மீப காலமாக நடிகர் ரஜினிகாந்த் பாரதிய ஜனதாவின் பாடலுக்கு ஏற்ப ஆடி வரும் நடனங்கள் நேயர்களுக்கு பெரும் கேளிக்கையாய் அமைந்துள்ளன. பாஜகவின் “ஆடுறா ராமா ஆடுறா” என்கிற கீர்த்தனையும், அதன் கையில் இருக்கும் வருமான வரித்துறை என்கிற குச்சியும் ரஜினியை ஆட்டுவிக்கும் அழகைப் பார்த்தால் குரங்காட்டிகளே பொறாமையில் வெந்து தான் போக வேண்டும். அனைத்து அசிங்கங்களும் ஆசன வாயில் ஊற்றெடுத்து மலத்தொட்டியில் சங்கமிக்கும் என்கிற இமயமலை பாபாவின் தத்துவத்திற்கேற்ப இதுவும் துக்ளக் விழாவில் இருந்தே துவங்கியது.

ஜனவரி 14-ம் தேதி நடந்த துக்ளக் இதழின் 50-ம் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் ராமன் – சீதை சிலைகளை அம்மணக்கட்டையாக தூக்கி வந்து பெரியார் செருப்பால் அடித்தார் என்றும், செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனது என்றும் பேசினார். இந்த செய்தியை அப்போது எந்த பத்திரிகையும் பிரசுரிக்காத நிலையில் துக்ளக் சோ அட்டைப் படத்திலேயே தைரியமாக வெளியிட்டாராம். அப்போது நடந்த திமுக அரசு பத்திரிகையை கைப்பற்றியதாம். அந்த இதழ் மீண்டும் அச்சடிக்கப்பட்டு “பிளாக்கில்” விற்றதாம்.

துக்ளக் விழாவில் ரஜினி. (கோப்புப் படம்)

ரஜினியின் பேச்சைத் தொடர்ந்து இந்த விசயத்தில் நடந்த உண்மைகள் என்னவென்பதை பெரியாரியவாதிகள் சமூக ஊடகங்களில் சொல்லத் தொடங்கினர். உண்மையில் 1971-ம் ஆண்டு சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் புராணப் புளுகுகளை தோலுரிக்கும் வகையில் படங்கள் எடுத்து வரப்பட்டுள்ளது. அப்போது சுமார் முப்பது பேர் கொண்ட ஜனசங்கிகள் (பாஜகவின் பழைய முக்காடின் பெயர்) கும்பல் ஒன்று பெரியாரை நோக்கி செருப்பை எறிந்துள்ளனர். அதில் ஒன்று ராமன் படத்தின் மீதும் விழுந்துள்ளது. ஆத்திரமடைந்த பெரியார் தொண்டர்கள் அதே செருப்பை எடுத்து ராமன் படத்தை அடித்து வந்துள்ளனர். இதை பின்னர் பெரியாரே ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார் – அதன் ஒலிப்பதிவையும் பெரியாரியவாதிகள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

ரஜினியின் விசமத்தனமான பேச்சை பலரும் குடிகாரனின் உளறல் என்று புறந்தள்ளினர். ஆனால், எந்தக் குடிகாரனும் குடித்து விட்டு பெண்டாட்டியைத் தான் அடிப்பானே தவிற போலீசை அடிக்கப் போக மாட்டான் என்பதை நாம் கவனிக்க வேண்டும். குடிகாரனின் கோட்டிக்காரத்தனத்தில் ஒரு காரியம் இருக்கும்; ரஜினிகாந்த் அடிப்படையிலேயே எச்சில் கையில் காக்காய் ஓட்டாத கஞ்சப் பிசினாறி என்பதும் காரியவாதி என்பதும் திரையுலகம் அறிந்த உண்மைகள்.

என்றால் எந்தக் காரியத்திற்காக ரஜினி இப்படி பேசியிருப்பார்? அதை பின்னர் பார்க்கலாம், இப்போது ரஜினியின் பேச்சு உண்டாக்கிய விளைவுகளைப் பார்ப்போம்.

படிக்க:
♦ கருத்துக் கணிப்பு : சி.ஏ.ஏ-வுக்கு ரஜினி ஆதரவு சரியா தவறா ?
♦ குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சியாட்டில் மாநகர கவுன்சில் தீர்மானம் !

ரஜினியின் பேச்சைத் தொடர்ந்து ராமனை தமிழக அரசியலின் நிகழ்ச்சி நிரலில் ஏற்ற பகீரதப் பிரயத்தனம் செய்தனர் பாஜகவினர். இராமனை இழிவு படுத்தி ஐம்பதாண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்து, பெரியாரைக் கண்டிக்க(!) அதே சேலத்தில், இராமன் செருப்பாலடிக்கப்பட்ட அதே இடத்தில் பேரணி ஒன்றை நடத்துவதாக அறிவித்தனர் இந்துத்துவவாதிகள். சொன்னபடி ஊர்வலமும் நடந்தது. சுமார் நாற்பது பேர் அந்த ‘பேரணி’யில் கலந்து கொண்டனர். ஐம்பதாண்டுகளுக்கு முன் முப்பது பேராக இருந்த சங்கிகளின் பலம் இப்போது சுமார் நாற்பதாக அதிகரித்திருக்கும் திடுக்கிடும் உண்மையை அன்று தமிழகம் அறிந்து கொண்டது.

போகட்டும். ஆனால், நம் சமூக வலைத்தளவாசிகள் வால்மீகி ராமாயண புத்தகத்தின் பக்கங்களுக்குள் பதுங்கிக் கிடந்த உண்மையான ராமனை கழுத்தில் துண்டைப் போட்டு மூத்திரச் சந்துக்கு இழுத்து வந்தனர். ராமன் ஒரு குடிகாரன் என்பதில் துவங்கி, அவன் பெண்டாட்டியை சந்தேகப்பட்டது, சம்பூகனை சதித்தனமாக கொன்றது வரை அலசி ஆராய்ந்தனர். சிலர் ராமனோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அவனது அப்பன் தசரதனின் ஆண்மைக் குறைவு வரை பிரச்சினையை எடுத்துச் சென்று ராமனின் பிறப்பையே சந்தேகத்துக்குரியதாக்கி விட்டனர்.

இந்த விவரங்களை எல்லாம் விரிவாக எழுத ஆசைதான். ஆனால், பதிவு அடல்ட்ஸ் ஒன்லியாக மாறும் அபாயம் இருப்பதால் தவிர்க்கிறோம்.

***

தற்கிடையே துக்ளக்கில் தான் படித்ததாக சொன்னதற்கு ஆதாரத்தை “இந்து குழுமத்தை” சேர்ந்த அவுட்லுக்கில் கண்டுபிடித்த ரஜினி தரப்பு வழக்கம் போல் ஒரு தெருவோர பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது; அந்த அவுட்லுக் பத்திரிகையின் கட்டுரையை எழுதியவரே தான் கேள்விப்பட்டதை எழுதியதாகவும், அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என பின்னர் அறிந்து கொண்டதாகவும் விளக்கமளித்தது போன்ற கூத்துகளும் நடந்து முடிந்தது. இதற்கிடையே துக்ளக் சோவே அப்போது (1971) நீதிமன்றத்தில் தனது “ராமன் கட்டுரைக்காக” மன்னிப்பு கேட்டு வழக்கில் இருந்து தப்பியது குறித்த தகவல்களும் வெளியானது.

சரி இப்போது காரியத்திற்கு வருவோம்.

2002 – 2005-ம் ஆண்டு காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் முறையாக வருமான வரியை சரியாகச் செலுத்தாதற்கு 66,22,436 ரூபாய் அபராதம் செலுத்த, முன்பே வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதனை எதிர்த்து ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், அந்த நோட்டீஸை ரத்து செய்தது. இந்த ரத்து நடவடிக்கையை எதிர்த்து வருமான வரித்துறை 2014-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

ஆறு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கின் விசாரணையில் கடந்த ஜனவரி 29-ம் தேதி ஆஜராஜ வருமான வரித்துறை வழக்கறிஞர், ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவான அபராதத் தொகையைக் கொண்ட வழக்குகளை இனி தொடர்வதில்லை எனவும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறுவது எனவும் முடிவெடுக்கப்பட்டதால், ரஜினிகாந்த் மீதான வழக்கை திரும்பப் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஒரு படத்திற்கு நூறு கோடிக்கும் மேல் வெள்ளையிலும், அதற்கும் மேல் கருப்பிலும் வாங்கும் ரஜினி வெறும் 66 லட்சம் ரூபாய்க்கு தன்னை நாக்பூர் சேட்டுக் கடையில் அடகு வைத்துக் கொள்வாரா? அந்தளவுக்கு அவர் பிசினாறித்தனம் கொண்டவரா என தமிழக மக்கள் வியந்து போனார்கள். சிவாஜி படத்தில் மூடப்பட்ட ‘ஆபீஸ் ரூமின்’ கூரையைப் பிய்த்துக் கொண்டு பறந்த கருப்புப் பண முதலைகளில் ரஜினியும் ஒருவர் என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். மேக்கப் போட்ட ரஜினி கதாபாத்திரத்தை விட்டு மேக்கப் போடாத ரஜினியை கும்மாங்குத்தாக குத்த விட்ட இயக்குனர் சங்கருக்கு ஆஸ்கர் என்ன நோபல் பரிசே கொடுக்கலாம்.

படிக்க:
♦ கபாலி நெருப்பா கருப்பா சொல்லுடா !
♦ செபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் !

ஆனால், மக்களை அதற்கு மேலும் வியப்பிலாழ்த்தும் தகவல்கள் ரஜினி வருமான வரித்துறையினருக்கு அளித்த விளக்கங்களில் இருந்தன. அதாவது, 2002-2003, 2004-2005 காலகட்டத்தில் தான் வட்டிக்குவிடும் தொழில் செய்ததாக வருமான வரித்துறையினருக்கு ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். சுமார் 2.63 கோடி ரூபாயை 18 சதவீத வட்டிக்கு விட்டு சம்பாதித்ததாகவும் ரஜினி வருமான வரித்துறையினருக்கு அளித்த விளக்கங்களில் இருந்தன.

ஆக விசயம் இதுதான் : வருமான வரித்துறையின் பழைய வழக்கில் இருந்து தப்பிக்கவும் புதிய வழக்குகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்கவும் தன்னை இந்துத்துவ பாசிஸ்டுகளிடம் வாடகைக்கு விட்டுள்ளார் ரஜினிகாந்த். காசு வாங்கிக் கொண்டு உடலை வாடகைக்கு விடும் தொழில் செய்பவர்கள் “விபச்சார அழகிகள்” என்பது தினத்தந்தி அகராதியின் விளக்கம்; இப்படி வழக்குக்காக தன்னையே வாடகைக்கு விடுவதற்கு அதே அகராதியில் வேறு ஏதாவது பெயர் இருக்கிறதா எனத் தேட வேண்டும்.

ஆனால், ரஜினிகாந்த் ஒரே குத்தில் இமயமலையை நிலாவுக்கு இடம் மாற்றும் அளவுக்கு ஆற்றல் பெற்றவர் என்பதை பரங்கிமலை ஜோதியில் படித்து பட்டம் பெற்ற ரஜினி ரசிகர்கள் உறுதி செய்து துண்டைப் போட்டுத் தாண்டுகிறார்கள். வயதான, அப்பாவி சுகர் பேசண்டுகள் பொய் பேச மாட்டார்கள் என்பதால் நாமும் அதை நம்புகிறோம். எனவே ரஜினி பயந்து கொண்டு மட்டும் தன்னை வாடகைக்கு விட்டிருக்க மாட்டார். ஒரு சுயவிருப்பத்தில் இருந்தே அப்படிச் செய்திருக்க வேண்டும்.

***

தான் சொந்த முறையிலேயே ஒரு சங்கி என்பதை ரஜினி தனது சமீபத்திய தெருவோர பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதி செய்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் சில அரசியல் கட்சிகளும் மதகுருக்களும் தங்கள் சுயலாபத்துக்காக போராட்டங்களை தூண்டி விடுகின்றனர் என்றும் கூறிய ரஜினி, போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தங்கள் பேராசிரியர்கள் மற்றும் பெரியவர்களிடம் கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் மாணவர்களின் மேல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தால் வாழ்க்கையே பறிபோகும் என்றும் அன்பாக மிரட்டியுள்ளார்.

மேலும், இந்தியாவிலேயே 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ரஜினிகாந்த் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று போயஸ் தோட்ட மூத்திரச் சந்தில் நின்று கூவிக் கொண்டிருந்த அதே நேரத்தில் பாராளுமன்றத்தில் அப்படி இரட்டைக் குடியுரிமை வழங்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இப்படி தான் பேசிய பின்னும் மத்திய அரசு மூஞ்சியில் அடிப்பது போல் அறிவிப்பதற்கு எதிராக ரஜினி கொந்தளிக்கவில்லை; ஏனெனில், மான ரோசம் பார்ப்பதன் விலை 66 லட்சம் என்பதை அறிந்தவர் சிவாஜிராவ் கெய்க்வாட்.

முசுலீம்களுக்கு ஆபத்தென்றால் முதல் ஆளாக வருவேன் என்று ரஜினி பேட்டியளித்த அன்று மாலை நடந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், திரு கெய்க்வாட்டின் சொந்த ஊரான பெங்களூரில் பங்களாதேஷிகள் என வாட்சப்பில் பரப்பப்பட்ட வதந்தியை அரசே நம்பி இந்திய முசுலீம்களின் 300 வீடுகளை அரசே பொக்லைன் இயந்திரம் வைத்து தகர்த்து தரைமட்டமாக்கிய போது எங்கே போனார் என்று கேள்வி எழுப்பினார் ஆளூர் ஷாநவாஸ்.

அப்போது மட்டுமல்ல, அதற்கு முன்பும் இசுலாமியர்கள் கும்பல் படுகொலை செய்யப்பட்ட பல்வேறு சந்தர்ப்பங்களிலும், சொந்த நாட்டிலேயே திறந்த வெளிச் சிறைக்கூடமாக ஒரு மாநிலமே மாற்றப்பட்டு கோடிக்கணக்கான காஷ்மீரி முசுலீம்கள் (இந்தியர்கள்) வதைக்கப்பட்ட போதும் என்ன செய்தார் ரஜினி என பொதுமக்கள் “சும்மா கிழிக்கின்றனர்”.

படிக்க:
♦ தினமலர் | திருமணம் – பொது வாழ்க்கை | கொரோனா வைரஸ் | அர்ஜுன் ரெட்டி | சாதி மறுப்பு | கேள்வி – பதில் !
♦ ரஜினி : எச்ச ராஜாவின் வெர்சன் 2 | துளைத்தெடுக்கிறது டிவிட்டர் !

***

ஜினிகாந்த் ஒரு பசுத்தோல் போர்த்திய கழுதைப்புலி என்கின்றனர் சிலர். அது உண்மையல்ல. தன் நெற்றியில் “பசு” என எழுதி வைத்துக் கொண்டு அதை எல்லோரும் நம்பி விடுவார்கள் என்கிற அசட்டு நம்பிக்கையில் ஜல்லிக்கட்டுக் காளைகளின் கூட்டத்திற்குள் நுழைந்த கிழட்டு நரிதான் ரஜினி.

ரஜினியின் நரை முடியில் தொங்கிக் கொண்டு நுழையப் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்.

அந்தளவுக்கு ரஜினி முட்டாளா என்று கேட்காதீர்கள். நாக்பூர் சேட்டுகள் அந்தளவுக்கு அறிவாளிகள்.

ரஜினியின் ஆட்டம் இந்த ஒரு தேர்தலோடு முடிந்து விடும் என்பதை அவர்கள் அறிவார்கள். (சந்தேகம் இருப்பவர்கள் சமீபத்தில் ரங்கராஜ் பாண்டே ஒரு விழா மேடையில் பேசியதைக் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ளலாம்) எனவே ரஜினி ஒரு குறுகிய கால திட்டம். ரஜினியின் அரசியல் நுழைவைக் கொண்டு இந்துத்துவத்தின் நீண்டகால நுழைவுக்கு ஆழம் பார்க்கிறார்கள்.

“குசு வரும் முன்னே, மலம் வரும் பின்னே” என்கிற பழமொழிக்கு ஏற்ப முதலில் ரஜினி, அவரைத் தொடர்ந்து இந்துத்துவ அரசியல் வருகை என்பதாக இருக்கும்.

மூக்கைப் பிடித்துக் கொண்டு சுத்தம் செய்ய தயாராய் இருப்போம் மக்களே.

மலம் நாக்பூர் சேட்டுகளுக்கு சொந்தம் என்றாலும் இந்த ஊர் நமக்குச் சொந்தமல்லவா?

– மித்ரன்

35 மறுமொழிகள்

 1. ” ஐம்பதாண்டுகளுக்கு முன் முப்பது பேராக இருந்த சங்கிகளின் பலம் இப்போது சுமார் நாற்பதாக அதிகரித்திருக்கும் திடுக்கிடும் உண்மையை அன்று தமிழகம் அறிந்து கொண்டது.”
  அருமையான பகடி.

 2. காவிகள் இந்த காரியக்கார ஜந்துவை தமிழகத்திற்கு ஆளுநர் ஆக்கினாலும் ஆச்சரியமில்லை…மித்ரன் சார் இப்படி தெளிவான நடையில் ரசினியாரை அம்பலப்படுத்தியுள்ளீர்களே… துக்ளக் படிக்காவிட்டால் இப்படித்தான் மக்களுக்காக சிந்திக்க தோன்றும்…

 3. இந்த ரஜினி 1996-இல் தமிழ்நாட்டை ஆண்டவனாலேயே காப்பாற்ற முடியாது என ஜெயலலிதாவுக்கு எதிராக பேசிய போது உங்களுக்கு இனித்தது. இப்போது கசக்கிறதா? சினிமாவில் நடிப்பு என்பதே கொஞ்சமும் இல்லாமல் ஸ்டைல் என்னும் பெயரில் கோமாளி சேட்டை செய்து வந்த இவரை ஜெயலலிதாவுக்கு எதிராக பேசினார், தோலின் நிறம் திராவிடம் என்பதற்காக வளர்த்து விட்டதே வாழ்ந்த வள்ளுவம் தான். இரண்டு முறை மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதுகள் வேறு. இப்போது அதன் பலனை அவர்கள் அனுபவிக்கிறார்கள். உங்களுக்கு என்ன வந்தது?. தமிழ்நாட்டில் துறை சார்ந்த வல்லுநர்கள் மிகவும் குறைவு. இருக்கும் சில பேரும் அரசியல் சூழ்நிலையால் தலை எடுக்க முடிவதில்லை. இப்போது விஜய் என்னும் ஒருவர் நடிகர் என்னும் பெயரில் தமிழ் சினிமாவில் இருக்கிறார். இவர் அழும் காட்சிகளில் அழுகிறாரா சிரிக்கிறாரா என்றே தெரிய மாட்டேன்கிறது. இவர்கள் மாதிரியானவர்கள் மலையாள சினிமாவின் வாயில் கதவை கூட தொடுவதற்கு லாயக்கில்லாதர்கள். இந்த வினவு தளத்திலேயே வில்லவன், அப்புறம் குகநாதன் ஆகிய கோமாளிகள் இருக்கிறார்கள். (இந்தக் கட்டுரையை எழுதிய மித்ரன் எப்படிப்பட்டவர் என தெரியவில்லை) இதிலே ரஜினியைப் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது? குவாட்டர் கோவிந்தனுடைய இடத்தை பிடிப்பார் போல.

  • //தமிழ்நாட்டில் துறை சார்ந்த வல்லுநர்கள் மிகவும் குறைவு. இருக்கும் சில பேரும் அரசியல் சூழ்நிலையால் தலை எடுக்க முடிவதில்லை. //
   பெரியஸ்வாமிக்கு ஒரு ‘வாரிய தலைவர்’ பதவி பார்சேல்…….

  • ஒரு கட்டுரை என்பது எந்த பக்கமும் சாராத நடுநிலைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.முதலில் பின்வரும் கட்டுரையை படிக்கவும் (editor also)https://www.vikatan.com/news/politics/3-years-of-o-panneerselvams-action-against-sasikalas-group?utm_source=mobile&utm_medium=whatsapp

 4. “ஐம்பதாண்டுகளுக்கு முன் முப்பது பேராக இருந்த சங்கிகளின் பலம் இப்போது சுமார் நாற்பதாக அதிகரித்திருக்கும் திடுக்கிடும் உண்மையை அன்று தமிழகம் அறிந்து கொண்டது.”

  மேற்கண்ட பகடியின் மூலம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாமர்த்தியத்தையும் தந்திரத்தையும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். இது வேண்டாம்.

 5. //இவர்கள் மாதிரியானவர்கள் மலையாள சினிமாவின் வாயில் கதவை கூட தொடுவதற்கு லாயக்கில்லாதர்கள். //
  ஆரியர்கள் வேறு பார்ப்பனர்கள் வேறு என்று பிரகடனப்படுத்தி ஆராய்சியாளர்களை தலைதெறிக்க ஓடச்செய்த அறிவுச்சுடர் பெரியஸ்வாமிக்கு மலையாளத்தில் மம்மூட்டி மோகன்லாலுக்கு அடுத்தபடியான சூப்பர் ஹீரோ விஜய்தான் என்ற சிறு விசயம் தெரியாமல் போனதை தமிழ் மக்கள் பெரிது படுத்தமாட்டார்கள்.

 6. “ஆரியர்கள் வேறு பார்ப்பனர்கள் வேறு என்று பிரகடனப்படுத்தி ஆராய்சியாளர்களை தலைதெறிக்க ஓடச்செய்த அறிவுச்சுடர் பெரியஸ்வாமிக்கு”

  ஆரியர்கள் வேறு. பார்ப்பனர்கள் வேறு. மரபணு ஆராய்ச்சி அதைத்தான் சொல்கிறது. வட இந்தியாவில் இருக்கும்
  ஐரோப்பிய தன்மை வாய்ந்த உடல் அமைப்பு கொண்ட பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்சாதியினர் மரபணுவில் கூட குறைந்தபட்சம் 70% சிந்துவெளி மக்களின் மரபணு தான். தென்னிந்திய பார்ப்பனர்களின் மரபணுவிலோ இன்னமும் சிறப்பு. பெரும்பாலும் திராவிட தன்மையே கொண்டிருக்கிறது. உண்மை இவ்வாறு இருக்கும்போது ஆரியரும் பார்ப்பனரும் ஒன்று என குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் மர மண்டைகள் தான் சாதிக்கும்.

  “மலையாளத்தில் மம்மூட்டி மோகன்லாலுக்கு அடுத்தபடியான சூப்பர் ஹீரோ விஜய்தான் என்ற சிறு விசயம் தெரியாமல் போனதை தமிழ் மக்கள் பெரிது படுத்தமாட்டார்கள்.”

  கம்யூனிஸ கொள்கையின் தாக்கத்தால் ஒரு காலத்தில் உலகையே வியக்கவைத்த எதார்த்த பாணி சினிமாக்களை கொடுத்த கேரளத்தின் இன்றைய தலைமுறை தமிழகத்தின் வணிக சினிமா நடிகர்களின் அடிமைகளாக ஆகியிருப்பது விசனத்துக்கு உரியது.

  • S.Periyasamy,
   //வினவு கும்பல் மாதிரியான கும்பல்கள் தமிழகத்தில் புரட்சி போராட்டம் என பித்தலாட்டம் பேசி காலம் தள்ள முடிகிறது. // (TNPSC ஊழல் பற்றிய பதிவு)
   //கம்யூனிஸ கொள்கையின் தாக்கத்தால் ஒரு காலத்தில் உலகையே வியக்கவைத்த எதார்த்த பாணி சினிமாக்களை கொடுத்த கேரளத்தின் //
   எதுக்கு இந்த இரட்டைக்குதிரை சவாரி..?

   • எது உண்மையோ அதை சொல்லித்தான் ஆகவேண்டும். . அரசியல் கொள்கை வக்கிரத்தால் உம்மாதிரியான சிறு நீர் மற்றும் மல ஆராய்ச்சியாளர்கள் உண்மைகளை கண்டுகொள்வதில்லை.

    • மலம் மற்றும் சிறுநீர் ஆய்வு பற்றிய உங்களது கீழான பார்வையை புரிந்து கொண்டோம். ‘போராட்டமே மகிழ்ச்சி’ என்கிற காரல் மார்க்ஸ்ன் கோட்பாட்டின்படி இயங்குகின்ற மற்றும் வியாபார நோக்கில்லாமல் வெகுமக்களால் மட்டுமே கடந்த பத்தாண்டுகளுக்கும் மேல் வெற்றிகரமாக நடத்தப்படுகிற வினவு உங்களுக்கு எவ்வாறான மன உளைச்சலை ஏற்படுத்துகிறது? நீங்கள் சிலாகிக்கும் கேரள கம்யூனிசத்தை விட சிறப்பான முறையில் கம்யூனிசத்தை நிறுவி விடுவார்கள் என்ற நெருடலா..?

  • //வட இந்தியாவில் இருக்கும்
   ஐரோப்பிய தன்மை வாய்ந்த உடல் அமைப்பு கொண்ட பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்சாதியினர் மரபணுவில் கூட குறைந்தபட்சம் 70% சிந்துவெளி மக்களின் மரபணு தான். தென்னிந்திய பார்ப்பனர்களின் மரபணுவிலோ இன்னமும் சிறப்பு. பெரும்பாலும் திராவிட தன்மையே கொண்டிருக்கிறது. //
   ஆதாரம் கொடுங்கள் ஸ்வாமி..

 7. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச ஆய்விதழ்கள் இரண்டில் வந்த ஆய்வுக்கட்டுரைகளை படிக்கவும் ராக்கிகரி மரபணு சம்பந்தப்பட்டது அதில்தான் எல்லா விடயமும் உள்ளன.

 8. பெரியசாமி சார்..ஆரியர் வேறு பார்ப்பனர் வேறாகவே இருக்கட்டும்..இந்திய மக்களை சாதியை வைத்து பிளந்து போடும் மனிதகுலத்தின் கேடான பார்ப்பனியம் குறித்து உங்கள் கருத்தென்ன? அந்த பார்ப்பனிய சித்தாந்தத்தை! தமிழக மக்களின் முதுகில் இறக்கி வைக்க காவிகளுக்கு தரகு வேலை பார்க்கும் குருமூர்த்தியின் அடியாள் காவிகளின் கையாள் கந்துவட்டி காரியவாதி ரசினியை அம்பலப்படுத்தினால் உங்களுக்கு ஏன் வருத்தம் வருகிறது?அவர் 1996ல் ஜெயா பற்றி ஒன்றும் சொல்லாமல் இருந்திருந்தாலும் தமிழக மக்கள் போயஸ் ராணியை முடக்கித்தான் போட்டிருப்பார்கள்.. ரசினியின் அதே நாறவாய் ஏன் ஜெயாவை தைரியலெட்சுமி என்று பாராட்டியது?ரசினியின் வாய் எப்போதும் துரோகம் நிறைந்ததுதான்…அவரை மித்ரன் போன்றோர் அம்பலப்படுத்தும் போது காவிகளுக்கு வேண்டுமாயின் எரியலாம்..உங்களுக்கு ஏன்?ஆர்எஸ்எஸ் அமைப்பை குறைத்து மதிப்பிடாதீர்கள் என்று மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள்..அதைப்போல நீங்கள் ரசினியையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்..ஏனெனில் அவர் ஆர்எஸ்எஸ்-க்காட்டிலும் ஆபத்தானவர்…மக்களின் விடுதலைக்கு வினவு முன் வைக்கும் கருத்துக்களை பரிசீலியுங்கள் தவறில்லை..இறுதியில் நீங்கள் தெரிவு செய்யும் ஏதேனும் ஒரு கொள்கையின் பின்னால் நில்லுங்கள்.. அது ஆர்எஸ்எஸ்-ஜ சுமக்கும் ரசினியின் பக்கமா அல்லது மக்கள் விடுதலையின் பக்கமா என்பதையும் தீர்மானியுங்கள்.. நாம் விவாத பலத்தைத் காட்டும் களம் அல்ல வினவு..ஆரோக்கியமான விவாதத்தின் வழியே மக்கள் விடுதலையை வென்றெடுக்கும் ஒரு புள்ளியில் நம்மை இணைய வைக்கும் மக்கள் இதயமே வினவு…இணைவீர்கள் என்ற நம்பிக்கையோடு…

  • ஜாதி என்பது ஹிந்து வேதங்களில் இல்லை அது உங்களை போன்ற கிறிஸ்துவர்களால் ஹிந்து மதத்திற்கு எதிராக பரப்பி விடப்பட்ட பல பொய்களில் மேலும் oru பொய்.

   ஹிந்து வேதங்களில் சொல்லப்பட்டு இருக்கும் வர்ணங்கள் தவறு என்றால் இன்று நவீன உலகில் இருக்கும் பியூன், கிளெர்க், மேனேஜர், பாஸ் போன்ற வேறுபாடுகளும் தவறு என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா ? நவீன உலகில் இப்படி வேறுபாடுகளை உருவாகும் வேலைகளை மனித இனத்திற்கு எதிரானது என்று சொல்விர்களா ?

  • ஜாதியை பற்றி பேசுவதற்கு முன்பு உங்கள் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோவில் ஏன் ஒரு தலித்திற்கு கூட நீங்கள் இடம் கொடுக்கவில்லை என்பதற்கு பதில் சொல்லுங்கள்… உடனே அவர்கள் கம்யூனிஸ்ட்கள் அல்ல நாங்கள் தான் உண்மையான கம்யூனிஸ்ட்கள் என்று கதை அளக்க வேண்டாம்… அனைத்து கம்யூனிஸ்ட்களும் சீனாவின் கைக்கூலிகள் தானே, வேறு வேறு பெயர்களை வைத்து கொண்டு இந்திய மக்களுக்கு துரோகம் இழைக்கும் கூட்டங்கள் தானே கம்யூனிஸ்ட்கள் அதனால் நேர்மையாக பதில் சொல்லுங்கள், ஏன் கம்யூனிஸ்ட் தலைமை பதவிகளில் தலித்திற்கு இடம் இல்லை ?

  • பெரியார் பற்றி பேசும் கூட்டங்கள் ஏன் பெரியார் அறக்கட்டளைக்கு ஒரு தலித்தை தலைவராக நியமிக்காமல் இருக்கிறீர்கள்… பதில் சொல்லுங்கள்.

   ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு முன்பு பெரியார் சிலையை வைக்க முடிந்த உங்களால் ஏன் ஒரு மசூதி முன்போ அல்லது ஒரு வேளாங்கண்ணி சர்ச் முன்போ பெரியார் சிலையை வைக்க முடிவதில்லை… பதில் சொல்லுங்கள்.

  • நான் பார்ப்பனியத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவன்.. அதுவும் உயிர்போகும் அளவுக்கு பாதிக்கப்பட்டவன். அதன் கோரத்தை நேரடியாக உணர்ந்தவன். இத்தனைக்கும் தமிழகத்தில் ஓரளவுக்கு செல்வாக்கான பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவன் நான். ரஜினி மாதிரியானவர்களை இன்னும் சொல்லப்போனால் சினிமா நடிகர்களை எந்த வகையிலும் ஆரம்பத்திலேயே அரசியலில் வளரவிட்டு இருக்கக்கூடாது இதுதான் என் கருத்து. அவரவர் வளர்ச்சியை தாங்கள் சார்ந்த துறையிலேயே வைத்துக் கொள்ளச் செய்யும் சூழ்நிலை தமிழகத்தில் இல்லை இதுதான் சோகம்

   • நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன், உங்கள் வார்த்தைகளில் சொல்வது என்றால் சூத்திரன் ஆனால் என் வாழ்நாளில் பள்ளி கல்லூரி ஆசிரியர்களில் ஆரம்பித்து நண்பர்கள் வரையில் பல பிராமணர்கள்… முக்கியமாக கணேசன் என்ற பிராமண ஆசிரியரின் தனிப்பட்ட அக்கறை எடுத்து தந்த பயிற்சியால் தான் நான் அறிவியல் கணக்கு போன்ற பாடங்களில் 100 க்கு 100 மதிப்பெண் வாங்க காரணம்.. என் ஆங்கில உச்சரிப்பை இன்று பல வெளிநாட்டினர் பாராட்டுவதற்கு காரணம் சிறு வயதில் அவர் தந்த பயிற்சி… இன்றும் எங்கள் கிராமத்திற்கு சென்றால் அவர் வீட்டிற்கு செல்லாமல் நான் வருவதில்லை, என்னையும் அவர்களின் பிள்ளைகளில் ஒருவராகவே பார்க்கிறார்கள்.

    என் வாழ்நாளில் வேறு எங்கேயுமே ஜாதி என்ற ஒரு விஷயம் எனக்கு தடைக்கல்லாக இருந்தது இல்லை. இன்னும் சொல்ல போனால் ஜாதி என்ற உணர்வு இல்லாமல் தான் எனது சூழல் என்னை வளர்த்து இருக்கிறது.

    ஜாதி பார்த்து பழகும் சூழலில் நான் இருந்தது இல்லை.

    ஜாதி வெறுப்பை மிக மோசமாக நான் பார்த்தது வினவு தளத்தில் மட்டுமே… புரட்சி பெருங்காயம் என்று போலித்தனமாக இவர்கள் சொல்லி கொண்டு பிராமண மற்றும் ஹிந்து மத எதிர்ப்பை(வெறுப்பை) தான் இவர்கள் வளர்க்கிறார்கள்.

 9. மனித இன விரோத, ஹிந்து விரோத கூட்டங்கள் எல்லாம் ரஜினி வார்த்தைகளால் கதறுவதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது.

  போராட்டம் வன்முறை மூலம் தமிழ் நாட்டையே நாசம் செய்ய நினைக்கும் கம்யூனிஸ்ட்கள் மற்றும் அனைத்து தேசவிரோத சக்திகளுக்கு எதிராக ரஜினியை ஆதரிக்க வேண்டியது அனைவரின் கடமை.

 10. சூத்திரன் என்ற வார்த்தை எங்களுடையது அல்ல மணி சார்..அது பார்ப்பனியம் நம் மீது சுமத்தி யிருக்கும் இழி பட்டம்..வேண்டுமாயின் அடுத்த முறை நீங்கள் கிராமத்திற்கு செல்லும் போது கணேசன் ஆசிரியரிடத்திலேயே கேட்டுப் பாருங்களேன்..மேலும் பார்ப்பனர் என்றாலே கெட்டவர்கள் என்று யாரும் சொல்லவில்லை…வந்தேறிகளான அவர்களால் அவர்களின் மேன்மைக்காக வகுக்கப்பட்ட கேடான பார்ப்பனியம் என்ற கொள்கைதான் ஆபத்தானது என்கிறோம்..அனைவரும் இந்து என்றால் அவாளுக்கு மட்டும் அக்ரஹாரம் நமக்கு ஏன் சேரி என்கிறோம்.. இந்து என்றாலே சாதிதான் என்கிறோம்..நீங்கள் இல்லை என்று மறுப்பீர்களேயானால் ஆசிரியர் கணேசன் அவர்களிடத்தில் மனம் விட்டு பேசி அவாள் சமூகத்திலேயே பெண் எடுக்கவோ பெண் கொடுக்கவோ கேட்டுப் பாருங்களேன்..அதை சாதி ஒழிப்பு நிகழ்வாக நடத்தச் சொல்லுங்களேன்… இன்றளவும் மலக்குழியில் சேரி இந்துதானே இறங்குகிறான்..இன்றுமுதல் அக்ரஹார இந்து இறங்லாமா என்று கேளுங்களேன்…அறிவியலையும் கணக்கையும் கறாராக சொல்லிக்கொடுத்த அவரிடத்தில் சூத்திரன் என்றால் என்ன ஐயா..என்று கேட்டுத்தான் பாருங்களேன்.. பார்ப்பனியம் பற்றியும் தெரியாமல் கம்யூனிச மும் புரியாமல் வினவு “கூட்டங்களை”பற்றியும் அறியாமல் கமல் மாதிரி புரியாமல் பேசுவதை கொஞ்சமேனும் பரிசீலியுங்களேன்..

  • ஜாதியை பற்றி உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.

   என் பார்வையில் ஹிந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணங்கள் மனித இயல்பை பற்றிய மிக சிறந்த ஆராய்ச்சி என்று சொல்வேன். வேதங்களின்படி பிறப்பால் அனைத்து மனிதர்களும் சூத்திரர்கள் தான், அதன் பிறகு அவர்களின் அறிவு, குணம், ஆர்வங்கள் போன்றவற்றின் அடிப்படையில் தான் நான்கு வர்ணங்கள் பிரிகிறது.

   ஒரு சிலர் இயல்பிலேயே மிக சிறந்த தலைமை பண்பு மற்றும் ஆளுமை உள்ளவர்களாக இருக்கிறார்கள் அந்த காலத்தில் இவர்கள் அரசர்களாகவும் படைத்தளபதிகளாகவும் இருந்து இருக்கிறார்கள். சத்திரியர்கள் இவர்கள் ராட்சச குணத்தின் அடிப்படையில் வருவார்கள்.

   இராட்சத குணம் உள்ளவர்கள் ஊக்கம், வீரம், ஞானம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல் போன்ற குண இயல்புகளை உடையவர்கள். இன்று நீங்கள் பார்க்கும் பல தலைவர்களிடம் இந்த குணங்களை நீங்கள் பார்க்கலாம்.

   உங்களை போன்ற வினவு கூட்டத்தினருக்கு ஒரு சவால் விடுகிறேன், இந்தளவுக்கு மனித இயல்பை பற்றிய ஒரு சிறந்த குறிப்பை உலகின் வேறு எந்த சமூகத்திலாவுது பார்த்து இருக்கிறீர்களா ?

    • நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் என்னிடம் திரும்ப திரும்ப கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறீர்கள். முதலில் கம்யூனிஸ்ட்கள் பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு பிறகு என்னிடம் கேள்விகளை கேளுங்கள்.

     • சார் நான் கம்யூனிஸ்ட் இல்லை. உங்கள் கேள்விக்கு தோழர்கள் பதில் அளிப்பார்கள்( முன்பே விளக்கியுள்ளார்கள் பல பதிவுகளில் ). நீங்கள் சாதி பற்றி கூறியதில் ஒரு சந்தேகம் கேட்டேன் . அதற்கு பதில் கூற முடியுமா .

  • சூத்திரர் என்று சொல்லும் மனிதர்களிடம் இருக்கும் குணங்கள் காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை செய்தல், இரத்தல், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை உணர்வு, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்தல்…

   இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம்… பிறப்பால் தலித் என்று சொல்பவர்களிடம் கூட பிராமண குணங்கள் உள்ளதை நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன்.

   அதே போல் பிறப்பால் பிராமணர் என்று சொல்லிக்கொள்பவர்களிடம் சூத்திர குணம் இருப்பதை பார்த்து இருக்கிறேன். அவர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்கிறேன்.

   அந்த காலத்தில் மனிதர்களை குணத்தின் அடிப்படையில் தான் பிரித்தார்கள் அது பிற்காலத்தில் நான்கு வர்ணங்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு பிறப்பின் அடிப்படையில் மாறி ஏற்ற தாழ்வுகள் உருவாக்கி விட்டது.

   ஹிந்து மதத்தில் சீர்திருத்தம் இந்த இடத்தில் தான் செய்ய வேண்டும்…

  • பிராமணர்கள் வந்தேறிகள் என்ற பொய்களை திட்டமிட்டு உங்களை போன்ற கிறிஸ்துவர்கள் பரப்பி கொண்டு இருக்கிறீர்கள், உங்களின் இந்த செயல் தவறு.

   மேலும் உங்கள் வந்தேறி கிறிஸ்துவ மதம் உலகம் முழுவதுமே பூர்விக மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அழிக்க இப்படிப்பட்ட பல பொய்களை சொல்லி தான் அழிவை கொண்டு வந்து இருக்கிறார்கள்.

   இந்தியாவிற்கே வராத செயின்ட் தாமஸ் இந்தியா வந்தார் அவரை ஒரு பிராமணர் கொன்று விட்டார் என்ற பொய்யில் ஆரம்பித்து பல பிராமண வெறுப்பு செயல்களை செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

   தமிழகத்தில் கிறிஸ்துவம் செய்து கொண்டு இருக்கும் செயலுக்கு பெயர் “Cultural Genocide” கிறிஸ்துவ மதத்தை பரப்ப கொலைகளையும் செய்ய தயங்காதவர்கள்… உலகம் முழுவதும் பல ஆதாரங்கள் இதற்கு இருக்கிறது.

   கிறிஸ்துவ அமைப்புகளின் முகமூடிகள் தான் தமிழ் உணர்வாளர்கள், வினவு கூட்டங்கள், திக மற்றும் பலர்.

 11. Mr.Nepolian – Iam an Iyer. I will not support the perverted acts and speech of H.Raja and Gurumurthy. I have questions to “Vinavu” also.
  1)CPM has published a book itself on 2G scam . There was an Himalayan loss to govt cannot be disputed by anybody. Simple fact is that 3G auction fetched Rs 1.04lakh crore to govt against less than Rs 12000 crore by A.Raja in distribution of 2G in the price of year 2008. Is the book published by CPM is a lie ? If not why it should align with DMK now?. If “vinanu” is serious that people are looted by Corporates, why you are not opening your mouth now on what A.Raja gave such huge benefit to Corporates on golden platter?
  2)Why CPM is opposing Cong and fielding a candidate against Rahul and at the same time keep saying in TN that they want to make Rahul as PM ?
  3)You say that we people are “vandherigal”. Even it is the fact, it should have happened more than 1000 years back. Still our contribution to Tamil (U.V.Saminatha Iyer), State (Industrialization by R.venkatraman), Nation (It was R.venkatraman who brought Abdul kalam from ISRO to DRDO and mooted the parallel development of Missilies which Abdul Kalam himself has said in his biography). Better you read those too with “Vinavu”.
  4)You have asked whether any brahmin is doing scavenging. May I know how many in your family are doing it now? Please do understand it is a question of mere supply and demand. On a day if that is the necessity, brahmin also will get in to that profession. Don’t raise this stupid question as if people of families of you, Veeramani, Nakkeeran Gopal are involved in that job now.
  5)My daughter is married to a non-Iyer boy. Like that how many BC people like you have alliance with SC? Why then incidents like Darmapuri. Are you not feeling bad to advise Mr.Manikandan to seek the girl of his teacher.
  First you please explain the difference between CPI and CPM and talk other things then.

 12. I agree on the point that Rajini is a opportunist which general public also aware. He will fade away the moment he contest an election. But by and large he may not contest an election in my opinion. Mr.Stalin who could not even add even 86 and 9 also not my choice for CM. In the present circumstances, EPS may be the better among others.

 13. திரு கணேசன் வணக்கம்…ஒரு கருத்துக்கு எதிர் கருத்தைப் பதிவு செய்வதற்கு ஐயர் என்ற அடையாளம் எதற்கு?பாம்பும்நோகக்கூடாது பார்ப்பனிய மும் நோகக்கூடாது அதை அடிக்கும் கோலும் நோகக்கூடாது எனும் ரீதியில் உள்ளது உங்கள் பதில் இன்றில்லை காலம் காலமாக இந்த சாமர்த்தியமான நயவஞ்சகத்தால்தான் உயிர் வாழ்கிறது பார்ப்பனியம் எனும் நச்சுக்கொள்கை…..போகட்டும்..எச்சு.ராஜாவையும் குருமூர்த்தி யையும் ஆதரிக்காத நீங்கள் அவர்களை அரசியல் ரீதியாக கண்டித்து எத்தனை முறை வினவிலோ அல்லது பொது வெளியிலோ கருத்து கூறியுள்ளீர்கள்..அறியலாமா?cpm,cpi கட்சிகள் கம்யூனிசக் கொள்கைகளை எல்லோருக்குமான அரசியலாக நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றம் வழி நுழைந்து அங்கேயே சிக்கிக்கொண்டு விட்ட கம்யூனிசக் கட்சிகள்..அவர்களின் இந்த தவறான அரசியல் பார்வையை மிகச் சரியான அரசியல் கண்ணோட்டத்தோடு வினவு நிறைய கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது நீங்கள் கேட்கும் 2ஜி உள்பட..அவற்றை நீங்கள் படித்திருக்கிறீர்களா?அப்படி படித்திருந்தால் அவ்விரண்டு கட்சிகளைப்பற்றியும் வினவைப் பற்றியும் நீங்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்க முடியும்…பார்ப்பனர்கள் வந்தேறிகள் என்று சொல்லும் போது உங்களுக்குள் ஏற்படும் வலி இந்த மண்ணின் மைந்தர்களான இஸ்லாமியர்களை எச்சு.ராஜா உள்ளிட்ட காவி வகையறாக்கள் வந்தேறிகள் என்று தூற்றும் பொழுது கணேசன் அதைக் கண்டித்து எழுதியிருக்கிறாரா?அல்லது மணி சாரை எழுதச் சொல்லி கட்டளைதான் இட்டாரா? நான் என் வீட்டில் தினமும் கக்கூஸ் கழுவிக்கொண்டு தான் இருக்கிறேன்..நான் மட்டுமல்ல பிராமணாள் உள்ளிட்ட அவரவர் வீட்டில் அனைவரும் கழுவிக்கொண்டு தான் இருக்கிறார்கள்..அதுவா கேள்வி?கருவறையில்பறையரும் கழிவறையில் பார்ப்பனரும் அரசு வேலையாகவே மாற்றப்பட்டு பணிபுரிய வேண்டும் என்கிறேன்.. கணேசன் என்ன சொல்கிறார் இதற்கு? ஏற்கிறாரா அல்லது அல்லது மலக்குழிக்குள் மணிகண்டனை இறங்கச்செய்து ஆழம் பார்ப்பாரா?பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் செய்ய பிராமணர் மட்டும் விண்ணப்பிக்கவும் எனும் தீண்டாமையை பஞ்சாமிர்தம் செய்ய பறையரும் விண்ணப்பிக்கலாம் என்று மாற்ற வேண்டும் என்கிறேன்..அப்படி அவர் கையால் செய்யும் பஞ்சாமிர்தத்தை பிரசாதமாக வாங்கிச் சாப்பிட எங்கள் வீட்டார் ரெடி.. நீங்களும் உங்கள் வீட்டாரும் ஏற்பீர்களா..உங்கள் மகளுக்கு பிராமணரல்லாத ஒருவரை திருமணம் செய்ததை நான் பாராட்டுகிறேன்..ஆனால் தர்மபுரியில் இளவரசனும் உடுமலையில் சங்கரும் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணம் பார்ப்பனியம் என்ற நச்சுக் கொள்கைதான் காரணம் என்கிறேன்..உடுமலை சங்கரும் இந்து, நீங்களும் இந்து, கண்டித்தீர்களா என்கிறேன்..மணிகண்டன் சாரிடம் நான் தகாத ஆலோசனை சொல்லவில்லை…சூத்திரன் என்பதை அவர் புரியவேண்டும் என்றால் இப்படி முயற்சித்து பாருங்களேன் என்றேன்..அவரோ ஹிந்து மதத்தை சீர்திருத்தம் செய்ய கிளம்பியிருக்கிறார்… நீங்கள் வேண்டுமாயின் அவருக்கு “பிரகஸ்பதி” யை பற்றி சொல்லிப் பாருங்களேன்..உங்களுக்கும் தெரியும்தானே? அப்புறம் இறுதியாக ரசினிக்குப்பதில் இபிஎஸ் வரலாம் என்கிறீர்கள்..மன்னிக்கவும் இதை விட stupid ஆக என்னால் எழுத இயலாது..பின்குறிப்பு:பிறப்பால் பார்ப்பனர் என்பதாலேயே அவர்களை புறந்தள்ள இயலாது..பிறப்பு சிந்தனையை தீர்மானிக்காது..சமூகப் பார்வையே சிந்தனையை தீர்மானிக்கும் என்ற வினவின் அறிவியல் கட்டுரையை மணிசாருக்கு தெரியாமலாவது படித்து விடுங்கள்..ஏனெனில் அவருக்கு எப்போதுமே வினவின் உண்மைகள் சுடும்..

  • //அவருக்கு எப்போதுமே வினவின் உண்மைகள் சுடும்..// நல்ல காமெடி

   வினவிற்கும் உண்மைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது ? இவர்கள் எல்லாம் பொய் என்று தெரிந்தே பொய்களை பரப்புபவர்கள் கேட்டால் பொய் சொல்லி மக்களை அழிவில் தள்ளுவதற்கு பெயர் தான் புரட்சி புடலங்காய் என்று சொல்வார்கள்.

   கவுரி லங்கேஷ் தனது கடைசி டீவீட்டில் வினவு கூட்டங்களின் முகத்திரையை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

 14. மணி சார் உங்கள் கருத்துக்களை மட்டறுத்தல் இன்றி வெளியிட்டு வினவு உங்களுக்கு உண்மையாகத்தான் இருக்கிறது..நீங்களோ கவுரி லங்கேஷ் அவர்களை ரத்த வெள்ளத்தில் சிதைத்த காவி பயங்கரவாதிகளுக்கு உண்மையாய் இருக்கிறீர்கள்…புரட்சி,புடலங்காய் இரண்டுமே நல்லதுதான்..ஒன்று உடலுக்கு இன்னொன்று நாட்டிற்கு…வீட்டிற்கும் நாட்டிற்கும் உடலுக்கும் கேடு மது மட்டுமல்ல…மணிகண்டர்களும்தான்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க