ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ! உண்மையா ? பொய்யா ?

பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாகவும், காங்கிரஸ் இருப்பதாகவும் பல்வேறு பேய்க்கதைகள் உலவும் நிலையில், இவ்விவகாரத்தின் பின்னணியை அம்பலப்படுத்துகிறார் ராஜு !

ச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது அவரிடம் பணிபுரிந்த முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருக்கிறார். இதனை விசாரிக்க அமர்த்தப்பட்ட மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வும், அதிவேகமாக விசாரித்துவிட்டு கோகோய் குற்றமற்றவர் என அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

ஒரு வழக்கறிஞர் இதன் பின்னணியில் தலைமை நீதிபதிக்கு எதிராக ஒரு பெரும் சதி நடப்பதாக வழக்குப் பதிவு செய்திருந்தார். விசாரணையில் அவரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இது போக, புகார் அளித்த அந்தப் பெண் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இருந்து வெளியே வந்ததை ‘யாரோ’ பார்த்ததாக  வாட்சப் செய்திகள் ஒரு புறமும், உச்சநீதிமன்ற நீதிபதியை ’மிரட்டி’ வைப்பதற்காகவே, அப்பெண் காங்கிரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என்பது போன்ற சந்தேகங்கள் மற்றொரு புறமும் எழுப்பப் படுகின்றன. ஜனநாயகத்தை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருப்பதாகக் கூறிக் கொள்ளும் பாஜக-வும், காங்கிரசும் இவ்விவகாரம் குறித்து வாய் கூட திறக்கவில்லை. .

எனில் இந்தச் சம்பவங்களின் பின்னணியில் உள்ள உண்மை என்ன ? அந்தப் பெண் பொய் சொல்கிறாரா ? ரஞ்சன் கோகாய் மிரட்டப்படுகிறாரா ? விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராஜு.

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க