நாம் தமிழர் கட்சி தம்பிமார்கள் எது நிகழக் கூடாது என்று முப்பாட்டன் மாயோனை வேண்டிக் கொண்டிருந்தார்களோ, அந்த துன்பியல் சம்பவம் நிகழ்ந்தே விட்டது. அண்ணன் சீமான் ஏற்கனவே போட்டுடைத்த ஃபர்னிச்சர்களான அ.க 74, ஆமைக் கறி, அரிசிக் கப்பல், ஆமை ஓட்டுப் படகு வரிசையில் பொட்டு அம்மானையும் புதிய ஃபர்னிச்சராக சேர்த்துள்ளார்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வழக்கம் போல் பல அரியவகை கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். இப்போது புதிதாக தெறித்து விழுந்துள்ள அடேங்கப்பா வகை தத்துவங்களுக்கு முட்டுக் கொடுத்து களமாட தம்பிமார்கள் முகநூல் நோக்கி விரைந்துள்ளனர்.
அண்ணனின் தத்துவங்கள் அனைத்துமே மிகவும் எளிமையானவை. “எனக்கு ஓட்டுப் போடலைன்னா தொலைஞ்சீங்கடா”, “என் மேல் கேசு போட்டவங்களை நான் அதிகாரத்துக்கு வந்து தீர்த்துப்புடுவேன்”, “தேர்தலில் வென்றால் எல்லோருக்கும் கார் இலவசமாக வழங்கப்படும்”, “ஆடு மாடு மேய்ப்பது அரசு வேலை”. போதும், இதற்கு மேல் தெம்பில்லை.
சுருக்கமாக “அனைத்து உயிர்களுக்குமான” அரசியலை தங்கள் அண்ணன் முன்வைக்கிறார் என்பது தம்பிமார்கள் மேற்படி தத்துவங்களுக்கு அளிக்கும் விளக்கம். வாட்சப் நிலைத் தகவல்களின் மூலமாகவும், முகநூல், ட்விட்டர் மற்றும் யுட்யூப் கமெண்டுகளின் மூலமாகவும் உக்கிரமாக சுவிசேஷ நற்செய்தியை பரப்பும் தம்பிமார்கள், எல்லா உயிர்களுக்குமான தமது அக்மார்க் அரசியலை ஏற்காதவர்களை “அடேய் கொல்டி வந்தேறிகளா” என அன்போடு வாழ்த்துவது வழக்கம்.
தம்பிமார்கள் எதிர்கொள்ளும் மாபெரும் அரசியல் நெருக்கடியே அண்ணன் அவ்வப் போது “வெட்டிருவேன் – குத்தீருவேன்” பாணி அனைத்து உயிர்களுக்குமான அரசியலில் இருந்து ஈழத்தில் கரையேறும் சந்தர்ப்பங்கள் தாம்.
***
அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் தான் மேலே குறிப்பிட்ட நிகழ்வின் போது அண்ணன் நிகழ்த்திய உரை. நிகழ்வில் அண்ணன் பேசியதில் முக்கியமான பகுதியைக் கேட்டு விடுவோம் :
“ஒருமுறை அண்ணன் பொட்டு அம்மன் வீட்டில் சாப்பிடச் சென்றோம். நானும், பொட்டு அம்மன், அண்ணி ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு இட்லி, தோசை, சாம்பார், சட்னி எடுத்து வைத்தனர். உணவைப் பார்த்துவிட்டு இட்லியா என்று கேட்டேன். உடனே பொட்டு அம்மனும், அண்ணியும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.
ஏன் சிரிக்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு பொட்டு அம்மன், ஒரு வாரம் பார், அவன் தோசை இட்லிக்கு வந்துவிடுவான் என தலைவர் பிரபாகரன் அவரிடம் சொன்னதாகச் சொன்னார். நானே ராமநாதபுரத்துக்காரன். காரம் அதிகம் சாப்பிடுபவன். நம்மை விட அவர்கள் அதிகமாக காரம் சாப்பிடுகின்றனர் என்று நினைத்தேன். ஒரு முறை தலைவருடன் அமர்ந்து சாப்பிட்ட சம்பவம் அருமையானது.
தலைவரும் நானும் காட்டிலுள்ள ஒரு அறையில் சாப்பிட்டோம். அப்போது, ஒவ்வொரு உணவாக காண்பித்து இது நன்றாக இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அதற்கான தயாரிப்புகளுக்கு டைரக்ஷன் செய்ததும் தான்தான் என்று சொன்னார்” எனப் பேசியுள்ளார் சீமான்.
படிக்க:
♦ பீகார் தொழிலாளியின பந்து வீச்சில் டக் அவுட்டான சீமான் !
♦ நாம் தமிழர் எனும் முள்பொறுக்கிகளின் மற்றுமொரு பலியாடு – வண்டாரி தமிழ்மணி !
“ஒரு மணி நேரம் எங்கண்ணன் காட்டுக் கத்து கத்தியும், சோத்து மேட்டரை மட்டும் பிடித்துத் தொங்கினால் எப்படி?” என்று நாதக தம்பிமார்கள் மனங்கோணி விடக் கூடாது. கடந்த பத்தாண்டுகளில் அண்ணன் நூற்றுக்கணக்கான மேடைகளில் பேசியிருந்தாலும் எல்லா மேடைகளிலும் “புஹாஹாஹா” “வாய்ப்பில்ல ராஜா” “தொலைச்சிபுருவேய்ன்” “பிச்சிப்புருவேய்ன்” “கிழிச்சிப்புருவேய்ன்” “அடிச்சிப்புருவேய்ன்” “தீர்த்துப்புருவேய்ன்” “கொண்டேடேடே….புருவேய்ன்” போன்ற வழக்கமான தத்துவங்களையே வெளிப்படுத்தி வருகின்றார். இடைக்கிடையே அண்ணன் முன்வைக்கும் இது போன்ற சைடுடிஷ்கள் தான் நமக்கு சுவாரசியமூட்டுகின்றன.
மேற்படி பேச்சுக்கு தம்பிமார்கள் கைதட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்துள்ளனர். மண்டையில் மூளை என்கிற வஸ்து இருக்கிறவர்களால் எப்படி இதற்கெல்லாம் கைதட்ட முடியும் என்கிற சந்தேகம் சமீப நாட்கள் வரை நமக்கும் இருந்தது; ஆனால் இந்த தம்பியின் பராக்கிரமத்தை படித்த பின் அந்த சந்தேகம் நீங்கியது.
குறிப்பு: யாராது சம்பந்தப்பட்ட தம்பியிடம் பைக்குகளுக்கெல்லாம் சுங்கம் வசூலிப்பதில்லை என்பதைச் சொல்லி விரைப்பாய் உயர்த்தி வைத்துள்ள அவரது தோள்களை தளர்த்தச் சொல்வது நல்லது. தொடர்ந்து தோளை உயர்த்தியே வைப்பதால் ஸ்பாண்டிலிட்டிஸ் வர வாய்ப்புள்ளது.
***
மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் அண்ணனின் உரைவீச்சில் சில விசயங்கள் சூசகமாக சொல்லப்பட்டுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.
எப்போது அண்ணன் சர்ஜிகல் தாக்குதல் செய்தாலும் அதை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் பிற்காலத்தில் அண்ணன் அதை விவரிக்கும் போது உயிரோடு இருக்க மாட்டார்கள். உதாரணமாக, கலைஞரின் சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்து அண்ணன் எழுதிய அழகை அவரே விவரித்த போது கலைஞர் இறந்து போயிருந்தார். அதே மாதிரி அண்ணன் எழுதிய திரைக்கதையைக் கண்டு சிவாஜி அசந்து போன சம்பவத்தை அண்ணன் உலகுக்கு அறிவித்த போது சிவாஜி இறந்து பத்தாண்டுகள் கழிந்திருந்தன. ஆமைக் கறி, அரிசிக் கப்பல் மகாத்மியங்களை அண்ணன் எடுத்துரைத்த போது பிரபாகரனும் இல்லை.
இப்போது பொட்டு அம்மான் விசயத்துக்கு வருவோம் – இறுதிப் போரில் பொட்டு அம்மான் “எப்படியோ” தப்பி விட்டதாகவும் “எங்கோ” இருந்து அவர் இயக்கத்தை வழிநடத்தி வருவதாகவும் தம்பிமார்கள் சொல்வதுண்டு. இப்போது அண்ணன் பொட்டு அம்மான் வீட்டில் இட்லியோடு நடத்திய சர்ஜிக்கல் தாக்குதலை ஊருக்கு சொல்லி விட்டதால் பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை அண்ணனின் இதர சாட்சியங்களின் படி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து, போர் உச்சத்தில் இருந்த போது இலங்கை சென்ற சீமானுக்கு முனியாண்டி விலாஸ் மெனுகார்டில் கூட இல்லாத அயிட்டங்களை புலிகள் சமைத்து பரிமாறி இருக்கின்றனர் – அதுவும், அண்ணன் சாப்பிடுவதை தலைவர் பிரபாகரனே மேற்பார்வை பார்த்துள்ளார். அதுமட்டுமின்றி தனது முக்கிய தளபதிகளையும் அண்ணன் வாழை இலையின் முன் செய்திட்ட ஊடறுப்புத் தாக்குதல்களுக்கு தோள் கொடுக்க உத்தரவிட்டுள்ளார். அங்கே கிளிநொச்சி சுற்றி வளைக்கப்பட்டு புலி போராளிகள் வரிசையாக கொத்து குண்டுகளுக்கு வீழ்ந்து கொண்டிருந்த போது தலைவர் பிரபாகரன் குழம்புக் குண்டானின் முன் குத்த வைத்து அமர்ந்து ஆமைக்கறி சரியான பதத்தில் வெந்துள்ளதா என குத்திக் குத்திப் பார்த்துள்ளார். போர்க்களத்தில் எப்படி விருந்துப் பந்தி என்று ஆத்திரப்படுவோர் அண்ணன் சீமானிடம்தான் அந்த பந்தி புரூடாக்களை கேட்க வேண்டும்.
இறுதி போர்கட்டத்திலே புலிகள் சாம்பார், கூட்டு, பொறியல் செஞ்சாங்க, கறி வறுத்து தந்தாங்க, ஆமை கறி திண்ணாங்க. நான் திங்கிறதை ஒருத்தங்க நோட்ஸ் எடுத்து அண்ணனுக்கு சொன்னாங்க…
போராட்ட களத்தை கேலிகூத்தாக்கும் சீமான். புலிகளை கேவலபடுத்த இவன் ஒருத்தன் போதும்.. pic.twitter.com/C4sRzVJPPq
— நித்யா (@nithya_shre) November 26, 2019
அண்ணன் சீமான் சொல்லும் சம்பவங்கள் உண்மை என்று “உளப்பூர்வமாகவே” நம்பித் தான் இதையெல்லாம் ஊகிக்கின்றோம். மேலும் தொடர்வோம்,
அதே கூட்டத்தில் சீமான் சொல்கிறார்:
“சுற்றிலும் ஷெல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒருத்தன் சாப்பிடுறேன். பின்னாடி ஒருவர் நின்று எழுதிக் கொண்டிருக்கிறார். என்னடா எழுதறான் என்று முதல் நாள் விட்டுட்டேன். இரண்டாவது நாள் அதை வாங்கிப் பார்த்தேன். ‘இந்த சம்பலைத் இரண்டு முறை தொட்டார். இந்த கூட்டை முழுக்க சாப்பிட்டார், இந்த கறியை தொடவில்லை. சாம்பார் ஊற்றிக் கொண்டார்’. என்று எழுதிக் கொண்டிருந்தார். ஏனப்பா இதை எழுதுகிறாய் என்று கேட்டேன். இல்லைங்க தலைவருக்கு அனுப்பனும்னு சொன்னார்”
இதில் பல குறியீடுகள் உள்ளதை நீங்களே கவனித்திருப்பீர்கள். போர் உச்சத்தில் இருந்த போது, புலிகள் களத்தில் பின்டைவைச் சந்தித்துக் கொண்டிருந்த போது, அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக செத்து வீழ்ந்து கொண்டிருந்த போது – சீமான் எந்த சம்பலை தொட்டார், எந்த ஊறுகாயை ருசித்தார், எந்த சாம்பாரை மோந்து பார்த்தார் என்பதை கணக்கெடுக்க ஒரு புலிப் போராளியை டெபுடேசனில் டியூட்டி போட்டுள்ளனரோ என்றே தோன்றுகிறது. இதை வக்கிரம் என்போர் அண்ணன் சீமானிடம் அன்பாக கேட்டுப் பாருங்கள். தாளித்து விடுவார்.
விருந்தோம்பல் என்னவோ பிரமாதமாகத் தான் உள்ளது – ஆனால், இப்படி எத்தனை பருக்கை உள்ளே போனது எத்தனை பருக்கை சிதறிப் போனது என்பதை கணக்கெடுப்பதெல்லாம் போராளி வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும் என்பதை நினைத்தால் தான் திடுக்கென்று இருக்கிறது. இதில் உச்சகட்டமாக மறு நாள் காலை அண்ணன் கொல்லைக்கு போவதற்கு புலிப் போராளிகள் பாடிகார்டாய் போய் வந்ததாக அண்ணன் அடித்து விட்டாலும் அதை நம்புவதற்கு நாதக தம்பிமார்கள் தயாராகவே இருக்கிறார்கள். இருப்பினும் அண்ணன் சீமான் ஆய் போன கதைகளை இன்னும் சொல்லவில்லை – சொல்லி இருந்தால் அதை ஜீரணிக்கும் நிலையில் நாமும் இல்லை.
படிக்க:
♦ புலித் தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்.
♦ மருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் !
மற்றொரு விசயமும் உள்ளது. சுற்றிலும் ஷெல் அடித்தார்கள், பத்து ஷெல்லுக்கு ஒன்று எனக் கணக்கு வைத்தாலும் நாள்தோறும் சில பத்து பேராவது மாண்டு போயிருக்க வேண்டும். பலருக்கு கை வேறாய் கால் வேறாய் உடல் சிதைந்து போயிருக்க வேண்டும் – இத்தனை களேபரத்துக்கும் இடையில் ஒரு ஜீவன் ரவுண்டு கட்டி ரசித்து ரசித்து சாப்பிட்டிருக்கிறது என்றால் அது சாதாரண ஜீவனாக இருக்க முடியுமா? பிறப்பு இறப்பு, இன்பம் துன்பம், வெற்றி தோல்வி என இகலோக கர்மாக்கள் அனைத்தையும் சம்சார சாகரத்தையும் கடந்த ஒரு பரஜீவனாகத் தான் இருக்க வேண்டும்; அதைத்தான் ஆதிசங்கரனின் அத்வைதம் பரமாத்மா என்கிறது. சுத்த தமிழில் பம்முற ஆத்துமா என்றும் சொல்லலாம்.
இதில் ஒரே ஒரு விசயம் மட்டும் தான் நெருடலாக உள்ளது. அண்ணன் சீமானுக்கு பிரபாகரன் அ.க74 துப்பாக்கியால் சுடும் பயிற்சியை அளித்துள்ளார். பயிற்சிக்காக ஒரு ஆஸ்திரேலிய அரிசிக் கப்பலையே தாரை வார்த்துள்ளார். அப்படி ஒரு கப்பலையே துல்லியமாக தாக்கும் ஆற்றல் கைவரப்பெற்ற சீமான், சுற்றிலும் குண்டுகளைப் போட்டு மக்களைக் கொன்று கொண்டிருந்த சிங்களனிடம் சமர் புரிந்து அவன் தலையை தரையில் உருட்டியிருக்க வேண்டும்; ஆனால், அண்ணன் சப்பளாங்கால் போட்டமர்ந்து இட்டிலியை உருட்டி விளையாடியது ஏன் என்பது மட்டும் புரியவில்லை.
அடுத்த கூட்டத்தில் அதை விளக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
– சாக்கியன்
போர் உச்சத்தில் இருக்கும்போது எங்கள் தலைவர் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் சீமான் விதவிதமாக சாப்பிட்டிருக்கிறார். விடுதலைப்புலிகளுக்கு எதிரானவரே சீமான்.
ஒருவேள பிரபாகரன் உயிரோட வந்தா மொத டெட்பாடி சீமான் தான்…😂😂😂
அண்ணன் சீமான் தொழில்முறை வித்தகர்.சினிமா இயக்குநர்.இருந்தாலும் நாக தோஷம் இருப்பவர்களுக்கு எப்படி திருமணம் தடைப்படுமோ,வரன் தள்ளிபோகுமோ.அதுமாதிரி இவருக்கு நாற்காலி தோஷம்.அண்ணனின் முதல்வர் கனவு முடியாத கனவாக மாறிவிட்டது.
வெற்றிடத்தை இயல்பாக காற்று நிரப்புவது போல் தமிழகத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு நம்மைவிட்டால் நாதியில்லை என்று மிதப்பில் இருந்தார்.
தமிழக அரசியலும் தமிழ் சினிமா மாதிரியே ஹீரோக்களின் கட்டுப்பாட்டில் இருப்பது அவரை கடுப்பேத்துகிறது.
சினிமாவிலும் நமக்கு இயக்க ஹீரோக்கள் கால்ஷீட் கொடுக்கமால் இங்கு வந்தால் இங்கும் நாற்காலியை விடாமல் அதையும் ஹீரோக்களே பிடித்துக்கொண்டால் என்ன செய்வார்?
கடைசியில்,இறந்தபிறகும் அவருக்கு கால் ஷீட் கொடுத்த ஒரே ஹீரோ தலைவர் பிராபாகரன் மட்டும்தான்!
தன்வாழ்நாள் இப்படியே கத்தி கத்தி கழிந்துவிடுமோ என்ற பதட்டம் அவரை வாட்டுகிறது. எனவே,எதிர்கும் திறனற்று சோர்ந்துபோய், கண் எதிரில் தெருவில் பேண்டவனை விட்டுவிட்டு தெருவில் இருக்கும் பழைய காய்ந்துபோன பீயை எல்லாம் தேடிதேடி மிதிக்கிறார்.
எடப்பாடியும்,மோடியும் நம் வசலிலேயே கழிந்துக்கொண்டிருக்கிறார்கள். அண்ணன் திராவிடத்தை விடாமல் தாக்கி அதை மறைத்துக்கொண்டிருக்கிறார். வெல்க! நாம் தமிழர் பணி!
சீமான் சொல்வதை மறுக்க வேண்டியவர்கள் விடுதலை புலிகள் நீங்கள் அல்ல புலம்பெயர்ந்த தமிழர்கள் அவரை ஆதரிக்கவே செய்கிறார்கள் மதுரை மாவீரர் நிகழ்வில் கூட பொன் தியாகம் அய்யா சுடர் ஏற்றினர் அவர் தலைவர் பிரபாகரன் முன்னிலையில் ஈழத்தில் சுடர் ஏற்றியவர் நீங்கள் வயிற்றெரிச்சல் படும் தி மு க காரன் புலம்புவது போல் புலம்ப வேண்டாம்
அய்யா அசேன் அவர்களே,
பி.ஜே.பி.க்காரன் பிடிக்காதவர்களை ஆன்டி இந்தியன் என்று மிரட்டுவதுபோல் நீங்கள் வயிற்றெரிச்சல்,புலம்பல் என்று மண்ணின் மணத்தோடு திட்டுகிறீர்கள்.பரவாயில்லை இருக்கட்டும்.
தலைவர் பிரபாகரன் முன்னிலையில் ஈழத்தில் சுடர் ஏற்றியவர்தான் மதுரை மாவீரர் நிகழ்வில் சுடர் ஏற்றினர்.என்று அண்ணன் சீமானுக்கு இருக்கும் ஒளிவட்டத்தை காண்பித்து எங்கள் ஊனக்கண்ணை திறந்துவிட்டீர்கள்.முள்ளிவாய்க்கால் படுகொலையை இராஜபக்சே வெடிவெடித்து கொண்டாடினான் என்று கொதிக்கிறோம்.ஆனால் அண்ணன் இட்லி விருந்தை மணக்கமணக்க கேட்கும் மைக்குக்கே எச்சில் ஊறு அளவு விவரித்தால் குதூகலிப்பதா?
இதுதான் இறந்த மாவீரர்களுக்கு செலுத்தும் அஞ்சலியா? அண்ணன் நினைவுகூர்வதற்கு வேறு சங்கதியே அப்போது களத்தில் நடக்கவில்லையா?என்னமோ போங்கள்! இதை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆதரிக்கவே செய்கிறார்கள் என்று சொல்லி ஊள்ளுர் தமிழனை புத்தியில்லாதவன் என்கி றீர்கள்.அண்ணனுக்கு 2 சதவிகிதம் ஓ ட்டு விழும்போதே இந்த அலப்பறையா?
இதுபோன்ற விடயங்களை’ அண்ணன் சீமான் சொல்லும் கூற்றுகளை இல்லை என்று மறுப்பதற்கு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தலைவர் பிரபாகரனோடு பயணித்த கற்றறிந்த மேதை போராளி ஒருவர் கூட இல்லையா?
உண்மையாக உயிருக்கும் மேலாக நேசித்த தலைவர் பிரபாகரனோடு பயணித்த எவரொருவரும் அண்ணன் சீமானின் பேச்சை கேட்டு இது தவறு என்று தெரிந்தும் பதிலடி கொடுக்காமல் இருக்க வாய்ப்பில்லை!
யாரோ ஒருவர் வயிற்றுப் பிழைப்பிற்காக ஒரு உண்மை போராளியை எதிர்த்து பதிவிடுவதாகத்தான் இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
மிக அருமையான பார்வை Shafeek அவர்களே..!
நீங்கள் கூறும் பிரபாகரனை உயிரினும் மேலாக நேசித்த அவருடன் பயணித்த கற்றறிந்த மேதை போராளிகள் எவரும் சீமானை தமிழ்நாடே காறி துப்புகின்ற இச்சமயங்களில் சீமானுக்கு துணை நிற்க ஏன் வரவில்லை என்பது புதிராயிருக்கிறது.
பாழாய்போன வைகோ பிரபாகரனுடன் ஆயுதப்பயிற்சி எடுத்த மற்றும் உணவு உட்கொண்ட புகைப்படங்களை காணும்போது அண்ணன் சீமானுடைய புகைப்படங்கள் ஏன் வெளியாவதில்லை என்று துணுக்குறுகிறோம்.
அண்ணன் சீமான் விளம்பரத்தில் விருப்பமில்லாதவர், புகைப்படம் எடுக்க அனுமதித்திருக்க மாட்டார் என்று மனதை தேற்றிக் கொண்டாலும், அவர் கலைஞர் சட்டை பையில் இருந்து பேனாவை உருவி எழுதியது, தமிழர்கள் அழித்தொழிப்பை நிறுத்த அவரை ஒருநாள் முதல்வராக்க கலைஞரிடம் மன்றாடியது போன்ற விடயங்களை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்று எங்களைப் போன்ற முட்டாள்களுக்கு சற்றே கற்று கொடுங்களேன்…!
‘கல்யாண பரிசு’ திரைப்படத்தில் ‘டணால்’ தங்கவேலுவின் ‘எழுத்தாளர் பைரவன்’ கேரக்டர் வேறு நினைவுக்கு வந்து தொலைகிறது.
திராவிட அரிசந்திரகள் மட்டுமே எங்களை ஆள வேண்டும்
என்பது உங்கள் விருப்பம்!!!
வாழ்க திராவிடம் ஒழிக தமிழ்!!! இப்போது இந்த கட்டுரையின்
ஆசிரியர் மகிழ்வார்!!!
அடுத்து வளர்த்து விடுங்கள் உதயநிதி ஆய் மணக்குமென்று!!!
” கேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் ?
ஒருபுறம் திராவிடம் 2.0 என்று கொள்கை பரப்புகிறார்கள். மறுபுறம் குடும்ப அரசியல் 2.0 அல்லது 3.0-வாக வாரிசுகளை இறக்குகிறார்கள்.”
Ithil evlo menmayaga Udhyanithi patriya kelviku – pathil kodthu ulanar VINAVU natunilayanu asririyarkal
Udhaynithi patri keatal angum Seeman Vanthu vidukirar!!! ingu yen Udhayanithi AIII poga vilai!!!
Ungal mel ula chayam velukirathi VINAVU-NETURALS!!!
சீமான் ஆதரவாளர்களுக்கு வணக்கம். தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் அளவற்ற பற்றுக் கொண்டவராக தன்னைக் காட்டிக்கொள்ள சீமான் எந்த கதை வேண்டுமானாலும் அளக்கிறார். அதை கேட்டு மெய் சிலிர்த்துப் போகிறார்கள். பச்சையாக சொல்ல வேண்டுமானால் பிரபாகரனை வைத்து ஓட்டு பிச்சை எடுக்கிறார். இவர் தமிழகத்தின் முதல்வரானால் கூட ஈழ மக்களுக்கான விடுதலை பெற்று தர முடியாது என்பது பாமரனுக்கும் தெரியும். ஆனால் வார்த்தை ஜாலம் மூலம் மதியிழக்கிறார்கள் மக்கள். இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகளால் புடுங்க முடியாததை தான் சீமான் புடுங்க போகிறார். இலங்கை பிரச்சினை சர்வதேசிய அரசியல். இதில் மற்ற நாடுகள் தலையிடுவது என்பது அவர்களுடைய அரசியல் லாபத்துக்காக தானேயொளிய மக்கள் மீதுள்ள பற்று கிடையாது. ஈழப் பிரச்சினை அந்த மக்களால் தான் தீர்க்க முடியும். இங்கு எப்படி தமிழ் தமிழன் என்று பிரிவினைவாதம் பேசுகிறார்களோ அங்கே சிங்களம் சிங்களவர்கள் என்ற இனவாத அரசியல் உண்டு. ஒடுக்கப்படும் வர்க்கம் எந்த வர்க்கமாக இருந்தாலும் சனகுரல் கொடுப்பவன் தான் தலைவன். தலைவன் என்ன சொன்னாலும் ஆமாம் சாமி போடுவதை நிறுத்தி சுயமாக சிந்தியுங்கள். Rss மதவாத கும்பலை போல இனவாத கும்பலாக மாறி விடாதீர்கள் இது மனித இனத்திற்கே பேரழிவாக மாறிவிடும்.
Hmm correct than nan ondrum seeman katchiyil ilai,
one thing i cannot understand
IF I SAY I AM TAMILAN WHERE IS PARPANIYAM THERE?
i am tamilan reflecting TAMILAN why should i have to be DRAVIDIAN meaningless word
like your one sided people only all are going to that party first understand this…
DMK is not the pure party!!!
Seeman pudunga porathu irukattum DRAVIDAM ena pudungirukunu solunga?…
chumma ella mediavaikum kola aducha kasula valachu potukitu
unmai sudum!!!…
இலங்கை தமிழ் கைம்பெண்ணை திருமணம் செய்வேன் என்று சவுடால் விட்டுவிட்டு பின்னர் வசதியான குடும்பத்தில் திருமணம் செய்த சீமானைப் போன்ற ‘கழிசடை’ அல்ல கலைஞர் குடும்பம். அதனால் வினவு விமர்சனத்தில் அந்த ‘அளவு’ வித்தியாசம் இருக்குமே தவிர ‘பண்பு’ வித்தியாசம் இருக்காது.
திமுக தான் ஏற்றுக்கொண்ட தேர்தல் பாதை வரம்பிற்கு உட்பட்டு பார்ப்பனியத்தை எதிர்ப்பதில் முனைப்புடன் உள்ளது. ஆனால் சீமானை போன்றோர் திராவிடத்தை எதிரியாக்கி உண்மையான எதிரியான பார்ப்பனியத்தின் கால்களை நக்குகிறார்கள்.
NO NO YOU TOTALLY MIS UNDERSTOOD, i am not seeman follower and i am common person watching you all just irritating,
if i feel tamilan you suddenly confusing with dravidam,
see i love periyar in my home entrance itself periyar photo and marx photos welcome you…
but i donot want to belive current days dravidian politicians, only periyar has that capacity to say he is TRUE TO HIS PRINCIPLES BUT NOT DMK OR CURRENT DKs thats it my point hence no meaning in dravidian for future Atleast we have to tamilan which has long lasting history and future
DONOT MISTAKE ME I AM FOLLOWING VINAVU PAST 6 years…i think i has right to express my views on the article…
in the stream of science and technology ALL IYAMS(parpaniyam) WILL BE DESTROYED!!!
but always speaking about this sanadhana you guys safely always hiding the economic and the scams which are only motive, principle and agenda of all current politicians
you are giving money for vote
then you donot have the rights to speak about anything…
VASANTH,
வினவை 6 வருடங்களாக தொடர்வதாகக் கூறும் நீங்கள் இவ்வளவு தடுமாறுகிறீர்களே..! வீட்டில் மார்க்ஸ் மற்றும் பெரியார் படம் வைத்திருக்கும் உங்களுக்கு 6 மாதங்கள் போதுமே வினவின் அரசியலை ஓரளவு புரிந்து கொள்ள..!
நல்லது..! வினவை சற்று ஊன்றி படியுங்கள். திமுக என்று தேடினால் வினவில் திமுக பற்றிய விமர்சனங்கள் வண்டிவண்டியாக உள்ளது. படித்து தெளிவுருங்கள். Youtube ல் மதிமாறன் மற்றும் சுப.வீ. ஆகியோரின் உரைகளை கேளுங்கள். திராவிடம் பற்றி புரியவரும்.
வாழ்த்துக்கள்..!
திமுக என்று தேடினால் வினவில் திமுக பற்றிய விமர்சனங்கள் வண்டிவண்டியாக உள்ளது.
Yes irunthathu but ipoluthu apdi ilai en endru puriyavilai?
மதிமாறன் மற்றும் சுப.வீ. ஆகியோரின் உரைகளை கேளுங்கள். திராவிடம் பற்றி புரியவரும்.
hmmm these guys are not correct persons in my opinion.
i am RE-reading again all viduthalai books in Periyar’s direct thoughts,
i liked and changed myself after reading Pen yen adimai aanal
i like to be always a doer not be merely a policy prapogator or just speaker but nothing TRULY IN ACTION…
we will stop over here…
lets we do something usefull
since you and me in same
thought process…
we seek the truth…
நல்லது VASANTH…!
தேடலை விட்டுவிடாதீர்கள்..!
மிகக் கடுமையான காலகட்டத்தில் இருக்கிறோம் நாம்..!