காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் !

தமிழகம் முழுவதும் கண்டனக் கூட்டங்கள்

நாள் : நவம்பர் 25, 26

  • சென்னை ஐ.ஐ.டி. மாணவி ஃபாத்திமா தற்கொலை !
  • ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனை கைது செய்யாதது ஏன் ?

ன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே!

கடந்த நவம்பர் 8-ந்தேதி சென்னை ஐ.ஐ.டி.-யில் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் முதுகலை பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்துகொண்டார். இது அவருடைய பெற்றோரை மட்டுமல்ல, அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வகுப்பில் முதல் மாணவியான ஃபாத்திமா ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? தனது மகளுக்கு கயிறு எங்கிருந்து கிடைத்தது? இது தற்கொலையா அல்லது கொலையா? கண்கானிப்புக் கேமராவில் பதிவான வீடியோவை ஏன் காட்டவில்லை? ஃபாத்திமா செல்போனில் எழுதிவைத்துள்ள குறிப்புகளை ஏன் போலீசு காட்ட மறுக்கிறது? என ஃபாத்திமா தற்கொலை குறித்து அவருடைய தந்தை நியாயமான கேள்விகளை எழுப்பியுள்ளார். நம் அனைவரின் கேள்வியும் இதுதான்.

“எனது தற்கொலைக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மனாபன் தான் முக்கிய காரணம்” என மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை குறிப்பு எழுதி வைத்துள்ளார். அந்தக்

குறிப்பில் மேலும் 2 பேராசிரியர்கள் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, பேராசிரியர் சுதர்சன் பத்மனாபன் இண்டர்னல் தேர்வில், உரிய மதிப்பெண் வழங்காமல் சித்திரவதை செய்வது குறித்து தனது தந்தையிடம் முன்கூட்டியே தெரிவித்துள்ளார். தற்போது, ஃபாத்திமாவின் தந்தை தமிழக போலீசு டி.ஜி.பி-யிடமும், முதல்வரிடமும் சுதர்சன் பத்மனாபன் மீது புகாரும் கொடுத்துள்ளார்.

மாணவி ஃபாத்திமாவை சித்திரவதை செய்து தற்கொலைக்குத் தள்ளியவர் சுதர்சன் பத்மனாபன்தான் என ஆதாரபூர்வமாகத் தெரிந்த பின்பும் அவர் மீது ஐ.ஐ.டி நிர்வாகமும், போலீசும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ; பாதுகாக்கிறது. இதற்கு ஒரே காரணம் சுதர்சன் பத்மனாபன் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்பதும், ஐ.ஐ.டி பார்ப்பன அக்கிரகாரம் என்பதும்தான்.

படிக்க:
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களின் பாராளுமன்ற முற்றுகை வெல்லட்டும் !
♦ வாரணாசி முதல் சென்னை வரை ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பிடியில் உயர்கல்வி நிறுவனங்கள் !

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வின் அடிமையாகச் செயல்படும் எடப்பாடி அரசு நடவடிக்கை எடுக்கும், குற்றவாளிகளைத் தண்டிக்கும் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடை. மாட்டுக் கறி சாப்பிட்டதால் மாணவர் சூரஜ் தாக்கப்பட்டார். நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்து விட்டு, சமஸ்கிருதப் பாடலான மஹாகணபதி பாடல் பாடப்படுகிறது. 96% பேராசிரியர்கள் பார்ப்பனர்கள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை இன மாணவர்கள் சமீப ஆண்டுகளில்தான் ஐ.ஐ.டி-க்கு படிக்கவே வர முடிந்துள்ளது.

இப்படி காவி இருள் சூழ்ந்திருக்கும் சென்னை ஐ.ஐ.டி-யில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்கள் எப்படி சுதந்திரமாகப் படிக்க முடியும்? தங்கள் பாதிப்புகளை யாரிடம் போய் சொல்ல முடியும்?

ஆர்.எஸ்.எஸ்-இன் இலக்கு ஐ.ஐ.டி மட்டுமல்ல, அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் கைப்பற்றுவது. அதற்காகத்தான் மாணவர்கள் மீது சாதி – மத ரீதியிலான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஷாகா பயிற்சி நடத்துவதோடு, ஆர்.எஸ்.எஸ் கொடியை நட்டு அராஜகம் செய்துள்ளனர் ஏ.பி.வி.பி மாணவர்கள். இதைத் தட்டிக்கேட்டு கல்வி வளாகத்தில் அத்து மீறி ஏற்றப்பட்ட ஆர்.எஸ்.எஸ் கொடியை அகற்றிய அலுவலர் கிரண் டாம்லே பதவி பறிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே ஜனநாயகப்பூர்வமான கல்வி நிறுவனத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த டெல்லி ஜே.என்.யூ-வில் ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி காலிகள் அராஜகம் செய்கிறார்கள். அங்கு போராடும் மாணவர்கள் மீது மோடி அரசு அடக்குமுறை ஏவுகிறது.

டெல்லி பல்கலைக் கழகத்தில் பகத்சிங் சிலை அருகில் ஆர்.எஸ்.எஸ் சாவர்க்கர் சிலையை வைக்கிறார்கள்; அண்ணா பல்கலைக் கழகத்தில் பகவத் கீதையை திணிக்கிறார்கள்; அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் இந்தி, சமஸ்கிருதத்தை நுழைக்கிறார்கள். உயர்கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இப்படி, நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களை கைப்பற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.

படிக்க:
அயோத்தி தீர்ப்பு : சீராய்வு மனுதாக்கல் செய்ய முசுலீம் தரப்பு முடிவு !
♦ பாத்திமா தற்கொலை : பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனை கைது செய் ! புமாஇமு கண்டனம்

இன்னொருபக்கம், இந்தியாவின் உயர் தொழிற்நுட்பக் கல்விக் கழகமான ஐ.ஐ.டி-களில் தனியார்மயம் தீவிரமாகிறது. கட்டணங்களை உயர்த்துவது, மதிப்பெண்களைக் குறைப்பது, படிப்புச் சுமையை அதிகரிப்பது, தேர்ச்சியைத் தடுப்பது, ஆய்வுகளை முடிக்கவிடாமல் செய்வது என மாணவர்கள் மீதான நிர்வாக அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன.

இதனால், எதிர்காலம் குறித்த மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்கள் கடும் மனஅழுத்தத்திற்கும் அச்சத்திற்கும் ஆளாகிறார்கள். விளைவு கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஐ.ஐ.டி-களில் 52 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து, விரிவான – நேர்மையான ஒரு நீதி விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டுவரப் போராடுவதே நம் கடமை.

♦ ஐ.ஐ.டியில் மாணவர்கள் மீது நிர்வாக – சாதி – மத ரீதியாக நடத்தப்படும் தாக்குதலை தடுக்க பார்ப்பன ஆதிக்கம் தகர்க்கப்பட வேண்டும்.

♦ மாணவி ஃபாத்திமாவை சித்திரவதை செய்து தற்கொலைக்குத் தள்ளிய சுதர்சன் பத்மனாபனை கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்.

♦ மாணவர்கள், பெற்றோர்கள், ஜனநாயக, முற்போக்கு சக்திகள் ஒரணியில் திரள்வோம்!

♦ உயர்க்கல்வி நிறுவனங்களை கைப்பற்றும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க திட்டத்தை முறியடிப்போம்!

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு. தொடர்புக்கு : 94451 12675.
இ.மெயில்: rsyfchennai@gmail.com, முகநூல்: rsyf.tn.com

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க