மது பிள்ளைகளின் சிந்தனையை அடிமைப்படுத்தும் செல்போன் மற்றும் டி.வி – மோகத்திலிருந்து அவர்களை விடுபடச் செய்ய விளையாட்டுத்தான் ஒரே தீா்வு. இதைப் பற்றிய விழிப்புணர்வை மாணவா்களிடமும், பெற்றோர்களிடமும் ஏற்படுத்த விருத்தாசலம் நகரத்தில் உள்ள அரசு பள்ளி மாணவா்கள் கலந்துகொள்ளும் சதுரங்க பயிற்சி மற்றும் போட்டியினை 23-12-2018 மற்றும் 24-12-2018 ஆகிய நாட்களில் விருத்தாசலம் டேனிஷ் மிஷின் மேல்நிலைப்பள்ளியில் நடத்தினோம்.

சதுரங்கப் போட்டிகளை தேசிய அளவில் தோ்ச்சி பெற்ற நடுவா் திரு. பிரேம்குமார் குழுவினா் நடத்தினா். முதல் நாள் செஸ் பயிற்சியில் 270 போ் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். அடுத்தநாள் சதுரங்க போட்டியில் -270 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஒருபிரிவினரும். 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒர பிரிவாகவும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக செஸ் போட்டி காலை முதல் மாலை வரை நடத்தப்பட்டது. மாணவர்கள் மிகுந்த ஆா்வமுடன் போட்டியில் பங்குபெற்றனா். பெற்றோர்களும் திரளாக வந்திருந்தனா்.

போட்டி முடிந்து வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிக்கும் விழா சங்கதலைவா் வை.வெங்கடேசன் தலைமையிலும், சங்கத்தின் சட்ட ஆலோசகா் சி. ராஜீ முன்னிலையிலும் நடைபெற்றது.

சங்க செயலாளா் வ. அன்பழகன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக வருகை தந்த மாவட்ட கல்வி அலுவலா் திரு. செல்வகுமார், பேராசிரியா் முத்துக்குமரன் ஆகியோர் சதுரங்கபோட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினா். ஆறு முதல் பரிசுகளும், ஆறு – இரண்டாம் பரிசுகளும், ஆறு மூன்றாம் பரிசுகளும் மற்றும் 28 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

மேலும் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவியா்களுக்கும் போட்டியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் ஆசிரியா்களும், வழக்குறைஞா்களும், சங்க நிர்வாகிகளும் பெற்றோரும் திரளாக கலந்து கொண்டனா்.

சதுரங்கப் போட்டியில் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டு சகோதர மனப்பான்மையுடன் பழகி விளையாடியதன் மூலம் மாணவ, மாணவிகளிடையே விளையாட்டில் ஈடுபட ஒரு திருப்பு முனைக்கான உணா்வுகள் ஏற்பட்டுள்ளது. அதுபோலவே பெற்றோர்களும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் விளையாடுவதைப் பார்த்து தங்கள் பிள்ளைகளை மேலும் ஊக்குவிக்க ஆா்வம் காட்டினா்.

தகவல் :
வை.வெங்கடேசன், தலைவா்.
மாணவா்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்.
விருத்தாசலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க