மோடி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் !

மொத்த கல்வி துறையும் தனியார் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்தால் என்ன நடக்கும்? இனி ஏழை மாணவர்களுக்கு கல்வி கிடைக்காது. 'தரம்' என்ற பெயரில் இனி பார்ப்பனர்களுக்கும் பணக்காரர்களுக்கும்தான் கல்வி.

0
  • மோடி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும்!
  • ஆகஸ்டு -5, புதன்கிழமை தமிழகம் முழுவதும் கல்வித்துறை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்!

ன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே!

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதும் கடுமையாக எதிர்க்கப்பட்டு வந்த புதிய கல்விக்கொள்கைக்கு பாசிச மோடி அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மோடி அரசு மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய 2014-இல் இருந்தே கார்ப்பரேட் – காவிகளின் நலனுக்கேற்ப ஒரு கல்விக் கொள்கையை உருவாக்க தீவிரமாக முயற்சித்து வந்தது.

அதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ் சார்புள்ளவர்களான டி.எஸ்.ஆர் சுப்ரமணியன், கஸ்தூரி ரங்கன் ஆகியோர் தலைமைகளில் இரண்டுமுறை கமிட்டி அமைத்தனர். ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளி ஆசிரியர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் கருத்துக்களைப் பெற்று அதையே புதிய கல்விக்கொள்கை என 2016-லும், 2019-லும் முன் வைத்தனர்.

இதனை எதிர்த்து கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக அப்போது பின்வாங்கியவர்கள், தற்போது கொரோனா ஊரடங்கு சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தேசிய கல்வி கொள்கையை திணிக்கின்றனர். இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

மேலோட்டமாக பார்த்தால் புதிய கல்விக்கொள்கை போல் தெரியும் இதில் வரிக்கு வரி தேன் தடவிய விசம் போல், இந்துத்துவா கொள்கைகளையும், கார்ப்பரேட் திட்டங்களையும் முன் வைக்கிறது.

இது வரை இருந்துவந்த பள்ளிக்கல்வி அமைப்பு முறையை 5+3+3+4 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கன்வாடிகளும் சத்துணவு திட்டமும் ஒழித்துக்கட்டப்படுகிறது. 3 வயதிலேயே பள்ளிக்கல்வி தொடங்குவது குழந்தைகள் மீதான வன்முறை.

3 -வயதில் இருந்தே மும்மொழிக்கொள்கை திணிப்பு. செத்த மொழி சமஸ்கிருதத்திற்கு உயிர் கொடுக்கிறார்கள்.

3, 5, 8 வகுப்புகளும் பொதுத்தேர்வு வைத்து ஏழைகள், தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கல்வியிலிருந்தே விரட்டுகிறார்கள். ‘சூத்திரனுக்கு கல்வி எதுக்கு அவனவன் அப்பன் தொழிலை செய்யட்டும்’ என்ற ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை மோடி அரசு இப்போது நவீன வடிவத்தில் கொண்டு வந்துள்ளது.

சிறு சிறு பள்ளிகளை ஒழித்துவிட்டு 5, 10 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் பெரிய பள்ளிகளை உருவாக்கப் போகிறார்களாம். அதாவது அரசுப் பள்ளிகளை எல்லாம் ஒழித்துக்கட்டிவிட்டு மிகப்பெரிய தனியார் கார்ப்பரேட் பள்ளிகளை உருவாக்கப் போவதையே சாதனையாக சொல்கிறார்கள். இத்தகைய கார்ப்பரேட் பள்ளிகள் வந்துவிட்டால் பல லட்சங்கள் பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் இனி கல்வி.

அடுத்து, உயர்கல்விக்கு செல்ல அனைத்துவிதமான படிப்புகளுக்கும் நீட் போன்று அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு. நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம். இனி அந்தந்த கல்லூரிகளே பட்டத்தை வழங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்புகளாகும். பல்வேறு தேசிய இனங்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை ஒழித்துக் கட்டிவிட்டு, ஒரே நாடு ஒரே கல்வி பிளாட்ஃபார்ம், ஒரே பாடத்திட்டம் என்பதை கொண்டுவரத் துடிக்கிறார்கள். ஏற்கனவே மாநிலப் பட்டியலில் இருந்த கல்வித்துறையை பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்றார்கள். இப்போது மொத்தமாக மையப்படுத்தவே இந்தக் கல்விக் கொள்கை உயர்கல்வி ஆணையத்தை உருவாக்குகிறது.

படிக்க:
♦ ’இந்து ராஷ்டிரத்திற்கான’ கல்விக் கொள்கை – தமிழகம் கிளர்ந்தெழட்டும் !
பள்ளிக் கல்வியை உலகவங்கியிடம் ஒப்படைக்கும் மோடி அரசு !

கல்வியின் மீது மாநில அரசின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்படுகிறது. சமூக நீதியையும், இடஒதுக்கீட்டையும் அடியோடு குழி தோண்டி புதைக்கப் பார்க்கிறது இந்த தேசிய கல்விக் கொள்கை.

ஏற்கனவே கல்வித்துறையில் தனியார்மயத்தை புகுத்தியதன் விளைவாக பல தனியார் கல்வி நிறுவனங்கள் பல மடங்கு கட்டண கொள்ளையடிக்கின்றனர். இதனால் கட்டணத்தை கட்ட முடியாமல் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். பல மாணவர்கள் இடையில் நின்று விடுகின்றனர். என்ற நிலைமை நீடிக்கிறது இந்த நிலையில் மொத்த கல்வி துறையும் தனியார் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்தால் என்ன நடக்கும்? இனி ஏழை மாணவர்களுக்கு கல்வி கிடைக்காது. ‘தரம்’ என்ற பெயரில் இனி பார்பனர்களுக்கும் பனக்காரன்களுக்கும்தான் கல்வி.

இதுமட்டுமல்ல, கல்வியை மறு கட்டமைப்பு செய்கிறோம் எனக் கூறி UGC, MCI, போன்ற உயர் கல்வி நிறுவனங்களை ஒழித்துக்கட்டுகிறார்கள். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் இனி கடைவிரிக்கலாம். வெளிநாட்டு மாணவர்கள், பேராசிரியகள் இங்கு வருவார்கள். ஆனால் சொந்த நாட்டு பேராசியர்களுக்கு தரமில்லை என வேலை பறிக்கப்படும். இன்னொரு பக்கம், கல்வி டிஜிட்டல் மயமாக்குவது என்ற பெயரில் ஆன் – லைன் கல்வியை கட்டாயமாக்குகிறார்கள்.

மூக்ஸ், பைஜூஸ் போன்ற பெரிய பன்னாட்டு கார்ப்பரேட் ஆன் – லைன் கல்வி நிறுவனங்கள் ஆண்டுக்கு பல லட்சம் கோடிகள் புரளும் இந்திய கல்வித்துறையை கைப்பற்ற ஏற்பாடு செய்துகொடுப்பதுதான் இந்த கல்விக்கொள்கையின் நோக்கம். எனவே, பெரும்பான்மை மாணவர்களின் நலனுக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் எதிரான இந்த கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டும்.

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைவோம். கார்ப்பரேட் – காவிகளின் நலனைக் கொண்ட இந்த புதிய கல்வி கொள்கையை அமுல்படுத்த விடாமல் தடுத்து நிறுத்துவோம்!

மாணவர் நலனையும், ஜனநாயகத்தையும், விஞ்ஞானப் பூர்வமான கண்ணோட்டத்தையும், பகுத்தறிவையும், தாய்மொழியை வழியையும் அடிப்படையாக் கொண்ட கல்வி கொள்கை வேண்டும். மாணவர்களை வன்முறைக்குள்ளாக்கும் மனப்பாடக் கல்வியும், பாடச்சுமையும், பரிட்சை தொல்லைகளும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும். கியூபாவிலும், பின்லாந்திலும் உள்ளது போன்ற சிந்தனையாற்றலை வளர்க்கும் கல்வியும், மதிப்பீடு முறையும், மக்கள் நலன் சார்ந்த கல்வியும்தான் வேண்டும்.

பல்வேறு தேசிய இனங்களையும், மொழி, கலாச்சாரங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் கொண்ட நாட்டில் தேசிய அளவில் ஒரே கல்விக்கொள்கை என்பதே அயோக்கியத்தனமானது; சர்வாதிகாரமானது.

அந்தந்த மாநிலங்களின் தன்மைக்கேற்ப வகுத்து அதை ஒருங்கிணைப்பதுதான் சரியானது.

ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வுகள் முன்னெப்போதைக் காட்டிலும் அதிகரித்து வரும் நாட்டில் தனியார் கல்வி நிறுவனங்கள் இருந்தால் எப்படி ஏழைகளுக்கு கல்வி கிடைக்கும். அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்க வேண்டும்.

எனவே, மோடி அரசின் கல்விக் கொள்கையை நிராகரிப்பதோடு, மாணவர்கள் நலன் சார்ந்த மாற்றுக் கல்விக் கொள்கையை உருவாக்கும் போராட்டத்தையும் முன்னெடுப்போம்!

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு.
நெ.7, மாதாகோவில் நகர் முதல் தெரு, நொளம்பூர், சென்னை- 600095
தொடர்புக்கு : 94451 12675, E-mail: rsyfchennai@gmail.com.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க