சென்னை உயர்நீதிமன்றத்தில் இளம் வழக்குரைஞர்களான ச.மீனாட்சி உள்ளிட்ட 10 வழக்கறிஞர்கள், பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பொதுநல வழக்கு (W.P.11638/2019) தாக்கல் செய்துள்ளனர்.

மேற்படி வழக்கில்..

(i) மாநில உள்துறை செயலாளர், DIG தகுதியில் உள்ள பெண் அதிகாரியை தலைவராகக் கொண்டு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பிலும், DELHI DOMESTIC WOMEN FORUM வழக்கின் தீர்ப்பின் வழிகாட்டுதலிலும் விசாரணை நடத்தவும்,

(ii) மாநில பெண்கள் ஆணையம் மாவட்ட தலைநகரங்களில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில், பெண்கள் வழக்கறிஞர்கள், மனநல நிபுணர்கள், சமூக சேவகர்கள் கொண்ட PERMANENT COMPLAINT COMMITTEE  அமைத்து “விசாகா தீர்ப்பின் வழிகாட்டுதல் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை & சட்ட உதவி வழங்கவும்,

(iii) மாநில தலைமைச் செயலாளர் பொள்ளாச்சி பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு பாதுக்காக்கவும், நம்பிக்கை ஏற்படுத்தவும் ”SPECIAL MECHANISM / AGENCY”  உருவாக்கி உத்தரவிடக் கோரியிருந்தனர்.

மேலும் இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இடைக்கால உத்தரவாக

(i) சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த பெண் வழக்கறிஞர் மற்றும் ஓய்வு பெற்ற பெண் காவல் அதிகாரி தலைமையில் FACT FINDING TEAM அமைத்து, பொள்ளாச்சி குற்றச்செயலின் பிண்ணனியினை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும்,

(ii) சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த பெண் வழக்கறிஞர் மற்றும் பெண் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், பெண் வழக்கறிஞர்களைக் கொண்ட COMPLAINT COMMITTEE-ஐ அமைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட உதவி வழங்கவும்,

(iii) பாதிக்கப்பட்ட பெண்ணில் பெயர் விபரங்களை பகிரங்கப்படுத்திய காவல் கண்காணிப்பாளர் திரு.பாண்டியராஜன் IPS, காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திர பிரசாத் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களை இழிவாக சித்தரித்து செய்தி வெளியிட்ட மாலைமலர் பத்திரிக்கை ஆசிரியர் ஆகியோர் மீது இ.த.ச பிரிவுகள் 228A மற்றும் 509ன் கீழ் குற்றவழக்கு பதிவு செய்யவும் கோரியிருந்தனர்.

இவ்வழக்கு 27.04.2019 அன்று மாண்புமிகு தலைமை நீதிபதி அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்களின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் திரு.பாலன் ஹரிதாஸ் ஆஜராகி வாதிட்டார். தனது வாதுரையில்,

பெண் 17.02.2019 புகார் கொடுத்தும், காவல்துறை 24.02.2019 வரை வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்துள்ளது.

24.02.2019 வழக்கு பதிவு செய்யப்பட்டதும், வெளியிருந்த குற்றவாளிகள் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரனை தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

இதன் மீதும் கூட்டுச்சதி (120b) கொலைமுயற்சி (307) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யாமல் சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததால், குற்றாவாளிகள் பிணையில் வெளிவர உடந்தையாக இருந்துள்ளனர்.

01.03.2019 அன்று காவல் கண்காணிப்பாளர் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் விபரங்களை வெளியிட்டடதால், பாதிக்கப்பட்ட பெண் மன உளைச்சலுக்கு உள்ளாகியதுடன், வீடியோவில் இருக்கும் பாதிக்கப்பட்ட பெண்களே புகார் கொடுக்க முன்வராத நிலை உள்ளது. இது மிக மோசமான குற்றச்செயல் என்று வாதிட்டார்.

படிக்க:
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ! புதிய கலாச்சாரம் ஏப்ரல் மின்னிதழ்
சாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ

வழக்கினை எற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுடன் 07.06.2019-க்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், இவ்வழக்கில் காவல் கண்காணிப்பாளர் திரு.பாண்டியராஜன் IPS, காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திர பிரசாத் மற்றும் மாலைமலர் பத்திரிகை ஆசிரியருக்கு Private Notice வழங்க அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

– சு.ஜிம்ராஜ் மில்ட்டன்,
மனுதாரர்களுடைய வழக்கறிஞர்.


தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க