டந்த ஏப்ரல் மாதம் கோவிட் 19 இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தார்கள். மருத்துவமனைகளில் போதிய இடமில்லை; இடமிருந்தாலும் வெண்டிலேட்டர்கள் இல்லை என மோடி அரசு கைவிரித்து மக்களைக் கொன்றது. கோவிட் தொற்றால் இறந்தவர்களின் பிணங்களால் சுடுகாடுகள் நிரம்பி வழிந்தன. ‘புனித’ நதிக்கரைகள் பிணக்காடுகள் ஆகின..

மோடி அரசின் கையாலாகாத் தனத்தால் ஏற்பட்ட இந்தப் பெருந்தொற்று அவலம் சர்வதேச ஊடகங்களில் வெளியானது. சர்வதேச அளவிலிருந்து இந்தியாவின் மீதான அழுத்தம் அதிகரித்த பின்னர்தான், கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட பி.எம். கேர்ஸ் என்ற பெயரிலான நிதியிலிருந்து ரூ. 2000 கோடியை வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்காக ஒதுக்கியது. அதற்கு முன்னர் வரை அந்தப் பணத்தைப் பற்றி எவ்விதமான தகவலும் வெளியாகாத வண்ணம் பார்த்துக் கொண்டது மோடி அரசு.

ஓராண்டுக்கு முன்பிருந்தே அரசாங்கத்தால் நடத்தப்படும் கோவிட் மருத்துவமனைகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 50,000 வென்டிலேட்டர்களை வாங்க ரூ .2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மோடி அரசு கூறியது.

படிக்க :
♦ அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி
♦ காவிரி உரிமைக்கான போராட்ட வழக்குகளை தூசி தட்டும் தமிழக போலீசு !

அந்த நிதியே போதாது என விமர்சனங்கள் எழுந்தநிலையில், அதையும்கூட முழுமையாக செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது மோடி அரசு. ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில் ரூ. 1,532 கோடி மட்டுமே பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து வெண்டிலேட்டர்கள் வாங்க விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலைக்குப் பிறகும், தனியார் உற்பத்தியாளர்களிடமிருந்து வந்த 16,000 வென்டிலேட்டர்கள் இன்னும் மருத்துவமனைகளில் நிறுவப்படவில்லை என்று சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி, தி இந்து நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.

கூடுதலாக, சுகாதார அமைச்சகத்தின் பதிலில் 50,000 வென்டிலேட்டர்களின் விலை ரூ. 2,147 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதே நேரத்தில் பி.எம்கேர்ஸ் நிதி ரூ .2,000 கோடியை ஒதுக்கியுள்ளதால் 2,147 கோடி ரூபாய்க்கான ரசீதுகள் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் சுகாதார அமைச்சக அதிகாரி கூறியுள்ளார். ஆனால் அதற்கான கட்டணம் இன்னும் நிலுவையில் உள்ளது. PM CARES நிதி தனிப்பட்ட நிதியாக அரசாங்கம் தக்க வைத்துக் கொண்டாலும், பிரதமர் அலுவலக அதிகாரிகள் இந்த நிதியை “மரியாதையின் அடிப்படையில்” நிர்வகிக்கின்றனர்.

2020-ம் ஆண்டு ஏப்ரல் 3 –ம் தேதி, 58,850 வென்டிலேட்டர்களுக்கு ரூ .2,332.22 கோடிக்கு கொள்முதல் ஆணையை அமைச்சகம் வழங்கியது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட தகவலின் படி, அவற்றில், 30,000 வென்டிலேட்டர்கள் அரசால் இயக்கப்படும் பாதுகாப்புத்துறை உற்பத்தி நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி..எல்)க்கு அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை தனியார் நிறுவனங்களிலிருந்து அமைச்சகத்தின் கொள்முதல் நிறுவனமான இந்துஸ்தான் லைஃப் கேர் லிமிடெட் (எச்.எல்.எல்) வழியாக வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மே 13, 2020 அன்று, பி.எம் கேர்ஸ் நிதி 50,000 வென்டிலேட்டர்களுக்கு ரூ .2,000 கோடியை செலுத்துவதாகக் கூறியது. இதில் அனைத்து பி..எல் வென்டிலேட்டர்களும், எச்.எல்.எல் நிறுவனத்தால் வாங்கப்படும் 20,000 வென்டிலேட்டர்களும் அடங்கும் என ஆர்.டி.ஐ. பதிலில் தெரிவித்துள்ளது.

பாரத் எலெக்ட்ரானிக்சின் கொள்முதல் ஆணை மதிப்பில் 1,513.92 கோடியில் 1,497.34 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவன உற்பத்தியாளரான பி.இ.எல்., தனது 30,000 வெண்டிலேட்டர்களில் 29,750-ஐ வழங்கி நிறுவியுள்ளது.

இருப்பினும், முதலில் கொடுக்கப்பட்ட 58,850 வென்டிலேட்டர்களில் 42,000 வென்டிலேட்டர்கள் மட்டுமே நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். தனியார் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆர்டர் செய்யப்பட்ட 16,000-க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்கள் இன்னும் நிறுவப்படவில்லை.

ஆர்.டி.ஐ தகவலின்படி, பி.எம் கேர்ஸ் நிதியால் ரூ .36.36 கோடி எச்.எல்.எல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், எச்.எல்.எல் மூலம் வாங்கப்படும் 20,000 வென்டிலேட்டர்களுக்கான தொகை 633.28 கோடி ரூபாய். அதற்கான ரசீது பிரதமர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், முன்கூட்டியே வழங்கப்பட்ட ரூ .36.36 கோடியைத் தவிர வேறு எந்த கட்டணமும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் இந்த கோப்பு பிரதமர் அலுவலகத்தில் உள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

கடந்த மாதம், ஜார்க்கண்டிற்கு மத்திய அரசு வழங்கிய வென்டிலேட்டர்களில் கால் பகுதி வெண்டிலேட்டர்கள் செயல்படவில்லை எனவும், காணாமல் போன பாகங்களை பழுதுபார்ப்பது அல்லது மாற்றுவது அவசியம் எனவும் ஒரு செய்தி ஊடகங்களில் வெளியானது.

படிக்க :
♦ ஒரு லட்சம் போலி கோவிட் பரிசோதனைகள் : சூப்பர் ஸ்ப்ரெட்டர் கும்பமேளா
♦ வீட்டு முன் சாணம் கொட்டியதை தட்டிக் கேட்ட தலித் குடும்பம் மீது சாதிவெறியர்கள் தாக்குதல் !

அரசு பெற்ற 663 வெண்டிலேட்டர்களில், அவை நிறுவப்பட்ட நேரத்தில், 164 வென்டிலேட்டர்கள் அல்லது மொத்தத்தில் 24.73% வெண்டிலேட்டர்களில்சில இயந்திர குறைபாடுகள் அல்லது சில பாகங்கள் காணாமல் போனதால் பயன்படுத்த முடியாது என கண்டறியப்பட்டது.

சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளால் பி.எம்கேர்ஸால் நிதியளிக்கப்பட்டு வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் பழுதான வென்டிலேட்டர்கள் இருந்ததாகவும் அந்த அரசு கூறியிருந்தது.

எந்தப் பொருளை வாங்கினாலும் அந்தப் பொருள் செயல்பட்டால் மட்டும்தான் அதற்கான பணத்தை ஒப்படைப்பது என்பது அரசு தரப்பு நடைமுறை. பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்த வெண்டிலேட்டர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டிருப்பதையும், தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்ட பொருட்களுக்கு பணம் கொடுக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதையும் வைத்துப் பார்க்கும் போது, தனியார் நிறுவனங்களிடமிருந்து எச்.எல்.எல் நிறுவனம் வாங்கிய வெண்டிலேட்டர்களின் யோக்கியதை என்னவாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தனியார் என்றால் தரம், தனியார் என்றால் பரிசுத்தம் என்ற மாயைகளை எல்லாம் சமீபத்திய நிகழ்வுகள் அம்பலப்படுத்தி வருகின்றன. ஐ.சி.எஃப் முன்னாள் அதிகாரி தனியார் முதலாளிகளிடம் கோடிக்கணக்கில் இலஞ்சம் வாங்கியது இதற்கான ஒரு உதாரணம். தற்போது அது வெண்டிலேட்டர்களில் வெளிப்பட்டிருக்கிறது !!

கலைமதி
செய்தி ஆதாரம் : 
த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க