“நீங்கள் விலங்குகளை துன்புறுத்துகிறீர்கள், நீங்கள் மீன், கறி, கோழி சாப்பிடுவது விலங்குகளுக்கு எதிரானது” என்ற வாதத்தை முன்னெடுத்து நம்மைச் சுற்றி ஒரு சதிகார கும்பலே இயங்கி வருகிறது. என் தட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை நான் மட்டும்தான் முடிவு செய்வேன், வேறு எந்த கொம்பனுக்கும் அந்த உரிமை இல்லை என்பதை தெளிவாகச் சொல்ல நமக்குத் தெரியும். ஆனால் அதே சிறு குழந்தைகளை தங்கள் விருப்பத்திற்கு வளைத்தால்?

அதைத்தான் இந்த கும்பல் செய்து வருகிறது. கோவையைச் சேர்ந்த அரவிந்தன், ஹீனா ஆச்சார்யா என்ற நபர்கள் “வீகன்” டயட் என்று கறி கோழி உண்ணக் கூடாது, அது விலங்குகளுக்கு எதிரானது என்று பச்சிளம் குழந்தைகளை தேர்ந்தெடுத்து விஷம் பரப்பி வருகிறார்கள். அதிலும் உண்ண உணவின்றி பள்ளியில் சத்துணவு உண்ணும் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளிடம். மிக மிக அயோக்கியத்தனமான முயற்சி இது. ஊட்டச்சத்து சரியாக இல்லாமல், உண்ண உணவு இல்லாமல் சிரமப்படும் குழந்தைகளுக்கு புரதம் சேர்க்க கிடைப்பதை வசதிக்கேற்ப பாவப்பட்ட மக்கள் வாங்கித் தந்தால், அந்தக் குழந்தைகள் அதை உண்பது கூட இல்லை.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

Food chain, nutrition supplement availability, anemia என்று எந்த அறிவும் இல்லாமல் இந்த முட்டாள்தனம் ஏழைக் குழந்தைகள் மேல் அரங்கேறுவது அநியாயம். விலங்குகள் கொடூரமாக துன்புறுத்தப்படும் வெளிநாட்டு காணொளிகள் இந்தக் குழந்தைகளிடம் காண்பிக்கப்பட்டு மனமாற்றம் செய்யப்படுகிறது. ஏற்கெனவே இந்தியப் பெண் குழந்தைகள் இரத்த சோகையால் அவதியுறுவது உலகறிந்த செய்தி. அப்படி இருக்க, தான்தோன்றித் தனமாக எந்த அனுமதியும் இன்றி அரசுப் பள்ளிகளில் செய்யப்படும் இந்த பரப்புரைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். ஹேர்பாலைப், பாலியோ, கீட்டோ டயட் வரிசையில் இந்த வீகன் பைத்தியங்கள்.

படிக்க:
கைலாசா : நித்தியானந்தா உருவாக்கிய ஹிந்து ராஷ்டிரம் !
♦ என் ஊரு நெல்லை ! ஆனா எனக்கு சொதி குழம்பு தெரியாது !

ஆரோக்கியமாக உண்ண வேண்டும், உண்ணும் உணவு நம் உடலை பாதிக்காமல் இருக்க வேண்டும், சரியான உடற்பயிற்சி வேண்டும், சமச்சீர் டயட் வேண்டும், அவரவர் உடல்நிலை, வாழும் சூழலுக்கேற்ப உண்ண வேண்டும், அவ்வளவுதான். அதை விட்டு என் டயட் சிறந்தது என்று தம்பட்டம் அடிப்பது, இதை உண்ண வேண்டும் என்று அடுத்தவரை கட்டாயப் படுத்துவது என்பதெல்லாம் வன்முறை.

அதிலும் உரிய அனுமதி இன்றி 1.39 லட்சம் குழந்தைகளிடம் பேசி மனம் மாற்றி இருக்கிறேன் என்று இந்த கும்பல் மார்தட்டிக் கொண்டிருக்கிறது. என்ன செய்யப் போகிறோம்? சங்கிகளின் இந்த ஆயுதத்தை எப்படி தடுத்து ஆடப் போகிறோம்?

நன்றி : ஃபேஸ்புக்கில் Nivedita Louis 

3 மறுமொழிகள்

  1. உண்மையை பற்றிக் கொள்ள வேண்டியது தான். இன்று நாடு இருக்கும் சூழ்நிலையில் vinavu.com ஒரு நடுநிலை ஊடகமாக மாறி விடுவது நல்லது.

  2. இன்று நாடு இருக்கும் சூழ்நிலையில் வினவு இன்னும் இன்னும் வீறு கொண்டு களப்பணியாற்றிட வேண்டுவோம்…நாமும் அதன் துணை நிற்போம்..மாணிக்கவேல் எப்படி உப்புக்கல் ஆனது?

  3. Correct. Can we include Pork too. This is consumed by all over the world and is the largest meat consumed ahead of Beef, Goat, Chicken etc., Would the ‘peacefuls’ be silent about that.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க