கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பேலூர் நகரில், பஜ்ரங்தள் அமைப்பின் காவி குண்டர்கள் ஓர் கிறிஸ்துவ பிரார்த்தனை கூடத்திற்குள் நுழைந்து பிரார்த்தனையை நிறுத்தி மக்களை வலுக்கட்டாயமாக மண்டபத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார்கள்.
கடந்த நவம்பர் 28-ம் தேதியன்று நண்பகல் 12.30 மணியளவில் சுமார் 30 பஜரங்தள் குண்டர்கள், லைஃப் டு நேஷன்ஸ் மினிஸ்ட்ரீஸ் என்ற கிறிஸ்துவ அமைப்பால் நடத்தப்பட்டுவரும் பிரார்த்தனைக் கூடத்திற்குள் நுழைந்ததாக அதன் பொருப்பாளர் பாதிரியார் சுரேஷ் பால் தெரிவித்துள்ளார்.
“இந்துக்களை மதமாற்றியதாகவும்”, “சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்ததாகவும்” பஜ்ரங்தள் குண்டர்கள் சுரேஷ் பால் மற்றும் அங்கு கூடியிருந்தவர்கள் மீது குற்றம்சாடி, “ஜெய் ஸ்ரீ ராம்” என கூச்சலிட்டனர்” என்று சுரேஷ் பால் தெரிவித்தார்.
பஜரங்தள் குண்டர்கள் கர்நாடக மாநிலத்தின் பெலகாவி பகுதியிலும் இதுபோன்ற ஓர் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.
படிக்க :
♦ கர்நாடகா : டொயோட்டாவின் லாபவெறிக்கு எதிராக தொழிலாளர்கள் தொடர் போராட்டம் !
♦ கர்நாடக பாஜக – ஒரு பாலியல் குற்றக் கும்பல் !
“இந்துத்துவா சக்திகள் தங்களை தாக்கக்கூடும் என்றும், போலீசுத்துறை பிரார்த்தனைக் கூடத்திற்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறியதாலும், கூட்டம் நடத்த வேண்டாம்” என்று பெலகாவி பகுதியில் உள்ள ஓர் தேவாலயத்தின் பாஸ்டர் தாமஸ் ஜான்சன் கூறினார்.
பெலகாவியில் நடைபெறவுள்ள கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் முடியும் வரை கிறிஸ்துவக் குழுக்கள் பிரார்த்தனைக் கூட்டங்களை தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 13 முதல் 24 வரை நடைபெறும் இந்த அமர்வில் சர்ச்சைக்குரிய மதமாற்ற எதிர்ப்பு மசோதா இடம்பெறும் என கூறப்படுகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட போதகர்களை பிரார்த்தனை கூட்டங்களைத் தவிர்க்குமாறு போலீசு அறிவுறுத்தியுள்ளது.
Members of Hindutva group Bajrang Dal raided a Christian prayer group in Belur, after falsely accusing them of forcibly converting Hindus.
But the Christian women fought back against their cowardly attackers!
(h/t @KeypadGuerilla) pic.twitter.com/lLryUIVyRP
— CJ Werleman (@cjwerleman) November 30, 2021