பொள்ளாச்சியில் 273 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கிரிமினல் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும், இதற்கு துணை நின்ற அதிமுக எம்எல்ஏ பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினார்கள்.

தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கடலூர்.

♦ ♦ ♦

பொள்ளாச்சி பாலியல் வெறியர்களை தூக்கிலிட வேண்டும் எனவும் அரசு அவர்களை தண்டிக்காது நாம்தான் தண்டிக்க வேண்டும் எனவும் நேற்று (12.03.19) செவ்வாய் கிழமை திருச்சி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாயிலில் முழக்கமிட்டு பின் பேரணியாகச் சென்றனர். போலீசின்  தடையை மீறி நடைபெற்ற பேரணி மற்றும் சாலைமறியல் போராட்டத்தில் பங்கேற்ற 80 க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசு கைது செய்தது.

தகவல்:
அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள்,
திருச்சி.

♦ ♦ ♦

“பொள்ளாச்சி: மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை ! அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு !” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் தமிழகம் தழுவிய அளவில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர்.

சென்னை:

காஞ்சிபுரம்:

கோவை:

வீட்டில் முடங்கியது போதும்! வீதிக்கு வா!!ம.க.இ.க. கலைக்குழு தோழர் லதா :

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் கிரிமினல்களை பாதுகாக்கும் போலீசு கும்பலை அம்பலப்படுத்தும் முழக்கங்களை எழுப்பினர்.

பாதுகாக்குது ! பாதுகாக்குது !
அதிமுக பொறுக்கிகளை
போலீசும் அரசும் பாதுகாக்குது !

எங்கே போனார் கவர்னரு?
எங்கே போனார் எச்சை ராஜா?

இங்கு பணக்காரனுக்கு ஒரு சட்டம்!
அதிகாரிக்கு ஒரு சட்டம்!

கிடைக்காதய்யா கிடைக்காது!
நமக்கு நீதி கிடைக்காது!

நடமாட விடாதே! நடமாட விடாதே!
குற்றவாளிகளை நடமாட விடாதே!
தமிழகமே திரளட்டும்!
குற்றவாளிகளை தண்டிக்கட்டும்.

தகவல்:
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

♦ ♦ ♦

“பொள்ளாச்சி பாலியல் காம வெறியர்களை, போலீசும் நீதி மன்றமும் தண்டிக்காது, மாணவர்கள் இளைஞர்கள் நாம்தான் வீதியில் இறங்கி தண்டிக்க வேண்டும்” என திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி வாயிலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் பிருத்திவ், தோழர் சுரேஷ் மற்றும் சில மாணவர்கள் பிரச்சாரம் செய்தனர். மதியம் 1 மணியளவில் கல்லூரி வாயிலில் ஆர்ப்பாட்டம் என்றும் அறிவித்தனர்.

இதே சமயத்தில் அருகில் உள்ள சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். போலீசு தடையை மீறி பேரணியாக சென்று 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைதாகியுள்ளனர். மாணவர்களின் போராட்டத்தைக் கண்டு மிரண்டு  போன போலீசு, போராட்டங்கள் பரவாமல் தடுக்க அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கியது போலீசு. அன்று ஈ.வெ.ரா.  கல்லூரி முன்பு சில மாணவர்களுடன் போரட்டம் குறித்து தோழர் பிருத்திவ் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த உளவுப்பிரிவு போலீசு, உடனே போலிசு ஜீப்-ஐ அழைத்து வந்தது. அதிலிருந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட போலீசு, தடதடவென வந்து தோழரை சுற்றி வளைத்து வேகமாக இழுத்து ஜீப்-பில் ஏற்றினர்.

அருகில் நின்ற மாணவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டத்தில் நின்று கொண்டிருந்தனர். அச்சமயத்தில் கல்லூரி முடிந்து வந்த தோழர் சுரேஷ் ஓடி வந்து போலீசிடம், “யார் சார் நீங்க ? யாரை எங்க கூட்டிட்டு போறீங்க ?” என்று வேகமாக யுடர்ன் அடித்து நின்ற போலீசிடம் கேட்டார்.

“என்னையவே நீ யாருனு கேட்குறியா?” எனக் கூறி அவரையும் வாகனத்தில் ஏற்றிச் சென்றது. செல்லும் வழியில் அந்த போலீசு, “என்னையவே யாருனு கேட்கிறீயா? வா, இன்னைக்கு உன்னை ரிமான்ட் பண்ணி, கல்லூரியே படிக்க விடாம பண்றேன்” என்றார். “ ரிமான்ட்டுக்கெல்லாம் நாங்க பயப்படல.. முதலில் எதுக்கு எங்களை இழுத்துட்டு போறீங்கன்னு சொல்லுங்க” என கேள்வி கேட்டனர் தோழர்கள்.

தோழர்கள் இருவரையும் ஸ்டேசனில் இருத்தி வைத்துவிட்டு, அவ்வப்போது சிலர் வந்து மிரட்டியுள்ளனர். தோழர்களும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். பின்னர் அப்பகுதி வழக்கறிஞர்கள் வந்து புமாஇமு தோழர்களை அழைத்துச் சென்றனர். இந்நிலையில் தோழர்களைக் கைது செய்ததைக் கண்டித்து மாணவர்கள் கல்லூரியின் உள்ளே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

படிக்க:
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
கரூர் : காவிக் கும்பலை கதறவிட்ட மக்கள் அதிகாரம் டீ – சர்ட் !

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவெனில், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என நாம் போராடினால் நம்மை இந்த போலீசும் உளவு பிரிவும் அதிகாரத்தில் இருப்பவர்களும் குற்றவாளிகளாக மாற்றுகிறார்கள். எனவே குற்றவாளிகளை பாதுகாப்பதும் இந்த அரசுதான் அதற்காக நீதி கேட்டு போராடுபவர்களை குற்றவாளிகளாக்குவதும் கொல்வதும் இந்த அரசுதான்.

இப்போது சொல்லுங்கள்…
பொள்ளாச்சி சம்பவத்தில் யார் குற்றவாளி ? காம வெறியர்களா ? காப்பாற்றும் அரசா ?

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி. 99431 76246.

தொகுப்பு:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க