• மது ஒழிப்பு போராளி நந்தினி கைது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 345(1)-க்கு விரோதமானது!
  • சட்டவிரோத காவலில் உள்ள நந்தினி, ஆனந்தனை உடனே விடுதலை செய்க!

பத்திரிகைச் செய்தி

டந்த 27-06-2019  அன்று சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தால் மது ஒழிப்பு போராட்டக்காரர்கள் நந்தினி, ஆனந்தன் ஆகியோர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். நந்தினி, ஆனந்தன் மீது இதச.228,186,189 – பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் நீதித்துறை நடுவர் அவர்கள் STC.2857/2014- வழக்கில் விசாரணை நடத்தும்போது சாட்சி மணிகண்டனிடம்,  மது உணவுப் பொருளா? போதைப் பொருளா? என நந்தினி கேட்டது வழக்கிற்குத் தொடர்பில்லாதது, கேட்க வேண்டாம் என நீதித்துறை நடுவர் தடுத்தும் கேளாமல், தொடர்ந்து அதே கேள்வியைக் கேட்டதாகவும், உடனே ஆனந்தன் நீதிமன்றமும், மது விற்பனைக்கு உடந்தை என குற்றம் சாட்டியதாகவும் – இது நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் என இருவரையும் கைது செய்து, பிணை உரிமை குறித்து விளக்கியதாகவும், அவர்கள் பிணையில் செல்ல மறுத்துவிட்டதாகவும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

பின்பு 28.06.2019 அன்று பிணையதாரர்களிடம்  இனிமேல்  நந்தினியும், ஆனந்தனும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என பிரமாணப் பத்திரம் கேட்டு அவர்கள் மறுத்ததால் பிணையம் திருப்பப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்.

நந்தினி கைது தொடர்பான சட்டம் மற்றும் நடைமுறை :

SECTION 228 IPC – Whoever intentionally offers any insult, or causes any interruption to any public servant, while such public servant is sitting in any stage of a judicial proceeding, shall be punished with simple imprisonment for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both.

இதச பிரிவு 228 – நீதிமன்றச் செயல் நடவடிக்கையின்போது பொதுப் பணியாளரை உள்நோக்கத்துடன் அவமதித்தல் அல்லது குறுக்கிடுதல், இதச 228-ன் கீழான வழக்கை நடத்த வேண்டிய முறை பற்றி  Section 345 in The Code Of Criminal Procedure, 1973 விளக்குகிறது.

  1. Procedure in certain cases of contempt.

(1) When any such offence as is described in section 175, section 178, section 179, section 180 or section 228 of the Indian Penal Code (45 of 1860 ), is committed in the view or presence of any Civil, Criminal or Revenue Court, the Court may cause the offender to be detained in custody and may, at any time before the rising of the Court on the same day, take cognizance of the offence and, after giving the offender a reasonable opportunity of showing cause why he should not be punished under this section, sentence the offender to fine not exceeding two hundred rupees, and, in default of payment of fine, to simple imprisonment for a term which may extend to one month, unless such fine be sooner paid.

(2) In every such case the Court shall record the facts constituting the offence, with the statement (if any) made by the offender, as well as the finding and sentence.

(3) If the offence is under section 228 of the Indian Penal Code (45 of 1860 ), the record shall show the nature and stage of the judicial proceeding in which the Court interrupted or insulted was sitting, and the nature of the interruption or insult.

பிணையில் வெளிவந்துள்ள நந்தினி மற்றும் ஆனந்தன்.

இதன் படி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கும் நபர் மீது குற்றவியல் நீதித்துறை  நடுவர் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

எனவே நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கும் நபர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 345(1) ல் கூறியுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றியே குற்றவியல் நடுவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய தண்டனைச் சட்டத்தில் கண்டுள்ள 175,178,179,180,220,228 ஆகிய பிரிவுகளின் கீழ் ஒரு குற்றச் செயல் நடைபெற்றால் அந்த குற்றம் நடந்த அதே நாளில், அச்செயலை புரிந்த நபருக்கு தகுந்த கால அவகாசம் வழங்கி அவருடைய பதிலை கேட்ட பின்பு, உரிய காரணங்களை விளக்கி அதே நாளில் விடுதலை செய்தோ அல்லது ரூ.200/- அபராதம் விதித்தோ தீர்ப்பளிக்க வேண்டும்.

படிக்க:
ஆதார் மேனியா : ஆதார் இல்லாமல் சாகக் கூட முடியாதா ?
கமண்டலும் மண்டலும் இணைந்த பா.ஜ.க.வின் சாதி அரசியல் !

இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் அது இயற்கை நீதிக்கு முரணானதாக கருதப்படும், ஒட்டு மொத்த வழக்கும் ரத்து செய்யப்படும் என கடந்த 2011-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் ரஜினிகாந்தி – எதிர் -திருமகள் (CRL.O.P.4003 OF 2008)  வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.

ஆனால் நந்தினி வழக்கில் குற்றவியல் நடைமுறைச் சட்டமும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பும் பின்பற்றப்படவில்லை. எனவே நந்தினி – ஆனந்தன் நீதிமன்றக் காவல் சட்டவிரோதமானது (judicial custody is illegal). 09.07.2019-ல் நந்தினி – ஆனந்தன் மீதான நீதிமன்றக் காவலை நீட்டிக்கக் கூடாது, உடனே விடுதலை செய்ய வேண்டும்.

பின் குறிப்பு : நேற்று 09-07-2019 பிற்பகலில் நந்தினி – ஆனந்தன் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை. 98653 48163.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க