காஷ்மீர் வாலா பத்திரிகையாளர் அப்துல் ஆலா கைது !

காஷ்மீரின் பல்வேறு மனித உரிமைகளுக்கு குரல் கொடுத்த ஆலா, நவம்பர் 6, 2011 அன்று தி காஷ்மீரி வாலா பத்திரிகையில் 'தி ஷேக்கிள்ஸ் ஆஃப் ஸ்லேவரி ப்ரேக்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.

0
தி காஷ்மீர் வாலா பத்திரிகையாளர் அப்துல் ஆலா ஃபாசிலி, தான் எழுதிய ஒரு கட்டுரைக்காக ஜம்மு&காஷ்மீரின் போலீசுத்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பால் (SIA) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 17 அன்று ஹம்ஹாமாவில் உள்ள அப்துல் ஆலாவின் வீட்டிலும், ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் வாலா அலுவலகத்திலும் சோதனை நடந்தப்பட்டது. SIA-ன் ஜம்மு பிரிவு போலீசு நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் எண் 01/2022-ன்கீழ் அப்துல் ஆலா கைது செய்யப்பட்டதாக புலனாய்வு அமைப்பு கூறியது. இதுவரை இரண்டு வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ள அப்துல் ஆலாவிற்கு இது நான்காவது வழக்கு. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டுவிடலாம்.
படிக்க :
♦ முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !
♦ காஷ்மீர் : கருத்துரிமையை கல்லறைக்கு அனுப்பும் காவி பாசிசம் !
SIA செய்தித் தொடர்பாளர், “கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் பிற டிஜிட்டல் கருவிகளை உள்ளடக்கிய குற்றஞ்சாட்டக் கூடிய ஆதாரங்களை” தேடுதல் குழுக்கள் மூன்று இடங்களில் சோதனையின்போது கைப்பற்றினர்” என்றார்.
000
காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார் அப்துல் ஆலா. 2016-ல் ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் வன்முறை வெடித்தது. இதனால் ஏற்படும் மனித உரிமை பிரச்சினைகள் குறித்து, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் குரல் கொடுத்தார் ஆலா. 2016-ம் ஆண்டு ‘ஆசாதி – ஒரே வழி’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றதற்காக ஏப்ரல் 10 அன்று காஷ்மீர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராக பணியாற்றிய ஷேக் ஷோகத் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு ஆலா கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, காஷ்மீரின் பல்வேறு மனித உரிமைகளுக்கு குரல் கொடுத்த ஆலா, நவம்பர் 6, 2011 அன்று தி காஷ்மீரி வாலா பத்திரிகையில் ‘தி ஷேக்கிள்ஸ் ஆஃப் ஸ்லேவரி ப்ரேக்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். 2008 மற்றும் 2010-க்கு இடையில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 3 ஆண்டு அமைதியின்மையான சூழலில் எழுதப்பட்ட கட்டுரை அது.
அந்தக்கட்டுரை, மிகவும் ஆத்திரமூட்டல், தேசத்துரோகம் மற்றும் ஜம்மு&காஷ்மீரில் அமைதியின்மையை உருவாக்கும் நோக்கம் கொண்டது” என்றும், “பயங்கரவாதத்தை  ஊக்குவிப்பதன் மூலம் இளைஞர்களை வன்முறையின் பாதையில் செல்ல ஊக்குவிக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது என்றும் SIA குற்றம்சாட்டியது.
‘பயங்கரவாத நிதியுதவி’வழக்கு தொடர்பாக 2017-ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்ட ஆலா, தனது கட்டுரையில், “இந்தியாவை விரட்டியடிப்பதில் நாம் இன்னும் வெற்றிபெறாமல் இருக்கலாம். ஆனால், காஷ்மீர் மீதான அவர்களின் பிடியை அசைப்பதிலும், அவர்களின் அகிம்சை மற்றும் ஜனநாயகத்தின் முகமூடியைக் கிழிப்பதிலும் வெற்றி பெற்றுள்ளோம் – அவர்களின் கொடூரமான குற்றங்களை மனசாட்சியுள்ள மக்கள் முன் அம்பலப்படுத்தியுள்ளோம்” என்று எழுதியுள்ளார்.
“இந்தியா எங்களுக்கு ஒரு கொடுங்கோலராக இருந்து வருகிறது, ஆனால் அவர்களின் குற்றங்களை நாங்கள் மறைப்பது தவறு. நம் மக்களைக் கைது செய்வதில் மற்றும் சித்திரவதை செய்வதில், நமது சொத்துக்களை அழிப்பதில், மிருகத்தனமாக நம்மை தாக்குவதில் இந்தியா வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் அவர்கள் மீண்டும் அதைச் செய்வார்கள். எங்கள் சுதந்திர காஷ்மீர் கனவு – நீதிக்கான கனவு – பயம் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற கனவுகளில் நாங்கள் வெற்றிபெற முடியாது” என்று ஆலா அந்த கட்டுரையில் எழுதியிருந்தார்.
படிக்க :
♦ ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : காவிகளின் வெறியாட்டத்தை மறைக்கும் அக்னிகோத்ரி !
♦ பொய்வழக்கில் காஷ்மீர் பத்திரிகையாளர் மீண்டும் மீண்டும் கைது !
சில பகுதிகளை மேற்கோள் காட்டி, SIA செய்தித் தொடர்பாளர், “சுதந்திரம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் சொல்லாடல்களை மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதன் மூலம்” “பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரிவினைவாத கூறுகளை ஊக்குவிக்கும்” அறிவுறுத்தல் நோக்கத்துடன் வார்த்தைகளை பயன்படுத்துவதாகக் கூறினார். “இது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ மற்றும் அதன் பயங்கரவாத பிரிவினைவாதிகளின் பார்வை” என்று SIA கூறியது.
காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்கள் மீதான அரசின் ஒடுக்கு முறைகளை அம்பலப்படுத்தியதற்காகவும் அப்துல் ஆலா பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார். காஷ்மீர் மக்களின் துயரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பத்திரிகையாளர்களை நசுக்குவதுதான் காவி பயங்கரவாதிகளின் பணி. இதுபோன்ற சமூக அவலங்களுக்காக குரல்கொடுக்கும் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், முற்போக்காளர்களை காவி பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பது உழைக்கும் மக்களின் கடமை.

காளி
செய்தி ஆதாரம் : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க