பென்னாகரம் – நாகதாசம் பட்டி கிராமத்தின் வழியாக கடந்த 2019-ம் ஆண்டு பவர்கிரிட் நிறுவனம் மின் கோபுரம் அமைத்து உயர் மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்காக, விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது. இதனால் சிறு, குறு விவசாயிகளின் நிலங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டது.
நாகதாசம் பட்டி கிராமத்தில் சுமார் 12 விவசாயிகள் நிலங்களில் வழியாக பவர்கிரிட் நிறுவனம் மின்சாரத்தை கொண்டு செல்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் தொடக்கம் முதலே தங்கள் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். முறையாக இழப்பீட்டுத் தொகையை கொடுத்து விடுகிறோம் என்று பவர் கிரிட் நிறுவனமும், மாவட்ட நிர்வாகமும் உறுதியளித்து விளைநிலங்களை கையகப்படுத்தினர். ஆனால், இன்று வரை இழப்பீட்டு தொகையை முறையாக வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு பிறகு, இதனையே சாக்காக வைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்தது மாவட்ட நிர்வாகம்; தற்போது இயல்புநிலை திரும்பியபோதும் விவசாயிகளுக்கு இழப்பீடு தர முன்வரவில்லை.

படிக்க :

மார்ச் 8 : மதுரை, தருமபுரி உழைக்கும் மகளிர் தினக் கூட்டம் !

தருமபுரி : நக்சல்பாரி புரட்சியாளர்கள் தோழர்கள் அப்பு பாலன் நினைவேந்தல் !

குறிப்பாக மரங்கள், வீடுகள், கிணறு, பயிர்கள் என பலவற்றை அழித்து நாசம் செய்துவிட்டு பொய் கணக்கு காட்டுவது; மரங்களின் எண்ணிக்கையை குறைத்து கணக்கு காட்டுவது; வீடுகள் இல்லை என காட்டுவது; இப்படி பொய் கணக்கைக் காட்டி இழப்பீட்டு தொகையை சொற்பமாக கொடுக்க முயற்சித்து வருகிறது பவர்கிரிட் நிறுவனம். இதற்கு துணையாக நிற்கிறது மாவட்ட நிர்வாகம்.
இதுகுறித்து வட்டாட்சியர் இடத்தில் முறையிட்டபோது, நிறுவன அதிகாரிகளை அழைத்து இரண்டுமுறை பேச்சுவார்த்தை நடத்தியபோதும் நாங்கள் இழப்பீட்டு தொகையை கொடுத்து விடுகிறோம் என உறுதியளித்தார். ஆனால், இன்றுவரை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை.
இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மூன்று விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு பாதிப்புகளை கணக்கிட்டு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவினை கூட மதித்து அரசு அதிகாரிகள் நடந்து கொள்வதில்லை. இந்த உத்தரவு பிறப்பித்து சுமார் எட்டு மாதங்கள் ஆகிறது; ஆனால், இன்றுவரை அரசு அதிகாரிகள் எட்டிக்கூட பார்க்கவில்லை. எனவே விவசாய நிலங்களை பரிகொடுத்து தங்களின் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்கிற அடிப்படையில் 4.4.2022 இன்று தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
பவர்கிரிட் நிறுவனம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
மீண்டும் மீண்டும் ஏமாற்ற நினைத்தால் விவசாயிகளை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்த கூடும் என்பதை எச்சரிக்கையாக விடுத்து மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்த அதிகாரிகள் உடனடியாக மறுமதிப்பீடு செய்து விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருகிறோம் என உறுதி அளித்துள்ளனர்.
தகவல் :

மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்.
9790138614.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க