22.04.2022
ஜிக்னேஷ் மேவானி கைது !
பாசிச மோடி – அமித்ஷா கும்பலை விமர்சிப்போர்க்கு ஒரு எச்சரிக்கை !
பத்திரிகை செய்தி
குஜராத் மாநிலம் வட்கம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் ராஷ்ட்ரிய தலித் அதிகார் மன்ஞ் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள ஜிக்னேஷ் மேவானி மோடியை விமர்சித்தார் என்ற ஒரே காரணத்திற்காக அசாம் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்செயலை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் அவர் உடனே விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது. இக்கைது பாசிச மோடி – அமித்ஷா கும்பலை எதிர்ப்போரை ஒழித்துக்கட்ட ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கும்பலின் சதி நடவடிக்கையாகும்.
மோடியை, கோட்சேவுடன் தொடர்புப்படுத்தி அவர் குறிப்பிட்டதாகக் கூறி அசாம் மாநில பாஜக தலைவர் அரூப் குமார் டே அசாம் போலீசில் புகார் செய்கிறார். உடனே குஜராத் மாநில எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானியை கைது செய்துள்ளனர்.
படிக்க :
♦ விவசாயிகளின் நிலங்களை இழப்பீடு வழங்காமல் அபகரித்த பவர்கிரிட் நிறுவனம் ! | மக்கள் அதிகாரம் தருமபுரி
♦ நாசகார ஸ்டெர்லைட் ஆலையின் சதித்தனத்தை முறியடிப்போம் !  | மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்
ஜிக்னேஷ் மேவானி வெளியிட்ட கருத்தானது ட்விட்டர் பக்கத்தில் இருந்து அப்போதே நீக்கம் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள ஜிக்னேஷ் மேவானி தனது கருத்தை ட்விட்டரில் பதிவு செய்கிறார். அதற்கு எதிராக அசாமில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார் என்றால் மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கை மோடி – ஆர்.எஸ்.எஸ். – பாஜக பாசிச கும்பலை எதிர்ப்பாளர்களை ஒழித்துக்கட்டும் நடவடிக்கை ஆகும்.
அசாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள பாபானிபூரில் வசிக்கும் அனுப் குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், 120 B (குற்றச்சதி), பிரிவு 153(A) 153(B) இரு சமூகங்களுக்கிடையில் பகைமையை தூண்டுதல், 295 (A) அவமதிக்கும் நோக்கத்துடன் வழிபாட்டுத் தளங்களை சேதப்படுத்துதல், 504 அமைதியைக் கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல், 506 மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய வழக்குகளின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் ஜிக்னேஷ் மேவானி.
மோடி, கோட்சேவின் சிலைக்கும், படத்திற்கும் மரியாதை செலுத்தவில்லையா? ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபாவுக்கும் மோடிக்கும் உள்ள தொடர்பு ஊரறிந்த ரகசியம்.  கோட்சேவுக்கும் மோடிக்கும் தொடர்பு உள்ளதென்பது  என்பது எப்படி சதிக்குற்றச்சாட்டு ஆகும்?  இரு சமூகங்களுக்கிடையில் பகைமையை தூண்டுவது என்ற சட்டப்பிரிவினை வேறு சேர்த்துள்ளது அசாம் போலீசு. கோட்சேவை ஆதரிக்கும் சமூகம், கோட்சேவை எதிர்க்கும் சமூகம் என்று  பகைமை கொள்ளப்போகிறார்களா என்ன? மேவானி பதிவிட்ட கருத்துக்கும் வழிபாட்டு தலங்களை சேதப்படுத்துவதற்கும் ஏதேனும் தொடர்புண்டா என்ன? கைது செய்ய ஆணை பிறப்பித்த நீதிமன்றம் அப்பட்டமாக பாசிச நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.  ஆக,  மோடி அரசுக்கு எதிரானவர்களை சித்தரவதை செய்து துன்புறுத்தும் நோக்கத்துக்காகவே குஜராத்தில் உள்ளவர் மீது அசாமில் புகார் கொடுப்பது, அசாம் போலீசு கைது செய்வது போன்ற நடவடிக்கை.
படிக்க :
♦ சிபிஎம் கருத்துக்கு மறுப்பு : பாலியப்பட்டு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிப்போம் ! | மக்கள் அதிகாரம்
♦ தில்லையில் தமிழுக்குத் தடை : நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
உண்மையில் இசுலாமியர்கள் மற்றும் தலித் மக்களுக்கு எதிராக பதிவிடும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக – சங்கப்பரிவார் கும்பலைச்சேர்ந்த யாரையும் வேறொரு மாநில போலீசு கைது செய்ததில்லை. ஆனால். மோடி – சனாதன மதவெறியர்களுக்கு எதிராக சிந்திக்கும், செயல்படும் யாரையும் எந்த மாநில போலீசை வைத்தும் கைது செய்ய முடியும் என்று நமக்கு சவால் விடுகிறது மோடி அரசு.
இது ஏதோ குஜராத் பிரச்சினை அல்ல; ஜிக்னேஷ் மேவானியின் கைதினை எதிர்த்துப் போராடாவிட்டால் அடுத்து தமிழ்நாட்டிலும் மோடிக்கு எதிரானவர்களை வேறு மாநில போலீசை வைத்து கைது செய்யும் நிலை ஏற்படும். ஆகவே பாசிச மோடி – அமித்ஷா கும்பலின் நடவடிக்கைக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க