பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி

கார்ப்பரேட்டுகள் தங்களைக் காத்துக் கொள்ள ஜனநாயகத்தை மறுக்கின்றனர். அதற்கு இயற்கையாகவே அவர்கள் மோடியைத் தேர்ந்தெடுக்கின்றனர். ’எதிர்த்து நில்’ திருச்சி மாநாட்டில் தோழர் மருதையன் ஆற்றிய உரை காணொளி !

க்கள் அதிகாரம் அமைப்பின் ‘எதிர்த்து நில்’ மாநாடு கடந்த பிப்ரவரி 23, 2019 அன்று திருச்சியில் நடைபெற்றது. இம்மாநாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலர் தோழர் மருதையன் பங்கேற்று உரையாற்றினார். அதில் பேசுகையில்,

“மோடியின் ஐந்தாண்டுகால ஆட்சியில் அனைத்து ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாநாட்டில் காவி கார்ப்பரேட் பாசிசம் என்ற தலைப்பு வைத்ததற்கு காவி இந்தியக் கொடியில் இருக்கும் நிறம் என்பதால், அதற்கு ஆட்சேபம் தெரிவிப்பதாகத் தெரிவித்தது திருச்சி மாநகர போலீசு. சிறுமி ஆசிபா-வைக் கொன்ற குற்றவாளியை விடுதலை செய்ய தேசியக் கொடியை ஏந்திக் கொண்டு பாஜக ஊர்வலம் போனபோது, யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லையே ஏன் ?

படிக்க:
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை குறித்த ஃபேஸ்புக் பதிவுகள் !

பாசிசம் இன்று அதன் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. நோட்டீஸ் கொடுக்க அனுமதி வாங்கினாயா எனக் கேட்கிறது போலீசு. மோடியை விமர்சிக்கக் கூடாதாம்.. ஜனநாயக நாட்டில் பிரதமரை விமர்சிக்கக் கூடாது என்று கூறுகிறது பாஜக. கட்ந்த 2014-ம் ஆண்டில் மோடியை சர்வ வல்லமைமிக்கவராகக் காட்டின ஊடகங்கள்.

விவசாயிகளின் விளை பொருளுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்வதாக வாக்குறுதி கொடுத்த மோடி, ஆட்சிக்கு வந்தபின்னர் அதனை செய்யவில்லை. அவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்று கூறியது மோடி அரசு. தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்க நீம் தேர்வுகள், எங்கும் நீடிக்கும் வேலைவாய்ப்பின்மை, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, மருத்துவப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு என கல்வியில் மீளும் பார்ப்பனியம் – இதுதான் பாசிச மோடி அரசின் சாதனைகள்.

மக்களை இழிநிலைக்குத் தள்ளியிருக்கும் மோடிதான், அதானிக்காக ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டேட் வங்கியின் தலைமை அதிகாரியை அழைத்துச் சென்று அவருக்கு சுரங்கம் வாங்கித் தருகிறார். அனில் அம்பானிக்காக முறைகேடான முறையில் ரஃபேல் விமானம் வாங்கியதில் மிகப்பெரும் ஊழல் செய்திருக்கிறார். அனில் அகர்வாலிடம் முறைகேடாக பணம் பெற்றுக் கொண்டு தூத்துக்குடி போராட்டத்தை ஒடுக்கியிருக்கிறார்.

மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் முடக்கப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர். கவுரி லங்கேஷ் உள்ளிட்ட முற்போக்காளர்கள் கொலை முதல் தற்போது நடைபெறும் சமூகச் செயற்பாட்டாளர்கள் கைது வரை பாசிசம் தலைவிரித்து ஆடுகிறது. ஒடுக்கப்படும் மக்களைக் கொன்றொழிக்கும் அதே வேலையில் அவர்களுக்காக குரல் கொடுக்கும் ஜனநாயகவாதிகளை மிரட்டி முடக்கப்பார்க்கிறது, மோடி தலைமையிலான கார்ப்பரேட் காவி பாசிசக் கும்பல் ! இதனை முறியடிக்க நாம் வீதியில் இறங்க வேண்டும்.” என்று பேசினார். (முழு உரையைக் காண)

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க