சங்கி கூட்டத்தையே மிஞ்சி கூவும் தொல்லியல் துறை அதிகாரி !
ன்றிய அரசின் தொல்லியல் துறையில் (ஏ.எஸ்.ஐ) பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரியான தரம்வீர் சர்மா, புதிதாக மதக் கலவரத்தை தூண்டும் வகையில் தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “குதுப்மினார் கோபுரம், டெல்லியின் சுல்தான்களில் ஒருவரான குத்புதீன் ஐபக்கால் கட்டப்பட்டது இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது குறித்து தரம்வீர் சர்மா வெளியிட்ட அறிக்கையில், “டெல்லியிலிருப்பது குதுப்மினார் இல்லை, அது குதுப்-அல்-தீன் ஐபக்கால் கட்டப்பட்டவும் இல்லை. அது, ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் விக்ரமாதித்யாவால் கட்டப்பட்டது. சூரியன் இடம் மாறும் திசையை அறிய கட்டியதால் அதன் பெயர் சூரியக் கோபுரம் ஆகும். ஏ.எஸ்.ஐ சார்பில் நான் அங்கு ஆய்வு செய்தபோது அதற்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இந்த சூரியக் கோபுரம் செங்குத்தாக இல்லாமல் 25 அங்குலம் அளவில் சாய்ந்திருக்கும். இந்த சாய்வானது சூரியனின் திசையை அறிய அமைக்கப்பட்டது. ஜூன் 21-ம் நாளில் அரை மணி நேரத்திற்கு அதன் நிழல் கீழே விழாது. அறிவியல் ரீதியாகக் கட்டப்பட்ட அந்தக் கோபுரம் ஒரு தொல்பொருள் சான்றாகும். அந்த கோபுரமானது ஒரு தனிக்கட்டிடமே தவிர அருகிலுள்ள மசூதியுடன் அதற்கு எந்த தொடர்பும் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த தொல்லியல் துறை அதிகாரி ஓய்வு பெற்றுவிட்டார். தான் பணியாற்றிய காலத்தில் செய்த ஆய்வில் இதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக தற்போது பேசுபவர், ஏன் இதற்கு முன்பு இதை பற்றி பேசவில்லை. ஏன் அதை ஆய்வு பூர்வமாக நிரூபிக்கவில்லை என்று கேள்விகள் எதார்த்தமாக எழுகிறது?
படிக்க :
கர்நாடகா : ஜமா மசூதியை இடிக்கத் துடிக்கும் காவிக் கும்பல் !
இஸ்லாமியர்களின் வழிபாட்டு தளங்களை அபகரிக்கத் துடிக்கும் காவிகள் !
ஒரு வாரத்திற்கு முன்புதான் சங்கி கூட்டம் குதுப்மினார் முன்பு போராட்டம் நடத்தியது அதில் குதுப்மினார் பெயரை விஷ்ணுமினார் என மாற்ற வேண்டும் காரணம் அது இந்துக் கோயிலை இடித்து கட்டப்பட்டது என பேசினார்கள்.
சங்கிக் கூட்டம் கோவிலை இடித்துவிட்டு தான் மசூதி கட்டினார்கள் என்று பேசினால் இந்த அதிகாரி குதுப்மினார் கட்டிடத்தை கட்டியதே இந்து மன்னர்தான் என சங்கி கூட்டத்தையே மிஞ்சி கூவுகிறார்.
அடுத்ததாக, உத்தரப்பிரதேசம் வாரணாசியின் கியான்வாபி மசூதி, மதுராவின் ஷாயி ஈத்கா மசூதி, ஆக்ராவின் தாஜ்மஹால் மற்றும் கர்நாடகாவின் ஜாமா மசூதி ஆகிய பிரச்சினைகளிலும் அடுத்து இதை எதிர்பார்க்கலாம்.
பாபர் மசூதியை போன்று ஆய்வு என்று உள்ளே போவார்கள், பின்பு ஆய்வில் எதுவும் நிரூபணம் ஆகாததால் இந்து மனசாட்சி! இந்துக்களின் நம்பிக்கை! என்று பேசி நீதிமன்றமே தீர்ப்பு வழங்குவார்கள். இன்று நடக்கக்கூடிய குதுப்மினாராகட்டும், தாஜ்மஹாலாகட்டும், கியான் வாபியாகட்டும் இதைப்பற்றி எல்லாம் முதலில் பொய்ப் பிரச்சாரத்தை கிளப்பி அதை கலவரமாக வளர்த்தெடுத்து பின்பு இதுதான் இந்து நம்பிக்கை என்று சொல்லி நீதிமன்றமும் பாபர் மசூதி பிரச்சினையைபோல் வீட்டை இடித்தவனுக்கே வீடு சொந்தம் என தீர்ப்பு வழங்கும்.
வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991-ன் படி அயோத்தியை தவிர்த்து மற்ற வழிபாட்டுத் தலங்கள் 1947, ஆகஸ்ட் 15-க்கு முன்பு எப்படி இருந்து வருகிறதோ அதேபோல் பராமரிக்கப்பட வேண்டும் என சட்டம் சொல்கிறது.
இவர்கள் உருவாக்கி வைத்துள்ள இந்த சட்டத்தின் படியே பார்த்தால் கூட இன்று ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் செய்யும் வேலைகள் எல்லாம் சட்டவிரோதமானவை; இந்த சட்டவிரோதமான வேலையைத்தான் நீதிமன்றங்கள் அங்கீகரித்து கலவரத்தை தூண்டுவதற்கு ஆதாரத் தூண்களாக விளங்குகின்றன.
இன்று நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு மத நம்பிக்கை உள்ளது. அதற்காக பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கும் செல்கின்றனர். மற்றவர்கள் வழிபடும் வழிபாட்டுத் தளங்களை இடிக்க வேண்டும் என யோசித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள் சாதாரண மக்கள். ஆனால், இந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் திட்டமிட்டே மதவெறியைத் தூண்டி மசூதிகளை இடிக்க கூப்பிடுகிறார்கள்.
இந்த காவிக் கும்பலுக்கு இந்து மக்கள் நலனில் உள்ள அக்கறையினாலா இதையெல்லாம் செய்கிறார்கள். இல்லை, இல்லவே இலலை. பெரும்பான்மையான இந்து மக்களின் உழைப்பை சுரண்டுவது, கார்ப்பரேட்டுகளுக்கு அடிமைப்படுத்துவது ஆகிய வேலைகளைத்தான் செய்து வருகிறார்கள்.
விவசாயத்தை அழிக்கிறார்கள்; இயற்கை வளங்களை அழிக்கிறார்கள்; யாருக்காக? குறைவான விலைக்கு கச்சா எண்ணெய் கிடைக்கும் போதும் பெட்ரோல் – டீசல் விலையை ஏற்றினார்கள்; யாருக்காக?
படிக்க :
நூல் விலை உயர்வை கண்டித்து 18850 ஜவுளி நிறுவனங்கள் மூடல் ! மக்கள் அதிகாரம் ஆதரவு !
சென்னை துப்புரவு தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரும் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்போம் !
இன்று நாடே கார்ப்பரேட் சூரையாடலுக்கு பலியாக்கப்பட்டு; வேலையின்மை, பசி, பட்டினி கொடுமைகளுக்கு ஆட்பட்டு; கல்வி, மருத்துவம் என அனைத்தும் சேவைத்துறைகளும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு; நாடே சுடுகாடாகி வரும் வேளையில் இதை எதிர்த்து மக்கள் ஒன்று திரண்டு விடக் கூடாது என்பதற்காகவே மதவெறியை தூண்டி மக்களை பிளவுபடுத்த நினைக்கிறது காவி – கார்ப்பரேட் பாசிசக் கும்பல்.
இலங்கையில் இதேபோல்தான் நாட்டை கார்ப்பரேட் கும்பலின் சூரையாடலுக்கு அனுமதித்துக் கொண்டே இனவெறியை தூண்டினார்கள். இனப்படுகொலையை நிகழ்த்தினார்கள். ஆனால், இன்று மக்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டார்கள்; இதுதான் அவர்களின் போலி முகமூடி.
அதே முகமூடியைதான் இந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலும் அணிந்து உள்ளது. ஆதலால், இந்த காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த அனைத்து மக்களும் ஒன்றுபட்டு நிற்பதுவே தீர்வு. அதற்காக பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம்.


ரவி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க