ஸ்டான் சுவாமியின் கொலை : UAPA இதற்காகத்தான் சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது
– அருந்ததி ராய்

(செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமியின் கொட்டடிக் கொலை குறித்து எழுத்தாளர் அருந்ததி ராய் வெளியிட்டுள்ள அறிக்கை)

இந்தியாவின் வெளியேற்றப்பட்ட மக்களுக்காக பல தசாப்தங்களை கழித்த 84 வயதான அருட்தந்தை ஸ்டான் சுவாமி என்ற பாதிரியாரின் காவல் கொட்டடி கொலை, நமது ஜனநாயகத்தின் காட்சி சாளரத்தில் நிகழ்ந்தது.

நமது நீதித்துறை, காவல்துறை, உளவுத்துறை மற்றும் சிறை அமைப்பு ஆகியவையே இதற்கு பொறுப்பு. நம் வெகுமக்கள் ஊடகங்களும் கூட. அவர்கள் அனைவரும் இந்த வழக்கைப் பற்றியும், அவரது உடல்நிலை மோசமடைந்து வருவது பற்றியும் அறிந்திருந்தனர். மேலும், அவர் நிலை மோசமடைவது தொடர்ந்தது.

படிக்க :
♦ நடப்பதோ தேசிய பேரழிவு ; தீர்ப்பை வரலாறு எழுதும் || அருந்ததி ராய்
♦ அருந்ததிராய் நூல் நீக்கம் : கருத்துக்களைக் கண்டு அஞ்சும் சங்க பரிவாரம் !

பீமா கொரேகான் சதி என அரசால் அழைக்கப்படும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 16 பேரில் ஒருவரான இந்த மென்மையான, பலவீனமான, ஆனால் மிகப்பெரிய மனிதர் இறந்திருக்கிறார். வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட புலனாய்வு செய்தியில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரான ரோனா வில்சனின் கணினியில் முகமைகள் சொல்லும் சதித்திட்டத்துக்காக கதை திட்டமிட்டு, சொருகப்பட்டது தடயவியல் பகுப்பாய்வு மூலம் வெளிக்கொண்டுவரப்பட்டது. அந்த செய்தி இந்திய வெகுமக்கள் ஊடகங்களாலும் நீதிமன்றங்களாலும் புதைக்கப்பட்டது.

செவ்வாய் அன்று (6.7.21), அருட்தந்தை ஸ்டானின் மரணத்திற்கு ஒரு நாள் கழித்து, வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான செய்தி இரண்டாவது இணை குற்றம் சாட்டப்பட்ட சுரேந்திர காட்லிங்கின் கணினியிலும் ஆதாரங்கள் சொருகப்பட்டதை தெரிவிக்கிறது.

ஆனால், நம்மிடம் ஒரு சட்டம் உள்ளது, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், இது குற்றம் சாட்டப்பட்டவர்களை – இந்தியாவின் சிறந்த வழக்கறிஞர்கள், அறிவுஜீவிகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் – கிட்டத்தட்ட காலவரையின்றி, அவர்கள் உடல்நலக்குறைவால் இறக்கும் வரை அல்லது அவர்களின் வாழ்க்கை அழிக்கப்படும் வரை தொடர்ந்து சிறையில் அடைக்க நம் அரசாங்கத்தை அது அனுமதிக்கிறது.

உபா தவறாகப் பயன்படுத்தப்படவில்லை. அச்சட்டம் இதற்காகத்தான் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் மெதுவான கொலை, நம்மை ஜனநாயகம் என அழைத்துக் கொள்ள அனுமதிக்கும் அனைத்தையும் மெதுவாகக் கொலை செய்வதன் நுண்ணிய மாதிரியாகும். நாம் பிசாசுகளால் ஆளப்படுகிறோம். அவர்கள் இந்த நிலத்தை சாபத்துக்கு உள்ளாக்கியுள்ளனர்.


அனிதா
செய்தி ஆதாரம் : Scroll

2 மறுமொழிகள்

 1. குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றவாளி அல்ல ஆனால் சாட்டப்பட்ட குற்றத்தின் தன்மை என்பது உண்டல்லவா. முகாந்திரம் இல்லாமல் கைது நடவடிக்கை இல்லை. மேலும் அவரின் பினை மனுவினை குறித்து விசாரணை செய்த நீதிமன்றம் தெளிவாக வயது மூப்பை இவ்வழக்கில் பிரதிவாதமாக ஏற்கமுடியாது என்று கூறியுள்ள கூற்று ஏற்ப்புடையதே. தேச நலன் கருத்தில் கொள்ளாத போது இவர் போல 100 சுவாமிகள் தியாகிகள் ஆக்கப்படுவார்கள்.

  • செந்தில்,

   ஸ்டான்சுவாமி மட்டுமல்ல, பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருமே இந்த அரசின் திருட்டுத் தனங்களை, மக்கள் விரோத செயல்களை அம்பலப்படுத்தியவர்களே..

   அவர்களை முடக்குவதற்காகவே, அவர்கள் அனைவரையும் மாவோயிஸ்டுகளோடு தொடர்புடையவர்கள் என்று இந்த வழக்கை இட்டுக் கட்டியது அரசு. ரோனாவில்சனின் கணிணியிலிருந்து கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் தொடர்புடைய கடிதத்தை, அந்தக் கடிதம் வெளியான சமயத்தில், கரடியே காறி துப்பிவிட்டது.

   பல முன்னாள் அதிகாரிகள் அக்கடிதத்தின் நம்பகத்தன்மையை அப்போதே கேள்விகேட்டார்கள். அந்தக் கடிதத்தைக் கொண்டுதான் மொத்த வழக்கிலும் முகாந்திரம் இருப்பதாக நீதித்துறை சொல்கிறது.

   இப்போது அந்தக் கடிதங்கள் அனைத்துமே இணையவழியில் திருட்டுத்தனமாக உட்சொருகப்பட்டவை என்று ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.

   இன்னும் பீமா கொரேகான் வழக்கை நடத்துவதே, ஒரு யோக்கியமான அரசோ, நீதிமன்றமோ செய்யக் கூடாத ஒன்று. ஆனால் அனைத்தையும் உதிர்த்துப் போட்டுவிட்ட அரசுக் கட்டமைப்பு இன்னும் வெக்கமில்லாமல் வழக்கை நடத்துகிறது.

   நீங்களும் வாயைத் தூக்கிக் கொண்டு வடை சுட வந்துவிட்டீர்கள்.. யோக்கியர் மோடியைப் போல…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க