ந்திய வங்கித்துறையிடம் இருந்து 2017-18 ஆண்டில் ரூ. 41,167.7 கோடி சூறையாடப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல் கூறுகிறது. மேலும் இது, அதற்கு முந்தைய 2016-17-ம் ஆண்டின் ரூ. 23,933 கோடி மோசடியை விட தற்போதைய மோசடியின் பரிமாணம் 72 % அதிகம் என்று கூறிய ரிசர்வ் வங்கி கடுமையான கண்காணிப்பையும் மீறி இது நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி 2017-18-ம் ஆண்டில் நடந்துள்ள மொத்த வங்கி மோசடிகளின் எண்ணிக்கை 5,917. 2016-17-ம் ஆண்டு நடந்த மோசடிகளின் எண்ணிக்கை 5,076. 2013-14-ம் ஆண்டில் 10,170 கோடி ரூபாய் மதிப்பிலிருந்த மோசடிகள் மோடியின் டிஜிட்டல் யுகத்தில் நான்கு மடங்காகி விட்டது.

2017-18-ம் ஆண்டில், அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள், கணக்கு அறிக்கையில் கொண்டுவராமல் விடுதல், வைப்புக் கணக்கும் மற்றும் இணைய நடவடிக்கைகள்  போன்றவை தொடர்பான மோசடிகள் முன்னிலைக்கு வந்தன. இதில் 2017-18-ம் ஆண்டில் நடந்த இணைய மோசடிகளே அதிகம் என்றும் வங்கிகள் அதில் 109.6 கோடி ரூபாயை இழந்த்ததாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2016-17-ல் நடந்த இணைய மோசடிகளின் எண்ணிக்கை 1,372 அதுவே 2017-18-ல் அதன் எண்ணிக்கை 2,059.

படிக்க:
♦ நீரவ் மோடி – வங்கி மோசடி – ஊழலின் ஊற்றுக்கண் எது ?
♦ ரிசர்வ் வங்கியையும் முதலாளிகளுக்குத் திறந்துவிடக் கதறும் சங்கிகள் !

ரூ. 50 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பு கொண்ட மோசடிகள் 80%-க்கும் அதிகம். ஒரு இலட்சம் ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட மோசடிகளில் 93% பொதுத்துறை வங்கிகளில் நடந்துள்ளன. தனியார் வங்கிகளில் 6% மோசடிகள் மட்டுமே நடந்துள்ளன. தொடர்ந்து நடக்கும் மோசடிகளால் மார்ச், 2018 வரை ரூ. 10 இலட்சத்து 39 ஆயிரம் கோடி, மக்கள் பணம் சுருட்டப்பட்டது.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

இப்படி மோசடியின் பரிமாணம் தாறுமாறாக எகிறியதற்கு நீரவ் மோடியும் மெகுல் சோஸ்கியும் பஞ்சாப் தேசிய வங்கியிலிருந்து 13 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்தது முதன்மையான காரணங்களுள் ஒன்று. “வங்கித்துறையில் 2017-18-ம் ஆண்டில் நடைபெற்ற அதிக அளவு பண மோசடிகளுக்கு நகை வியாபாரத்துறையே முதன்மையான காரணம்” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இம்மோசடிகள் வங்கியின் இடர்செயல்பாட்டு மேலாண்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகி உள்ளதாகவும், மோசடிகளில் 90%-க்கும் மேல் வங்கி கடன் பிரிவிலேயே நடந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய எளிதான இணைய TPE முறையீடுகள் மற்றும் பகிர்தல் கட்டமைப்பு வசதியை உரிய தகவல் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கேற்ப உருவாக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது.

படிக்க:
♦ கிங்பிஷர் ஏர்லைன்ஸ் திவால்:மல்லையா போதைக்கு இந்தியா ஊறுகாயா?
♦ குட்கா கோத்தாரியின் 3695 கோடி ரூபாய் வங்கி மோசடி!

”உலகளாவிய வங்கிகளுக்கிடையேயான நிதிநிலை தொலைத்தொடர்புக்கான குழுமம்” (Society for Worldwide Interbank Financial Telecommunication) சம்பந்தப்பட்ட பஞ்சாப் தேசிய வங்கி மோசடி உட்பட பல்வேறு வழக்குகளை பார்த்த பிறகு, கால வரையறைக்குட்ப்பட்ட பல்வேறு செயல்பாட்டு கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டுமென்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியிருந்தது.

சொத்து வகைப்படுத்தல் மற்றும் வங்கி விதிமுறைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் மோசடி சம்பவங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய ஒய். எச். மாலேகம் (Y H Malegam) தலைமையிலான நிபுணர் குழு ஒன்று 2018 பிப்ரவரி மாதம் உருவாக்கப்பட்டது.

மூன்றாம் தரப்பினரான வழக்குரைஞர்கள், பட்டயக் கணக்காளர்கள், மதிப்பீட்டாளர்கள் மற்றும் திட்ட நிபுணர்கள் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டவர்களது பெயர்களை இந்திய வங்கிகள் கூட்டமைப்பிற்கு வங்கிகள் அனுப்ப வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதிமுறை.

ஆனால் என்ன பயன்? தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறிய மோசடிகள் பற்றிய இந்த விவரங்களை வைத்து யார் மீது யார் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்?

ஓட்டாண்டியாகி கொண்டிருந்த பொதுத்துறை வங்கிகளை ஏழை எளிய மக்களின் சேமிப்புகளை கொண்டு வீங்கச் செய்து முதலாளிகளுக்கு தாரை வார்க்கவே டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டது. யார் மோசடிகள் செய்தார்கள், செய்கிறார்கள், செய்வார்கள் என்ற நதிமூலம் ரிஷிமூலம் அனைத்தும் மைய அரசிற்கோ இந்திய ரிசர்வ் வங்கிக்கோ தெரியாதது அல்ல. முதலாளிகளுக்கு தேவைப்படும் பணத்தை சட்டப் பூர்வமாகக் கொடுக்க முடியாத போது இப்படி சட்ட விரோதமாக கொடுக்கிறார்கள். பிறகு அதை எப்படி வராக்கடன் என்று சட்டபூர்வமாக மாற்றமுடியுமென முயல்கிறார்கள். அதற்கென்று சில நெறிமுறைகளை வகுத்து தடுப்போமென கூறுகிறார்கள். இறுதியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டதுதான்.

 


தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க