பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனினின் 150-வது பிறந்த நாளை உயர்த்திப் பிடிக்கும் வகையில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக 22.04.2019 அன்று காலை 6 மணி முதல் மாவட்ட கிளை/இணைப்புச் சங்க ஆலை வாயில்களில் ஆசான் லெனின் படம் வைத்து ஆலைவாயில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
கும்மிடிப்பூண்டி SRF, மெட்ராஸ் ஹைட்ராலிக் ஹோஸ், கோவிந்தராஜ் முதலியார் அண்டு சன்ஸ் ஆகிய ஆலைகளின் வாயில்களில் மாவட்ட செயலாளர் தோழர் விகேந்தர், ஆசான் லெனின் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
லைட்விண்ட் ஸ்ரீராம் ஆலை வாயிலில் மாவட்ட இணைச்செயலாளர் தோழர் ராஜேஷ் கொடியேற்றி உரையாற்றினார்.
கெமின் ஆலைவாயிலில் மாவட்ட துணைத்தலைவர் தோழர் அரிநாதன் உரையாற்றினார்.
படிக்க:
♦ வீழா திமிர் எங்கள் விளாதிமிர் ! | துரை சண்முகம்
♦ தமிழகமெங்கும் தோழர் லெனின் பிறந்த நாள் விழா !
ஓரன் ஹைட்ரோ கார்பன் ஆலை வாயிலில் மாநில இணைச்செயலாளர் தோழர் ம.சி சுதேஷ்குமார் படம் திறந்து உரையாற்றினார்.
ஹெரென்க்னெக்ஸ்ட் இந்தியா பிரைவேட் லிட், ஆலை வாயிலில் மாநில துணைத்தலைவர் தோழர் இரா. சதீஷ் கொடியேற்றி உரையாற்றினார்.
மணலி SRF ஆலை வாயிலில் அந்தக் கிளையின் இணைச்செயலாளர் தோழர் வெங்கடேசன் தலைமையில் ஆசான் லெனின் படம் வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மேலும் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் பந்தல் அமைத்து மாவட்ட செயலர் தோழர் விகேந்தர் தலைமையில் லெனின் படத்திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் கலந்துகொண்டு ஆசானின் உருவப்படத்தை திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றினார் . இறுதியாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் மக்கள் மத்தியில்;
- வளர்ச்சி என்ற பெயரில் தரகு முதலாளிகள் – ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக நாட்டை சூறையாடுவதை முறியடிப்போம் !
- சாதி – மத – இன வேறுபாடுகளைக் களைவோம், வர்க்கமாய் ஒன்றிணைவோம்!
- ஆசான் லெனின் காட்டிய வழியில் மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம் !
- முதலாளிகளின் லாப வெறிக்காக கட்டவிழ்த்து விடப்படும் பாசிச அடக்குமுறைகளுக்கு எதிராக ஓரணியில் திரள்வோம் !
– ஆகிய முழக்கங்களை விளக்கும் விதமாக உரை நிகழ்த்தப்பட்டது.
*****
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பாக இணைப்பு சங்கமான டி.ஐ மெட்டல் பார்மிங் ஆலையில் காலை 7.30 மணி அளவில் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 150 வது பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆசான் லெனின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. கூட்டத்தை டி.ஐ. மெட்டல் பார்மிங் சங்கத்தின் தலைவர் தோழர் மகேஷ் குமார் தலைமையேற்று நடத்தினார்.
சிறப்புரை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில பொருளாளர், சங்கத்தின் சிறப்பு தலைவருமான தோழர் பா.விஜயகுமார் உரையாற்றினார். இதில் இன்று தொழிலாளி வர்க்கம் சந்திக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் மேலும் இன்றைய சமூகத்தில் நடக்கும் பல்வேறு அடக்குமுறைகள் இவற்றை விளக்கினார்.
மேலும் லெனின் ரஷ்யாவில் பாட்டாளிகள் தலைமையில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சோஷலிச சமூகத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தினார். அதேபோல் நாம் இங்கு ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கி புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரள்வோம், என்பதை விளக்கினார்.
இறுதியாக சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் கனகராஜ் நன்றி உரையாற்றினார். கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் பகுதி மக்களையும் தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து, தோழர் லெனின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் தோழர் லெனின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கப்பட்டது.
மேலும் தொழிலாளர்கள் அவர்களுடைய அனுபவத்திலிருந்து தோழர் லெனின் இன்று ஏன் நமக்கு அவசியம் என்பதை உரையாற்றினார்கள். திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தலைவர் தோழர் மா.சரவணன் அவர்கள் உரையாற்றும்பொழுது இன்றைய சமூக கட்டமைப்புகள் முழுவதும் தோற்றுப் போய் மக்களை ஆள அருகதை இழந்து போய் இருக்கின்றது. இதை மாற்ற வேண்டும் என்றால் நாம் மக்கள் அதிகாரத்தை கையில் எடுப்பதன் மூலம் தான் நமக்கு விடிவு என்பதை விளக்கி பேசினார். கூட்டத்தில் பகுதிவாழ் உழைக்கும் மக்களும் தொழிலாளர்களும் 30 பேர் வரை கலந்து கொண்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,
தொடர்புக்கு : 94444 61480