உலகப் பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியாவிற்கு 150-வது இடம் !

பத்திரிகையாளர்கள், ஊடகவியளாளர்கள் ஆகியோர்களுக்கு வழங்கப்படும் கருத்துச் சுதந்திரம் வெகு வேகமாக குறைந்து வருகிறது என்பதையே இந்த உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டு (இந்தியா 150-வது இடம்) நமக்கு உணர்த்துகிறது.

1
2022-ம் ஆண்டுக்கான உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டை மே 3 அன்று Reporters Without Borders – RSF உலக பத்திரிகையாளர்கள் அமைப்பு வெளியிட்ட, பத்திரிகை சுதந்திரம் தரவரிசையில் இந்தியா கடந்த 2016-ம் ஆண்டில் 180 நாடுகளில் 133-வது இடத்தில் இருந்துது. அந்த வரிசை மேலும் குறைந்து 2021-ம் ஆண்டில் 142-வது இடத்திற்கு வந்தது.
ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிகையாளர்கள், செய்தி நிறுவனங்கள் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் அளவையும் அத்தகைய சுதந்திரத்தை மதிக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளையும் உலக பத்திரிகை சுதந்திரக் குறியீடு குறிப்பிடுகிறது.
உலகின் ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தான இடங்களில் பட்டியலிடப்பட்டது. அதில் கடந்த ஆண்டு இந்தியா 142-வது இடத்தில் இருந்தது. 2022-ல் இந்தியா 150-வது இடத்தைப் பிடித்துள்ளது.
”பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறைகள் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் பத்திரிகை சுதந்திரம் நெருக்கடியில் உள்ளது என்பதை நிருபிக்கிறது. 2014 முதல் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் நரேந்திர மோடியால் ஆட்சி செய்யப்படுகின்றது. இது இந்து தேசியவாதம்” என்று 2022 அறிக்கை கூறியது.
படிக்க :
காஷ்மீர் வாலா பத்திரிகையாளர் அப்துல் ஆலா கைது !
ம.பி : பத்திரிகையாளர், நாடகக் கலைஞர்கள் கைது – சித்திரவதை செய்த போலீசு !
முதலில் காலனியத்துவ எதிர்ப்பு இயக்கத்தின் விளைவாக இந்திய பத்திரிகைகள் மிகவும் முற்போக்கானதாகக் கருதப்பட்டன. ஆனால் 2014-ல் நரேந்திர மோடி பிரதமரான பிறகு பாஜகவும் பெருமுதலாளிகளின் நிறுவனங்களும் ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. சந்தேகத்திற்கு இடமின்றி முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் இப்போது மோடியின் தனிப்பட்ட நண்பரும், இந்தியர்களால் பின்தொடரும் 70-க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களின் உரிமையாளரும் ஆவார்.
கொரோனாவை பெரும்தொற்று காலத்தில் அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் தொற்றுநோயைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கைகளுக்கு முரணான செய்திகளே ஊடகங்களில் வெளியிடப்பட்டது என்பதை எடுத்துக்காட்டுகிறது அறிக்கை.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாத்தில், கொரோனா குறித்து செய்தி வெளியிட்டதற்காக 55 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக பல்வேறு ஊடக அறிக்கைகள் வெளிவந்தன. அவை, அரசாங்கத்தை அதிகம் விமர்சிக்கும் இந்திய ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கூறியது.
தற்போது 13 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்படுள்ளனர் மற்றும் ஜனவரி 1-ம் தேதி ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டர். ஒடிசா மொழி செய்தித்தாள் தரித்ரியின் நிருபரும் புகைப்படக் கலைஞருமான ரோஹித் குமார் பிஸ்வால் மாநிலத் தலைநகரான புவனேஸ்வரில் இருந்து மேற்கே 400 கிமீ தொலைவில் உள்ள கலஹண்டி மாவட்டத்தில் கர்லகுண்டா பாலம் அருகே பிப்ரவரி 5 அன்று Improvised explosive device – IED வெடித்ததில் கொல்லப்பட்டார்.
இணைய முடக்கம் மற்றும் தவறான தகவல்களின் பரவல் ஆகியவையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா பின்னுக்கு தள்ளப்பட்டதற்கு மிகுந்த பங்களிப்பு செய்துள்ளது.
“சமூக ஊடகங்களில் பயங்கரமான வெறுப்பு பிரச்சாரங்கள் மற்றும் வன்முறைக்கு அழைப்புகள் விடப்பட்டன” என்று பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்து RSF அறிக்கை கூறுகிறது. காஷ்மீர் நிலைமை இன்னும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அங்கு நிருபர்கள் அடிக்கடி போலீஸ் மற்றும் துணை ராணுவத்திரினரால் துன்புறுத்தப்படுகிறார்கள். சிலர் தற்காலிக விசாரணை என்று அழைக்கப்படும் பல ஆண்டுகளாக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பத்திரிகையாளர்கள், ஊடகவியளாளர்கள் ஆகியோர்களுக்கு வழங்கப்படும் கருத்துச் சுதந்திரம் வெகு வேகமாக குறைந்து வருகிறது என்பதையே இந்த உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டு (இந்தியா 150-வது இடம்) நமக்கு உணர்த்துகிறது.
பத்திரிகையாளர்களுக்கு மிகவும் அபாயகரமான நாடாக மாறி வருகிற நிலையில் பாசிச மோடியின் இந்தியாவில் ஜனநாயகத்தை எதிர்ப்பார்க்க முடியுமா என்ன. பாசிசத்தை வீழ்த்தால் விட்டால் பத்திரிகை சுதந்திரம் எல்லாம் பகற்கனவுதான்.

சந்துரு