மருந்துகளை சட்டவிரோதமாக விளம்பரம் செய்த பதஞ்சலி !

"இதய நோய்கள்" மற்றும் "இரத்த அழுத்தம்" போன்ற பிரச்சினைகளுக்கான எந்த சிகிச்சைகளையும் விளம்பரப்படுத்துவதைத் தடை செய்யும் மருந்து மற்றும் தீர்வுகள் சட்டத்தின் பிரிவு 3-ஐ இந்த விளம்பரங்கள் மீறுகின்றன.

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இதய நோய் மற்றும் கல்லீரல் நோய்களுக்கான மருத்து தயாரிப்புகளை சட்டவிரோதமாக விளம்பரப்படுத்துவதாக கேரள கண் மருத்துவர் தாக்கல் செய்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதாக மருந்துகளுக்கான மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த கண் மருத்துவரான டாக்டர் கே.வி.பாபு, பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட மூன்று விளம்பரங்கள், மருத்துகள் மற்றும் தீர்வுகள் (ஆட்சேபனைக்குரிய விளம்பரம்) சட்டம், 1954 மற்றும் 1955 விதிகள் மற்றும் மருத்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1949 ஆகியவற்றை மீறுவதாகக் கூறி புகார் அளித்தார்.
மருத்துகள் மற்றும் தீர்வுகள் (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) சட்டம், 1954 என்பது இந்தியாவில் மருந்துகளின் விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் சட்டமாகும். அதேபோல் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 என்பது இந்தியாவில் மருந்துகளின் இறக்குமதி, உற்பத்தி மற்றும் வினியோகத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமாகும்.
“கொழுப்பு கல்லீரல், கல்லீரல் ஈரல் அழற்சி மற்றும் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சினைகளில் உடனடி நன்மைக்காக” “சான்று அடிப்படையிலான மருந்துகள்” என்று பதஞ்சலி விளம்பரப்படுத்தியது. “இதய நோய்கள்” மற்றும் “உயர்ந்த அல்லது குறைந்த இரத்த அழுத்தம்” உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கான எந்த சிகிச்சைகளையும் விளம்பரப்படுத்துவதைத் தடை செய்யும் மருந்து மற்றும் தீர்வுகள் சட்டத்தின் பிரிவு 3-ஐ இந்த விளம்பரங்கள் மீறுகின்றன என்று டாக்டர் பாபு தனது புகாரில் கூறியுள்ளார்.
படிக்க :
♦ பதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் !
♦ ‘மக்கள் கடுமையாக உழைத்து வரிக்கட்ட வேண்டும்’ – பாபா ராம்தேவ்
“சில நோய்களைக் குணப்படுத்துவதாக கூறும் மருந்துகளை விளம்பரப்படுத்த கூடாது. இந்த விளம்பரங்கள் பிப்ரவரி 2022-ல் வெளிவந்தன. ஒரு வாரத்தில் கொழுப்பை குறைப்பதன் மூலம் இதயப் பிரச்சினைகள் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தும் என்று விளம்பரம் வெளியானதை எதிர்த்து இந்திய மருத்துக் கட்டுப்பாட்டுத் தலைவர் வி.ஜி.சோமானிக்கு பிப்ரவரி 24 அன்று புகார் அனுப்பினேன். அந்த புகார் பின்னர் ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி) அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது” என்று புகாரில் பாபு கூறினார்.
மார்ச் 1-ம் தேதி புகாரின் மீதான அரசின் நடவடிக்கைகளை அறிய கே.வி. பாபு தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தில் விண்ணப்பத்தை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 19-ம் தேதி அவருக்கு பதில் கிடைத்துள்ளது. பதிலுடன் இணைக்கப்பட்ட ஆயுஷ் அமைச்சகத்தின் மருத்துக் கொள்கைப் பிரிவு, ஆயுர்வேத மற்றும் யுனானி சேவைகள் இயக்குனருக்கு விளம்பரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தும் கடிதம் இருந்தது.
அதில், “மாநில உரிமை ஆணையத்தின் (SLA) அதிகார வரம்பிற்கு உட்பட்டு வரும் மருந்துகள் மற்றும் தீர்வுகள் (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) சட்டம் 1954 மற்றும் அதன்கீழ் உருவாக்கப்பட்ட விதிகளுக்கு முரணான விளம்பரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு SLA-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று கடிதம் கூறுகிறது.
மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்களின் விதிகள், 1945-ல் உள்ள பிரிவு 106-ன் படி அட்டவணை J-ல் குறிப்பிடப்பட்டுள்ள நோய்களை குணப்படுத்த எந்த மருத்தும் உரிமை கோர முடியாது. “நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்றவை இந்த அட்டவணையின்கீழ் வருகின்றன. மேலும் அந்த தயாரிப்புகள் இந்த நோய்களைக் குணப்படுத்தும் என்று விளம்பரங்கள் கூறுகின்றன” என்று பாபு கூறினார்.
கடந்த கொரோனா காலத்தின்போது, இந்தியாவின் மருத்துவ சமூகம் பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட மூலிகை என்ற பெயரில் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியது. கோவிட் 19 – சமீபத்திய தொற்று – தீர்வுகளை விளம்பரப்படுத்த முடியாத நோய்களின் பட்டியலில் இல்லாததால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதேபோல, நாட்டின் மிகப்பெரிய அமைப்பான இந்திய மருத்துவ சங்கத்தின் அலுவலகப் பொறுப்பாளர்கள் மற்றும் நவீன மருத்துவப் பயிற்சியாளர்கள் ஆயுர்வேதத்தை எதிர்க்கவில்லை, ஆனால் மருத்துவ முறைகள் மற்றும் சட்ட விதிகளை மீறக் கூடாது என்று அடிக்கடி வலியுறுத்துகின்றனர்.
மருந்துகளை சட்டவிரோதமாக விளம்பரம் செய்து விற்க முயற்சிக்கும் பாபா ராம் தேவின் பதஞ்சலி உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் உடனே இழுத்து முடவேண்டும். இலாபவெறிக்கான மக்களின் உயிர்மீது விளையாடும் பாபா ராம்தேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

காளி
செய்தி ஆதாரம் : The News Minute, telegraphindia

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க