ள்ளிகளை மீண்டும் திறந்தால் கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று கல்வித் துறையில் உலகளாவிய கோவிட் 19-ன் தாக்கத்தை கண்காணித்து வரும் உலக வங்கியின் கல்வித்துறை இயக்குனர் சாவேத்ரா கூறுகிறார். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் வரை காத்திருப்பதில் எந்த அர்த்தமில்லை என்றும் அதற்குப் பின்னால் அறிவியல் எதுவும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“பள்ளிகளைத் திறப்பதற்கும் கொரோனா பரவுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இரண்டையும் இணைத்து பள்ளிகளை மூடுவதற்கு எந்த நியாயமும் இல்லை. கொரோனாவின் புதிய அலைகள் பல உருவானாலும் பரவுவதை தடுப்பதற்கான ஊரடங்கு நடவடிக்கையில் பள்ளிகளை மூடுவது என்பது கடைசி முயற்சியாகவே இருக்க வேண்டும் என்று சாவேத்ரா கூறினார்.
“உணவகங்கள், டாஸ்மாக் பார்கள் மற்றும் வணிக வளாகங்களை திறந்து வைத்துவிட்டு, பள்ளிகளை மூடி வைத்திருப்பது மிகவும் அர்த்தமற்ற செயலாகும்” என்று கூறுகிறார், சாவேத்ரா.
படிக்க :
பள்ளிகள் மூடல் : உலகளாவிய கல்வி நெருக்கடி நிலை | உலக வங்கி அறிக்கை !
பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !
“2020-ம் ஆண்டில் நாம் அறியாமையின் கடலில் பயணித்துக் கொண்டிருந்தோம் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்தவழி என்னவென்று நமக்கு அப்போது தெரியவில்லை. உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனா தொற்றின் காரணமாக உடனடியாக பள்ளிகளை மூடியது. 2021-ன் பிற்பகுதியில் சில நாடுகளில் பல கொரோனா அலைகள் உருவானாலும் அவை பள்ளிகளைத் திறந்துள்ளன” என்று கூறினார்.
கொரோனாவால் பள்ளிகளை மூடியதன் காரணமாக இந்தியாவின் கற்றல் வறுமை (Learning Poverty) 55 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற ஏழை நாடுகளில் தொற்றுநோய்க்கு முன்பே கல்வியில் ஏற்றத்தாழ்வுகள் நிலவியது. கற்றல் வறுமையின் அளவு ஏற்கெனவே அதிகமாக இருக்கும் நிலையில், கொரோனாவால் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக இலட்சக்கணக்கான குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் மூடப்பட்டன. இதில் மிகவும் ஏழ்மையான குழந்தைகள் கொரோனா தொற்று ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியால் மீண்டும் பள்ளிக்கு வருகை தருவது குறையும் என்பதே வேதனையான செய்தி.
பல குழந்தைகள் தற்போது அனுபவிக்கும் கற்றல் இழப்புகள் தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதவை. உலக வங்கியின் கல்வி- 2020 அறிக்கை, இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக பள்ளிகள் நீண்டகாலமாக மூடப்படுவதால் நாட்டின் எதிர்கால வருமானத்தில் 400 பில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்பு ஏற்படலாம் என்று கணித்தது.
2021-ன் இறுதியில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையும் பள்ளிகள் திறப்பது குறித்தே கூறியுள்ளது.
எனவே, கொரோனா அச்சத்தின் காரணமாக டாஸ்மாக், மால்கள், தியேட்டர்கள் மூடப்படாத போது குழந்தைகளின் கற்றல் திறனை மீண்டும் அதிகரிக்க பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டியது அவசியம். இல்லையேல் குழந்தைகளின் கற்றல் திறன் குறைந்து அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.

சந்துரு
செய்தி ஆதாரம் : தி இந்து

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க