ந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்பு காரணமாக மத்திய மாநில அரசுகள் நான்கு முறையாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் சாதாரண ஏழை எளிய மக்கள் தங்களுடைய வேலை வாய்ப்புகளை இழந்து, குடும்பம் நடத்த முடியாமலும், மிகவும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

அந்த வகையில் மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நிறுவனங்கள் குழுக்கள் வங்கிகளில் வாங்கிய கடனை ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை தள்ளி வைப்பதாக அறிவித்து. ஆனால் கரூர் சுற்றியுள்ள பகுதியில் கிராம விடியல், எல்.என்.டி, மதுரா, ஆசிர்வாதம், மகளிர் சுய உதவிக்குழு, நுண் கடன் நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ், அரசு சாரா நிதி நிறுவனங்கள், கடந்த மே மாதம் முதல் கடனையும் வட்டியையும் கட்ட சொல்லி பொதுமக்களை டார்ச்சர் செய்து வருகின்றனர்.

கடந்த 22.6.2020 திங்களன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம், மே 17, தந்தை பெரியார் திராவிட கழகம், சாமானிய மக்கள் நல கட்சி மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட குழுக்களுடன் ஆகஸ்ட் 31 வரை கடனை தள்ளி வைக்கக் கோரியும், மேலும் கடனை வசூல் செய்யும் நபர்களையும் வங்கி மேலாளர் களையும் கிரிமினல் குற்றவாளி என்ற பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனடிப்படையில் மனு கொடுக்கப்பட்டது.

படிக்க:
சாத்தான்குளம் படுகொலை : தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம் !
♦ பார்லே ஜி பிஸ்கெட் விற்பனை உயர்வு : சாதனையா ? வேதனையா ? – நீரை மகேந்திரன்

அன்றைய தினம் பாதிக்கப்பட்ட பெண்கள் மாணவர்கள் என 60க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்க போலீஸ் அனுமதி மறுத்தது, மாறாக அவருடைய பி.ஏ மனுவை பெற்றுக்கொண்டு, கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் மேலும் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினார். திருச்சி, திருப்பூர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களின் கலெக்டர் ஆகஸ்ட் 31 வரை கடனையும், கடனுக்கான வட்டியையும் தள்ளி வைக்க உத்தரவு போட்டுள்ளனர்.

ஆனால் கரூர் கலெக்டர் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததான் மர்மம் என்ன? மக்கள் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறை என்ன? இதனால் கரூர் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் குறிப்பாக கரூர் உப்பிடமங்கலம் சேர்ந்த பகுதியில் “கடனை ஒழுங்காக கட்டு இல்லைனா செத்துப்போ… எனக்கு காசு வரணும்” என்று எல்என்டி -இன் புலியூர் கிளையை சேர்ந்த வங்கி மேலாளர் தனபால் பொதுமக்களை ஆபாசமாகவும் ஒருமையிலும் பேசி அவமானப்படுத்துவது துன்புறுத்துவது இதுபோன்ற நடவடிக்கையில் கொண்டிருக்கிறார்.

இதுமட்டுமல்லாமல் ஏராளமான மக்களும் இதுபோன்ற கொரோனா
பாதிப்பால் வேலை இழந்து தவித்து வரும் சூழலில் அரசு உத்தரவை மீறி கடனை வசூல் செய்யும் வேலையை செய்து வருகின்றனர். இதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது! மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் ஆகஸ்ட் 31 வரை கடனை கடனுக்கான வட்டியை செலுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

மேலும் அதை பத்திரிகை, தொலைக்காட்சி, வலைதளங்கள் என அனைத்திலும் தெரியும்படி மக்களிடம் இச்செய்தியை கொண்டு செல்ல வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றால் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி வீதியில் இறங்கி போராடுவோம்!

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் அதிகாரம்,
கரூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க