லாக்டவுன் சூழலில் வருமானம் இல்லாமல் தவிக்கும் வழக்கறிஞர் சகோதர – சகோதரிகளின் துயர் துடைக்க நாம் எடுத்த முயற்சி வெற்றி!!

ழக்கறிஞர் நண்பர்களே!

மிக குறுகிய காலத்தில் தமிழகம் தழுவிய அளவில் வழக்கறிஞர்களின் பங்களிப்போடு பார்கவுன்சிலுக்கு நாம் கொடுத்த மனுவிற்கு பலன் கிடைத்துள்ளது. தொடர்ந்து ஒரு வாரம் நாம் எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக நேற்று பார்கவுன்சில் கூடி, சிரமப்படும் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை கொடுப்பதாக அறிவித்திருக்கிறது.

நம்முடைய மனுவின் கோரிக்கைகளான மூத்த வழக்கறிஞர்களிடம் பொருளாதார ரீதியாக உதவி பெறமுடியாத நிலையில் உள்ள வழக்கறிஞர்கள், கணவன் / மனைவியின் பொருளாதார நிலை, ஓய்வு பெற்ற பின் வழக்கறிஞர்கள் தொழில்புரிபவர்களுக்கு நிவாரணம் இல்லை; உள்ளிட்ட விசயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளனர்.

குறிப்பாக பயனாளிகளை அவர்கள் நிலையை நியாயமாக கண்டறிவதற்காக நாம் கொடுத்த வழிமுறைகளை பார்கவுன்சில் எடுத்து கொண்டு உள்ளது.

இதில் முக்கியமானது இந்த உதவியை அந்தந்த பார்கள் மூலம் நடைமுறைப்படுத்துவது தான்.

அந்தந்த பார் தலைவர், செயலாளர், 20 வருடத்திற்கும் மேல் அனுபவம் மிக்க மூத்த வழக்கறிஞர்களை இணைத்துகொண்டு கமிட்டி அமைத்து பயனாளிகளை கண்டறிவதுதான்.

தமிழ்நாடு பார்கவுன்சில் அளித்துள்ள செய்திக்குறிப்பு :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஆகவே வழக்கறிஞர் நலனில் அக்கறை உள்ள நாம் இந்த பணி முடியும் வரை செயலாற்ற வேண்டும்.

தற்போதைய சூழலில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு பாதிப்புதான். ஆனால் பார்கவுன்சில் குறைவாக நிதி ஒதுக்கும் இந்த சூழலில், பொருளாதார நிலையில் மிகவும் நலிந்த வழக்கறிஞர்கள் பலன் பெறுவதுதான் சரியானதாக இருக்கும்.

படிக்க:
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்
♦ கொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை !

அதற்காக ஒவ்வொரு இடத்திலும் நாம் கவனம் செலுத்தவேண்டும். பயனாளிகளை சம்மந்தப்பட்ட கமிட்டிக்கு அடையாளப்படுத்தும் பணிக்கு உதவிட வேண்டும்.

அப்போதுதான் மனு கொடுக்க தங்களையும் இணைத்து கொண்ட சகோதர – சகோதரிகளின் நம்பிக்கை வெற்றி பெறும் என கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல வழக்கறிஞர்களின் பொருளாதார நெருக்கடியின் அவசியம் கருதி உதவி தொகை பெற விண்ணப்பிக்கும் தேதியை 13.04.20 என ஒரு வார காலம் என மாற்ற வலியுறுத்துவோம்.

இதில் ஆலோசனை, கருத்து, உதவி, செய்த மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள், பார் கவுன்சில் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நன்றி.

தங்கள் உண்மையுள்ள,
சு. ஜிம் ராஜ் மில்ட்டன்
வழக்கறிஞர் – சென்னை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க