கொல்கத்தா, பார்க் சர்க்கஸில் நடந்து வரும் போராட்டத்திற்காக திவிஜேந்திரலால் ராயின் (Dwijendralal Roy) புகழ்பெற்ற பாடலான “தனோ தன்யோ புஷ்போ போராவிலிருந்து – இது தான் நான் பிறந்த மண், நான் மரணிக்கும் மண்ணாகவும் இது இருக்கட்டும்” என்ற வரியுடன் ஒரு சுவரொட்டியை ஒரு இளம்பெண் தயாரித்துக் கொண்டிருந்தார்.

வங்கத்தின் கலாச்சார எதிர்ப்பென்பது அன்றாட பாடல்களையும் எதிர்ப்பிற்கான தூண்டுதலாக மாற்றுகிறது. டி.எல். ராயின் கவிதைகள், பாடப்படாத தாகூரின் ஜன கண மன வரிகள் மற்றும் ரகுபதி ராகவ் ராஜா ராமின் மந்திரங்கள் தெருக்களிலும் கூட்டங்களிலும் கேட்கப்படுகின்றன. தேசியவாத அல்லது பக்தி பாடல்கள் போராட்டத்திற்கான வடிவமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க தருணமிது.

வங்காள இசைக்கலைஞரான மௌசுமி போமிக் (Moushumi Bhowmik).

“போராட்டம் என்பது மக்களை நடவடிக்கைக்குத் தூண்டுவதோ அல்லது சில உயர்ந்த இலட்சியத்தை அடைவதோ மட்டுமல்ல கூட்டுப்பாடலைப் பற்றியதும் கூட. தற்போதைய தருணத்தில் உறுதியாக நீங்கள் இருக்கிறீர்கள். அன்பு ஒருபக்கமும் வெறுப்பு இன்னொரு பக்கமுமாக ஒன்றை மற்றொன்று தீவிரப்படுத்துகிறது” என்றார் வங்காள இசைக்கலைஞரான மௌசுமி போமிக் (Moushumi Bhowmik).

ஜனவரி பிற்பகுதியில் மௌசுமியின் ஜாதவ்பூர் அடுக்குமாடி வீட்டில் நாங்கள் சந்தித்தோம். கொல்கத்தாவின் குளிர்கால சூழலில் நிலவும் சீற்றம், பதட்டம் ஆகியவற்றை தனிச்சிறப்பான இசை ஒன்றாக்குகிறது. ​​நாங்கள் அப்போது விவாதித்த பாடலின் இரண்டு வரிகளை அவர் பாடினார். இசைக்கருவிகள் இல்லாமல் ஆழமான மெல்லிசை போன்ற அவரது குரல் அறை முழுவதும் எதிரொலித்தது. இது அவருடைய குரலை அறிந்த எவருக்கும் நன்றாகத் தெரியும்.

“நான் குறிப்பாக பாடல்களை மரபுரீதியானதாகவோ அல்லது அதற்கு மாறானதாகவோ அனுகவில்லை” என்று அப்போது அவர் கூறினார். “இசை இயல்பாக சேர்ந்து வருகிறது. நீங்கள் வளரும் பருவத்தில் இந்த பாடல்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்கள் அவற்றை (நீண்ட காலமாக) பாடாமல் இருந்திருக்கலாம். நீங்கள் யாரிடமிருந்தும் அவற்றைக் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும், உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவை ஏராளம்.”

சில சூழ்நிலைகள், அந்த பாடல்களின் நினைவுகளைத் தூண்டும் என்று மௌசுமி விளக்கினார்.

குடியுரிமை (திருத்த) சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவெட்டிற்கு எதிரான இயக்கம் அத்தகைய தூண்டுதலாக உள்ளது. மேலும் எல்லைகளையும் மொழிகளையும் தாண்டி மக்களைச் சென்றடைய செய்கிறது. ஜனவரி 18 அன்று பிலிப் மோரின் (Philip More) கலாச்சார நிகழ்ச்சியில் அவரது சொந்த வங்க பாடல் வரிகளையயும் ஜோன் பேஸின் (Joan Baez) ஒரு பாடலையும் இசைத்தார்.

படிக்க:
♦ கொல்கத்தா : ஒரு மாதமாக பெண்கள் தலைமையில் தொடரும் போராட்டம் !
♦ ’தேஷ துரோக’ பயணியை ‘போட்டுக்கொடுத்த’ உபேர் ஓட்டுநருக்கு விழிப்புணர்வு குடிமகன் விருது !

பூமியின் களைப்புற்ற தாய்மார்கள் அனைவரும் இறுதியாக ஓய்வெடுக்கட்டும்
நாம் அவர்களது குழந்தைகளை கைகளில் ஏந்திக்கொண்டு நம்மால் முடிந்ததைச் செய்வோம்

வயலில் சூரியன் மறையும் போது
அன்பிற்கும் இசைக்கும் நாம் பலன் தருவோம்
பூமியின் களைப்புற்ற தாய்மார்கள் ஓய்வெடுக்கட்டும்

“என்னுடைய தாயின் முகத்தில் நிழலொன்று ஆழமாக விழுகிறது – இது நான் முப்பதாண்டுகளுக்கு முன்பு எழுதிய முதல் பாடல்” என்று அவர் விளக்கினார்.

அந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் ஒரு பாடலை அவர் நினைவு கூர்ந்தார். “அங்கே அமர்ந்திருக்கும் அனைத்து தாய்மார்களையும் நான் நினைத்தேன். நாம் மண்ணை தாயாக எப்படி கருதுகிறோம். மண்ணுடனான நம்முடைய சொந்தம் அது” என்று கூறினார்.

அரசின் குடியுரிமை பற்றிய வரையறையுடன் இந்த சொந்தம் என்ற கருத்து முரண்பட்டுள்ளது. மௌசுமியின் இந்த கருத்தாக்கத்தை அவரது உழைப்பு பெரும்பங்கு செழுமைப்படுத்தியுள்ளது. 2003 -ஆம் ஆண்டில் ஒலிப்பதிவாளார் சுகந்தா மஜும்தாருடன் இணைந்து அவர் உருவாக்கிய பயணக் காப்பகத் திட்டம் (The Travelling Archive project) வங்காள நாட்டுப்புற இசையின் களப்பதிவுகளை வங்கதேசம், மேற்கு வங்கம், அசாமிற்கு அருகிலுள்ள பகுதிகள் மற்றும் வங்கதேசத்தில் குடியேறிய கிழக்கு இலண்டன்வாசிகள் கேட்பதற்கான ஒரு கூட்டு முயற்சியாகும். “நான் தேசம் என்ற வரயறைக்கு அப்பால் பணியாற்றி வருகிறேன்” என்று அவர் கூறினார்.

அவர் தனது வாழ்நாள் முழுவதும் எல்லைகளைத் தாண்டி பயணம் செய்துள்ளார்: “இடம் பெயர்ந்து செல்வதும் தங்குவதற்காக ஒரு வீட்டைத் தேடுவதும் எப்போதும் எனது வேலைக்கு மையமாக இருந்தன. இந்த மண்ணிற்கு சொந்தம் என்ற உணர்விலிருந்து ஜன கண மன பாடலை நான் பார்க்கிறேன். அந்த மெல்லிசையும் பாடல் வரிகளும் நம்முடைய நினைவில் பதிக்கப்பட்டுள்ளன. இந்த பாடல் நமக்கு சொந்தமானது.” என்றார்.

தேசிய கீதத்தின் பாடப்படாத வரிகளை கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா கடந்த மாத தொடக்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் புதுப்பித்தார். ஜனவரி 3 அன்று ஒரு முகநூல் பதிவில் மௌசிமி எழுதினார்: “நான் டி.எம். கிருஷ்ணாவின் ‘பாடப்படாத தேசிய கீதத்தை’ காலையிலிருந்து கேட்கிறேன். நான் உண்மையில் உட்கார்ந்து அந்த தேசிய கீதத்தைக் கேட்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை (இது தேசிய கீதம் அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்துகிறார். ஆனால் அவை நீண்ட கவிதையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டடு பாடிய வரிகள்); கேளுங்கள், மீண்டும் கேளுங்கள், சிந்தியுங்கள்… ”

படிக்க:
♦ அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு ! – மாநாடு நிகழ்ச்சி நிரல்
♦ கொரோனா வைரஸ் குறித்த மூடநம்பிக்கைகளும் ! உண்மைகளும் !

“நாங்கள் அந்த வரிகளை ஒன்றாகப் பாடினோம். பலரும் எங்களுடன் சேர்ந்து கொண்டனர். நாங்கள் அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம், பழைய நண்பர்களைச் சந்தித்தோம், புதியவர்களை உருவாக்கினோம்” என்று அவர் விவரித்தார்.

ஒரு சமயத்தில், காவல்துறையின் பின்னால் அவர்கள் நடந்து கொண்டிருந்தனர். “நாங்கள் பாடியபோது, ​​காவல்துறை திரும்பிப்பார்த்தது – அநேகமாக பாடலை அவர்கள் விரும்பியிருக்கலாம். “நீங்களும் ஏன் இந்த பாடலைக் கற்றுக் கொண்டு எங்களுடன் பாடக்கூடாது?” என்று அவர்களில் ஒருவரிடம் கேட்டேன். உடனே போலீஸ்காரர்கள் நாங்கள் முன்னே போக வழி ஏற்படுத்தி கொடுத்தார்கள்.”

அடுத்ததாக பார்க் சர்க்கஸ் மைதானத்தில் பாடல் வரிகளைப் பாடினார்கள். மக்களும் அவர்களுடன் சேர்ந்து பாடினார்கள்.

ஆனந்த பஜார் செய்தித்தாளில் வந்திருந்த ஒரு புகைப்படத்தையும் தலைப்பையும் மௌஷுமி நினைவு கூர்ந்தார். அது இப்போதும் அவரது நினைவில் பதிந்துள்ளது:

“அது ஷாஹீன் பாக்கில் 20 நாள் குழந்தையை வைத்திருக்கும் ஒரு தாயின் புகைப்படம். அவர் அங்கே அமர்ந்திருக்கிறார். மேலும் கீதத்திலிருந்து பின்வரும் வரிகள் புகைப்படத்தின் கீழே இருந்தன: நாடு அழிந்துபோகும் இரவுகளின் இருண்ட காலங்களில் / இரக்கமுள்ள தாயே நீதான் அசையாமல் விழிப்புடன் அருள்கூர்ந்து எங்களைப் பாதுகாத்துக்கொண்டிருந்தாய்”… இது மைக்கலாஞ்சலோவின் தாயும் சேயும் போன்றது. “

டி.எல். ராயின் “ஏராளமான தானியங்கள், பூக்கள் மற்றும் செல்வங்கள் நிறைந்த எங்கள் மண்” பாடலில் மௌசுமி இந்தியாவை குறிக்கும் இரண்டு வரிகளை எடுத்து இந்தியாவை அன்பு மற்றும் பாசத்தின் மண்ணாகத் தேர்ந்தெடுத்தார்:

“தாய்மார்கள் மற்றும் சகோதரர்களிடமிருந்த இது போன்ற பாசத்தை நாம் எங்கே காண முடியும்
நான் உங்களை என்னுடைய இதயத்தில் தாங்குகிறேன்
இதுதான் நான் பிறந்த மண், நான் மரணிக்கும் மண்ணாகவும் இது இருக்கட்டும்.”

“நாங்கள் இந்த வரிகளை மீண்டும் மீண்டும் பாடி அவர்களையும் பாடும்படி மாற்றினோம். இது தான் நாம் உண்மையாக நாம் விரும்பும் தன்மையான நாடு.”

தேசிய மேலாதிக்க கருத்தாக போராட்டக்காரார்கள் கருதிய “எங்கள் நாடு எல்லா நாடுகளின் ராணி” என்ற வரிகளைப் பாடுவதை பாடகர்கள் தவிர்த்தனர்.

படிக்க:
♦ CAA –க்கு எதிராக மலெர்கொட்லா வீதிகளில் திரண்ட 20,000 பஞ்சாப் உழவர்களும் பெண்களும் !
♦ ரஜினி : கிறுக்கா … காரியக் கிறுக்கா ?

ராகுபதி ராகவ் ராஜா ராம் போன்ற பாடல்வரிகளையும் மௌசுமி தனது போராட்ட இசை வடிவத்திற்கு கொண்டு வந்துள்ளார். குறிப்பாக காந்தியுடனான தொடர்புக்காக அறியப்பட்ட பாடல்கள் வழக்கத்திற்கு மாறான மற்றொரு தேர்வாகும். கபீரின் பாடலை பாடலாமா அல்லது பார்க் சர்க்கஸில் பார்வையாளர்களுக்கு சொந்தமான மற்றொரு பாடலை பாடலாமா என்று பாடகர்கள் குழு மௌசுமியின் வீட்டில் விவாதித்தது.

“ரகுபதி ராகவ் ராஜா ராம்… எங்களில் ஒருவர் பாட ஆரம்பித்தார். இந்த பாடலை நாங்கள் பாட வேண்டும் என்று நினைத்தோம். ஃபைஸைச் (ஃபைஸ் அகமது ஃபைஸ்) சுற்றியுள்ள சர்ச்சையும், அல்லாவைப் பற்றிய குறுகிய வாசிப்பும் இருந்த போதுதான் இது நடந்தது. ரகுபதி ராகவின் ஒரு வரி “ஈஸ்வர் அல்லா, எங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுங்கள்” என்று வரும். ‘பகவான்’ என்ற வார்த்தையில் எல்லாம் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அது உடைந்து போனதொரு தருணம். அது அழகானதாக இருந்தது” என்று மௌசுமி விளக்கினார்.

ஆனால் அந்த இயக்கத்தில் உள்ள அனைவரும் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. சிலர் இராமனைப் பற்றிய புகழ்மாலையை போராட்டக்களத்திற்கு கொண்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். “இஸ்லாமிய மத முழக்கங்களுடன் உங்களுக்கு சிக்கல்கள் உள்ளன என்று சிலர் வாதிட்டனர். இதுபோன்ற முழக்கங்களை எழுப்ப வேண்டாம் என்று போராட்டக்காரர்களிடம் சொன்னீர்கள். ஆனால் இப்போது மதச்சார்பற்ற மக்கள் ரகுபதி ராகத்தை புரிந்து கொண்டுள்ளனர்”.

ஜே.என்.யூ. -வில் நடந்த வன்முறையை எதிர்த்து ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பேரணியில் மௌசுமி பாடப்படாத கவிதை வரிகளை முதன்முதலில் பாடினார்.

காந்தியின் இராமனை அடிப்படையாக வைத்தும் போராட்டம் நடத்தினார்கள். இருப்பினும், “இந்த பாடல் ஒத்துழையாமை இயக்கத்தில் பிறந்தது. அந்த நேரத்தில் முதல் பதிப்பு மட்டுமே பாடப்பட்டது. நேரமும் முக்கியமானது” என்று மௌசுமி பதிலளித்தார். “என்னைப் பொறுத்தவரை இது ஒரு புரட்சிகரமான பாடல்” என்று மேலும் கூறினார்.

1946 -ஆம் ஆண்டு நவகாளி கலவரத்தின் போது, ‘ஈஸ்வர் அல்லாஹ் தேரோ நாம்’ என்ற வரிகளை காந்தியின் கொள்ளு மருமகள் மிருதுலா எழுதியுள்ளார் என்று அறிஞர் திரிதீப் சுஹ்ருத் கூறுகிறார்.

பயண காப்பகங்கள் திட்டத்தில் இருந்தபோது, வங்கதேசத்தின் கிஷோர் கஞ்சைச் சேர்ந்த சங்கர் தேவு-டன் நடந்த சந்திப்பைப் பற்றி மௌசுமி என்னிடம் கூறினார்: “லவ, குச, சீதா மற்றும் இராமன் ஆகியோரின் கதையை அதன் அனைத்து விதங்களிலும் சங்கர் பாடினார். பாடியபோது அவர் உடைந்து போனார். சில நேரங்களில் பார்வையாளர்களும் உடைந்து விடுவார்கள். எல்லோருக்கும் வீட்டில் வேதனையும் துன்பமும் இருக்கிறது. சங்கர் பாடியது போல அவர்கள் கதையையும் தொடர்புபடுத்தலாம். இராமன் என்ற சொல்லிற்குள் பல விடயங்கள் உள்ளன. ” என்றார்.

அவர்களது பாடல்களால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஆகியவை ஆதாயமடைவார்கள் என்று மக்கள் நினைத்தால் மன்னிப்பு கேட்பதாக பாடகி கூறினார். ஆனால் “நாங்கள் இன்னும் இந்த பாடலைப் பாடுவோம்” என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.


கட்டுரையாளர் : மோனோபினா குப்தா
தமிழாக்கம் : 
சுகுமார்
நன்றி :  த வயர். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க