ணக்கம் நாம் இப்போது டெங்கு காய்ச்சலை பற்றி பார்ப்போம். டெங்கு என்றால் என்னவென்றால்? ஒரு வைரஸ் கிருமி. அந்தக் கிருமி நம் உடலுக்குள் சென்று ஏற்படுத்தும் காய்ச்சல் சம்பந்தமான வியாதி தான் டெங்கு. இது கொசுவின் மூலம் பரப்பப்படுகிறது. கொசு அந்த கிருமியை நம் உடலுக்குள் செலுத்துகிறது. அதனால் ஏற்படுவது தான் டெங்கு காய்ச்சல்.

நமக்கு சாதாரணமாக காய்ச்சல் ஏற்பட்டால் அது ஒரு நாள், இரண்டு நாள் அல்லது நான்கு நாட்களுக்குள் குணமாகி விடுகிறது அல்லவா? அப்படியும் இல்லை என்றால் ஒரு பாராசிட்டமால் மாத்திரை உட்கொண்டால் குணமாகி விடுகிறது அல்லவா. அது எல்லாமே வைரஸ் கிருமியால் உண்டாகும் காய்ச்சல் தான். அது எப்படி தன்னால் சரி ஆகிறது என்றால். நம் உடலே அந்த வைரஸ் கிருமியை அழித்து விடுகிறது. அந்த கிருமி நம் உடலுக்குள் இருக்கும் வரை காய்ச்சலானது இருக்கும் பிறகு மாத்திரை உட்கொண்டபின் குணமாகும். அதேபோல் நம்மில் பலரும் இந்த டெங்கு கிருமியால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அது நாம் பேராசிட்டிரமால் மாத்திரையை உட்கொண்ட பின் குணமாகியும் இருக்கலாம். அது டெங்கு கிருமி தான் என்பதை தெரியாமலேயே இந்த செயலானது நடந்திருக்கும்.

இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்? டெங்கு கிருமி என்றால் குணப்படுத்த முடியாத ஒரு பெரிய பாதிப்பு கிடையாது. நம்மில் பலருக்கும் அந்த கிருமியின் தாக்குதல் ஏற்பட்டு நாம் அதிலிருந்து குணமாகி இருக்கலாம்.

அப்படி என்றால் இந்த பிரச்சனை யாருக்கு ஏற்படும். இந்த பிரச்சனை யாருக்கு வரும்.. வராது.. என்று நம்மால் கூற முடியாது. இது எப்படி என்றால் இந்தக் காய்ச்சல் ஏற்பட்டால் மிகவும் அதிக வெப்ப நிலை நம் உடலில் ஏற்படும், சிலருக்கு தொடர்ச்சியாக வாந்தி இருக்கும், கை கால் மூட்டுகளில் அதிகமாக வலி ஏற்படும். இப்படி பிரச்சனைகளோடு சேர்ந்த காய்ச்சலாக அது இருக்கும். பொதுவாக மூன்று, நான்கு நாட்களில் காய்ச்சலானது குணமாகிவிடும். எப்படி என்றால் நம் உடலானது அந்த கிருமியை அழித்துவிடும். காய்ச்சலும் அதனால், சரியாகிவிடும். இந்தக் காய்ச்சல் குணமாகிய பிறகு தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.

சாதாரண வைரஸ் கிருமியினால் உண்டாகும் காய்ச்சலின் போது, இரண்டு மூன்று நாட்கள் குழந்தைகள் சோர்வாக இருக்கும். ஆனால், காய்ச்சல் குணமாகிய பின், குழந்தை சுறுசுறுப்பாக மாறிவிடும் சாப்பிட ஆரம்பிக்கும், ஓட ஆரம்பிக்கும் இயல்பாக விளையாட பழகிக் கொள்ளும். இதுவே டெங்குவால் பாதிக்கப்பட்ட குழந்தையானால், காய்ச்சல் குறைவான பின்பும் சரியாக சாப்பிடாது, தூங்காது, வாந்தி இருக்கும், சாப்பிட்டது உடலில் தங்காது எப்போதும் சோர்வாகவே இருக்கும். முக்கியமாக சிறுநீர் கழிப்பது மிகவும் குறைந்துவிடும். இது பெரிய பிரச்சினை. இத்தகைய சிறுநீர் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றால். உடனடியாக மருத்துவரை அணுகி இது டெங்கு காய்ச்சலா? என பரிசோதித்து அதற்கான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சல் என்றால், இரத்தத்திலுள்ள தட்டணுக்கள் (Platelets) குறையும். இதனால் பெரிய பாதிப்பு உண்டாகும் என பொதுவாகக் கூறுவார்கள். இது ஓரளவிற்கு உண்மையும்கூட. ஏனென்றால், டெங்கு ஏற்பட்டால் தட்டணுக்கள் குறையும். அந்த தட்டணுக்கள் குறைந்தால், நம் உடலில் எங்காவது ரத்தக்கசிவு ஏற்படும். தானாகவே உடலில் ஏதோ ஒரு பாகத்தில் இரத்த கசிவு அல்லது உண்டாகும். இது மிகவும் அரிதாகத்தான் ஏற்படும். நம் உடலில் மூன்று அல்லது நான்கு லட்சம் அளவுக்கு தட்டணுக்கள் இருக்கும். இந்த டெங்கு கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தட்டணுக்கள் குறையும்.

படிக்க :
♦ டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் !
♦ தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் ஏன் ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

ஒரு லட்சம், இரண்டு லட்சம் அளவுக்கு கூட குறையும். ஆனால், நாம் அச்சப்படத் தேவையில்லை. இந்த தட்டணுக்கள் 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தால் தான். நாம் செயற்கையாக தட்டணுக்களை செலுத்துவோம். கொஞ்சம் குறைய ஆரம்பித்ததும், செயற்கையாக நாம் தட்டணுக்களை செலுத்த தேவையில்லை. இதனால் நன்மை உண்டாகாது, என்பது மட்டுமல்ல தீமை உண்டாக வாய்ப்புள்ளது. அதேபோல் தட்டணுக்கள் சீராக இருந்தால் வைரஸ் தாக்குதல் குறைவு என்றோ, தட்டணுக்கள் குறைவாக இருந்தால், வைரஸ் தாக்குதல் அதிகம் என்றோ நாம் கருதக்கூடாது. நாம் முன்னமே கூறியது போல், வாந்தி, உடல் சோர்வு முதலிய அறிகுறிகள் இருந்தாலே, நாம் வைத்தியம் பார்த்தாக வேண்டும்.

என்ன வைத்தியம் பார்க்க வேண்டுமென்றால், அடிப்படையாக நாம் முதலில் நம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் உடலில் ரத்தம் இருக்கிறது, அது பெரும்பாலும் நீர் தான். அதன் பிறகு அதன் மேல் வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், புரதம் முதலியவெல்லாம் இருக்கிறது. இதில் நீரை எடுத்துவிட்டால், ரத்தமானது கெட்டியானதாக மாறிவிடும். ரத்தமானது ஓரளவுக்கு நீராக இருந்தால்தான், உடலில் உள்ள எல்லா பாகங்களுக்கும் சீராக செல்ல முடியும். இதில் நாம் நீரை எடுத்து விட்டோம் என்றால், ரத்தமானது சீராக உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்லாது.

இதனால் என்ன நடக்கிறது என்றால் அந்த ரத்தக் குழாய்களில் இருந்து தண்ணீரானது வெளியே சென்று, அந்த இடத்தில் திசுக்கள் போய் அமர்ந்து விடுகிறது. எனவே ரத்தக் குழாய்களில் உள்ள ரத்தம் கெட்டியாகி விடுகிறது. இதை எப்படி விளக்கலாம் என்றால், ஒரு இடத்தில் செம்மண் கலந்த நீர் இருக்கிறது என்றால். அதை நாம் குழாயின் மூலம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பாய்ச்சி விடலாம். இதுவே, நீர் இல்லை என்றால் அல்லது நீர் குறைவாக இருந்தால். குழாயின் உள்ளே அந்தக் கலவை சீராக செல்லாது. அதேபோல்தான் ரத்தமும் சீராக எல்லா இடத்துக்கும் செல்லவில்லை என்றால், திசுக்கள் பலவீனமடையும்.

இந்த பாதிப்புகள் எல்லாம் எப்போது நடக்கும் என்றால், காய்ச்சல் குறைந்த அந்த நான்காவது அல்லது ஐந்தாவது நாளுக்குள் இது நடந்துவிடும். நாம் நினைத்துக் கொண்டிருப்போம், காய்ச்சல் குறைந்து விட்டது, எனவே குழந்தை குணமாகிவிட்டது என்று, ஆனால் பிரச்சனையே அப்போதுதான் ஆரம்பிக்கிறது.

எனவே, நம்மில் யாரேனும் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பதை எப்படி அறிந்து கொள்ள வேண்டுமென்றால், காய்ச்சலானது தொடர்ந்து இருந்தாலோ, அல்லது காய்ச்சல் குறைந்த பின்பும், உடல் சோர்வாகவோ, சரியாக உணவு உட்கொள்ள முடியாமலோ, குறிப்பாக சிறுநீர் கழிக்காமலும் இருந்தால், நாம் ஒரு பரிசோதனை செய்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை. உடனே இப்படி இருந்தால் டெங்குதான் என்பது கிடையாது. ஆனால், நாம் ஒரு பரிசோதனை செய்து உறுதிபடுத்த வேண்டும்.

இந்த அறிகுறிகளோடு மருத்துவமனைக்குச் சென்றாலும், மருத்துவர்கள் எளிய முறையிலான இரத்தப் பரிசோதனையை மேற்கொள்வார்கள். குறிப்பாக ரத்தம் கெட்டியாக உள்ளதா அல்லது நீர்த்தன்மையோடு உள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்கான பரிசோதனையை செய்வார்கள். அடுத்ததாக கை கால்களில் ரத்த அழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதற்கான சோதனை மேற்கொள்வார்கள்.

உதாரணத்திற்கு கையில் ரத்த அழுத்தம் சீராகவும், கால்களில் ரத்த அழுத்தம் குறைவாகவும் இருந்தால், நம் உடலில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அடுத்ததாக நாடித்துடிப்பை பார்ப்பார்கள். அது எழுபது அல்லது என்பதற்குள் இருந்தால் பிரச்சினை இல்லை, அதுவே100 அல்லது 120 என்று இருந்தால் நம் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இது போன்ற எளிய முறைகளை முதலில் பரிசோதித்து தான், நம் உடலில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை அறிவார்கள். இதில் ஏதாவது சீராக இல்லை என்றால் தான், இந்த நபர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பார் என்றுணர்ந்து அதற்கான சிகிச்சையை தொடர்வார்கள்.

இதற்கான சிகிச்சையும் எளிமையானதுதான். உதாரணத்துக்கு ரத்தத்தில் நீர் தன்மை இல்லாமல் உறைந்து இருந்தால், நீர் சத்தை அதிகப்படுத்த சிகிச்சையளிப்பார்கள். நீர்ச்சத்தை அதிகப்படியாக அளித்தாலும் தவறு, அதேபோல் அளிக்காமல் இருந்தாலும் தவறு. சீராக இருக்க சிகிச்சை அளிப்பார்கள். ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு இந்த சிகிச்சையை தொடங்குவார்கள் இதன் மூலமே நாம் பெருவாரியான இறப்புக்களை தடுக்க முடியும்.

மிகவும் சொற்பமான நபர்களுக்குத் தான் நுரையீரலில் நீர் சேர்ந்து மூச்சுவிட முடியாத நிலைக்கு செல்வது, ரத்த அழுத்தம் பாதியாக குறைந்து அதிர்ச்சி நிலையை உண்டாக்குவது, மயக்க நிலைக்கு சென்று வலிப்பு ஏற்படுவது, நுரையீரல் செயலிழந்து போவது மாதிரியான இக்கட்டான நிலைமைகள் ஏற்படும். இவர்களுக்குத்தான் அதிதீவிர சிகிச்சை முறைகள் தேவைப்படுகிறது, இதில் சிலரை காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது. இது எல்லாமே மிகவும் தாமதமாக மருத்துவமனைக்கு வருவதினால் ஏற்படும் விளைவுகள்.

படிக்க :
♦ தமிழகத்தில் தொடரும் டெங்கு மரணங்கள் : இயற்கையின் சதியா ?
♦ உசாரய்யா உசாரு ! டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா

டெங்குக்கென்று தனியாக மாத்திரை மருந்துகள் இருக்கிறதா..? கிடையாது, உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருந்தாலே குறிப்பாக அந்த மூன்று அல்லது அந்த ஐந்து நாட்களுக்குள் இதை செய்தாலே பெருவாரியான குழந்தைகளும் பெரியோர்களையும் காப்பாற்றிவிடலாம். இதைவிட பெரிய மருத்துவம் கிடையாது, இதை விட்டு நான் கசாயம் கொடுத்தேன் அல்லது இந்த பழத்தின் விதைகளை சாப்பிட்டேன் அதனால் நானும், குழந்தையும் குணமாகிவிடுவோம் என நினைத்துக் கொள்வதெல்லாம் தவறு. மேலே கூறிய தகவல்களை தொகுத்து பார்த்தோமேயானால், இந்த விதைகளும் அல்லது கஷாயமும் நம் உடலில் எந்தவித மாற்றத்தையும் கொண்டுவராது.

எனவே நாம் கூறுவது என்னவென்றால் டெங்கு போன்ற வைரஸ் கிருமிகள் சிலரது உடலில் இருக்கும் பின்பு உடல் சில நாட்களில் தானாக குணமாகிவிடும். சில பேருக்கு குணமாகாமல், உடல் உபாதைகள் தொடரும். அப்படி தொடரும்போது ரத்தத்தில் உள்ள நீரின் அளவை சரியாக பராமரித்து கொண்டோமேயானால் – அதை நாம் செய்ய முடியாது மருத்துவரின் துணையோடு இதை செய்து கொண்டோமேயானால் – பெரும்பாலானவர்கள் இந்த டெங்கு தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.

இந்த தகவல்கள் உபயோகமாக இருக்கும் என எண்ணுகிறேன். நன்றி.

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க