நான் என்னுடைய முதுகலை படிப்பை ஸ்காட்லாந்தில் படித்துக் கொண்டிருந்த போது பல்வேறு நாட்டு மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சில பாகிஸ்தானிய நபர்களைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.

ஒரு சமயம் என்னுடைய பிறந்தநாள் அன்று பக்கத்து ஊருக்குத் தனியே சென்று கொண்டிருந்தேன். அப்போது என் அம்மாவிடம் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது ‘birthday’ என்று அடிக்கடி சொல்வதை மட்டும் புரிந்துகொண்ட அந்த பாகிஸ்தானிய ஓட்டுனர், நான் அலைபேசியை அணைத்த உடன் ‘Happy Birthday’ என்றார்.

ஒருவிதமான வியப்பும் மகிழ்ச்சியும் தோன்ற இருவரும் நான் இறங்கும் இடம் வரை பேசிவந்தோம். அப்போது நான் இந்தியாவில் இருந்து வந்தது குறித்து அவருக்கு எந்தவித கவலையும் இல்லை. மாறாக, பிறந்தநாள் பரிசு என்று கூறி என்னை இலவசமாக இறக்கிவிட்டுப் போய்விட்டார். அந்த நபருக்கும் தெரியும் என்னை இனிமேல் சந்திக்கப் போவதே இல்லை என்று.

அதே பிறந்தநாளில் வட இந்தியர்களின் நண்பராக இருந்த ஒரு பாகிஸ்தானியருக்கு என் அறிமுகமே கிடையாது. ஆனால் வட இந்திய நண்பர்களோடு வந்து இயல்பாய் கேக் வெட்டி அதை ஊட்டிவிட்டுப் போனார். அந்நாளில் அழைப்பும் அறிமுகமும் கூட இல்லாமல் வந்து என்னுடன் நேரம் செலவழித்த அந்த நண்பருக்கு எந்தவித பகையுணர்ச்சியும் இன்னொரு நாட்டின் மீது இருந்ததாகத் தெரியவில்லை. ஸ்காட்லாந்தில் இருந்த வரை எப்போதும் புன்னகையோடு கடந்து சென்றவரிடம் இந்தியா திரும்பிய பிறகு நான் பேசியதேயில்லை.

படிக்க:
போர் ஆயுதத் தரகர்களுக்கானது ! புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டிக்கும் பாகிஸ்தான் இளைஞர்கள் !
♦ இந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் ?

என்னுடன் எப்போதும் நெருக்கமாக இருந்தார் ஒரு பாகிஸ்தான் பெண் தோழி. நாங்கள் பல பயணங்களை ஒன்றாக மேற்கொண்டோம். அவரிடம் அன்பிற்கு குறைவாய் நான் ஒன்றை கண்டதேயில்லை. அவர் இந்தியாவிற்கு பயணம் செய்ய எப்போதும் ஆவலுடன் இருப்பார். என்னால் உங்கள் வீட்டிற்கு எப்போதுமே வரமுடியாது என்ற அவர் குரல் சற்று ஏங்கித்தான் இருந்தது. அவரை நாடு திரும்பிய பிறகு நான் ஒருமுறை கூட சந்திக்கவேயில்லை.

தினமும் ஒரு பூங்காவைக் கடந்து நான் கல்லூரிக்கு செல்வது வழக்கம். அவ்வப்போது அந்த இருக்கைகளில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். ஓருமுறை அந்த இருக்கையின் இன்னொரு ஓரத்தில் அமர்ந்தவருக்கு ஏறத்தாழ என் வயதிருக்கும். இருவரும் இயல்பாய்ப் புன்னைகைத்து பேசத் தொடங்கினோம். நான் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகக் கூறினேன். அவரின் தாத்தா தேச பிரிவினையின் போது தன் சொத்துகளை எல்லாம் இந்தியாவில் இழந்து பாகிஸ்தான் சென்றவர். அவரின் தந்தை பின்னர் கிளாஸ்கோவிற்கு குடிபெயர்ந்திருந்தார். இப்போது இவர் சட்டப்படி பிரித்தானிய குடிமகன். தனக்கான வேலையைத் தேடிக் கொண்டிருப்பதாக சொன்னார். அவர் குரலில் அவர் பாகிஸ்தான் மீதும் இந்தியா மீதும் ஒரே அன்பு கொண்டவர் என்று மட்டும் தெரிந்தது. எது தாய்நாடு என்ற கேள்விக்கு அவரின் பதில் நம்முடைய வரைபட அளவைக் கடந்து பரந்து கிடந்தது. சிறிய உரையாடலுக்குப் பின்னர் இருவரும் கையசைத்து விடைபெற்றோம். அதற்கு முன்னரும் பின்னரும் அவரை ஒரு முறை கூட நான் பார்க்கவே இல்லை.

மக்களுக்கும் போருக்கும் எப்போதும் தொடர்பில்லை. அவர்கள் அன்பை மட்டுமே கடத்துகிறார்கள். பெருநிறுவனங்களுக்கும் போருக்கும் நிறைய தொடர்பு உண்டு. அதிகாரப் பசிக்கும் பண வெறிக்கும் நாம் தான் இரையாக வீசப்படுகிறோம்.

தீவிரவாதம் போர் என்று கேட்கும் போதெல்லாம் அமைதியை மட்டும் விரும்புவோம். எப்போதும் அன்பை மட்டும் செலுத்துவோம். போர் வேண்டுமானால் மனிதர்களுக்கிடையில் நடக்கலாம். ஆனால் அந்த இடத்தில் வாழும் புல் பூடு புழு செடி பறவை விலங்கு என யாவற்றிற்கும் அதே இடத்தில் நிலைத்து வாழ உரிமை உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது . மனிதனால் மட்டும் மனிதனுக்காக மட்டும் தான் பூமி என்ற அகந்தையின் உச்சம் போர். போர் அற்ற பூவுலகு காண அமைதியையே விரும்புவோம். அன்பே ஆயுதம்.

#SayNoToWar

நன்றி :  கௌதமி சுப்ரமணியம்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

25 மறுமொழிகள்

 1. இஸ்லாமிய அடிப்படைவாதம் ஒழியாத வரையில் இந்திய பாகிஸ்தான் சுமுக உறவு என்பது நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஒன்று… பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாதிகளும் இந்தியாவை ஏற்று கொள்ள வேண்டும் அவர்கள் இன்னமும் பழைய காலம் போல் டெல்லி செங்கோட்டையில் இஸ்லாமிய கோடி பறக்க விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் அமைதிக்கு வழியே கிடையாது, இன்று காஷ்மீர் என்பவர்கள் நாளை டெல்லி என்று சொல்வார்கள்.

  இந்தியா பாகிஸ்தான் சகோதரத்துவம் எல்லாம் சும்மா பொழுதுபோக்கு தான் இஸ்லாமிய மதவெறியும், அடிப்படைவாதம் மறையாத வரையில் இது சாத்தியமே இல்லை.

 2. பாகிஸ்தானிகள் இன்னமும் Ghazwa-E-Hind என்ற எண்ணத்தில் இருக்கும் வரையில் இந்திய துணைக்கண்டத்தில் அமைதிக்கு வழியே இல்லை. இதை மாற்ற கூடிய சக்தி இஸ்லாமிய மத தலைவர்களுக்கு தான் உள்ளது ஆனால் அவர்களும் இதே எண்ணத்தில் இருக்கும் போது அமைதிக்கு வாய்ப்பு இல்லை.

 3. Mr. Manikandan,

  What would be your answer if a Pakistani said the same by saying Hindu Fundamentalism instead of Muslim fundamentalism ?

  We expect some rationalistic approach from people like you.

  “மக்களுக்கும் போருக்கும் எப்போதும் தொடர்பில்லை. அவர்கள் அன்பை மட்டுமே கடத்துகிறார்கள். பெருநிறுவனங்களுக்கும் போருக்கும் நிறைய தொடர்பு உண்டு. அதிகாரப் பசிக்கும் பண வெறிக்கும் நாம் தான் இரையாக வீசப்படுகிறோம்.”

  • You are wrong.

   முதலில் பிரச்சனையை தெரிந்து கொண்டு பேசுங்கள், ஹுரியட் அமைப்பின் தலைவர் கிலானி Outlook பத்திரிகையில் கொடுத்த போட்டியிலேயே காஷ்மீர் பிரச்னை அரசியல் பிரச்னை அல்ல அது மத பிரச்னை தான் என்று தெளிவாக சொல்லியிருக்கிறார், அவரின் வாதப்படி மதசார்பின்மை என்பது ஹிந்து கொள்கை அது இஸ்லாத்திற்கு எதிரானது, பாக்கிஸ்தான் அரசியல் சட்டம் இஸ்லாம் அடிப்படையில் உள்ளது அதனால் நாங்கள் பாகிஸ்தானோடு சேர விரும்புகிறோம் என்று சொல்லியிருக்கிறார்… காஷ்மீரில் இஸ்லாமிய மதவெறி பாகிஸ்தானால் பிரிவினைக்காக திட்டமிட்டு வளர்க்கப்பட்ட ஒன்று.

   அதேபோல் காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் இன்றும் பலர் டெல்லி செங்கோட்டையில் இஸ்லாமிய கொடி ஏற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறார்கள், அது பற்றி கேட்டதற்கு கிலானி பதில் அளிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்.

   இஸ்லாமியர்களால் இன்றை மத அடிப்படைவாத சூழ்நிலையில் அவர்களால் யாரோடும் ஒன்றி வாழ முடியாது. அவர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் இஸ்லாமிய சட்டம் வேண்டும் என்பார்கள், அவர்கள் சிறுபான்மையாக வாழும் இடங்களில் மதசார்பற்ற சட்டம் வேண்டும் என்பார்கள்.

   எல்லோருடனும் கூடி வாழ வேண்டும் என்ற சிந்தனை இஸ்லாமியர்களிடம் வளராத வரையில் காஷ்மீரில் மட்டும் அல்ல உலகின் பல பகுதிகளிலும் வன்முறை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

   Live and Let Live

   • “மக்களுக்கும் போருக்கும் எப்போதும் தொடர்பில்லை. அவர்கள் அன்பை மட்டுமே கடத்துகிறார்கள். பெருநிறுவனங்களுக்கும் போருக்கும் நிறைய தொடர்பு உண்டு. அதிகாரப் பசிக்கும் பண வெறிக்கும் நாம் தான் இரையாக வீசப்படுகிறோம்.”

    What is your reflection for the above mentioned quotation ?

    • அது உங்களை போன்றவர்கள் நம்ப விரும்பும் விஷயம். F16 விமானத்தில் இருந்து குத்தித்த பாக்கிஸ்தான் விமானியை தவறுதலாக இந்திய விமானி என்று அடித்தே கொன்று இருக்கிறார்கள் பாக்கிஸ்தான் பகுதி மக்கள். இதை செய்தது சாதாரண மக்கள் தான்.

     இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஊறி இருக்கும் பாக்கிஸ்தான் மக்களிடம் நட்பு சகோதரத்துவத்தை எதிர்பார்ப்பது வீண் வேலை.

  • அதேபோல் இஸ்லாமிய நாடுகளில் வாழும் சிறுபான்மையினர் என்றுமே இரண்டாம் தர குடிமக்களாக தான் நடத்தப்படுவார்கள். இந்தியாவில் ஒரு இஸ்லாமியருக்கு மக்கள் ஆதரவு இருந்தால் அவரால் இந்திய பிரதமர் ஆக முடியும் (ஜனாதிபதியாக பல இஸ்லாமியர்கள் இருந்து இருக்கிறார்கள்) அரசியல் சட்டத்தில் எந்த தடையும் கிடையாது.

   ஆனால் பாகிஸ்தானில் ஒரு ஹிந்து அந்த நாட்டின் உயர் பதவிகளுக்கு வர முடியாது அவர்கள் நாட்டின் அரசியல் சட்டம் அதை தடுக்கிறது, ஹிந்துக்களுக்கு அரசியல் சட்டப்படியே பாகிஸ்தானில் உரிமைகள் மறுக்கப்படுகிறது. இது பாகிஸ்தானில் மட்டும் அல்ல, பல இஸ்லாமிய நாடுகளிலும் இது தான் நிலைமை.

  • இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் மாற்று மதங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வர வேண்டும்… அது வந்தால் தான் உலகில் உண்மையான அமைதி நிலவும் இல்லையென்றால் காஷ்மீர் குண்டு வெடிப்பை போல் பல தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும்..

   • “இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் மாற்று மதங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வர வேண்டும்…”
    Are you saying there is no Hindu Fundamentalists here in India ?

    • ஹிந்து அடிப்படைவாதம் என்ற விஷயத்தை நான் நம்பவில்லை அதற்கு காரணங்கள் பல… இதோ ஒரு உதாரணம்

     மோகன் லாசரஸ் என்ற கிரிஸ்துவர் ஹிந்து கடவுளை சாத்தான்கள் என்றும் ஹிந்து கோவில்களை சாத்தானின் இருப்பிடம் என்றும் வெளிப்படையாக பேசி கொண்டு இருக்கிறார். பாகிஸ்தானில் அவர்கள் கடவுளை பற்றி இது போல் பேசியிருந்தால் என்ன நடந்து இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்…

     ஆனால் இந்தியாவில் மோகன் லாசரஸ் (வினவு கூட்டங்களும்) எந்த தடையும் இல்லாமல் ஹிந்து மதத்திற்கு எதிரான அவதூறுகளை பரப்பி கொண்டு இருக்கிறார்.

     ஹிந்து மதத்தின் அடிப்படையே கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியில் தொடங்குகிறது, மஹாபாரதத்தில் கூட கிருஷ்ணரை கடவுள் இல்லை அவர் ஒரு குறளி வித்தை காட்டும் சாதாரண மனிதன் என்று துரியோதனன் சபையில் கிருஷ்ணரின் முன்பே சொல்வார்கள்.

     கடவுள் முன்பே கடவுளை மறுத்து பேச ஹிந்து மதத்தில் முடியும், கடவுள் இல்லை என்று சொல்பவரையும் நாத்திகர் என்று சொல்லி ஹிந்து மதம் ஏற்கிறது.

     ஹிந்து மதத்தின் பெயரால் அடிப்படைவாதம் வாய்ப்பே இல்லை. ஆனால் இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மத்தில் அப்படி இல்லை.

     • That’s why Hindu fundamentalists killing human beings for buying cows and having beef ?

      There is a say in Tamil ” Nirvaanikazhin ulakaththil Kovanam kattiyavan paithiyakkaaran ”

      I do not know in which world are you living in

      • இல்லாத ஒன்றை இருப்பதாக வினவு போன்றவர்கள் பரப்பிய பொய் பிரச்சாரம் இது.

       சரி உங்களின் வாதபடியே வருவோம், இந்தியாவில் இது வரையில் பசு சம்பந்தமாக 2010 முதல் 2017 வரையில் மொத்தம் 63 வன்முறை சம்பவங்கள் நடந்து இருக்கிறது (ஆதாரம் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி), அதில் 28 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள் (அதில் 24 பேர் இஸ்லாமியர்கள்). இந்தியாவில் ஹிந்துக்கள் மக்கள் தொகை 100 கோடிக்கும் மேல் ஆனால் வெறும் 63 வன்முறை சம்பவங்கள் மட்டுமே நடந்து இருக்கிறது.

       இஸ்லாமிய நாடுகளிலும் உலக அளவிலும் மத சம்பந்தமாக நடந்த வன்முறை சம்பவங்களை கணக்கில் கொண்டால் இந்த 63 வன்முறைகள் ஒரு விஷயமே இல்லை.

       இதே காலகட்டத்தில் பாகிஸ்தானில் பல ஆயிரம் பேர் மதத்தின் பெயரால் ஷியா, ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

       நான் இந்த 28 பேர் மரணத்தையும் ஆதரிக்கவில்லை, இந்தியாவில் மதவாதம் வளர்வதை நான் விரும்பவில்லை ஆனால் அதே சமயம் வேண்டும் என்றே ஹிந்துக்களின் உணர்வை புண்படுத்தும் செயல்களை நான் ஆதரிக்கவில்லை (வினவு, மோகன் லாசரஸ், இஸ்லாமிய அமைப்புகளை போல்)

       ஹிந்து மதவாதம் என்பது வினவு போன்ற கம்யூனிஸ்ட் முற்றும் கிறிஸ்துவ அமைப்புகளால் பொய்யாக பரப்பப்படும் ஒரு பிம்பம் அதை நான் நம்பவில்லை ஏற்கவும் இல்லை.

    • ஹிந்து அடிப்படைவாதம் என்பது கம்யூனிஸ்ட்கள் கிறிஸ்துவர்கள் இஸ்லாமியர்களால் திட்டமிட்டு வளர்க்கபட்ட ஒரு பொய் பிம்பம்.

     இன்னமும் என்னால் கவுரி லங்கேஷ் கொலை எல்லாம் ஹிந்து மதத்தின் பெயரால் நடந்தது என்பதை நம்ப முடியவில்லை அதில் எதாவுது கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கூட்டு சதி இருக்கலாம் என்றே நினைக்கிறேன். நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு தான் உண்மை தெரியும்.

     அப்படி அந்த கொலை ஹிந்து மதத்தின் பெயரால் நடந்து இருந்தால் உண்மையிலேயே மனம் வருந்துவேன் வேதனை அடைவேன்.

      • உங்களுக்கு ஒரு சவால், இந்தியாவில் ஹிந்து (சைவம் வைணவம்) மதத்தை பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் போர் தொடுத்தார்கள் என்று ஒரே ஒரு சம்பவத்தை சொல்லுங்கள் பார்ப்போம் ?

       இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதத்தின் பெயரால் அந்த மதங்களை பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல கோடி பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதை உங்களால் மறுக்க முடியுமா ?

       ஹிந்து அடிப்படைவாதம் என்பது எல்லாம் கிறிஸ்துவ இஸ்லாமிய கம்யூனிஸ்ட்கள் பொய் பிரச்சாரம் மட்டுமே அதை நான் நம்பவில்லை.

       • “உங்களுக்கு ஒரு சவால், இந்தியாவில் ஹிந்து (சைவம் வைணவம்) மதத்தை பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் போர் தொடுத்தார்கள் என்று ஒரே ஒரு சம்பவத்தை சொல்லுங்கள் பார்ப்போம் ?”

        So… You do not know our history (Specially saivam, Vainavam).

        Try to learn Mr. Manikandan

        • நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்டேன் அதற்கு பதில் சொல்லாமல் என்னை history geography படி என்று சொல்கிறீர்கள்… ஹிந்து மதத்தின் (சைவம் வைணவம்) பெயரால் இந்தியாவில் ஒரு போர் கூட நடந்தது இல்லை.

         80 சதவித்தற்கு மேல் ஒரு மத மக்கள் வாழும் நாடுகளில் இந்தியா மட்டுமே உலகின் ஒரே உண்மையான மதசார்பற்ற நாடு… அதற்கு காரணம் ஹிந்து மதம் தான், அதனால் ஹிந்து மதத்தை பற்றி இல்லாத பொய்களையும் அவதூறுகளையும் பரப்ப வேண்டாம்.

         பிரேசில் மெக்ஸிகோ போன்ற கிறிஸ்துவ நாடுகளில் மதசார்பற்ற அரசியல் சட்டம் இருந்தாலும் அந்த நாடுகளில் வேறு மதங்களே கிடையாது (கிறிஸ்துவர்கள் அந்த மதங்களையும் மொழிகளையும் முற்றிலும் அழித்து விட்டார்கள்), வேறு மதமே இல்லாத ஒரு நாட்டில் அரசியல் சட்டம் மட்டும் மதசார்போடு இருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன ?

         இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் அனைத்துமே மதச்சார்பு உள்ள நாடுகளே அவர்களால் இஸ்லாமிய சட்டத்தை தவிர வேறு அரசியல் சட்டத்தில் வாழ முடியாது. காஷ்மீர் பிரச்சனையின் மூல காரணமும் இது தான், இஸ்லாமிய மதவெறி தான் அங்கே குண்டுகளை வைத்து கொண்டு இருக்கிறது.

         • When I am telling you to learn some history that’s mean there is something related to this matter. Samana, Saiva, Visna religious sects were fighting each others for a long time in our history. That is y I said to refer to the history. Any way I am not going to waste my time with someone who is desperately trying to hide behind blaming other religions for everything.

          • நான் சைவம் வைணவம் சமணம் பற்றிய வரலாறு தெரியாமல் பேசவில்லை… கிறிஸ்துவமும் இஸ்லாமும் தங்கள் மதங்களை கத்தி முனையில் பரப்பியது என்றால் இந்தியாவில் அதற்கு நேர் எதிர்… இந்தியாவில் சைவ வைணவ சமண மதத்தை சேர்ந்தவர்கள் தங்கள் மதங்களின் உயர்வுகளை பற்றிய விவாதங்களில் ஈடுபட்டார்கள், அந்த விவாத்தங்களில் வெற்றி பெற்றவரின் மதத்தை தோல்வி அடைந்தவர்கள் ஏற்பார்கள். இந்த மாதிரியான விவாதங்கள் அரசவையில் நடந்து இருக்கிறது.

           இந்த விவாதங்களில் உயிரை பணயம் வைத்தவர்கள் சமணர்கள், தாங்கள் இந்த விவாதங்களில் தோல்வி அடைந்தால் தங்கள் உயிரை விடுகிறோம் என்று சொல்லி உயிரை பணயம் வைத்தார்கள். இதற்கு ஆதாரமாக தமிழகத்தில் சமணர்களின் கழுவேற்றம் உள்ளது, திருஞானசம்பந்தருக்கும் சமணர்களும் நடந்த விவாதத்தில் சமணர்கள் தோல்வி அடைந்தனர், தோல்வி அடைந்த அவர்கள் சைவத்தை ஏற்க முடியாமல் தங்களின் சபதபடி கழுவேறினார்கள் (வரலாற்று ஆய்வுபடி இந்த காழுவேற்றம் நடக்கவில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள்)

           ஹிந்து மதத்தை பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தியாவில் எந்த ஒரு போரும் நடந்தது இல்லை பொது இடங்களிலும் அரசவையில் வாதங்கள் நடந்தன.

           இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் நினைத்து பார்க்க முடியாதளவுக்கு இந்தியா நாகரிகத்தில் வளர்ந்த தேசமாகவே இருந்து இருக்கிறது.

           இந்தியாவை பற்றிய வரலாற்றை முழுமையாக தெரிந்து கொண்டு பேசுங்கள்.

 4. “சைவத்தை ஏற்க முடியாமல் தங்களின் சபதபடி கழுவேறினார்கள் ”

  Ha ha ha haaa.
  You are simply forgetting every recent events that were happened and still happening. For example:- during India Pakistan independence from British

  Base on your argument only religious wars are be considered here ?
  Do not play Ostrich’s dance here. nobody is going to believe here.

  “இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் நினைத்து பார்க்க முடியாதளவுக்கு இந்தியா வளர்ந்த தேசமாகவே இருந்து இருக்கிறது.”

  What is India’s civilization achieved now ? Killing peoples for having beef ? That’s we call barbaric act. What about caste system ?

  “நாகரிகத்தில்”

  Then why all educated peoples are fleeing to Europe and North America ?

  I am not an Ostrich

  • இதற்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன் 100 கோடி ஹிந்து மக்கள் வாழும் நாட்டில் வெறும் 63 வன்முறை சம்பங்கள் மட்டுமே நடந்து இருக்கிறது, ஒரு வருட சராசரி கணக்கு என்றால் 10 க்கும் குறைவே… அதனால் இந்த 63 சம்பவங்களை வைத்து ஹிந்து அடிப்படைவாதம் என்று சொல்வதை ஏற்கவே முடியாது… இதை aberration என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

   மேலும் இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையின் போது நடந்த வன்முறைகளுக்கு முதலில் பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் இஸ்லாமியர்கள், அடுத்து பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்ட ஆங்கிலேயர்கள், வன்முறையை பாகிஸ்தானில் முதலில் ஆரம்பித்தவர்கள் இஸ்லாமியர்களே (இது பற்றி பாகிஸ்தானின் Dawn பத்திரிகையில் ஒரு வரலாற்று ஆய்வு கட்டுரை வந்து இருக்கிறது).

   குஜராத் வன்முறை கூட முதலில் இஸ்லாமியர்கள் ரயிலில் சென்ற ஹிந்துக்களை தீ வைத்து கொன்றதால் தான் வன்முறை வெடித்தது.

   காஷ்மீரில் கூட ஹிந்துக்களை இன அழிப்பு செய்தது இஸ்லாமியர்களே, இன்றும் கூட போலியாக அந்த சம்பவத்திற்கு வருந்துவதாக காஷ்மீர் இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள் ஆனால் மீண்டும் ஹிந்துக்கள் காஷ்மீரில் குடியேறுவதை எதிர்க்கிறார்கள், ஹிந்துக்கள் குடியேறினால் கொலை செய்வோம் என்று காஷ்மீர் தீவிரவாதிகள் மிரட்டி கொண்டு இருக்கிறார்கள்.

  • உங்களை போன்றவர்களும் வினவு போன்றவர்களும் இல்லாத ஹிந்து அடிப்படைவாதத்தை இருப்பதாக சொல்லமுடியுமே தவிர உங்களால் நிஜத்தை பேச முடியாது.

   உண்மையில் சொல்ல போனால் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் மாற்று மதத்தினரை ஏற்கும் சகிப்பு தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் உலகம் முழுவதுமே தீவிரவாதம் மூலம் மக்கள் மடிந்து கொண்டு தான் இருப்பார்கள்.

 5. “உங்களை போன்றவர்களும் வினவு போன்றவர்களும் இல்லாத ஹிந்து அடிப்படைவாதத்தை இருப்பதாக சொல்லமுடியுமே தவிர உங்களால் நிஜத்தை பேச முடியா”

  May be Nathuram Gotsey is better than people like you. Because he never played Ostrich dance.

  • You are unable to accept the truth… You people are seeing Hinduism through the prism of Christianity and Islam… Islam and Christianity by nature itself fundamentalist religion they don’t accept non believers, through the world they killed millions of people because they are non believers.

   Hindu religion has not done anything like that… Even though Hindu religion is much older than Islam and Christianity but you can’t show a single war waged in the name of propagating Hindu religion (NOT EVEN SINGLE WAR)

   So calling Hindu fundamentalism is WRONG and UNACCEPTABLE.

 6. ” Islam and Christianity by nature itself fundamentalist religion they don’t accept non believers”

  You should read Bible and Quran first.

  “So calling Hindu fundamentalism is WRONG and UNACCEPTABLE.”

  (Note: Did you note that I never ever blame any religion here ? I only said about the people who pay more attention to the religion than Humanity)

  Sorry no point of wasting my time here. Sooooooooo I am escaped………………..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க