உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 2

பாகம் – 1

ம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிதம் செய்த காலத்தின் விசேச சூழ்நிலைமையும், அதன் உட்கட்சிப் போராட்டத்தில் எழுந்துள்ள திரிபுகளும் !

 தோழர்களே! உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கு மார்க்சும் ஏங்கெல்சும் என்ன செய்தார்கள்?

மார்க்சும் ஏங்கெல்சும் தொழிலாளி வர்க்கத்திற்கு ஒன்று சேர்ந்த பூரணத்துவம் பெற்ற சித்தாந்த தத்துவார்த்த கருத்து முறையை அளித்தார்கள். அதுமட்டுமல்ல; தொழிலாளி வர்க்கத்திற்கு தனி ஸ்தாபனத்தையும் கட்டினார்கள். தொழிலாளி வர்க்கத்தின் வெகுஜனப் போராட்டங்களையும் வழிநடத்திச் சென்றார்கள். அவர்கள் முதலாவது இண்டர்நேஷனலை தோற்றுவித்தார்கள். பின்னர் இரண்டாவது இண்டர்நேஷனலையும், பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலுள்ள சோஷியல் டெமாக்ரடிக் கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் அமைத்தார்கள்.

தொழிலாளர் வர்க்கம் தன்னைத்தானே எப்படி ஸ்தாபனரீதியாக ஒன்று திரட்டிக் கொள்வது என்பதையும், போராட்டங்களை நடத்துவது எப்படி என்பதையும் அவர்களுக்கு காண்பித்து கற்றுக்கொடுத்தார்கள்.

இரண்டாவது இண்டர்நேஷனல் இருந்த காலகட்டத்தில் (முதலாவது உலக யுத்தத்திற்கு முந்தைய காலகட்டத்தில்) பல்வேறு நாடுகளிலுமிருந்து சோஷியல் டெமாக்ரடிக் கட்சிகள் பரந்த அளவில் தொழிலாளர்கள் மத்தியில் ஸ்தாபன ரீதியான வேலை செய்து வந்தன. தொழிலாளி வர்க்கத்தையும் ஸ்தாபன ரீதியாகத் திரட்டும் இயக்கத்தை பெருமளவிற்கு விரிவுபடுத்தின. ஸ்தாபனத்துறையில் பிரம்மாண்டமான வெற்றிகளும் அடைந்தன. இது முதலாளித்துவம் “சமாதான முறையில்வளர்ந்த காலகட்டமானதினால் தொழிலாளி வர்க்கத்தின் ஸ்தாபனங்கள் இந்த சமாதான காலகட்டத்தில் கட்டப்பட்டதினால், கட்சிக்கும், தொழிற்சங்கங்களுக்குமிடையிலான வித்தியாசம் இன்னும் அவ்வளவுக்குத் தெளிவாகவில்லை.

 படிக்க :
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ
♦ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !

அதுவும் குறிப்பாக மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் மரணத்திற்குப் பிறகு, காவுத்ஸ்கி அண்டு கம்பெனியின் தலைமையில் இரண்டாவது இண்டர்நேஷனல் கட்சிக்குள் உள்ள சந்தர்ப்பவாதத்திற்கு விட்டுக் கொடுக்கும் அனுமதிக்க முடியாத கொள்கையைக் கையாண்டது; அதன் விளைவாக இரண்டாவது இண்டர் நேஷனலின் பல பகுதிகளை சந்தர்ப்பவாதம் அரித்துத் தின்றுவிட்டது. ஏகாதிபத்திய சகாப்தம், அதாவது தொழிலாளி வர்க்கப் புரட்சி சகாப்தம் வரும்பொழுது இந்தக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் புதிய காலகட்டத்தில் தொழிலாளி வர்க்கம் பொறுப்பேற்க கடமைப்பட்டுள்ள புரட்சிப் பணிகளை மேற்கொள்ள சக்தியின்மையை வெளிப்படுத்திற்று; இதன் விளைவாக முதல் உலக யுத்த காலத்தில் அவை படுசூன்யமடைவதையும், சீரழிவதையும் தவிர வேறு வழியில்லை.

லெனின் சகாப்தம் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் சகாப்தத்திலிருந்து வேறுபட்டது. அது காதிபத்திய சகாப்தம்; மரணத் தறுவாயிலுள்ள முதலாளித்துவ சகாப்தம், அது தொழிலாளி வர்க்கப் புரட்சி சகாப்தம், இந்த காலகட்டத்திற்கு, சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், ஸ்தாபன ரீதியாகவும், செயல்முறையில் பலம்பெற்றதும் ஒன்றுபட்டதும், தொழிலாளி வர்க்கம் பொதுஜனங்களுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டதுமான கட்சியை வலிமையான, போர்க்குணமிக்க கட்சியை தொழிலாளி வர்க்கம் கட்டுவது வெகு அவசியம். அத்தகைய கட்சியை நம்பித்தான் மிகமிக கடுமையான புரட்சிப் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்துவது என்பது சாத்தியமாகும்.

ஆதலால் மார்க்ஸ், ஏங்கெல்சின் தத்துவங்களை எல்லா அம்சங்களிலும் திரிபுகளிலிருந்து மீட்டு முன்கொண்டு செல்வதுடன், லெனின் குறிப்பாக தொழிலாளி வர்க்கப் புரட்சி கட்சிகளை நிர்மாணிப்பது பற்றி பூரணத்துவம் பெற்ற தத்துவத்தையும் சிருஷ்டித்தார். கட்சியைக் கட்டுவது சம்பந்தப்பட்ட தத்துவ முறை அதன் பிரதான அம்சங்களில் லெனினால் சிருஷ்டிக்கப்பட்டது. கட்சியை கட்டுவது பற்றிய இந்த தத்துவத்தையும், தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிப் போராட்டத்தின் யுத்த தந்திரம், போர் தந்திரத்தையும், ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்கவே முடியாது.

தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிக் கட்சியை லெனின் ஸ்தாபித்த காலகட்டத்தில் நிலவிய நிலைமை என்ன?

அந்த சமயத்தில், ஒருபுறம் ஏகாதிபத்திய யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்தது; பூர்ஷ்வா வர்க்கத்தை ஆட்சியிலிருந்து கவிழ்த்து, அரசாட்சியைக் கைப்பற்றி, தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கும் அவசரமான பணி தொழிலாளி வர்க்கத்தை எதிர்நோக்கிற்று. மறுபுறத்தில் இரண்டாவது இண்டர்நேஷனலைச் சேர்ந்த விரிவான ஸ்தாபன அமைப்பு கொண்டுள்ள சோஷியல் டெமாக்ரடிக் கட்சிகள், பூர்ஷ்வா வர்க்கத்தை ஆட்சியிலிருந்து கவிழ்த்து, தொழிலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை ஸ்தாபிதம் செய்யும் அவசியத்தை இன்னும் உணர்ந்தபாடாக இல்லை. புரட்சிகரமாக முன்னேறித் தாக்கும் தாக்குதலுக்கு தொழிலாளி வர்க்கத்தை தயார் செய்வதற்கு விருப்பமோ அல்லது துணிச்சலோ கிடையாது. ஆதலால் இரண்டாவது இண்டர்நேஷனலின் கட்சிகள் வெகு தொள தொளப்பான ஸ்தாபன அமைப்பு கொண்டிருந்தன. கட்சிக்குள் கோஷ்டிகள் மலிந்து போயிருந்தன; எந்தவிதமான கடுமையான போராட்டங்களையும் நடத்த முடியவில்லை. இதன் விளைவாக, அந்தக் காலத்தில் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சித் தேவைகளை அறவே பூர்த்தி செய்யத் தவறினர்.

இரண்டாவது இண்டர்நேசனலில் சந்தர்ப்பாவதத்தை எதிர்த்துப் போராடி மார்க்சியத்தை மீட்டெடுத்த தோழர் லெனின் !

அந்த சமயத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து சோஷியல் டெமாக்ரடிக் கட்சிகள் தத்துவரீதியிலும் சரி, அரசியல் ரீதியிலும் சரி வலதுசாரி சீர்திருத்தவாதச் சகதியில் சிக்குண்டது மட்டுமல்ல; (உதாரணமாக முதலாளி, தொழிலாளிக்குமிடையே ஒத்துழைப்பு என்றும், முதலாளித்துவத்திலிருந்து சமாதான முறையில் சோசலிசத்திற்கு முன்னேறுவது, புரட்சியின்றி சட்டசபை போராட்டங்கள் மூலமே தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்றும், ஆதலால் தொழிலாளி வர்க்கப் புரட்சி யுத்த தந்திரம், போர்த்தந்திரம் தயாரிக்க வேண்டிய அவசியமில்லையென்றும் உள்ள அவர்கள் தத்துவம்) அவர்கள் கட்சி ஸ்தாபன விஷயத்திலும், அறவே வலதுசாரி சந்தர்ப்பவாதிகளும், ஆவர்.

இரண்டாவது இண்டர்நேஷனைச் சேர்ந்த கட்சிகளும் ரஷ்யாவிலிருந்த மென்ஷ்விக்குகளும் கட்சி ஸ்தாபன விஷயத்தில் லிபரலிஸத்தை ஆதரித்தார்கள். தொழிலாளி வர்க்கக் கட்சியை சாதாரண தொழிலாளர் ஸ்தாபனமாக சிறுமைப்படுத்துவதை ஆதரித்தனர். இறுகப் பிணைக்கப்பட்ட ஸ்தாபனமோ, அல்லது கட்சியில் கண்டிப்பான கட்டுப்பாடோ அவசியமில்லை என்று அபிப்பிராயங் கொண்டிருந்தனர். கட்சிக்குள் கோட்பாடற்ற சமாதானத்தை அவர்கள் ஆதரித்தார்கள். கட்சிக்குள் வேறுபட்ட சித்தாந்த ஸ்தாபன கோஷங்களை அனுமதித்தார்கள். இரண்டாவது இண்டர்நேஷனலை சேர்ந்த கட்சிகளுக்கு கட்சியின் ஐக்கியம், கட்சிக் கட்டுப்பாடு, சுயவிமர்சனம், உள்கட்சிப் போராட்டம் முதலியன புரியாத விஷயங்கள்; அவர்களுக்கு இவையெல்லாம் முற்றிலும் அனாவசியமானவை.

படிக்க :
♦ ஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. !
♦ ஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது !

இரண்டாவது இண்டர்நேஷனலைச் சேர்ந்த கட்சிகள் ஸ்தாபனம் சம்பந்தமாகக் கொண்டிருந்த வலதுசாரி சந்தர்ப்பவாதத்தின் ஒரு சில பிரதான ஸ்தூலமான பிரதிபலிப்புகள், இங்ஙனம் இருந்தன.

அந்த சமயத்தில் ரஷ்யாவில் எக்கனாமிஸ்டுகளும், ஐரோப்பாவில் (உதாரணமாக பிரான்சில்) சிண்டிகலிஸ்டுகளும் இருந்தார்கள். தொழிலாளி வர்க்கத்திற்கு கட்சி ஸ்தாபனம் தேவையில்லை என்று வாதாடினார்கள். தொழிலாளர் வர்க்கக் கட்சிகளைக் கட்டுவதற்கு மறுத்தனர். அல்லது தொழிலாளி வர்க்கக் கட்சிகளைத் தொழிற்சங்கங்களுக்கு கீழ்ப்படுத்தினர். இவர்கள் தொழிற்சங்கங்களின் சுதந்திரத்திற்கு போராடினார்கள். தொழிற்சங்கங்களில் கட்சியின் தலைமையை மறுத்தார்கள்.

அந்த சமயத்தில் ஒருபுறத்தில் தொழிலாளி வர்க்கப் புரட்சிக்கு செய்ய வேண்டிய போர்க்குணமிக்க கடமைகளை நிறைவேற்றுவதற்கும் பரந்த பொதுஜனங்களுக்கு தலைமை கொடுக்கவும் பலமாக போராடும் கட்சி அவசியமாயிருந்தது என்பதை அப்புரட்சிக் கடமைகளே வலியுறுத்தின. மறுபுறத்தில் இண்டாவது இண்டர்நேஷனலைச் சேர்ந்த கட்சிகள் இலட்சக்கணக்கான கட்சி அங்கத்தினர்களையும் தொழிற்சங்க அங்கத்தினர்களையும் கொண்டிருந்தும் முற்றிலும் சக்தியற்றதாயும், போராட இயலாதனவாயுமிருந்தன. மேலும் அவர்களது பிற்பட்ட தொளதொளப்பான ஸ்தாபன நிலையை நியாயப்படுத்துவதற்கு ஸ்தாபனம் பற்றி பலவிதமான சந்தர்ப்பவாத அபிப்பிராயங்களும் இருந்து வந்தன. லெனின் போல்ஷ்விக் கட்சியைக் கட்டப் புகுந்தபொழுது நிலவிய முக்கியமான யதார்த்தமான நிலைமை இது.

மேலே குறிப்பிட்டுள்ள நிலைமையில் தொழிலாளி வர்க்க புரட்சியை தலைமை தாங்கி நடத்தும் சக்திவாய்ந்த கட்சியை சித்தாந்தப் பூர்வமாகவும், அரசியல் பூர்வமாகவும், ஸ்தாபன பூர்வமாகவும் பரிபூரணமாக ஒன்றுபட்ட கட்சியை கட்டுவதற்கு, லெனின் இரண்டாவது இண்டர்நேஷனலைச் சேர்ந்த கட்சிகளின் சித்தாந்த அரசியல் சந்தர்ப்பவாதத்தை, குறிப்பாக கட்சி ஸ்தாபனம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவர்களுக்குள்ள சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து சகல சக்திகளையும் ஒன்றுதிரட்ட வேண்டியிருந்தது. ஸ்தாபன விஷயத்தில்தான் – கட்சியில் சேருவதற்கு விதிக்கும் நிபந்தனைகள் பற்றித்தான் – முதன்முதலாக லெனினுடைய போல்ஷ்விக் கட்சிக்கும், மென்ஷவிக்குகளுக்கும் வேறுபாடு தோன்றலாயிற்று.

(தொடரும்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க