ருபத்தைந்து வயதிற்கு உட்பட்ட இளம் தலைமுறையினர் எதிர்காலம் குறித்து அதிக கவலை கொள்வதாக லிங்க்டு-இன் நிறுவன ஆய்வு கூறுகிறது. அதிலும், இந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்த கவலை மேலும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில், வேலை கிடைப்பது மற்றும் வேலை தேடுவது தொடர்பாக  ஆண்களை விட பெண்கள், இருமடங்கு அதிகம் கவலைப்படுவதாக லிங்க்டு-இன் நிறுவன கருத்துக்கணிப்பு கூறுகிறது.

அதாவது, அதிகரிக்கும் செலவுகள், கடன்கள் குறித்து பெண் பணியாளர் ஒருவர் கவலைப்படுகிறார் எனில், ஆண்களில் 10-ல் ஒருவர் தான் இந்த கவலையை அடைகிறார்.

படிக்க :
♦ இந்திய நாட்டின் வேலையின்மை விகிதம் 14.7% ஆக உயர்வு !!
♦ கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் மிக மோசமான ஐந்து தலைவர்கள் !!

ஊடகத்துறை, பிரிண்டிங் மற்றும் வடிவமைப்பு துறை ஆகியவற்றில் வேலைகள் நிரந்தரமாக இருப்பதில்லை என்று அதில் ஈடுபடும் பணியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தகவல் தொழில்நுட்பம் துறை மற்றும் வன்பொருள்(hardware), மென்பொருள், இணையம் சார்ந்த தொழில்கள், கணினி நெட்வொர்க்கிங்க் போன்ற துறைகளை சார்ந்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு சம்மந்தமான எதிர்காலத்தின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளதாக அறியமுடிகிறது.

வேலைவாய்ப்பு பற்றிய நம்பிக்கைக் குறியீடு பெண் பணியாளர்களிடம் குறைந்துள்ளது. அதாவது, கடந்த மார்ச் மாதத்தில் 57 புள்ளிகளாக இருந்த அளவு தற்போது 49 புள்ளிகளாக குறைந்துள்ளது. ஆண் பணியாளர்களிடம் மிகவும் குறைவாகத்தான் குறைந்துள்ளது. அதாவது, கடந்த மார்ச் மாதத்தில் 58 புள்ளிகளாக இருந்த அளவு தற்போது 56 புள்ளிகளாக மட்டுமே குறைந்துள்ளது.

வேலைக்கு செல்லும் முதியவர்களைவிட, 25 வயதிற்குட்பட்ட இளம்தலைமுறையினர்தான் வேலையிழப்பால் அதிகம் பாதிக்கப்பட்டு எதிர்காலம் குறித்து கவலையில் உள்ளவர்கள். 90-களின் தலைமுறையினர் 18 சதவிதம் பேரும், 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திய தலைமுறையினர் 26 சதவிதம் பேரும், தற்போதைய இளம் தலைமுறையினர் 30 சதவிதம் பேரும் வேலையில்லாமல் அவதிப்படுவதாக லிங்க்டு-இன் ஆய்வு தெரிவிக்கிறது.

நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் விகிதம், ஏப்ரல் மாதம் 10 சதவீதமும், மே மாதம் 35 சதவீதமும் குறைந்துள்ளது. தற்போது கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு குறையத் துவங்கும் சூழலில் வேலை குறிந்த நம்பிக்கையின்மை ஆண்-பெண் இருபாலருக்கும் அதிகரித்துள்ளது.

கொரோனா வருவதற்கு முன்பும் இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடிக் கொண்டுதான் இருந்தது. மோடி ஆட்சிக்கு வரும் போது இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிப்பேன் என்றார். ஆனால், தற்போது வரை வேலைவாய்ப்பு அதிகரித்ததாக தெரியவில்லை. ஐ.டி நிறுவனங்களில் லே-ஆஃப் என்ற பெயரில் வேலையில் இருந்து ஊழியர்கள் துரத்தப்படுகிறார்கள். படித்தப் பட்டதாரி இளைஞர்கள், படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல், வாழ்வாதாரத்திற்காக கிடைக்கும் உதிரி வேலைகளைச் செய்துவருகின்றனர்.

தற்போது கொரோனா பேரிடர் காலத்தில் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் கொடுப்பது, தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்துவது போன்ற செயல்களில் தொழிற்சாலைகள் ஈடுபடுகின்றன. நிரந்தர தொழிலாளர்கள் என்ற முறையை அடியோடு அகற்றி, எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு அகற்றப்படும் சூழலில் ஆலை தொழிலாளர்களை வைத்துள்ளனர்.

ஐ.டி நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்து பணியாற்றுங்கள் என்று கூறி ஊதியத்தை குறைத்துள்ளது. பலரை வேலையை விட்டு துரத்தியுமுள்ளது. வேலையில்லாத இளைஞர் பட்டாளம் மென்மேலும் அதிகரித்திருக்கிறது. வேலைக்கு சென்று கொண்டிருந்தவர்களும் வேலையிழந்து நிற்கிறார்கள்.

இதுதான் மோடியின் புதிய டிஜிட்டல் இந்தியாவின் இலட்சணம் !!


சந்துரு
செய்தி ஆதாரம் : Livemint

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க