பது அவமானகரமானது” என கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறார் இவர்.
படிக்க:
♦ சபரிமலைத் தீர்ப்பு : எது மத உரிமை ? வழிபடும் உரிமையா தடுக்கும் உரிமையா ? தோழர் மருதையன்
♦ சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? புதிய கலாச்சாரம்
தங்களுடைய பயணம் குறித்தும் பாதுகாப்பு வேண்டியும் முன்னரே கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியிருந்தது மனிதி அமைப்பு. அவர் உறுதி அளித்த பின்னரே சபரிமலை சென்றதாக தெரிவிக்கிறார் செல்வி. “எங்களுக்கு பின்னடைவாக இருந்தாலும் மீண்டும் சபரிமலைக்கு நாங்கள் செல்வோம்” என்கிறார் இவர்.
சபரிமலை சென்ற பெண்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பைக்கூட தராமல் காவி குண்டர்களுடன் கைக்கோர்த்திருக்கிறது கேரள போலீசு. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிக கடுமையான தாக்குதலை எதிர் கொண்டிருக்கிறார்கள் தங்களுடைய உரிமையை நிலைநாட்ட பயணம் சென்ற பெண்கள். தமிழக-கேரள சங்கிகளுக்குள் இருக்கிற ஒற்றுமை தமிழக-கேரள முற்போக்கு இயக்கத்தினரிடம் இல்லை என சமூக ஊடகங்களில் பலர் ஆதங்கப்படுகின்றனர். சபரிமலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்குவதில் தயக்கம் காட்டினால், ஆளும் இடது முன்னணி அரசுக்கு அது வரலாற்று களங்கத்தை தரும்.
தமிழாக்கம்: கலைமதி
நன்றி: ஸ்க்ரால்
இதையும் பாருங்க:
Lol…. சும்மா சொல்ல கூடாது மனிதி என்கிற பெயரில் உலாவும் கேடு கெட்ட கும்பலை செமையா ஓட விட்டாங்க, ஒலிம்பிக்கில் கூட இப்படி ஒரு ஓட்டம் ஓடி இருக்க வாய்ப்பில்லை.ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு Royal salute
ஐயப்ப பக்தாள்களா ? இல்ல ஆர்.எஸ்.எஸ். பக்தாள்களா ?
ஆமா, இந்த ஆர்.எஸ்.எஸ். பக்தாள்களுக்கு ஐயப்பன் கனவுல வந்து சொன்னானா ? இல்லை ஏதாச்சும் எழுதி வச்சிட்டுப் போனானா ? பொம்பளைங்க வந்தா விடாதீங்கோன்னு …
உங்களுக்கு எதுனாச்சும் விவரம் தெரியுமா ரெபெக்கா மேரி ?
அது சரி பொம்பளைங்க கோவிலுக்குப் போனா உங்களுக்கு ஏன் மொளகாப்பொடி போட்ட மாதிரி எரியுது ?
இந்த அக்டிவிஸ்ட் ஆஃபாயில்கள் தான் இங்கு பிரச்சணை. கோவல் பாடலில் கூறியுள்ளதுபடி ஐயப்பனை வைத்து தேர்தலை சந்திக்க கேரள பா.ஜ.க திட்டமிடுகிறது. அதற்கு தோதாக ஏதோ சாகசம் செய்வது போல பயணம் செய்கிறார்கள் அந்த அரைவேக்காடுகள்.
பா.ஜ.க மக்கள் கருத்தை உருவாக்கி போராட்டம் நடத்தி பின்னர் தடுக்கிறார்கள். அநேகமாக கேரள அரசும் அதற்கு எதிராக மக்கள் கருத்தை உருவாக்க தான் பெண்கள் பங்கேற்கும் சுவர் போராட்டத்தை அறிவித்துள்ளது. மக்களிடம் பொது கருத்து உருவாக்காமல் ஏதோ 4 பேர் சேர்ந்து போவாங்களாம் இவங்களுக்கு அனுமதியளிக்க வேண்டுமாம் இல்லை என்றால் ஆர்.எஸ்.எஸ் ஆதராவா?
அக்டிவிஸ்டுகளுக்கு மக்களை சந்திக்க தேவையில்லை தேர்தலில் வெற்றி பெற வேண்டிய தேவையும் இல்லை. சி.பி.எம் அரசு சில்லறை ஐயப்பன் பிரச்சணைக்காக ஆட்சியை இழக்க கூடாது. இந்த அரைவேக்காடுகளினால் பா.ஜ.கவை வளர்த்துவிட்டு வடமாநிலம் போல கேரளா ஆகிவிடகூடாது.
ம.க.இ.க கலைக்குழு பங்கேற்ற ஒரு போராட்டம் லைவ் செய்திருந்தீர்கள் அது போன்று மக்களிடன் பொது கருத்து உருவாக்க போராடுவதுதான் சரி. சும்மா அந்த ஆஃபாயில் போராட்டங்களை நாம் கண்டிக்க வேண்டும்.
1000 பெண்கள் திரண்டு செல்லும் அளவுக்காவது பொது கருத்து உருவாக வேண்டாமா?
சி.பி.எம் அரசு இப்பிரச்சணையை சிறப்பாக கையாளுகிறது. அக்டிவிஸ்டுகள் மக்களிடம் செல்லவும்.
யாருங்க அந்த செல்வி? இவிங்க உ.பி , ம.பியில போய் ஏன் பெண்களுக்காக போராடுவதில்லை. அவர்களுக்கே தெரியும் அங்க போனா அதித்யநாத் ஆளுங்க கொலை கூட பண்ணுவாய்ங்க. உயிருக்கு உத்திரவாதம் இல்லை. கேரளா அப்படியில்ல. எப்படியும் கேரள அரசு தங்களை பாதுகாக்கும்னு தெரியும்.
இந்த கூமுட்டைங்களால் பொதுகருத்தை உருவாக்க முயலும் கேரள முற்போக்காளர்கள், கேரள அரசுக்கு தான் பிரச்சனை. அதில இங்க வந்து கேரள் அரசுக்கு எதிரான பிரச்சாரமும் செய்கிறது இந்தம்மா. கொடுமைடா சரவணா.
இவங்க பெரிய போராளி ஆகுவதற்காக எடுத்த முயற்சியில் கேரள அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு குந்தகம் வந்துவிடக்கூடாது.