கான்பூரில் பாஜக-வின் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவின் நபிகள் நாயகம் பற்றி முஸ்லீம் வெறுப்பு கருத்துக்கு எதிராக கடந்த ஜூன் 5 அன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டம் வன்முறையாக மாறியது. அதைத் தொடர்ந்து ‘அன்னபூர்ணா மா’ என்று அழைக்கப்படும் இந்துமதவெறி தலைவர்களுள் ஒருவரான பூஜா ஷகுன் பாண்டே முஸ்லீம்களுக்கு எதிரான மற்றொரு வெறுப்பு விஷத்தை கக்கியுள்ளார்.
கடந்த ஜூன் 5, 2022 அன்று, பாண்டே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு எழுதிய கடிதத்தில், “இந்து எதிர்ப்பு கூட்டம்” என்று அவர் கூறும் வாராந்திர வெள்ளிக்கிழமைகளின் மசூதிகளில் நடைபெறும் முஸ்லீம் மக்களின் தொழுகைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் வெள்ளிக்கிழமை நடந்த வன்முறையின் விளைவாக தனது கோரிக்கை எழுந்துள்ளது என்று பாண்டே கூறினார்.
“வெள்ளிக்கிழமை தொழுகை நாள் அல்ல. மாறாக, இது பயங்கரவாதத்திற்கான நாள். முஸ்லீம்களின் வெள்ளிக்கிழமை கூட்டங்கள் வணக்கத்திற்காக அல்ல, மாறாக முஸ்லீம் அல்லாதவர்களை இனப்படுகொலை, கொள்ளை, தீ வைப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்காக. எனவே, அகில பாரத இந்து மகாசபை உங்களிடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது: வெள்ளிக்கிழமைகளில், சிறிய மசூதிகளில் 10 முஸ்லீம்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். பெரிய மசூதிகளில் 25 முஸ்லீம்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். வெகுஜன தொழுகைகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் கலவரங்கள் நடக்கும் மசூதிகள் புல்டோசர்களைக் கொண்டு இடிக்கப்பட வேண்டும்” என்று கடிதத்தில் குறியுள்ளார் இந்துமதவெறியர் பூஜா ஷகுன் பாண்டே.
படிக்க :
♦ வரவர ராவின் கவிதையில் இருந்து ‘இந்துத்துவா’ ‘காவிமயமாக்கல்’ போன்ற வார்த்தைகளை நீக்கும் சங் பரிவார கும்பல் !
♦ கூகுள் நிறுவனத்தில் சாதிய ஒடுக்குமுறை ! சாதிய – இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைவோம் !
இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக, கடந்த ஜூன் 6 அன்று இந்து மகாசபா தேசிய செயலாளர் பாண்டே மீது அலிகார் போலீசுத்துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளது. “இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A, 153B, 295A, 298, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்று அலிகார் எஸ்.எஸ்.பி கலாநிதி நைதானி வீடியோ அறிக்கையில் தெரிவித்தார்.
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட பிறகு, பாண்டே ஒரு தொலைக்காட்சி குழு விவாதத்தில், தனது வெறுப்பு கடித்தத்தை பற்றி சுருக்கமாக விளக்கினார். மேலும் நுபுர் ஷர்மாவின் கருத்துக்களை ஆதரித்து பேசினார்.
அகில பாரத இந்து மகாசபா தலைவர் பூஜா ஷகுன் பாண்டே முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் செயல்பாடுகளில் இது முதல்முறையல்ல.
கடந்த 2021 டிசம்பரில், ஹரித்வாரில் நடைபெற்ற “தரம் சன்சத்” மத மாநாட்டின்போது,​​முஸ்லீம்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ய ஆயுதங்களை வாங்குமாறு இந்துக்களுக்கு அழைப்பு விடுத்த இந்துமத வெறியார்களில் பாண்டேவும் ஒருவர்.
“ஆயுதங்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. நீங்கள் அவர்களின் (முஸ்லீம்) மக்கள் தொகையை அகற்ற விரும்பினால், அவர்களைக் (முஸ்லீம்) கொல்லுங்கள். கொல்லவும், சிறை செல்லவும் தயாராக இருங்கள். நம்மில் 100 பேர் 20 லட்சம் பேரை (முஸ்லீம்களை) கொல்லத் தயாராக இருந்தாலும், நாங்கள் ஜெயிலுக்குப் போவோம். கோட்சேவைப் போல, நான் இருக்கத் தயாராக இருக்கிறேன். எனது மதத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒவ்வொரு அரக்கனிடமிருந்தும் என்னைக் காக்க ஆயுதம் ஏந்துவேன்” என்று அவர் கூறினார்.
அதே நிகழ்வில், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பாண்டே, “இன்று பெண்கள் தனது கைகளில் வாள் எடுக்க வேண்டிய நேரம் இது. எனது தாய்மார்கள் தங்கள் மகன்களின் பலவீனமாக மாறாமல், அவர்களின் பலமாக மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்காவது அதர்மம் நடந்தால் சொல்லுங்கள், அவர்களை வெட்ட நான் உன்னுடன் வருவேன். வழக்குகள் எதுவும் இருக்காது ஆனால் சில நாட்களுக்கு ஒரு சிறிய சிரமம் மட்டுமே இருக்கும்; எங்களை அழைக்கவும், நாங்கள் உங்களுடன் இருப்போம்” என்று வெறுப்பு விஷத்தை கக்கினார்.
2021 மார்ச் மாதத்தில், தாஸ்னாவில் ஒரு இந்து கோவிலுக்குள் ஒரு முஸ்லீம் சிறுவன் நுழைந்ததற்காக இந்துமதவெறியார் சிருங்கி யாதவ் அச்சிறுவன் மீது தாக்குதல் தொட்டுத்தான். தக்குதலுக்கு பிறகு, தாஸ்னாவின் கோவிலைபோல மற்ற இந்து கோயில்களில் முஸ்லீம்கள் நுழைவதைத் தடைசெய்யும் பலகைகளை வைக்க வேண்டும் என்று பாண்டே கோரினார்.
படிக்க :
♦ “பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு
♦ பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்
2020 ஏப்ரல் மாதத்தில், தப்லிகி ஜமாத் உறுப்பினர்களுக்கு எதிராக பாண்டே வெறுப்பு பேச்சுக்களை பேசினார். மத அடிப்படையில் பல்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை வளர்த்து, பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டதற்காக அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மே 2019-ல், சாவர்க்கர் பிறந்தநாளில் சிறுமிகளுக்கு பாண்டே கத்திகளை வினியோகித்தார். ஜனவரி 2019-ல், பாண்டே காந்தியின் உருவ பொம்மையை சுட்டு, கோட்சேவுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினார். பின்னர் அவர் உருவபொம்மையை தீ வைத்து எரித்தார். உடனே பாண்டே உடன் பாஜக தொடர்பை துண்டித்துக் கொண்டாலும், பாஜக எம்.பி சாத்வி பிரக்யா மற்றும் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் போன்றவர்களுடன் பாண்டே தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். முஸ்லீம்களை கொலை செய்ய பலமுறை வெளிப்படையாக அழைப்பு விடுத்தும், உ.பி போலீசுத்துறை இன்னும் பாண்டேவை கைது செய்யவில்லை.
முஸ்லீம் வெறுப்பு விஷங்களை வெளிப்படையாக கக்கி வரும் காவிக் குண்டர்களை உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து அடித்து விரட்ட வேண்டும். நாடு முழுவதும் பரவி வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை மோதி வீழ்த்த அணிசேர வேண்டிய தருணம் இது.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க