மிழகத்தின் பல்வேறு பகுதிகளில் “ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! கொரோனா தடுப்பிற்கு பொது சுகாதார கட்டமைப்பைப் பலப்படுத்து !!” என்ற முழக்கத்தை முன்வைத்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 19.08.2020 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அவற்றின் செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்.

***

மதுரை

ரடங்கிற்கு முடிவு கட்டு! கொரோனா தடுப்பிற்கு பொது சுகாதார கட்டமைப்பைப் பலப்படுத்து! என்ற முழக்கத்தின் அடிப்படையில் மக்கள் அதிகாரத்தின் சார்பில் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகாரம் மதுரை மண்டலம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்திற்கு மதுரை ஒருங்கிணைப்பாளர் தோழர் மருது தலைமை வகித்தார்.

மேலும் மக்கள் கலை இலக்கியக் கழகம் மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரை மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் நடராஜன், சமூக, மக்கள் நல ஆர்வலர் எம்.பி ஹிதாயத்துல்லா, மக்கள் அதிகாரம் உசிலை பகுதி தோழர் ஆசை ஆகியோர் இந்நிகழ்வில் கண்டன உரையாற்றினர்.

மத்திய மாநில அரசுகளுக்கு கொரோனாவை ஒழிக்கவும் துப்பில்லை, நிவாரணம் வழங்கவும் வக்கில்லை, என்ன வெங்காயத்துக்கு ஊரடங்கு! அரசு ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவராது! மக்கள் போராடித்தான் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்.
தொடர்புக்கு : 78268 47268.

படிக்க:
ஸ்டெர்லைட் தீர்ப்பு : உச்ச நீதிமன்றம் செல்லும் வேதாந்தா ! போராட்டத்தை இறுதிவரை தொடர்வோம் !!
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து !! தோழர் ராஜூ உரை

***

காஞ்சிபுரம்

ரடங்கிற்கு முடிவு கட்டு! பொது சுகாதாரத்தை மேம்படுத்து! என்ற முழக்கத்தை முன்வைத்து காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஒரு நிமிடம் கூட நின்று முழக்கமிடவோ, பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க கூட அனுமதிக்காமல் அராஜகமாக போலீசு நடந்துகொண்டது. தோழர்களை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றியது. இந்தியா ஒரு ‘ஜனநாயக நாடாம்!’ ஆனால், கருத்து சொல்லவும் போராடவும் மட்டும் உரிமையில்லை.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் அதிகாரம்,
காஞ்சிபுரம்.

***

விழுப்புரம்

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கிற்கு முடிவு கட்டு! பொது சுகாதாரத்தை மேம்படுத்து! என்ற முழக்கத்தி அடிப்படையில் 19.08.2020 அன்று கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.

விக்கிரவாண்டி வட்டம் தொரவி கிராமத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டம்.

கானை ஒன்றியம் பள்ளியந்தூர் கிராமத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டம்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

திருவெண்ணைநல்லூர் வட்டம், பொய்கை அரசூர் கிராமத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டம்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் மண்டலம்.

***

தருமபுரி

ரடங்கிற்கு முடிவு கட்டு! பொது சுகாதார கட்டமைப்பை பலப்படுத்து! என்ற தலைப்பில் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

ஊரடங்கு என்ற பெயரில் பாசிச அடக்கு முறை சட்டங்களை கொண்டு வருவது, EIA 2020, சட்டத் திருத்தம், புதிய கல்வி கொள்கை போன்ற உழைக்கும் மக்கள் மீதான பல்வேறு அடக்கு முறை சட்டங்களை அமுல்படுத்தி வருகிறது. கொரோனா போன்ற கொள்ளை நோயை ஒழிப்பதற்கு சுகாதார கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு பதிலாக, கார்ப்பரேட் நல சட்டங்களை இயற்றி மக்களை கொள்ளையடித்து வருகிறது மோடி அரசு.

இவ்வார்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தோழர் ராஜா தலைமை தாங்கினார். அவரைத் தொடர்ந்து திவிக மாவட்ட செயலாளர் தோழர் சந்தோஷ்குமார், புமாஇமு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சத்தியநாதன், தமிழ்புலிகள் கட்சி தோழர் MR. பீமாராவ் விஜய், பென்னாகரம் மக்கள் அதிகாரம் மண்டல குழு உறுப்பினர் தோழர் அருண் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இறுதியாக அப்பகுதி மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவா நன்றியுரையாற்றினார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்.
தொடர்புக்கு : 97901 38614

***

தஞ்சை

கொரோனா ஊரடங்கிற்கு முடிவுகட்டு! கொரோனாவை தடுப்பதற்கு பொதுச்சுகாதார கட்டமைப்பை பலப்படுத்து என்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள் தஞ்சை அதிகாரம் சார்பில் 19-08-2020 அன்று காலை 10.30 மணிக்கு தலைமை தபால் நிலையம் முன்பு “கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது.

மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நகர செயலர் தோழர் குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலர் தோழர் கிருஷ்ணமூர்த்தி, CPML(மக்கள் விடுதலை) மாவட்டசெயலர் தோழர் அருணாச்சலம், ஏ. ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் தோழர் சேவையா, ஆதித்தமிழர் பேரவை தோழர் நாத்திகன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலர் தோழர் சதா. முத்துகிருஷ்ணன், வணிகர் சங்க பேரவை மாவட்டத்தலைவர் திரு கணேசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து சம்மேளன செயலர் தோழர் துரை. மதிவாணன், தாளாண்மை உழவர் இயக்க நிறுவுனர் தலைவர் தோழர் திருநாவுக்கரசு,  ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஐம்பதிற்கும் மேற்பட்டதோழர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் அதிகாரம்,
தஞ்சை.

***

ஊரடங்கிற்கு முடிவு கட்டு! கொரோனா தடுப்பிற்கு பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து! என்ற முழக்கத்தின்கீழ் மக்கள் அதிகாரம் நடத்திய தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின்  ஒரு பகுதியாக 19/08/2020 அன்று மாலை 5 மணியளவில் ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் மற்றும் பொது மக்கள் என பலரும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மக்கள் அதிகாரத்தின் பாகலூர் பகுதிப் பொறுப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஓசூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திரு ராமச்சந்திரன், திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் திரு. வனவேந்தன், தோழர் சொன்னப்பா (IYF), புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் பரசுராமன். ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இறுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சார்ந்த தோழர் சங்கர் நன்றி உரையாற்றினார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
ஓசூர்.

1 மறுமொழி

  1. ஆக தமிழகம் முழுவதும் ஏழு இடங்களில் நடந்துள்ள இப்போராட்டத்தில் காஞ்சிபுரத்தில் மட்டும் துவக்கத்திர்க்கு முன்பே போலீஸ் தோழர்களை வேனில் ஏற்றியுள்ளது என்று மொட்டையாக விட்டுள்ளீர்கள்… பின்னர் என்ன நிலை, எவ்வளவு பேர் கைது செய்ய பட்டனர், வழக்கு ஏதேனும் போட்டார்களா, விடுவித்து விட்டனரா…??? போன்ற செய்திகளையும் பதிவிட்டால் தான் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள முடியும், அதைவிடுத்து ஆர்னிகா நாசரின் மர்ம கதை போன்ற தொகுப்பாக உள்ளது… ஆக தெளிவாக பதிவிட்டு படிப்பவர்களின் பதட்டத்தை தவிர்ப்பது தங்களின் கணிவான பொறுப்பாகும்… மற்றபடி களமிறங்கிய தோழர்களுக்கு செவ்வணக்கத்துடன் வாழ்த்துக்கள்…!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க