ந்திய ஊடகங்களில் சாதியின் தாக்கம் குறித்த புள்ளிவிவரம் ஒன்றில், மொத்தமுள்ள 121 செய்தி அறை மேலாண்மை பதவிகளில் 106 பதவிகளை உயர்சாதியினர் ஆக்கிரமித்திருப்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ளவற்றில் பட்டியல் சாதியினரோ, பழங்குடிகளோ ஒருவர்கூட இல்லை.

ஆக்ஃபார்ம் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பும் நியூஸ் லாண்ட்ரி என்ற இணைய ஊடகமும் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், ஊடக விவாதங்களை நடத்தும் நான்கில் மூன்று தொகுப்பாளர்கள் உயர்சாதியினர் என்றும் இவர்களே 70% பிரைம் டைம் விவாதங்களை நடத்துகின்றனர் எனவும் இவர்கள் நடத்தும் விவாதங்களில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்களும் உயர்சாதியினராகவே உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

“இந்தியாவின் பரந்துபட்ட ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவுகள், ஊடக தளங்களிலும்,  பொதுக்கருத்தை வடிவமைக்கும் விவாதங்களிலும் அணுக முடியாத நிலையில் உள்ளதும் அவர்களை , இல்லாமல் செய்கிறது” என ‘நம்முடைய கதைகளை யார் சொல்கிறார்கள்: இந்திய செய்தி அறைகளில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரதிநித்துவம்’ என தலைப்பிட்ட அந்த அறிக்கை கூறுகிறது.

தொலைக்காட்சிகளில் விவாத தொகுப்பாளர்களும் விவாதங்களில் பங்கேற்பாளர்களும் உயர்சாதியினராக இருக்க, செய்தி இணையதளங்களில் பெயருடன் எழுதப்பட்டும் 72% கட்டுரைகள் உயர்சாதியினரால் எழுதப்படுகின்றன.

சாதி தொடர்பான விசயங்களிலும்கூட பாதிக்கும் மேற்பட்ட தொகுப்பாளர்களும் எழுத்தாளர்களும் உயர்சாதியினரே உள்ளனர். இந்தி செய்தித்தாளான அமர் உஜாலா-வில் சாதி குறித்து எழுதுபவர்கள் அனைவரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களே.

படிக்க:
தமிழ் எழுத்துக்களில் கூட நால் வர்ண சாதிப் பிரிவினை !
♦ அர்னாப் – மாலனை பாகிஸ்தானுடன் போருக்கு அனுப்புங்கள் : சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை !

நாட்டின் மக்கள்தொகை மற்றும் சமூகத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் செய்தி அறைகளை பன்முகப்படுத்த, பரந்துபட்ட சமூக அமைப்பு முழுவதிலிருந்து பத்திரிகையாளர்களை அடையாளம் கண்டு, பயிற்றுவிக்க வேண்டும் என அறிக்கையின் ஆசிரியர்கள் பரிந்துரைக்கின்றனர். பலர் தங்களின் பன்முகத்தன்மையற்ற நிலையை ஒப்புக்கொண்டாலும், அதிக பிரதிநிதித்துவத்திற்கு, சிறிய அளவிலான முயற்சிகளை மட்டுமே மேற்கொள்கின்றனர். உண்மையில், இந்த ஆய்வில் ஈடுபட்ட பெரும்பான்மையினர் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டக்கூடியதே.

பெரும்பாலான ஆங்கில -இந்தி ஊடகங்கள் மோடியின் துதி பாடிகளாக இருப்பதையும், இந்துத்துவ பெரும்பான்மை கருத்தை பொது சமூகத்தில் பரப்புவதையும் மேற்கண்ட ஆய்வு உறுதிபடுத்துகிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வினவு செய்திப் பிரிவு
அனிதா
நன்றி : ஸ்க்ரால்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க