பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக வந்த குடியேறிகளில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.

இந்த சட்டத்தின்படி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறித்துவர்கள் தாங்கள் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நாட்டில் இருந்து வந்ததாக நிரூபித்தால் அவர்கள் இந்தியாவில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த மூன்று நாடுகளிலும் உள்ள மதவழிச் சிறுபான்மையினர் தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் கொடுமைக்கு உள்ளாவதாகவும், அவர்கள் எண்ணிக்கை குறைவதாகவும் மோடி அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வாதிடுகிறார்.

உண்மை என்ன? இது குறித்து தமிழ் பிபிசி ஒரு விரிவான கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அதில் பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை மாறாத நிலையில் வங்கதேசத்தில் மட்டும் குறைந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும் பாகிஸ்தானில் அகமதியா எனும் முஸ்லீம் பிரிவினரும் இதர முஸ்லீம் பிரிவினரால் ஒடுக்கப்படுகின்றனர். அவர்களுக்கும் இந்தியாவின் அகதி பட்டியல்களில் இடமில்லை.

பாகிஸ்தானில் முஸ்லீம்கள் அல்லாதோர் எத்தனை பேர்?

1951-க்குப் பிறகு பாகிஸ்தானில் இந்துக்களின் மக்கள் தொகை பெரிய அளவில் குறைந்துவிட்டதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார்.

1947-ல் நடந்த இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள் வெளியேறி பாகிஸ்தான் சென்ற பிறகு, முஸ்லிம் அல்லாதவர்கள் பாகிஸ்தானில் இருந்து பெருமளவில் வெளியேறிய பிறகு இது நடந்ததாக கூறப்படுகிறது.

படிக்க:
400 இந்து கோவில்களை புனரமைக்கும் பாகிஸ்தான் அரசு !
♦ பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 !

1951 -ல் 23 சதவீதமாக இருந்த பாகிஸ்தானின் சிறுபான்மை மக்கள் தொகை, சிறுபான்மையினருக்கு நேரும் கொடுமைகள் காரணமாக அடுத்த பல பத்தாண்டுகளில் பெருமளவில் சுருங்கிவிட்டதாக அமித் ஷா கூறுகிறார். ஆனால், தற்போது பாகிஸ்தானாகவும், வங்கதேசமாகவும் (முந்தைய கிழக்கு பாகிஸ்தான்) இருக்கிற இரு நாட்டின் மக்கள் தொகை தரவுகளையும் அவர் தவறாக சேர்த்துக்கூறுவதாகத் தெரிவதால் இந்த புள்ளிவிவரம் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.

முந்தைய மேற்கு பாகிஸ்தானாக இருந்த, இப்போதைய பாகிஸ்தான் நாட்டின் இந்து மக்கள் தொகை 1951-ல் 1.5 முதல் 2 சதவீதம் வரை இருந்தது என்பதை மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரம் காட்டுகிறது. இந்த சதவீதம் குறிப்பிடுகிற அளவு மாறவில்லை என்பதையும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன….

பிபிசி தமிழ்-ன் முழுக் கட்டுரையை வாசிக்க:
♦ அண்டை நாட்டு மதச்சிறுபான்மையினர் குறித்து இந்தியா கூறுவது உண்மையா?

3 மறுமொழிகள்

  1. இக்கட்டுரையிலேயே முழுவிபரத்தையும் பதிவிட்டிருக்கலாம்.வாசகர்களுக்கு உதவியாக இருந்திருக்கும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க