ங்கிக் கடன்களைக் கட்ட முடியாமலும் திவாலாகிப் போகும் நிலையிலும் இருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை நரேந்திர மோடி அரசு பொதுத்துறை வங்கிகளின் தலையில் கட்டிய அதேசமயத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடன்களை விரைவாக வசூலிக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்து பல தனியார் முதலாளிகளின் வயிற்றில் பாலை வார்த்தது, உச்சநீதி மன்றம்.

2,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கிவிட்டு, கடன் தவணைகளை முறையாகக் கட்டத் தவறிவரும் நிறுவனங்களுக்கு, தவணை தவறிய நாளில் இருந்து 180 நாட்கள் அவகாசம் கொடுத்து, வங்கிகள் அக்கடன் தவணைகளை வசூலிக்க வேண்டும். அக்கால அவகாசத்திற்குள் நிலுவையிலுள்ள தவணைகளைக் கட்டத் தவறும் நிறுவனங்களைப் புதிய திவால் சட்டத்தின் கீழ் வங்கிகள் ஏலத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை. இந்தச் சுற்றறிக்கைக்கு எதிராகத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட பல கார்ப்பரேட் குழுமங்கள் உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில்தான் வங்கிக் கடன்களைக் கட்டாமல் இழுத்தடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

பொதுத்துறை வங்கிகள் 70 நிறுவனங்களுக்குக் கொடுத்திருந்த 3.8 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கடன்களை வசூலிப்பதற்கு எடுத்துவந்த நடவடிக்கைகளை, இத்தீர்ப்பால் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த 3.8 இலட்சம் கோடி ரூபாய் கடனில் 2 இலட்சம் கோடி ரூபாய் கடன் 34 தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையாகும்.

“ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கைக்கு மைய அரசின் ஒப்புதல் பெறப்படவில்லை. வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனதற்கு இந்த 70 நிறுவனங்களுக்கும் வெவ்வேறு விதமான காரணங்கள், சூழ்நிலைகள் உள்ளன. குறிப்பாக, தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தமது கடன்களைச் செலுத்த முடியாமல் போனதற்கு அரசின் கொள்கை முடிவுகள் உள்ளிட்டுப் பல காரணங்கள் உள்ளன. இவ்வாறிருக்கையில் பொத்தாம்பொதுவாக சுற்றறிக்கை வெளியிட ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் கிடையாது” எனக் குறிப்பிட்டு அச்சுற்றறிக்கையை ரத்து செய்திருக்கிறது, உச்சநீதி மன்றம்.

படிக்க :
♦ ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் ? | காணொளி
♦ அதானிக்கு ரூ.100 கோடி அள்ளிக் கொடுக்கும் மோடியின் சதி அம்பலம் !

இந்தச் சுற்றறிக்கையை வெளியிட்டதற்காகவும், வாராக் கடன்களை மறுசீரமைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சலுகை காட்டக்கூடாதென உத்தரவிட்டதற்காவும்தான் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேலுக்கு நெருக்கடி கொடுத்து, அவரைத் தாமே பதவி விலக வைத்தது, மோடி அரசு.

இப்படிப்பட்ட கார்ப்பரேட் கைக்கூலி அரசிடமிருந்து இந்தச் சுற்றறிக்கைக்கு அனுமதி பெறச் சொல்வது என்பது, காமுகனிடம் சிக்கிக்கொண்ட இளம்பெண் அவனிடம் கெஞ்சிக் கூத்தாடித் தப்பிக்க யோசனை சொல்வதற்கு ஒப்பானது.

உர்ஜித் படேல்

பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட அரசின் கொள்கை முடிவுகளால் நாடெங்கும் பல்லாயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் அழிந்துபோகும்படி கைவிடப்படுவதைக் கண்டும் காணாதது போல நடந்துவரும் நீதியரசர்கள், அரசின் கொள்கை முடிவுகளால் கார்ப்பரேட் நிறுவனங்கள் துன்பப்படக்கூடாது எனக் கண்ணீர் உகுக்கிறார்கள்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வறட்சி பாதித்திருக்கும் சூழ்நிலையையும் மீறி, விவசாயக் கடன்களையும், கல்விக் கடன்களையும் வசூலிக்க முயலும் வங்கி அதிகாரிகளின் அடாவடித்தனத்தைத் தடுத்து நிறுத்துங்கள் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன்.

அந்தக் கோரிக்கையைக் காது கொடுத்துக் கேட்கக்கூட நாதியில்லை. ஆனால், மின் உற்பத்தி நிறு வனங்களின் கடினமான சூழ்நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும் என வங்கிகளுக்குப் பரிந்துரைக்கிறார்கள் நீதிபதிகள்.

முதலாளிகளுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்காமல்தான் கடன்களை வசூலிக்க வேண்டும் என்றால், வாராக் கடன்களைத் தள்ளுபடி செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இதனைத்தான் மோடி அரசு விரும்புகிறது. இதனை நோக்கித்தான் வங்கிகளைத் தள்ளிவிட்டிருக்கிறது, உச்சநீதி மன்றம்.

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க