கடலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள (பெண்களின் தாலியறுக்கும்) டாஸ்மாக் கடையை மூடக்கோரி, மக்கள் அதிகாரம் தோழர்கள் 15 பேர் எடப்பாடி அரசை கண்டித்தும், டாஸ்மாக்கை மூடக் கோரியும் பதாகைகளுடன், முழக்கங்களை எழுப்பி டாஸ்மாக் கடை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நூற்றுக்கணக்கான மக்கள் இந்த போராட்டத்தை கவனித்தனர், சிறிது நேரம் கழித்து காவல் துறையினர் தோழர்களை கைது செய்தது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்
கடலூர், தொடர்புக்கு : 81108 15963.
படிக்க:
♦ கொரோனா முடக்கத்தில் சொத்துக்களை பெருக்கும் அமெரிக்க பில்லியனர்கள்
♦ டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! இப்போது மூடவில்லை என்றால் வேறு எப்போது ?
***
***
டாஸ்மாக்கை இழுத்து மூடு – போராட்டம் நடத்திய திருச்சி மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது!
குடும்பத்தை சீரழிக்கும் –
டாஸ்மாக்கை மூடு
மக்களிடம் வழிப்பறி செய்யும் –
டாஸ்மாக்கை மூடு
கொரனா தொற்றை உருவாக்கும் –
டாஸ்மாக்கை மூடு
குழந்தைகள் கல்வியை பறிக்கும் –
டாஸ்மாக்கை மூடு
மன நோயாளியாக்கும் –
டாஸ்மாக்கை மூடு!
வருமானம் முக்கியமா?
மக்களின் வாழ்க்கை முக்கியமா?
வருமானம் பெருக்க டாஸ்மாக்கு திறப்பாம்
சொல்லுறாறு முதல்வரு
உண்மையா?உண்மையா?
எடப்பாடி கூறுவது
உண்மையா?உண்மையா?
வருமானம் வர வழி சொல்லுறோம்.
கடைய மூடுவியா? எடப்பாடி அரசே ?
G ST பங்கு நிதிய
கொரோனா தடுப்பு நிதிய ….
மத்திய அரசிடம் வசூல் செய்!
மாணவர் நடத்திய ஜல்லிக்கட்டை
மறந்து போனதா தமிழகம்.
மெரினாவை திறந்து விடு
மோடி அரசை பணிய வைப்போம்.
கல்வி கொடுக்க வக்கில்ல….
வேலை கொடுக்க துப்பில்ல….
நோய் பரப்பும் டாஸ்மாக்கை
திறக்கப் போற ஊருக்குள்ள….
சசிபெருமாள் உயிர் நீத்ததை,
பச்சையப்பன் கல்லூரி மாணவர் இரத்தம் சிந்திய
போராட்டத்தை விரயமாக விடமாட்டோம்!
காவல்துறையே காவல்துறையே
சாராயம் காய்ச்சினால் கைய உடைக்கிற…
சவுக்கு தோப்புல ஊரல் அழிக்கிற…
கொரோனா தடுக்கும் பணிய விட்டு
சரக்குக்கு காவல் காக்குற ….
மேற்கண்ட முழக்கங்களை எழுப்பி தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் டாஸ்மாக் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருச்சி உறையூர் கடைவீதியில் இன்று காலை மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் தலைமையில் நடைபெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
ஊரடங்கையும் காவல் துறை தடையையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள், விடுதலைச் சிறுத்தைகள் அமைபின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ந.க. தமிழாதன் , தந்தை பெரியார் திராவிடர் கழக மாநகர தலைவர் வின்சென்ட் | ம க .இ.க மாவட்ட செயலர் தோழர் ஜீவா, பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் முன்னாள் பொதுச் செயலர் தோழர் சுந்தர ராசு மற்றும் தோழர்கள் கைது செய்யப்பட்டு புத்தூர் முகூர்த்தம் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக உறையூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தோழர் சம்சுதீன், தோழர் வின்சென்ட் தந்தை பெரியார் திராவிடர் கழகம்.மா. தலைவர் வாழ்த்தி பேசினார். தோழமை அமைப்பினர் இசுலாமிய நண்பர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோசமிட்டனர். ஏராளமான பொதுமக்கள் கூடி ஆதரவளித்தனர். பல காவலர்கள் இவ்வளவு நாள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வாங்கிய நற்பெயர் கெட்டு போய் விட்டதாக நொந்து கொண்டனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.
தொலைபேசியில் ACP அலுவலக’ Q’ போன் செய்து நேற்றே மக்கள் அதிகார அமைப்பு டாஸ்மாக் கடைதிறப்பிற்கு எதிராக போராட்டம் உண்டா என்றும்.,இன்று காலை திருப்பூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் போன் செய்து தகவல் கொடுக்காமல் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்றும் நீதிமன்ற அனுமதியுடன் தான் அரசு டாஸ்மாக் கடையை திறக்கிறது ஆகையால் ஆர்ப்பாட்டம் செய்தால் தகவல் கொடுங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று கூறினார்..
நான் அமைப்பில் தற்போது இல்லையென்றும் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடப்பதாக எனக்கு தகவல் இல்லையென்றும் கூறினேன்.