“தமிழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் இலவசமாய் வழங்க உதவுங்கள் !”என வாசகர்களுக்குக் கோரிக்கை வைத்திருந்தோம். அதனை ஏற்று, ஜெயகர் என்ற வாசகர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் வழங்கக் கோரி பணம் செலுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு ஏற்கனவே புதிய கலாச்சாரம் நூல்களை வழங்கி இருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் மற்றும் இதயத்தை மீட்பது எப்படி ? என்ற இரண்டு வெளியீடுகள் 100 எண்ணங்களை மீண்டும் மாணவர்கள் மத்தியில் விநியோகித்தோம்.

தேர்வு நேரம் என்பதால் முன்னர் நூல் வாங்கிய மாணவர்கள் பலரையும் சந்திக்க முடியவில்லை. கடந்த முறை நூல் வாங்கிய மாணவர்கள் சிலர் அந்தப் புத்தகங்கள் தனியார் பிடியில் உள்ள கல்வி நிலையங்களை பற்றி புரிந்து கொள்ள முடிந்தது என்றும், அரசே எப்படி திட்டமிட்டு ஆபாச இணையதளங்களை அனுமதிக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது என்று கூறினர். இந்த முறை அம்மாணவர்கள் தாங்களாகவே நூல்களை ஆர்வமாக வாங்கிச் சென்று வகுப்பு மாணவர்களுக்குக் கொடுத்தனர்.

இம்முறை வெளியீடு வாங்கிய ஆய்வு மாணவர் ஒருவர் நூலின் தலைப்புகளே படிக்கத் தூண்டும் வகையில் உள்ளது என்றும், கண்டிப்பாக படிப்பதாகவும் கூறினார்.

முதுகலை மாணவர்கள் சிலர், “நல்ல முயற்சி.. கண்டிப்பாக படிக்க வேண்டிய விசயம்தான், இப்பொழுது படிக்க வேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது. சரியான தருணத்தில் இது போன்ற விசயங்களை எங்களிடம் சேர்த்துள்ளீர்கள்” என்றும் கூறினர்.

நீங்களும் உங்கள் பங்களிப்பாக புதிய கலாச்சாரம் வெளியீடுகளை மாணவர்களுக்கு வழங்குங்கள். நீங்கள் விரும்பிய கல்லூரிகளை தெரிவு செய்தும் பணம் அனுப்பலாம். கீழே உள்ள இணைப்பில் முழு விவரங்கள் உள்ளன. ஆதரவு தாருங்கள் !

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க