மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ! செய்தி – படங்கள் – காணொளி

பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இப்போராட்டமானது தமிழகத்தில் கருத்துரிமையை பெறுவதற்கான முதல் கட்ட நிகழ்வாக அமைந்தது.

சட்டமன்றம் முற்றுகை ! கருத்துரிமையை நசுக்கும் போலீசு ராஜ்ஜியத்திற்கு எதிரான போராட்டம் !

மிழகத்தில் இன்று அறிவிக்கப்படாத போலீஸ் ஆட்சிதான் நடந்து வருகிறது. எது ஜனநாயகம்? எது கருத்துச் சுதந்திரம் என்பதை உளவுப் பிரிவு, கியூ பிரிவு போலீசுதான் முடிவு செய்கிறது. ஜனநாயக உரிமை பறிப்பு என்பதும், சட்டவிரோத போலீசு ஆட்சி என்பதும் தமிழகத்தில் நிறுவனமயமாகிவிட்டது. இதற்கு நீதிமன்றத்திலும் தீர்வு இல்லை, என்ற நிலைதான் நீடிக்கிறது.

போலீசைக் கேள்வி கேட்காத நீதிமன்றம், போராடுவோரின் பின்னணியில் யார் இருக்கிறார் என்று கேட்கிறது. இந்த அரசை பாசிசமயமாக்குவதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைத்தான் நாம் முதலாவதாக கேட்க வேண்டி இருக்கிறது.

அந்த வகையில் போலீசு ஆட்சியை நடத்திவரும் எடப்பாடி அரசைக் கண்டித்து 17.7.2019 அன்று சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

மக்கள் அதிகாரம் தலைமைக்குழு உறுப்பினர் வெற்றிவேல் செழியன் இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார். மேலும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் பார்வேந்தன், மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன், இளந்தமிழகம் இயக்கத்தின் தோழர் செந்தில், புரட்சிகர இளைஞர் முன்னணியின் தோழர் சீராளன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலச் செயலாளர் தோழர் மருதையன் ஆகியோர் உரையாற்றினர்.

சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் :

தோழர் மருதையன் உரை :

தோழர் இராஜு உரை :

இறுதியில் உரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் இராஜூ “இப்போராட்டம் ஒரு எச்சரிக்கை, இனியும் கருத்துரிமையை நசுக்கினால் போராடும் உரிமையை ஒடுக்கினால் சட்ட மன்ற முறுகைப் போராட்டம் இங்கிருந்து தொடங்காது, சட்டமன்றத்திலேயே தொடங்கும்” என்று எச்சரித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள் “என் அப்பா மீது 20 பொய் வழக்குகள்! என் மீது எப்போது வழக்கு?”என்பது போன்ற வாசகங்களை ஏந்திச்சென்றது ஊடகவியலாளர்களையும் மக்களையும் சிந்திக்க வைக்கும் வித்த்தில் இருந்தது. அமைப்புத் தலைவர்களின் இரண்டு மணி நேர உரைக்குப் பின்னர் பேரணியாக சென்றவர்களை போலீசு தடுத்து நிறுத்திக் கைது செய்தது. பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த முற்றுகைப் போராட்டமானது தமிழகத்தில் கருத்துரிமையை பெறுவதற்கான முதல் கட்ட நிகழ்வாக இருந்தது.

படிக்க:
♦ சட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் ! | Live Streaming
♦ மக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு !

கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரையும் சிந்தாதரிப்பேட்டை சமூகநல கூடத்தில் வைத்திருந்தது போலீசு. அங்கும் தோழர்கள் உரை, பாடல் என உற்சாகத்துடன் காணப்பட்டனர். பின்னர் அவர்கள் அன்று மாலை விடுவிக்கப்பட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

தொடர்புக்கு : 99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க